Page 1 of 1

உடல் சூடு நோய்

Posted: Wed Jan 03, 2024 6:05 am
by ஆதித்தன்
உடலில் எப்பொழுதும் வெப்பநிலை பராமரிக்கப்பட்டு வருகிறது, அது 37 டிகிரி செல்சியஸ். இதில் கொஞ்சம் ஏறக்குறைய இருக்கலாம். ஆனால் குறைந்தாலும் கூடினாலும் உடல்நிலை அசெளகரிய நிலைக்கு போய் நோய் என்ற நிலைக்கு உடல் உள்ளாக்கப்படும்.

அதிக வெப்பநிலை நோய்களே அதிகமாக பலருக்கும் வரக்கூடிய ஒன்று. அது காய்ச்சல் என்று அழைக்கப்பட்டாலும், காய்ச்சலுக்கான காரணம், அது குறிக்கும் நோய் என்பது எளிதில் குணமடைக்கூடியதும், மிகவும் உடலைக் கடினப்படுத்தக்கூடியதும், ஆளையே காலி செய்திடும் உயிர்கொல்லி நோய் என மாறுபடும்.

ஆகையால், உடல் வெப்பநிலையில் மாற்றம் உணரப்பட்டாலும், சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.