கூகுள் Work From Home ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கூகுள் Work From Home ஆன்லைன் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Jul 19, 2022 10:19 am

எல்லோரிடமும் மொபைல் இருக்கிறது, இண்டர்னெட் வசதியும் இருக்கிறது, அதுகூடவே பணம் சம்பாதிக்கும் வசதியும் இருக்கிறது.

கூகுள் ஆன்லைன் ஜாப் வாய்ப்பினை பயன்படுத்தி இலட்சம் இலட்சமாய் பணம் சம்பாதிக்கும் நபர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதனை நான் சொல்லி கேள்விப்பட்டவர்கள் என்று ஒரு காலத்திலிருந்தது. ஆனால் இன்றோ, ஆன்லைன் ஜாப் என்ற ஒன்று இருக்கிறது என்பது தெரிவதற்கு முன்பே, கூகுள் மூலமா இவ்வளவு சம்பாதிக்கிறார்களா??? என்ற செய்தியினை டிவிப் பெட்டியில் பார்த்து வாயப்பிளந்தவர்கள் பல்லாயிரக் கணக்கானவர்களாவர். ஆகையால், ஆன்லைன் ஜாப்பில் பணம் சம்பாதிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும்.

கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் வாய்ப்பு தான் யுடியூப் ஜாப் என்பது. இதனை பலரும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதற்காக முயற்சித்த நபராகவும் நீங்கள் இருந்திருப்பீர்கள், ஆனால் ஒரு பேமண்ட் கூட கூகுளிடமிருந்து பெறவில்லை என்ற ஆதங்கமும், எப்படியாவது தானும் ஒர் பேமண்டாவது கூகுளிடமிருந்து பெற்றிட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் கண்டிப்பாக நீங்களும் ஆன்லைன் ஜாப்பில் பணம் சம்பாதிக்க முடியும்.

யுடியூப் மூலம் பணம் சம்பாதிக்க நான் முயற்சித்தேன் என்பதனை விட, இவர்களெல்லாம் யுடியூப் மூலம் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்களா??? என்பதனை கேள்விப்படுவதன் மூலம் தான், கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் வாய்ப்பினை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில் இன்றும் முயற்சித்த்து ஒர் நல்ல பேமண்ட் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை முழுமையாக இருப்பதால், நீண்ட இடைவெளிக்குப் பின் யுடியூப் ஜாப்பினை கையிலெடுத்திருக்கிறேன்.

செத்தப்பயலே.. நாரப்பயலே... நீயெல்லாம் சாவுல...

இந்த வசனத்தினை யுடியூப் காமெடி பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இதனைப்போல் எந்தவொரு மரியாதையும் இல்லாமல், இத்தகையான நிகழ்ச்சி என்றவொரு இலக்கணம் இல்லாமல் சகட்டுமெனிக்கு இயல்பாப வாழ்வியல் முறையினை அப்படியே இணையத்தில் விடியோவாக பதிவிட்டு சம்பாதிப்பவர்கள் நிறைய நிறைய நபர்கள் என்ற உண்மை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

படுகை இணையத்தில் ஆன்லைன் ஜாப் என முயற்சிப்பவர்களுக்கு, எழுதவும் பேசவும், விடியோ செய்யவும் கேட்டுக் கொண்டதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அவ்வாறு படுகை ஆன்லைன் ஜாப் பயிற்சியினை உள்வாங்கி புரிந்து கொண்டவர்கள், கண்டிப்பாக ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவ்வாறு நீங்கள் பணம் சம்பாதித்தவர் என்றால் வாருங்கள், புதியவர்களும் சம்பாதிக்க ஒர் சின்ன டிரிக்ஸ் தெரிந்தது ஏதேனும் சொல்லுங்கள்.

நான் ஆன்லைன் ஜாப் தொடங்கிய காலத்தில் எழுத்து முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் தமிழ் கட்டுரையாளர்கள் இடத்தில் வெற்றிடமும் இருந்ததால் எளிதாக நான் எனது தமிழ் ஆன்லைன் ஜாப் கட்டுரைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் தகுதியினை பெற்றிவிட்டேன். 2012 ஆம் காலக்கட்டத்திலேயே யுடியூப்பில் களம் இறங்கிவிட்டாலும் விடியோவில் அத்தனை பெரிய வெற்றியினை பெறவில்லை என்பதே உண்மை. ஆனால் பணம் சம்பாதித்தேன் என்பது நிதர்சனமான உண்மை.

டிக் டாக் என்ற மொபைல் செயலி, இணைய உலகத்தில் ஒர் புதிய புரட்சியினை செய்தது என்பது உண்மை. அந்தப் புயலை தன் பக்கம் திருப்பி பணமழையை யுடியூப் பெயதது என்பதனை நீங்களும் நீயா? நானா? விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் அறிவீர்கள் என நம்புகிறேன்.

எப்படியாவது பணம் சம்பாதிக்கணும் என்று வளைந்து கொடுப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதனை சட்டென பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்படித்தான் என்று இருப்பவர்களுக்குத்தான் கடின காலம். கூகுள், பேஸ்புக் என்ற ஜாம்பவன்கள் தன் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்த காலக்கட்டமான 2008 ஆம் ஆண்டிலிருந்தே முழுமையாக ஆன்லைன் ஜாப் என்று முயற்சியில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பவன் என்பதனால் அவர்களது செயல்பாடுகள் பலவற்றிலிருந்து எனது புரிதல் என்பது என் பார்வைக்கு பல கிடைத்தாலும் அவ்வாறு செயல்பட விருப்பமின்மையால் தொடர்ந்து வளர்ச்சியினை அடையமுடியவில்லை. ஆனால் ஜான் வயிற்றுக்கு வேண்டும் என்றால் கண்டிப்பாக கடினமாக இருந்தாலும் செய்துதானே ஆகணும்.

உங்களுக்கு வருவாய் கண்டிப்பாக வேண்டும் என்றால் யுடியூப் ஆன்லான் ஜாப் ஒர் வாய்ப்பாக அமையும் என்பதனை நம்புகிறேன்.

கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் பற்றிய பல தகவல்கள் படுகை பணம் சம்பாதிக்கலாம் வாங்க பகுதியில் இருக்கும். அதனைப்போல், யுடியூப் ஜாப் பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை மேலும் தொடர்ந்து கொடுத்து, பலருக்கும் அதனை சென்றடையவைத்து, சிலரையாவது பணம் சம்பாதிக்க வைத்திடலாம் என்ற முயற்சியில் எனது புதிய வருவாய் பயணத்தினை தொடங்குகிறேன்.

யுடியூப் ஜாப் செய்பவர்கள், செய்ய விருப்பம் இருப்பவர்கள் தங்களது தகவலை பின்னூட்டம் செய்யலாம்.

நன்றி. :thanks:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கூகுள் Work From Home ஆன்லைன் ஜாப்

Post by marmayogi » Mon Oct 17, 2022 12:05 am

:great:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”