Page 1 of 1

ஆண்மை சக்தி பெருக்கம் பெற வலுப்பெற

Posted: Wed Jul 26, 2023 11:48 am
by ஆதித்தன்
ஆண்மை சக்தி என்பது குடும்ப வாழ்வியலுக்கு முக்கியமான ஒன்று. ஆண்-பெண் பிணைப்பினை அன்பாக வடிவமைப்பதில் இருபாலர்க்கும் உயிர்ச்சத்தான விந்து-நாத சத்து மிக முக்கியம். அதனை நல்ல முறையில் பாதுகாத்து வளர்க்க பலமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

தினமும் இரண்டு நாட்டு கோழி முட்டை சூப் குடித்தால் ஆண்மை சக்தியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது.

முட்டை சூப் செய்வது மிகவும் எளிது. தேவையானவை, இரண்டு முட்டை, சிறிது உப்பு, கொஞ்சம் மிளகு, கொஞ்சம் சீரகம்.

மிளகு , சீரகம், உப்பு ஆகியவை இரண்டு முட்டைக்கு தேவையான அளவாக கொஞ்சமாய் எடுத்து நன்கு இடித்து தூளாக்கி எடுத்து, அதனை முட்டையுடன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளுங்கள். அதுனுடன் நன்றாக கொதித்த ஒர் டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொண்டால் சுவையான முட்டை சூப் ரெடி.

நாட்டுக் கோழி முட்டை என்றால், இயற்கை முறையில் வளர்க்கப்படும் நல்ல நாட்டுக்கோழி முட்டையாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் நாட்டுக் கோழி வளர்க்கிறேன் என்று அதனை பராமரிக்க தற்பொழுது பலவிதமான மருந்து மாத்திரை ஊசி போட்டு வளர்க்கும் நாட்டு கோழி முட்டைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இயற்கை முறையில் வளர்க்கப்படும் ஆரோக்கியமான கோழி முட்டை வாங்கி சாப்பிட ஆரம்பியுங்கள்.

எத்தனை நாட்கள் குடிக்க வேண்டும் என்று கேட்காதீர்கள். தினமும் பால் வாங்கிக் குடிப்பதனை நிறுத்திவிட்டு, அதற்குப் பதில் முட்டை சூப் குடிக்க ஆரம்பியுங்கள், மாற்றத்தினை நீங்களே உணர்வீர்கள்.

உணவு முக்கியம் என்றால் அதனைவிட மிக முக்கியம், ஆண்மையை உபயோகிக்கும் முறை. பெண்ணுடன் ஆண்மையை உபயோகிக்கும் இலயம் தெரிந்தால், எப்பொழுதும் உற்சாகத்துடன் விளையாடலாம்.

மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் தேவைப்படுபவர்கள் கற்றுக் கொள்வதில் தவறில்லை.


ஆண்கள் பலர் 30 வயதினை தாண்டும் பொழுதே ஆண்மை சக்தி குறைவினால் பலவிதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பது கேள்விப்படுவதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. முன்னோர்கள் 55 வயதிலும் குழந்தைப் பெற்றெடுத்துக் கொண்டிருந்த காலத்தினை கண் முன்னே பார்த்தவர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்திலே, 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதே ஆச்சர்யமாக பார்க்க வேண்டிய சூழலுக்கு போய்க் கொண்டிருக்கிறது உலகம். பலர் ஆண்மை சக்திக்கு மருத்துவம் பார்ப்பதில்லை, தகுந்த ஆலோசனையும் எடுத்துக் கொள்வதில்லை. 99% அப்பாடியாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்போதைய காலம் அதற்கும் தகுந்த ஆலோசனை மருத்துவத்தினை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதற்காக பல திரைப்படங்களும், பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் பலரும் அதன் மீது நாட்டம் கொள்ளாத நிலையில், இன்றைய காலக்கட்டம், அதன்பக்கம் திருப்பும் சூழல் அமைந்துவிட்டது.