Page 1 of 1

வீட்டு கோழி Vs நாட்டு கோழி

Posted: Tue Mar 07, 2023 8:19 pm
by ஆதித்தன்
நாட்டு கோழி தெரியும், பிராய்லர் கோழி, பண்ணை கோழி இப்படி பல வகையில் பிரிச்சி சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் வீட்டுக் கோழின்னு சந்தைப்படுத்தி பார்த்திருக்கமாட்டீர்கள். ஆனால், வீட்டு கோழி என்று பார்த்து வாங்க வேண்டிய சூழலுக்கு வந்தாகிவிட்டது.

சுகப்பிரசவம் என்று சொன்னாலும் வீட்டில் சுகப்பிரசவம் என தற்பொழுது இயற்கை வாழ்வியலாளர்கள் பேசும் பொழுது தடுப்பூசி இல்லாத குழந்தை வளர்ப்பு, இயற்கை விவசாயம் என பேசும் பொழுது எல்லாம், நாட்டு கோழி என நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டுக் கோழி வளர்ப்பு முறையும், மக்கள் வளர்ப்பு முறைபோல் மாறிவிட்டதால், இயற்கை வழியில் தடுப்பூசி இல்லாமல், இங்குபேட்டர் இல்லாமல், தாய் அடைகாத்து வரக்கூடிய மேய்ச்சல் கோழிகள்தான் இயற்கையான வீட்டுக்கோழி.

சேவலோடு சுற்றும் வீட்டுக் கோழி முட்டைகள்தான் உண்மையில் நல்ல வித்தான சத்துணவு.

வீட்டுக்கோழி முட்டை , வீட்டுக்கோழி இறைச்சி என கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.. இந்த அசைவம் நல்லதுதான்.