முத்து பல் சிரிப்பு அல்லவோ......

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

முத்து பல் சிரிப்பு அல்லவோ......

Post by cm nair » Tue Oct 22, 2013 8:20 am

முத்து சிப்பியை எடுத்து நன்றாக எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக இடித்து ஒரு மெல்லிய துணியில் சலித்து அந்த பொடியை வைத்து தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகும்

50 கிராம் சீமை கருவேல் மரத்தின் பட்டை, 20 கிராம் வறுத்த படிகாரம், 10 கிராம் இந்துப்பு ஆகிய மூன்றையும் நன்றாக இடித்து சலித்து இந்த் பொடியால் தினமும் பல் துலக்கி வந்தால் பற்களில் அழுக்கு குறைத்து பற்கள் வெண்மையாகும்.

காரட் இலைகளைக் கொண்டு பற்களை தேய்த்து வந்தால் பற்கள் பளபளப்பாகும்.

வல்லாரை இலைகளை மென்று பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் குறையும்.

ஆரஞ்சுப் பழத்தோல்களை உலர்த்தி பொடி செய்து அதனைக் கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை நீங்கும்.

எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.

எலுமிச்சை பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி உப்பு சேர்த்து நல்லெண்ணையில் குழைத்து பற்களை துலக்க பற்கள் பளபளப்பாகும்

கரிசலாங்கண்ணியின் வேரால் பல் துலக்கி, கீரையை மென்று தின்றால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறக் கறை மறையும்

எலுமிச்சைச் சாறுடன், உப்பு சேர்த்து தினமும் பல்துலக்கி வர பல்லில் இருக்கும் மஞ்சள் நிறம் குறையும்.

புதினாவை காய வைத்து பொடி செய்து எலுமிச்சைச் சாறு, உப்பு இரண்டையும் சேர்த்து தினமும் காலை, இரவு பல்துலக்கி வர பற்கள் பளிச்சென்று மாறும்.

புதினா இலையை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை வைத்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”