கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:

Post by cm nair » Wed Oct 23, 2013 2:46 pm

1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.

2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில்
விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.
அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.


இளநரை நீங்க

1. நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.

2. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

3. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.


பொடுகு நீங்க

1. வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

2. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


நரைமுடி கருப்பாக

1. சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்


தலை முடி செழித்து வளர

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்

பேன் தொல்லை நீங்க

1. வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

2. துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேனெல்லாம் செத்து விழுந்து விடும் முடியும் நன்றாக வளரும்

கூந்தல் உதிர்வு

1. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்

2. அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.


முடிகளை நீக்க

1. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

2. முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

செம்பட்டை மறைய

முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.

பிசுபிசுப்பு மறைய

1. ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
a.fathima
Posts: 40
Joined: Wed Dec 19, 2012 4:01 pm
Cash on hand: Locked

25 சதவீத ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை

Post by a.fathima » Wed Oct 23, 2013 5:54 pm

உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவீத ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர். மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர். வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, மன இறுக்கம்,

மன அழுத்தம், சுற்றுச்சூழல் என பல காரணங்கள் தலை வழுக்கைக்குக் காரணிகளாவதாகக் கூறப்படுகிறது. தலை வழுக்கை ஏற்பட்டாலே ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.
இதற்கு காரணம் முடி உதிர்ந்தாலே முழு அழகும் போய்விட்டது என்று கருதுவதுதான்.

இதனால்தான் கூந்தல் தைல விற்பனையில் அருவிபோல பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. காலகாலமாக, வழுக்கை தலையில் முடி வளர்த்துப் பார்க்க உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் பெரிதும் முயன்று வருகின்றனர்.

தலை வழுக்கையானவர்கள் இனி கவலை வேண்டாம், ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் என்று ஜப்பானிய பல்கலைகழக ஆராய்ச்சி ஒன்று நம்பிக்கை அளிக்கிறது. ஸ்டெம்செல் உதவியுடன் வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஜப்பானின் டோக்கியோ பல்கலையில் உள்ள சுஜி அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

எலிகளை வைத்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர்கள் ஸ்டெம்செல்லில் இருந்து முடி வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக்கிள் எனப்படும் வேதிப் பொருளை மட்டும் எடுத்து, வழுக்கை எலியின் தலையில் பொருத்திப் பார்த்ததில், ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். எலியின் தலையில் வழக்கம்போல முடி முளைப்பதாக ஆராய்ச்சி குழுவின் தலைவர் டகாஷி சுஜி கூறியுள்ளார்.

எனவே இனி வழுக்கை ஆகிவிட்டதே என்று கவலைவேண்டாம் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் முடியை வளர்த்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கைத் தருகின்றனர் ஆய்வாளர்கள்.

Image
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”