பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by cm nair » Tue Nov 12, 2013 11:30 am

நோயற்ற வாழ்வை பெறுவதற்கு நாம் சில முறைகளை பின்பற்ற வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மட்டுமல்லாது, அதனை தொடர்ந்து சில நேர உடற்பயிற்சியையும் செய்து வந்தால், ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம்.

இன்றைய பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் தனது உடல் வளர்ப்பு பயிற்சிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். நிறைவான வலிமைமிக்க உடலை பெறுவது என்பது வெறும் விறுவிறுப்பான உடற்பயிற்சியால் மட்டும் கிடைப்பதல்ல.

சரியான செயல்முறையும் முதன்மையாக விளங்குகின்றது. முதல் 6-12 மாதங்களில் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க நேரிடும். எனினும், ஒழுங்கான முறையையும், முதன்மையான தற்காப்பு விதிகளையும் கடைபிடிப்பதே முக்கியமானதாகும்.

பாடி பில்டிங் முயற்சியில் இறங்கும் போது, எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற சில அடிப்படை வழிமுறைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.. உடல் வளர்க்கும் இலக்குகளை தொடங்குவதற்கு முன்பு, மருத்துவரை சந்தித்து உங்களது மருத்துவ நிலைமையை கண்டறிய வேண்டும்.

எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும், டாக்டரை சந்திப்பது உடல்நல சிக்கல்கள் வருவதில் இருந்து தவிர்க்க உதவும். பளுமிக்க உடற்பயிற்சி சாதனங்களை தூக்குவதற்கு முன்பாக, சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும், இதய தசைகளுக்கும் அசைவு கொடுங்கள். இதனால் உடலின் இணங்கு தன்மை மேம்பட்டு காயங்கள் ஏற்படுவதும் குறையும்.

எல்லா வகையான நவீனக் கருவிகளும், பல ப்ரீ வெயிட்களும் நிறைந்த கூடத்தை தேர்வு செய்தல் உடல் வளர்ப்பதில் முக்கியமான ஒன்றாகும். கனமான பொருட்களை தூக்குவதற்கு முன்பு, தசைகளை வலுவடையச் செய்தல், நமக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். மேலும் தசைகள் வலியை தாங்கக் கூடியவைகளாக மாறிய பின்பு, உடல் வளர்ப்பு முறையை தொடங்கலாம்.

பாடி பில்டிங்கின் தொடக்க நிலையில் இருப்பதால், சிரமமான முறைகளை செய்வதற்கு முன்பு, மனதை தயார்படுத்தி உடல் வளர்ப்புக்கு அனுமதிக்க வேண்டும். உங்களால் சிரமத்தை கையாள முடியும் என்ற போது அதனை செய்யலாம். மேலும் உங்கள் இலக்குகளை நிதானமாகவும், முறையாகவும் அடைய வேண்டும்.

அதுமட்டுமின்றி உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது, அதிக சிரமம் கொடுக்காமல், ஓய்வு எடுத்துக் கொண்டு பயிற்சியை அடுத்த நாள் செய்யலாம். ஒவ்வொரு வொர்க் அவுட்க்கு பிறகும் ஸ்ட்ரெட்சிங் தசைகளை மீளப்பெறுவதர்க்கும், வீக்கங்களை தவிர்ப்பதற்கும் உதவும்.

மேலும் இது உடலின் வளையும் தன்மையை பராமரித்து, வொர்க் அவுட் செய்யும் போது ஏற்படும் காயங்களையும் தடுக்க உதவும். பயிற்சியின் போது மூச்சுவிடுதல் மிகவும் முக்கியமான உடற்பயிற்சியாகும். ஒழுங்காக மூச்சுவிடுவது தசை அணுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கவும், தசைகள் சுருங்கவும், தசைகளை வளர்க்கவும், எனர்ஜியை தருவதற்கும் உதவி புரிகிறது.

நல்ல சீரான டயட் உடல் வளர்ப்பு பயிற்சியில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. நாள் முழுவதும் வொர்க் அவுட் செய்யும் முன்னும் பின்பும் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் டயட்டில் அதிகமான புரோட்டீன்களும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்து இருக்க வேண்டும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”