வெந்தயம்.

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

வெந்தயம்.

Post by cm nair » Mon Nov 11, 2013 10:40 am

வெந்தய எண்ணெய்

தேவையான பொருட்கள்:

சோற்றுக் கற்றாழை.
வெந்தயம்.
மிளகு.
கசகசா.
ஏலம்.
கற்கண்டு

செய்முறை:

சோற்றுக்கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து அதனுள் மூன்று ரூபாய் எடையளவு வெந்தயத்தை வைத்து மூடி நூலால் சுற்றி மூன்று நாள் வைத்து விடவேண்டும். பின்பு அந்த வெந்தயத்தை சோற்றுக்கற்றாழைச் சாற்றை விட்டரைத்து அதை அரைப்படி சிற்றாமணக்கு எண்ணெயில் கரைத்து காய்ச்சி வடித்துக் கொள்ளவேண்டும். மிளகு, கசகசா, ஏலம், கற்கண்டு ஆகியவற்றை இடித்து சூரணம் செய்துக் கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை காய்ச்சி வடிகட்டிய எண்ணெயில் கலந்து சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:
குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட கொடுத்து வரவேண்டும்.

தீரும் நோய்கள்:
கணை, தேக எரிச்சல், கைகால் எரிச்சல், உஷ்ண ரோகங்கட்கு ஆகிய நோய்கள் குறையும்


வெந்தயக்கீரை
பெண்களின் கருப்பை சம்பந்தமானப் பிணிகளை விரட்டும் ஒப்பற்றக் கீரை.வெந்தயத்தை முளைக்க வைத்து அல்லது இரண்டு இஞ்ச் அளவுக் கீரைகளைச் சாறாகப் பயன்படுத்தும் சமயம் பல கொடிய பிணிகளை விரைந்து நீக்குகிறது. கசப்பானது. குளிர்ச்சியானது. குடல் புண்ணால் நெடுங்காலம் அவதியுறுபவர்கள் கூட ஜெலுசிலுக்குப்பதில் வெந்தயக்கீரைச் சாறால் அருமையான நலம் பெறலாம். எவ்வளவு கொடிய வயிற்றுவலியும் குறையும்.

மருத்துவக் குணங்கள்:
ஆசனவாய் பிளவு, மூலநோய், அதிக அமிலத்தன்மை, ஒபேசிட்டி, உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும்.
பெண்களின் தீராவியாதிகளான மாதவிடாய் தொல்லைகள், சூதக வியாதிகள், முறையற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல், பெண் உறுப்பு அரிப்பு, காம்பு நோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தரும் வெந்தயம்.
வயிற்று கடுப்பு, உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி, கொலஸ்ரால், மூலச்சூடு, மலக்கட்டு, சீதபேதி, குடல் புண் போன்றவற்றை தீர்த்திடும்.
குடலில் கிருமிகள் தொல்லை இருந்தால் உடனடி நிவாரணம் தருகிறது.
வெந்த உணவால், சமைத்த காரம் மிகுந்த உணவால் நைந்து போன குடலை வெந்தயக்கீரைச் சாறு பலப்படுத்துகிற

வெந்தயம்
மருத்துவக் குணங்கள்:

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”