நீலக்கதிர் சிகிச்சை - இல்லாமைக்கு இருப்பு காட்டும் புதிய கண்டுபிடிப்பு

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நீலக்கதிர் சிகிச்சை - இல்லாமைக்கு இருப்பு காட்டும் புதிய கண்டுபிடிப்பு

Post by ஆதித்தன் » Sun Apr 14, 2019 7:16 am

தெரியாத ஒன்றினை தெரிந்து கொள்ள தெளிந்த ஒர் நபரால் மட்டுமே முடியும். இல்லாவிட்டால், தெரியாமலே தெரிந்தது போல தெருவாய் வலம் வரும்.

பல்லாயிரம் ஆண்டுகள் ஆராய்ந்து சொல்லப்பட்ட கருத்துகளை எல்லாம் கொண்ட நம்மை, ஒன்றுமே தெரியாத ஒர் கூட்டம் எவ்வளவு எளிமையாக ஏமாற்றிவிட்டுச் செல்கிறார்கள் பாருங்கள்.

நம் உடலில் கிருமிகள் என்பதே இல்லை. அதாவது நோய்க்கிருமிகள் என்ற ஒன்றே இல்லை.

அத்தனை கிருமிகளும் நன்மையே செய்கின்றன.

ஆனால், இல்லா அந்த கிருமிக்குத்தான் இத்தனை ஆண்டுகளாக மருத்துவம் என்றப் பெயரில் இலட்சம் இலட்சமாக பணத்தினை வாங்கிக் கொண்டிருக்கிறது, அலோபதி மருத்துவம்.

அவங்களை சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில் அவர்களுக்கு தெரிந்தது அவ்ளதான்.

நாய் கடிக்குதுன்னு, நாயைக் கொன்றுப் போட்டால், அந்த நாய் உடலில் ஆயிரம் கிருமிகள் வரும். இது நாம் கண்கூடாக பார்ப்பது.

நம் கண்ணால் பார்க்க முடியா, உடலுக்குள் இருக்கும் ஒர் உயிரை கிருமி என்று பெயரிட்டு கொன்றுப் போட்டால்???? அப்போ புதுசா கிருமி வருமா? வராதா?

வராது என்றுதான் அலோபதி மருத்துவம் நினைத்து அன்று செய்தது. ஆனால், ஒர் கிருமியைக் கொன்றால் இன்னொரு கிருமி வருது என்பதனை தன் பல்லாண்டு கால சிகிச்சைப் பயணத்தில் தெரிந்து கொண்டது.

ஆனாலும் விடாது கருப்பு போல, புதியதாக ஒர் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துகிறது... அதன் பெயர் நீல ஓளிச் சிகிச்சை.

நீல ஒளிச் சிகிச்சை. இந்த நீல ஒளி கெட்ட கிருமிகளை மட்டும் அழித்துவிடுமாம்... அதன் பின்னர் மீண்டும் புதிய கிருமி தோன்றா வண்ணம் அழித்துவிடுமாம்.

இத்தனை வருடமாக கிருமியக் கொல்றேன்னு சொல்லி தான் ஏமாந்தது மடுமில்லாமல்... அந்த ஏமாற்றையே சிகிச்சை என்றுச் சொல்லி பணமாக்கியக் கூட்டம்.... மீண்டும் கிருமியை அடியோடு கொல்றேன் என்று புதிய சிகிச்சையை அறிமுகம் செய்கிறது.

மக்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்.

இந்த உலகம் தோன்றியதே கெடுதலான ஒன்றை ஒன்று உண்பதாகத்த்தான்.

நம் உடலில் கிருமி உருவாகியது என்றால், அதற்கு முன்னர் அங்கே கெடுதலான ஒன்று உருவாகியிருக்கிறது என்பது அர்த்தம். அந்த கெடுதலை அந்த கிருமி அழித்து நன்மை தரும்.

அப்படி நன்மைத் தரக்கூடிய அந்த கிரிமையையே கெட்டது என தெரியாமல் நாம் அழித்தாலும், படைப்பவனாகிய இறைவன் என்ற உயிர் தான் வாழும் இந்த உடலுக்கு ஏற்படும் கெடுதலை தீர்க்க மீண்டும் கிரிமியை படைக்கும்.

படைத்தல் காத்தல் அழித்தல் என முத்தொழில் செய்பவனாகிய இறைவன், நம்முள்ளே இருக்கும் உயிர். அவனுக்கு எதனை படைக்க வேண்டும், எதனை காக்க வேண்டும், எதனை அழிக்க வேண்டும் என்பது மிக நன்றாகவே தெரியும்.

கண்ணுக்குத் தெரியாத ஒன்றின் மீது நாம் அத்தனை கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை... அப்பணியினை இறைவன் நமக்கு கொடுக்க வில்லை.

நம் கண்ணுக்குத் தெரியாத உடல் உள்ளே நடப்பவைகளை கண்காணிக்க கிருமிகளைப் படைத்துள்ளான். அவைகள் நம் உள் உடம்பைப் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள், கண்ணுக்கு தெரிந்த இயற்கை சீர்கெட்டுப் போய் கிடப்பதனை மட்டும் சரி செய்தால் போதும்.

சுகாதாரமான காற்று.... சுகாதாரமான நீர்... சுகாதாரமான வெப்பம் .... சுகாதாரமான நிலம் .... சுகாதாரமான வெற்றிடம் என தெரிந்த இயற்கையை சீர்படுத்துங்கள்.

தெரியாததை உயிர் பார்த்துக் கொள்ளும்.

மீண்டும் மீண்டும் புதிய சிகிச்சை என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும் சென்று ஏமாறாதீர்கள்.

மருந்தென வேண்டாமாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”