Video Wallet Money சம்பாதிக்க தகுதி வளர்க்க செய்ய வேண்டியது

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Video Wallet Money சம்பாதிக்க தகுதி வளர்க்க செய்ய வேண்டியது

Post by ஆதித்தன் » Fri Aug 12, 2022 11:47 am

யூடியூப் தளத்தினை நடத்திவரும் கூகுள் கம்பெனி, யுடியூப் தளத்தில் விடியோக்களை பதிவேற்றுவதன் வாயிலாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பினை பல வருடங்களாக வழங்கி வருவதோடு, பல்லாயிரக்கணக்கான கோடிகளை, அதற்கான பேமண்டாகவும் கொடுத்துள்ளது. தமிழகத்திலும் கூகுள் பேமண்ட் வாங்கியவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆவார்கள்.

யுடியூப் தளத்தில் நாம் பார்க்கும் பல சேனல்களை நடத்திவரும் நபர்கள் பலரிடமும் பலர் கேட்கும் கேள்விகளில் முக்கியமான கேள்வி, நீங்கள் யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதுதான்.அதற்கு பலரும் முப்பதாயிரம்.. ஐம்பதாயிரம். இலட்சம் என்று பதில் சொல்லி நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆகையால், கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் மூலம் கோடி சம்பாதிக்கலாம் என்பது உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்களும் அதற்கு முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் சரியான புரிதல் இல்லாமல், வெற்றியடைய முடியாமல் கடந்த காலத்தில் போயிருந்தால், இன்றைய நாளில் முயற்சித்து கண்டிப்பாக ஆன்லைன் ஜாப் மூலம் ஒர் பேமண்ட் வாங்கிக்க போதிய தகவல்கள் எங்கிருந்தாலும் தேடிப்படித்து உங்களுக்கு, நமது படுகை தளத்தில் பதிவிட இருக்கிறேன். ஆகையால், தொடர்ந்து தினம் புதிய அப்டேட்களை படித்து செயல்பட்டால் கண்டிப்பாக நீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க முடியும்.

கடந்த காலத்தில் எளிமையாக ஆன்லைன் ஜாப்பில் கால்பதித்திட முடியும். ஆனால், இன்று கால் வைப்பதற்கே விலை உயர்ந்த செருப்பு அல்ல, ஷீ போட்டிருந்தால் தான் காலையே வைக்க முடியும், அதுவும் வைத்த இடத்திலேயே புதைந்து போகலாம், கடைசியில் கால் வந்தால் போதுமென்று விலையுர்ந்த சூவை அங்கே விட்டுட்டு திரும்பிட வேண்டியிருக்கு... இப்படி பல விலை உயர்ந்த செருப்பினை கைவிட்ட மிடில் கிளாஸ் மக்கள் பாவம்தான் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு பட்டாலும் பாராமல் தொடர்ந்து முயற்சிக்கும் மிடில் கிளாஸ் மக்கள் முயற்சிக்கு மேலும் முட்டுக் கொடுக்கும் வகையில் கூகுள் அட்சன்ஸ் டீமும், ஒர்சில கயமைக் காரணங்களால், சின்ன தகுதிப் பலப்பரிட்சையின் வாயிலாகவே தன் கதவைத் திறக்கிறார்கள்.

டியூப் ஜாப் தகுதியின் முதன்மையான இரண்டு என்னவென்றால், உங்களது விடியோப் பக்கம் 1000 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், இரண்டாவது விடியோக்களை குறிப்பிட்ட கடைசி காலத்தில் பார்த்த மொத்த நேரம் 4000 மணி நேரமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது வீட்டுக்கு ஐந்து வாட்சப் மொபைல் இருக்கு.. சோ.. அங்க இங்க சொல்லி 1000 நபரை சப்ஸ்கிரைப் பண்ண வைத்திடலாம். ஆனால், ஒர் சிலர்க்கு இதுகூட கொஞ்சம் கஷ்டமாக இருக்குமாயின். அதை எளிதாக செய்து கொடுத்துவிடலாம். ஆகையால், நீங்கள் புதியதாக டியூப் சேனல் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால் சொல்லுங்கள் ஆயிரம் சப்ஸ்கிரைப்பரை ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம்.

இரண்டாவது இருக்கக்கூடிய பெரிய டாஸ்க் 4000 மணி நேரம் பார்வை பெறுவதுதான். 10 நிமிட விடியோ உருவாக்குவதே ரொம்ப கஷ்டம. எப்படியோ கஷ்டப்பட்டு ஒர் நிமிடம் ஓடக்கூடிய விடியோ தயார் செய்து பதிவேற்றம் செய்தால், அதனை 60 நபர்கள் பார்த்தால் 60 நிமிடம் ஆகிடும். அப்படின்னா, 600 நபர்கள் பார்த்தால் 10 மணி நேரம். 6000 நபர்கள் பார்த்தால் 100 மணி நேரம் ஆயாச்சு. ஒர் விடியோ வைத்து 100 மணி நேரம்னா, 40 விடியோ பதிவேற்றம் செய்துவிட்டால், 100 X 40 =4000 மணி நேரம் தகுதியினைப் பெற்றுவிடலாம்.

40 நல்ல விடியோ பதிவேற்றம் செய்தும் விரைவாக இரண்டாவது கண்டிசனை பூர்த்தி செய்துவிடலாம். பார்வை கொஞ்சம் குறைவாக வருவதாக இருந்தால், மேலும் அடுத்தடுத்து விடியோ பதிவேற்றம் செய்யச் செய்ய, பார்வைகள் தொகை கூடிவிடும். ஆனால், விடியோ போட்டால், ஒருத்தர்கூட பார்க்கல.. இதுல எங்க 6000 நபர்கள் பார்ப்பது என்ற கடினமான கேள்வி நன்றாகப் புரிகிறது.

ஆரம்பத்தில் விவ்ஸ் பெறுவது என்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் மிடில் கிளாஸ் கஷ்டத்தினைக் காட்டிலும் இது ரொம்ப சின்னதுதான். கோடி கோடியாய் யுடியூப் மூலம் மனம் சம்பாதித்து குடும்ப கஷ்டத்தினை தீர்க்க போகும் எண்ணம் கண்களில் தெரிந்தால், நீங்களும் புதிய காரினை விரைவாக வாங்கிவிடலாம். கடந்த இரண்டு வருடத்தில் பலர் கார் வாங்கியிருக்கிறார்கள் என்பதனை யுடியூப்பர் பலரை நீங்கள் காண்பதன் மூலம் தெரிந்திருக்கும். அந்த வகையில் கடந்த 2021-இல் குறைந்த விலை ஹட்ச் பேக் கார் நானும் வாங்கிவிட்டேன்.

ஆன்லைன் ஜாப் மூலம் பணம் சம்பாதித்து கோடீஸ்வரன் ஆகலாம்.. கோடீஸ்வரி ஆகலாம் என்று ஒவ்வொரு முறையும் சொல்லி.. கோடி கோடி என்ற எண்ணத்தினை முழுமையாக என் உடல் முழுவதும் நிரப்பியதன் பலன் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கிறது.

ரொம்பவும் கஷ்டப்பட்டு ரூ.100 சம்பாதித்த காலம் கடந்த காலம் ஆகி, எப்படியும் தினம் ஆயிரம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற இலக்கோடு கோடி கோடினு வீட்டிலிருந்தே முயற்சி செய்து பத்து மடங்கு உயரத்தினை தொட்டாகிவிட்டது. இனி இலட்சத்தினை தொடுவதற்கான முயற்சியில் கடின உழைப்பினை இணையத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் இலட்சமும் நிஜம் ஆகிவிடும். சென்னையில் சொந்த வீடும் நிஜமாகிவிடும்.

எல்லாம் சரிதான், ஆனால் அந்த 4000 மணி நேரம் பார்வையாளர்கள் என்பதுதான் ரொம்ப கடினமான பணியாக இருக்கிறது. எவ்வளவு முயற்சித்தாலும் எட்ட முடியவில்லை. ஜான் ஏறினால், முளம் சருக்குது என்ற கதையாப் போச்சுன்னு.. நீங்களும் நொந்து கொள்பவராக இருந்தால், அதனை எப்படி விடாமுயற்சியால் வெல்லலாம் என்பதனை அடுத்து பார்ப்போம்.

கூகுள் பேமன்ட் கண்டிப்பா வாங்க வேண்டும் என்ற முயற்சி இருந்தால், தொடர்ந்து வாருங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”