Page 1 of 1

சைனீஸ் தக்காளி சூப்

Posted: Sat Oct 12, 2013 1:39 pm
by cm nair
என்னென்ன தேவை?

தக்காளி- 1/2 கிலோ
வெங்காயம்-1
கிராம்பு-3
மிளகு-1 தேக்கரண்டி
சோளமாவு-2 மேஜைக்கரண்டி
சர்க்கரை-1 தேக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
ரஸ்க்- 4 நெய்யில் வறுத்தது
வெண்ணெய்- தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?

குக்கரில் எண்ணெயைக் காயவைத்து கிராம்பு, மிளகு சேர்த்து மிதமாக வதக்கி அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து அதன்பிறகு வெங்காயத்தையும், தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி 4 தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 10 நிமிடம் வேகவைக்கவும். ஆறியதும் திறந்து வடிகொட்டியில் கொட்டி கிரேவியை எடுத்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த தண்ணீரில் சோளமாவை கரைத்து சூப்பில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பிறகு கப்பில் சூப்பை ஊற்றி தேவையான அளவு மிளகுத்தூள் ரஸ்க் வெண்ணெய் உப்பு சேர்த்து பரிமாறவும்.