அழகு குறிப்பு[இயற்கை-டிப்ஸ்]

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

அழகு குறிப்பு[இயற்கை-டிப்ஸ்]

Post by cm nair » Thu Oct 24, 2013 11:14 am

கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறுஅரைஸ்பூன்,தேன் அரைஸ்பூன். சமயல்சோடாஒருசிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்

அழகு குறிப்பு[இயற்கை-டிப்ஸ்] முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100[காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன் படுத்தினால் பயன் கிடைக்கும்

கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் ,மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம்காணமல் போகும்.

முகபரு தழும்பு மாற புதினாசாறு 2ஸ்பூன், எழும்பிச்சைசாறு1ஸ்பூன், பயத்தமாவு இவற்றை கல்ந்து போட்டால் தழும்பு மாறும்

பேஸியல் பேக் ;-வாழைபழம், 2ஸ்பூந்தேன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை பன்னவும்.

தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி,வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.

முகம் பளபளக்க குளீர்ந்ததண்ணிர் அரைடம்லர், 50மி.லி பசும்பால் இரண்டையும் கல்ந்து ஒரு பஞ்சினால் எடுத்து முகத்தில் தடவி வர முகம் பளபளக்கும்.

எண்ணெய் ஸ்கின் சோப்பு போடும் போது சிறிதளவு சர்கரை சேர்த்து கழுவுவமும் எண்ணெய் ஸ்கின் கொஞ்ச நாளீல் சரியாகிவிடும்.

இளநரைக்கு நெல்லிகாய்யில் உள்ள கொட்டையை எடுத்து விட்டு அந்த் சதையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் க்ழித்து கழுவவும்.கொஞ்ச நாளில் இளந்ரை கானமல் போகும். அது மட்டும் இல்லை முடிக்கு எந்த பிரச்சனை யும் இருக்காது.

முகம் பளபளக்க வெள்ளரி சாறு2ச்பூன், தேன்1ஸ்பூன், இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 15ந்மிடம் கழித்து கழுவ[pores] போரஸ் எல்லாம் போய்விடும் முகம் பளபளக்கும்

வறணட சருமத்திற்கு பாலேடுடன் எலும்பிச்சைசாறு கலந்து முகத்தில் பூசி வர வறணட சருமம் பொலிவு பெரும்[15nimitam]

கரும்புள்ளீ, எண்னெய் சர்மத்திர்க்கு, கேரட், வெள்ளரி அரைத்து பூசி வரவும் கொஞ்ச நாளீல் கானமல் போகும்

முகம் ஜொலிக்க 1கப் தயிர்ருடன் 1ஸ்பூன் ஆரஞ்சுசாறூ, 1ச்பூன்லெமன், பேஸ்டாக்கி முகத்தில் பூசி 20நிமிடம் கழித்து வெதுவெதுப்பான் தண்ணீரில் கழுவவும். பிறகு 1ஸ்பூன் தேனையும்,2ஸ்பூன்பாலையும் அப்லெ பன்னவும்.

முகம் மிருதாக கடலைமாவு,அரைஸ்பூன்மஞ்சல்தூள், 2ஸ்பூன்லெம்ன்,1ஸ்பூன்பால். இவற்றையெல்லாம் பேஸ்டாக்கி முகத்தில் பூசி வர முகம் மிருதுவாகும்.

முகம் பொலிவு பெர கேர்ரட்2ஸ்பூன், தேன்1ஸ்பூன், 2டையும் கல்ந்து முகத்தில் பூசவும்

முடி கருப்பா அடர்த்திக்கு கறிவேப்பிலை மருதானி [அரைத்து காய வைத்து ], வெந்தயம்,செம்பரத்திபூ[காயவைத்தது] இவற்றையெல்லாம் எண்ணெயில் ஊர வைத்து தேய்க்கவும்.

பால் ஏடு கடலைமாவ் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளக்கும்

பேஸியல் பப்பாளி நல்லா பேஸ்ட் ஆக்கி முகத்தில் அப்லெ பன்னி 15நிமிடம் கழித்து கழுவவும். தக்களி ந்ல்லா கூல் ஆக்கி அத்துடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி 15அல்லது20நிமிடம் கழித்து கழுவவும்.

முகச்சுருக்கம் மாற வெள்ளரி2துண்டு, நாட்டுதக்காளி1 பழம். புதினா சிறிதளவு,முன்றையும் பேஸ்டாக்கி முகத்தில் பூசி வர முகசுருக்கம் மாறி விடும்.

நன்கு பழுத்த தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி அதை முகம்,கழுத்து,கை,கால்,பாதம் போன்ற பகுதிகளில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின் கடலைமாவு கொண்டு முகத்தை கழுவினால்,முகம் bleach செய்தது போல் பளீச் என்று மின்னும்.

முடி கருமையாகவும் கொட்டாமல் இருக்கவும் நல்லெண்ணை ,தேங்காய் எண்ணை சம அளவு எடுத்து இரும்பு சட்டியில் காய வைத்து நெல்லிக்காய்,கறிவேப்பிலை,மருதாணி இலை,செம்ப்ருத்தி இலை அல்லது பூ இவை எல்லாவற்றையும் அரைத்து எண்ணையில் சேர்த்து காய வைத்து ஆறியதும் வடிகட்டி தேய்த்து வந்தால் நாளடைவில் முடி கருப்பாக ஆவதை கண்கூடாக பார்க்கலாம்.கொட்டுவது நிற்கும்.முடி மிருதுவாக மாறும்.தலைக்கும் குளிர்ச்சி

கழுத்து கருப்பு போக முட்டைகோஸ்சாறு,எலும்பிச்சை சார்,தேன் முன்றையும் கலந்து கழுத்தில் பூசிவர க்ழுத்து கருப்பு மறைந்து விடும்

ஸ்கரப் ஒட்ஸ்2ச்பூன்,தேன்2ஸ்பூன், பாதாம் பவுடர்1ஸ்பூன் ,தயிர்2ஸ்பூன், கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் பூசவும்

முகம் பளிச்சிட ,பால்,கடலைமாவு,மஞ்சள், சந்த்னம் இவற்றையெல்லாம் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி வரவும் பலன் கிடக்கும்

முகம்சுருக்கம் மாற ஆவரம்பூ[காய்ந்தபொடி]2ஸ்பூன்,புதினாஇலை[காய்ந்தபொடி]2ஸ்பூன், கடலைமாவு2ஸ்பூன், பயத்தமாவு2ஸ்பூன்,ஆலிவாயில் இதையெல்லாம் பேஸ்டாக்கி முகத்தில் பூசி வரவும்

நேச்சுரல் ப்ளிசிங் ;-பால்4ஸ்பூன்,லெமன்2ஸ்பூன், இரண்டையும் கல்ந்தால் பால்திரிந்து வரும் அதை முகத்தில் பூசினால் இயற்கை ப்ளிசிங் கிடைக்கும்

முகம் பொலிவுபெற;- கஸ்தூரிமஞ்சள்2ஸ்பூன்,சந்தனம்2ஸ்பூன்,வசம்புபொடிஅரைஸ்பூன், இவற்றையெல்லாம் பாதமெண்ணெய்யில் கலந்து முகத்தில் பூசி வரவும் முகம் பொலிவு பெறும்

முகம் பொலிவு பெற ;-தேன்,பாதாமெண்ணெய், தயிர்,மூன்றையும் சம அளவு எடுத்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி வரவும்.

முகத்தில்பரு வராமல் இருக்க முகம் பளீச்சிட;-இரவு படுக்கும் போது 1பிடி வேப்பிலை தண்ணீரில் போட்டு காலையில் அந்த தண்ணிரில் முகம் கழுவி வரவும் பலன் கிடைக்கும்

முகமுகருப்பு மங்கு மறைய பசும்பால்2ஸ்பூன், லெமன்2ஸ்பூன் இரன்டையும் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து பஞ்சால் துடைக்கவும்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”