ஸ்பெஷல் ஊத்தப்பம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

ஸ்பெஷல் ஊத்தப்பம்

Post by தீபக் » Fri Mar 28, 2014 9:19 pm

Image

என்னென்ன தேவை?

அரிசி - 4 கப்,
உளுத்தம் பருப்பு - 1 கப்,
வெந்தயம் - 1 பிடி,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

அரிசியையும் வெந்தயத்தையும் சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்க வும். மிகவும் வழவழவென்று இருக்க வேண்டும். உளுத்தம் பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து நிறைய தண்ணீர் ஊற்றி புஸுபுஸுவென்று அரைக்கவும். இரண்டையும் சேர்த்து உப்புப் போட்டு சில மணி நேரம் வைத்துப் பொங்கியவுடன் ஃபிரிட்ஜில் எடுத்து வைக்கவும். முதல் நாள் தோசைக்கு உபயோகப்படுத்திய பிறகு மறுநாள் ஊத்தப்பம் செய்யலாம். திருநெல்வேலி பக்கங்களில் ‘இலுப்பச்சட்டி தோசை’ என்று சொல்வார்கள். இரும்புச் சட்டியை வைத்து ஊத்தப்பம் செய்யலாம்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”