Page 1 of 1

நாடி நாடி கிடைத்த நாடி - மருத்துவ கைநாடி

Posted: Tue Feb 28, 2023 8:28 pm
by ஆதித்தன்
ஆரோக்கியமாக வாழ்வதற்காகவே, நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள மருத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும் என தேடி தேடி, உடலைப் பற்றியும், நோயைப் பற்றியும் நோயை குணப்படுத்துவதனைப் பற்றியும் படிக்க வாய்ப்பு கிடைத்து படித்து முடித்தாகிவிட்டதோடு, நோய் வரமால் காக்கவும், வந்தால் போக்கவும் நடைமுறை நம்பிக்கை உள்ளது.

தன்னோடு நில்லாமல், நாலு நபர்க்கு மருத்துவம் பார்க்கும் நிலைக்கும் இயற்கை இழுத்துச் செல்கிறது... அதன்படியாக.. நான் மருத்துவம் பார்க்கிறேன் என்பதில் எனக்கிருந்த ஐயம் போக்கும் விதமாக... இயற்கையே.. பூதங்களே தன்னை குணப்படுத்திக் கொள்கிறது என்பதனை உறுதியாக நம்பினாலும், அதற்கான துணை ஒன்று வேண்டுமல்லவா? எத்தனை கோடி படைப்புகளை படைத்து இவ்வுலகினை அழகுற வடிவமைத்து ஆனந்த வாழ்வியலை கொடுத்த இயற்கை, அதில் எனக்கான பணியாக, பூதங்களை தூண்டும் பணியினை கொடுத்திருக்கிறது என்பதனை ஏற்று, அதனிடமிடமே கேட்டு, அதனை தூண்டுவது என்பது எத்தனை எளிது... எளிதான நாடி பார்த்து, நாடிக்கு தூண்டல் கொடுத்து, மன மகிழ்வோடு வந்தாரை அனுப்புவதில் மகிழ்ச்சி.

ஆம், மருத்துவம் பார்க்க, நாடி பார்ப்பது என்பதும் எளிது... இயற்கையை .. பூதங்களை மனதில் இருத்தி, நோயாளியின் வலது கையினை வாங்கிப் பிடித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பில் துள்ளிவரும் பூதங்களை உணர்ந்து, அந்த பூதத்தின் மருத்துவப்புள்ளியில் மெல்லிய தொடு சிகிச்சை கொடுக்கும் அக்குபஞ்சர் மருத்துவம், எளிது.

கையைப் பிடிச்சி என்ன பார்ப்பிங்க... எப்படி நோயினை கண்டுபிடிப்பீர்கள் என பலரும் கேட்பார்கள்.

நோய் நோய் என நோய்க்கெல்லாம் பெயர் பெயர் என பல பல நோய்கள் பல பெயர்களில் ஆயிரம் இருந்தாலும், வேர் நாடி, நோயை குணப்படுத்தும் மூலத்தை நாடி என அடிப்படையான பூதங்களை ஒழுங்குபடுத்தினால் போதும்.. அதுவும் அதுவே தன்னை தானே குணப்படுத்த துடிக்கும் என்பதுதான் உண்மை. அதுவே எல்லாம் செய்கிறது... தனக்கான தூண்டலை கொடுக்கவும் அதுவும் காலத்தினை நிர்ணயித்தியிருக்கிறது.. அப்படியான இயற்கை, தனக்கு எங்கு தூண்டல் வேண்டும் என்பதனை சொல்லும் விதமும் பூத இயல்பு தான்.

நாடிப்புள்ளியில் ஆழ்மன உறுதியோடு, மனதினை கைவிரல் நுனிக்கு கொண்டு சென்று தொட்டு உணர்ந்தால், அதில் பூதங்கள் துடிக்கும் இயல்பான ... மரத் தன்மையோ கடினமாக குத்துவது, மண்மூட்டைபோல் மொத் மொத்தென அடிப்பது, அலைபோல் குதித்து ஓடி வருவது, காற்றைப் போல் பறப்பது என நாடி அப்படி இப்படி என தான் வேண்டும் பூத இயல்பினை உணர்த்தும்.

நாடி உணர்த்தும் பூத ஈர்ப்பு சிகிச்சைப் புள்ளியில் ஒர் தூண்டலை கொடுக்கும் பொழுது, விரைவாக நோய் குணமாகும்.


நாடி பார்க்க நம்முடைய ஈடுபாடு முக்கியம். எந்த அளவுக்கு நாடியை உணர விரும்புகிறோமோ, அந்த அளவுக்கு பூதமும் தன்னை வெளிப்படுத்தும்.

மருந்தில்லாமல் மென்மையான ஒர் தொடுதலில் நோய் குணமாக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தால், வாருங்கள். அக்குபஞ்சர் தொடுசிகிச்சை எல்லா நோய்களுக்கும் தீர்வாக இருக்கும்.