ஆரோக்கியமாக வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிப்படையான ஒன்று. அதனை சுருக்கமாக ஐந்து பூதங்களில் ஆரோக்கியத்தினை வகுத்தெடுப்பது சிறப்பு. எதனைப் பற்றி சிந்திக்கிறாயோ பேசுகிறாயோ, அதுவாகவே மாறிவிடுகிறோம் என்பதுதான் உண்மை. கோடி கோடின்னு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆரோக்கியச் செல்வம் நம்மை தேடிவருவது என்பது உண்மைதானே. அதுதான் என்னவே, என்னை கோடீஸ்வரன் ஆக்குவதற்காகவே கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத ஆயுள் மருத்துவமான பஞ்சபூத மருத்துவ அடிப்படைகள் என்னை வந்து பார்த்தது. வாசல்வரை வந்த பூதத்தாரை மனதார வரவழைத்து என் உள்ளத்தில் குடித்தனம் அமைத்துவிட்டேன்.
மருத்துவமாக இருப்பின் அது பஞ்சபூத மருத்துவம்தான் என்ற உறுதியாக கடைப்பிடிப்பதனால் பல ஆயிரங்கள் சேமிப்பாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் சம்பாதித்தாலும் சேமித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதிலும் ஆரோக்கியச் சேமிப்பு என்பது மிக முக்கியம். ஆகையால், அதனைப் பற்றிய வலைப்பேச்சில் நிலம் பூதத்தினை மீண்டும் பேசலாம்.
நிலம் முக்கிய பூதமாக இருப்பதனால், இதன் தாய்மைப் புள்ளி எனப்படும் நிலத்தில் நிலப்புள்ளி என்பது, மண்ணீரல் சக்தி ஓட்டப்பாதையில் SP1 மரம், SP2 நெருப்பு, SP3 நிலம் , SP5 காற்று, SP9 நீர் ... அப்போ நிலத்தின் நிலப்புள்ளி என்பது SP3 எனப்படும் காலின் பெருவிரலின் உட்புறத்தின் பாத கீழ்புறத்தையும் மேற்புதத்தையும் பிரிக்கும் தோல் நிறப்பிரிவு கோட்டில், பெருவிரலை பாதத்தோடு இணைக்கும் பெரிய மூட்டின் கால் பக்கத்தின் ஒர பள்ளத்தில் அமைந்திருக்கும் புள்ளிதான் ஆகும்.
இதனைப்போல், மற்றொரு புள்ளியும் இருக்கிறது. முதல் பார்த்து குளிர்ச்சி உறுப்பான மண்ணீரல் சக்தி ஓட்டப்பாதையில், அடுத்து பார்ப்பது நிலத்தின் வெப்ப உறுப்பான இரைப்பை சக்தி ஓட்டத்தில் இருக்கும் பூதப் புள்ளிகளானல் ST45 காற்று, ST44 நீர், ST43 மரம், ST41 நெருப்பு மற்றும் ST36 நிலம் ஆகிய ஐம்பூதப் புள்ளிகளில் நிலத்தில் நிலமான ST36 என்ற புள்ளி, முழங்கால் மூட்டுக்கு கீழே துருத்திக் கொண்டிருக்கும் வெளிப்புற டிபியா எழும்புக்கு ஒர் அங்குலம் கீழே வெளிப்புற பக்கவாட்டில் அமைந்திருக்கிறது.
நமது நிலப் பூதம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்பதனை அறியும் பொழுது, இந்த நிலப்புள்ளியில் தொட்டு சிகிச்சை கொடுக்கும் பொழுது ஆரோக்கியம் வலுப்பெறும்.
நம் உடலில் உள்ள ஐந்து பூதத்தில், நிலம் பூதம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்பதனை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதனை உங்கள் கேள்வியாக கொண்டிருப்பதுதான் மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. நிலப்புள்ளியில் சிகிச்சை கொடுக்கும் பொழுது நோய் குணமாகி, ஆரோக்கியம் வலுப்பெறுகிறது என்பதனை ஒர் ஆராய்ச்சியாக எடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என்பது வலுப்படுகிறது. ஆனால், பல பலப்பரிட்சைக்கும் பின்னர்தான், பலர் குணமாகி ஆரோக்கியமானப் பின்னர்தான் இந்த ஐம்பூதங்களை மையமாகக் கொண்ட அக்குபஞ்சர் மருத்துவம் நடைமுறைக்கு வந்திருப்பது உங்களுக்கே தெரியும். ஆகையால் தைரியமாக தொடர்வோம்.
வயிறு சரியில்லை என்பதே, நிலப்பூதத்தின் குறைபாடுதான். உதடு வெடிச்சிருக்கு.. உதடு கருத்துட்டு போகுது என்பதும் நிலப்பூதத்தின் குறைபாடுதான். அட அப்படியா.. இன்னும் என்னென்ன எனக் உங்கள் மனம் ஆர்வமாக இருக்கும் பொழுது, கண்ணில் காணும் மஞ்சள் நிறம், நகத்தில் வெளிப்படும் மஞ்சள் நிறம்.. என நிலப்பூதத்தினை மஞ்சள் நிறத்தினைக் கொண்டும் அடையாளம் காணலாம் என்பது உங்களுக்கு மேலும் ஆர்வத்தினை தூண்டும். ஆமாங்க,.... இனிப்பு மேல் அதிக ஆசை... இனிப்பென்றால் வெறுப்பு ... அதேதான் துவர்ப்புக்கு என்பதும் நிலப்பூதத்தின் வெளிப்பாடுதான்பா.
இடுப்பு பிடிச்சிக்கிச்சி, அப்படின்னு சொல்லிட்டாலே, அதுவா நிலம்தானே என்று சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் பஞ்சபூத மருத்துவத்தின் மேலோட்டோ பார்வைக்குள் வந்துவிட்டீர்கள்... முக்கியமான மென் திசுக்களும் நிலப்பூதத்தின் கட்டுக்குள்தான் இருக்கிறது. இரத்த அணுக்கள், நினநீர் போன்றவையும் நிலத்துக்குள், இப்படி நிறைய இருக்கு... கொஞ்சம் கொஞ்சமா அவ்வப்பொழுது பேசலாம்..
வயிறு உப்புசாம இருந்தால் .. வயிறு பிரச்சனையாக இருந்தால்.. நிலப் பூதத்தில் சிகிச்சை கொடுத்து பரிசோதிப்போம்... பலப்பரிட்சையில் வெற்றி கொள்வோம்.. மீண்டும் முயற்சித்து.
- Forex Board index Forex Online Home Business Website சக்தி இணை மருத்துவம்
-
- It is currently Tue May 21, 2024 7:12 pm
- All times are UTC+05:30
ஆரோக்கியத்தில் நிலத்தின் பங்கு
ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Return to “சக்தி இணை மருத்துவம்”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை