உடலில் அமைந்துள்ள பஞ்சபூத உயிர்ப்புள்ளிகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உடலில் அமைந்துள்ள பஞ்சபூத உயிர்ப்புள்ளிகள்

Post by ஆதித்தன் » Fri Mar 15, 2019 6:22 am

சக்தி ஓட்டப்பாதை:
நமது உடல் பஞ்சபூத மூலகங்களால் ஆனது. ஒவ்வொரு மூலகங்களும் குளிர்ச்சி உறுப்பு வெப்ப உறுப்பு என இரண்டு உறுப்புகளைக் கொண்டுள்ளன. நெருப்பு மூலகம் மட்டும் உறுப்பல்லாத தன்மை அடிப்படையிலான இருதய மேலுறை & மூவெப்ப மண்டலம் என கூடுதலாக இரண்டு உறுப்புகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பும் தனக்கான சக்தி ஓட்டப்பாதையினை கொண்டுள்ளன. மூலகங்கள் கொண்டுள்ள இரண்டு உறுப்பில் ஒன்று, உட்புறம் நோக்கிய சக்தி ஓட்டப்பாதையாகவும் மற்றொன்று வெளிப்புறம் நோக்கிய சக்தி ஓட்டப்பாதையாகவும் அமைந்துள்ளது. குளிர்ச்சி உறுப்பு சக்தி ஓட்டப்பாதைகள்மூலகத்தின் உள்ளுறுப்புகளைக் கொண்ட உடம்போடும், வெப்ப சக்தி ஓட்டப்பாதைகள் மூலகத்தின் வெளியுறுப்புகளைக் கொண்டுள்ள முகத்தோடும் தொடர்பில் இருக்கும் வகையில் அங்கு ஆரம்பமாகவே அல்லது முடிவாகவே அமைந்துள்ளன. சக்தி ஓட்டப்பாதைகள் இடம் வலம் என இருபுறமும் ஓன்றுபோல அமைந்துள்ளன.

மேலும், உடலின் முன்பக்க மத்தியக் கோட்டில் ஓடும் இனவிருத்தி சக்தி ஓட்டப்பாதை, பின்பக்க மத்தியக்கோட்டில் ஓடும் ஆளுமை சக்தி ஓட்டப்பாதை என மொத்தம் 14 பெரும் சக்தி ஓட்டப்பாதைகள் உள்ளன. மேலும் பல சிறு சக்தி ஓட்டப்பாதைகள் உடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அக்குபங்சர் பயன்பாட்டில் உள்ள 14 பெரும் சக்தி ஓட்டப்பாதைகள் மற்றும் அவற்றில் அமைந்துள்ள பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கக்கூடிய பஞ்சபூதப் புள்ளிகள் பற்றி நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.

அக்குபங்சர் மொத்த புள்ளிகள் & பஞ்சபூத கட்டளைப்புள்ளிகள்:
ஒவ்வொரு சக்தி ஓட்டப்பாதையிலும் பல அக்குபங்சர் புள்ளிகள் உள்ளன, அவற்றில் ஐந்து புள்ளிகள் மட்டும் பிரபஞ்சத்திலிருந்து பஞ்சபூத சக்தியினை ஈர்ப்பதாகவும், சிகிச்சைக்கு பயன்படும் கட்டளைப் புள்ளிகளாகவும் உள்ளன. மற்றப்புள்ளிகள் சக்தியினைக் பாதையில் சேமித்து கடத்தும் செயலைச் செய்கின்றன.
முதுகுத் தண்டுவடத்தில் ஓடும் ஆளுமைச் சக்தி ஓட்டப்பாதையில் மட்டும் கட்டளைப்புள்ளிகள் இல்லை.

மொத்த அக்குபங்சர் புள்ளிகள் 361. அவற்றுள் சக்தி ஓட்டப்பாதைக்கு 5 என 13 சக்தி ஓட்டப்பாதைகளில் சிகிச்சைக்கான கட்டளைப்புள்ளிகள் மொத்தம் 65 உள்ளன. அவை,
குளிர்ச்சி உறுப்புகள்(யின்):
மூலகம் உறுப்பு - குறியீடு - மொத்த புள்ளிகள் மூலக கட்டளைப் புள்ளிகள் மரம் நெருப்பு நிலம் காற்று நீர்
நெருப்பு - இதயம் - HT - 9 - HT9 = HT8 = HT7 = HT4, HT3
நெருப்பு - இருதய மேலுறை -PC- 9 - PC9 -PC8-PC7-PC5-PC3
நிலம் - மண்ணீரல் - SP - 21 -SP1-SP2-SP3-SP5-SP9
காற்று - நுரையீரல் -LU - 11 = LU11-LU10-LU9-LU8-LU5
நீர் - சிறுநீரகம் - KI -27 - KI1-KI2-KI3-KI7-KI10
மரம் - கல்லீரல் - LR - 14 - LR1-LR2-LR3-LR4-LR8-
வெப்ப உறுப்புகள்(யாங்)
மூலகம் உறுப்பு - குறியீடு - மொத்த புள்ளிகள் மூலக கட்டளைப் புள்ளிகள் காற்று நீர் மரம் நெருப்பு நிலம்
நெருப்பு-சிறுகுடல்-SI-19-SI1-SI2-SI3-SI5-SI8-
நெருப்பு -மூவெப்பமண்டலம் -TE-23-TE1-TE2-TE3-TE6-TE10
நிலம்-இரைப்பை -ST-45-ST45-ST44-ST43-ST41-ST36
காற்று - பெருங்குடல் -LI-20- LI1-LI2-LI3-LI5-LI11
நீர் - சிறுநீர்ப்பை-BL-67-BL67-BL66-BL65-BL60-BL40
மரம்- பித்தப்பை -GB-44- GB44-GB43-GB41-GB38-GB34

மேலும், இனவிருத்தி சக்தி (CV) சக்தி ஓட்டப்பாதையில் 24 புள்ளிகள் உள்ளன. அவற்றில் பஞ்சபூத புள்ளிகள், CV5-நெருப்பு, CV6-நீர், CV7-மரம்,CV9-காற்று, CV13-நிலம்.
GV-ஆளுமை சக்தி ஓட்டப்பாதையில் 28 புள்ளிகள் உள்ளன. அவற்றில் பஞ்சபூத புள்ளிகள் கிடையாது.

பஞ்சபூத புள்ளிகள் பணி:
சக்தி ஓட்டப்பாதைகள் ஒவ்வொன்றும் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் 5 பஞ்சபூதப்புள்ளிகளையும் அவற்றினை கடத்திச் செல்லும் துணை புள்ளிகளையும் கொண்டுள்ளன. நுரையீரல் என்ற உள்ளுறுப்பின் சக்தி ஓட்டப்பாதையில் மொத்தம் 11 புள்ளிகள், அவற்றில் 5 புள்ளிகள் கட்டளைப்புள்ளியாகிய பஞ்சப்பூதப்புள்ளிகள் மற்றவை சக்தியினை உள்ளுறுப்பு வரை கொண்டு செல்லும் துணைப்புள்ளிகள் ஆகும். இதைப்போல், சக்தி ஓட்டப்பாதையின் நீளத்திற்கு ஏற்ப துணைப்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாவும் குறைவாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, சிறுநீர்ப்பை சக்தி ஓட்டப்பாதையில் மொத்தம் 67 புள்ளிகள் உள்ளன. அவற்றில் ஐந்து புள்ளிகள் பஞ்சபூதப்புள்ளிகள், மற்ற 62 புள்ளிகளும் பஞ்சபூதப்புள்ளி சக்தியினை ஈர்த்து அனுப்புவதனை வாங்கி என, ஒன்றிடமிருந்து ஒன்று வாங்கி உள்ளுறுப்பு வரை கடத்தும் புள்ளிகளாகும்.

பஞ்சபூதப் புள்ளிகள் உயிராற்றலால், பிரபஞ்சத்திலிருந்து பஞ்சபூத சக்தியினை ஈர்க்கிறது. அதில் அப்புள்ளி சார்ந்த மூலகத்தின் தன்மையும், அப்புள்ளி சார்ந்த உள்ளுறுப்பின் மூலகத்தின் தன்மையும் மிகையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, HT9 என்ற புள்ளி, நெருப்பு மூலகமாகிய இருதயத்தின் மரம் மூலக பஞ்சபுதப்புள்ளியாகும். இதில், மரம் & நெருப்பு ஆகிய இரண்டு மூலகங்கள் இணைந்து மிகைத் தன்மையுடன் காணப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பஞ்சபூதப்புள்ளியும் இரண்டு மூலகங்களை இணைக்கும் தன்மையுடன் உள்ளன.

பிரபஞ்சத்திலிருந்து ஈர்க்கப்பட்ட சக்தியானது, அப்பஞ்சபூதப்புள்ளி சார்ந்த மூலகத்தன்மையாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட சக்தியானது, தன்னைச்சார்ந்த பகுதியின் பராமரிப்புக்கு செலவிடப்படுகிறது. அடுத்து, தன்னைச்சார்ந்த உள்ளுறுப்புக்கு கடத்துகிறது. பஞ்சபூதப்புள்ளிகள் மட்டுமே சக்தியினை ஈர்க்கும் பணியினை முதன்மையாக செய்து என ஈர்த்தல், சேகரித்தல், பராமரித்தல் & கடத்தல் என நான்கு பணிகளைச் செய்கின்றன. மற்றப்புள்ளிகள் வருவதனை வாங்கி சேகரித்தல், பராமரித்தல், கடத்துதல் என்ற மூன்று பணிகளைச் செய்கின்றன.

பஞ்சபூத சக்தி சுழற்சி:
பஞ்சபூதப்புள்ளி ஈர்க்கும் சக்தியானது சக்தி ஓட்டப்பாதை வழியாக அதுசார்ந்த உள்ளுறுப்பிற்கு செல்கிறது. உள்ளுறுப்பானது தன் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்திவிட்டு மீதத்தை தன் துணை உறுப்புடன் பகிர்ந்து கொள்கிறது. துணை உறுப்பின் தேவையும் பூர்த்தி ஆனப்பின்னர், பஞ்சபூதத் தத்துவத்தின் ஆக்கச் சுழற்சிப்படி அதன் அடுத்த மூலகத்தின் உறுப்புடன் பகிர்ந்து கொள்கிறது.

எ.கா: நீர் மூலகமாகிய சிறுநீரகம் தன் பிரபஞ்ச சக்தி தேவை பூர்த்தியானவுடன் கூடுதலை துணை உறுப்பாகிய சிறுநீர்ப்பையுடன் பகிர்ந்து கொள்கிறது, பின்னர்,சிறுநீரகம் அதன் அடுத்த மூலகமாகிய மரம் பூதத்தின் கல்லீரலுடன் சக்தியினை பகிர்ந்து கொள்கிறது, இதைப்போல் சிறுநீர்ப்பை பித்தப்பையுடன் பகிர்ந்து கொள்கிறது. இவ்வாறு அக்கச் சுழற்சியாக சக்தி பகிர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.

பஞ்சபூத புள்ளிகள் பயன்பாடு:
உடலில் பல சக்தி ஓட்டப்பாதைகள் இருந்தாலும், குறிப்பிட்ட உறுப்பிற்கு சக்தியினை கடத்துகிறது என்ற ரீதியில் கண்டுகொள்ளப்பட்டு உறுப்பிற்கான சக்தி ஓட்டப்பாதைகளும் புள்ளிகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மனிதனுக்கு நோயானது பஞ்ச பூத சீர்கேட்டினால் ஏற்படுகிறது. பஞ்சபூத சீர்கேடு என்பது உள்ளுறுப்பு சரிவர இயங்காமையால் ஏற்படுகிறது. உள்ளுறுப்பு சீர்கேடு என்பது கழிவு தேக்கத்தினால் ஏற்படுகிறது.

உள்ளுறுப்பு சீர்கேடு அடையும் பொழுது பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் பஞ்சபூத புள்ளிகள் சில செயல் இயக்கம் குறைந்து இருக்கலாம். அப்புள்ளியினை சரியாக அக்குபங்சர் தத்துவத்தின்படி தேர்ந்தெடுத்து சிகிச்சைக் கொடுக்கும் பொழுது, பஞ்சபூதப்புள்ளி புத்துணர்ச்சி பெற்று இயக்கம் கொண்டு, சீர்கெடு அடைந்த அது சார்ந்த உறுப்பிற்கு சக்தியினைக் கொடுத்து கழிவு நீக்கத்திற்கு உதவுவதன் மூலம் நோய் குணமாகிறது.

பிரபஞ்ச சக்தியானது கழிவுகளற்ற தூய்மையான உயிர்சக்தி ஆகும். இதன் பஞ்சபூதத் தத்துவத்தின்படி சீர்கேடு அடைந்த மூலகங்களின் தாய்மையாக இருக்கக்கூடிய முதன்மைப்புள்ளி ஒற்றைப்புள்ளியினை தூண்டினாலே அது தான் சார்ந்த உறுப்புகளை சீர்படுத்துவதுடன், அதன் சுழற்சியையும் அதுசார்ந்த மூலக உறுப்புகளையும் சீர்படுத்தும்.

பஞ்சபூதப்புள்ளியில் சிகிச்சை:
தேவையான சக்தியினை ஈர்க்கும் புள்ளியாக பஞ்சபூத கட்டளைப்புள்ளிகளே இருப்பதால், சக்திகளை ஈர்க்கும் பஞ்சபூதத்தில் சிகிச்சை கொடுப்பதே அக்குபங்சர் சிகிச்சை முறையாக உள்ளது. 65-பஞ்சபூதப்புள்ளிகளில் சரியான ஒற்றைப்புள்ளியினை அக்குபங்சர் நோயறிதல் தத்துவத்தின்படி கண்டறிந்து, அப்புள்ளியின் மேல் அக்குபங்சர் ஊசியின் மூலம் மேலோட்டமாக தோலில் குத்தி, சிறிது நேரத்தில் எடுத்துவிடலாம். அல்லது ஆட்காட்டி விரலால் புள்ளியின் மேல் மேலோட்டமாக தொட்டும் தொடாமலும் சிறிது நேரம் வைத்தால் போதும். ஒர்நபர்க்கு ஒர்முறை சிகிச்சை கொடுத்தால் அடுத்தமுறை சிகிச்சை என்பது 7 நாட்கள் கால இடைவெளி கொடுத்து தேவைப்பட்டால் கொடுக்க வேண்டும்.


பஞ்சபூதப் புள்ளிகள் அமைவிடம் :

Image==== ====Image
Image ==== === Image

சக்தி ஓட்டப்பாதைகளும் மூலகப்புள்ளிகளின் அமைவிடமும்:

இதயத்தின் சக்தி ஓட்டப்பாதை:
இருதய சக்தி நாளம், கை அக்குளின் மத்தியில் ஆரம்பித்து கையின் உட்பக்க கீழ்பகுதி வழியாக முழங்கை, மணிக்கட்டு மற்றும் உள்ளங்கை வழியாக சென்று கை சுண்டுவிரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 அங்குல தூரத்தில் முடிவடைகிறது.

இருதயத்தின் ஐந்து மூலகப்புள்ளிகள் : மரம் - HT-9 - நெருப்பு HT-8 - மண்- HT-7 - காற்று HT-4 - நீர் HT-3

HT-9 = இருதய மரப்புள்ளி, கை சுண்டுவிரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிலிருந்து மேலே 0.1 அங்குல தொலைவில் அமைந்துள்ளது.
HT-8 = இருதய நெருப்புள்ளி, உள்ளங்கையில் 4வது 5வது விரல் எலும்பின் மத்தியில் இருதய ரேகையில் அமைந்துள்ளது.
HT-7 = இருதய நிலப்புள்ளி, கை மணிக்கட்டு நேரகையில் உட்புற ஒரத்தில் அல்நா எலும்பின் வெளிப்புற ஓரத்தில் அமைந்துள்ளது.
HT-4 = இருதய காற்றுபுள்ளி, நிலமூலகப்புள்ளியிலிருந்து 1.5 அங்குலம் மேலே அமைந்துள்ளது.
HT-3 = இருதய நீர்ப்புள்ளி, முழங்கை மடிப்பு ரேகையின் உட்பக்கம் கடைசியில் அமைந்துள்ளது.

சிறுகுடலின் ஐந்து மூலகப் புள்ளிகள் : காற்று-SI-1 = நீர்-SI-2 = மரம்-SI-3 = நெருப்பு-SI-5 = நிலம்-SI-8
சிறுகுடல் சக்தி ஓட்டப்பாதை:
கை சுண்டுவிரல் உட்புற நகக்கண் கீழ்விளிம்பிலிருந்து 0.1அங்குலம் மேல் ஆரம்பித்து, உட்புற ஓரமாகவே மணிக்கட்டு> மணிக்கட்டு> முழங்கை> அக்குள் மடிப்பு ரேகையின் பின்பக்க ஓரம் வழியாக தோள்பட்டையில் இறங்கி> ஏறி> கழுத்து வழியாக கன்ன நடுவே முக எலும்பு வரைச் சென்றுபின் திரும்பி காது ஓரத்தின் மத்தியில் முடிகிறது.

SI-1 = சிறுகுடல் காற்றுப்புள்ளி, கை சுண்டுவிரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 அங்குலம் தொலைவில் அமைந்துள்ளது.
SI-2 = சிறுகுடல் நீர்ப்புள்ளி, சுண்டுவிரல் கையுடன் சேரும் மூட்டுப்பகுதியின் முன்புறம் உட்புறப் பகுதியின் பள்ளத்தில் உள்ளது.
SI-3 = சிறுகுடல் மரப்புள்ளி, கைவிரல்களை மடக்கும் பொழுது இதயரேகை மடிப்பின் உட்புற ஓரத்தில் ஏற்படக்கூடிய மேட்டில் தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
SI-5 = சிறுகுடல் நெருப்புப்புள்ளி, மணிக்கட்டு உட்புற ஓரத்தில் மணிக்கட்டு எழும்பும் அல்நா எலும்பின் கீழ்பகுதியும் இணையுமிடத்தில் உள்ள பள்ளத்தில் உள்ளது.
SI-8 = சிறுகுடல் நிலப்புள்ளி, முழங்கை மூட்டுப்பகுதியில் மேற்கை எலும்பின் மூட்டுக்கும் அல்நா எலும்பு மூட்டுக்கும் நடுவில் பள்ளத்தில் உள்ளது.

இருதயமேலுறை(PC) ஐம்பூதப்புள்ளிகள்

இருதயமேலுறை சக்தி ஓட்டப்பாதை, மார்புக் காம்பிலிருந்து ஒர் அங்குலம் வெளிப்பக்கமாக ஆரம்பித்து தோல்பட்டை வழியாக மேலேறி, நுரையீரல் & இருதய சக்தி ஓட்டப்பாதைகளுக்கு நடுவாக, மணிக்கட்டு வழியாக உள்ளங்கை மத்தியாக சென்று நடுவிரலின் மேல் நுனியில் முடிவடைகிறது.

இருதயமேலுறை ஐம்பூதப்புள்ளிகள், PC-9-மரம் = PC-8-நெருப்பு = PC-7-நிலம் = PC-5-காற்று = PC-3-நீர்

PC-9-இருதயமேலுறை மரப்புள்ளி, கை நடுவிரல் உச்சி நுனியில் நகமும் சதையும் சேருமிடத்தில் மத்தியில் உள்ளது.
PC-8-இருதயமேலுறை நெருப்புப்புள்ளி, உள்ளங்கையில் இரண்டாவது மூன்றாவது விரல் சேரும் மூட்டுக்கு நடுவில் இருதய ரேகை அருகில் உள்ளது.
PC-7-இருதயமேலுறை நிலப்புள்ளி, மணிக்கட்டு ரேகை மத்தியில் உள்ளது.
PC-5-இருதயமேலுறை காற்றுப்புள்ளி, PC7-லிருந்து 3 அங்குலம் மேலே உள்ளது.
PC-3-இருதயமேலுறை நீர்ப்புள்ளி, முழங்கையில் இருதலை தசைநாரின் உட்பக்கத்தில் அமைந்துள்ளது.மூவெப்பமண்டல சக்தி ஓட்டப்பாதை, கை நான்காவது விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிலிருந்து மேல் 0.1 அங்குலத்தில் ஆரம்பித்து, கையின் வெளிப்பக்கமாக சிறுகுடல் & பெருங்குடல் சக்தி ஓட்டப்பாதைகளுக்கு நடுவாக தோள்பட்டையின் பின்புறத்தினை அடைந்து கழுத்தின் பக்கவாட்டு வழியாக காதின் கீழ் நுனிக்குச் சென்று காதோரமாக மடல் முழுமையாக வளைந்து சென்று பின் எதிரே கண் புருவத்தின் ஓரத்தில் முடிவடைகிறது.

மூவெப்பமண்டல ஐந்து மூலகப்புள்ளிகள், TE-1-காற்று = TE-2-நீர் = TE-3-மரம் = TE-6-நெருப்பு = TE-10-நிலம்
பஞ்சபூத புள்ளிகள் அமைவிடம்:
TE-1-மூவெப்பமண்டல காற்றுப்புள்ளி, நான்காவது கைவிரல் நகத்தின் உட்புற கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
TE-2-மூவெப்பமண்டல நீர்ப்புள்ளி, நான்காவது விரல் கையுடன் சேரும் இடத்தில் உள்ள மூட்டின் முன்புறம் உட்புற ஓரமாக அமைந்துள்ளது.
TE-3-மூவெப்பமண்டல மரப்புள்ளி, கை மேற்புறத்தில் நான்காவது விரல் கையுடன் சேரும் மூட்டின் பின்புறம் உட்புற ஓரமாக ஐந்தாவது விரல் எலும்புக்கும் நடுவே அமைந்துள்ளது.
TE-6-மூவெப்பமண்டல நெருப்புப்புள்ளி, மணிக்கட்டு ரேகை பின்புற மையத்திலிருந்து 3 அங்குலம் தூரத்தில் மத்தியில் அமைந்துள்ளது.
TE-10-மூவெப்பமண்டல நிலப்புள்ளி, முழங்கையை மடக்கும் போது முழங்கை மூட்டின் மத்தியில் மேற்கை எலும்பு சேரும் இடத்தில் உள்ள பள்ளத்தில் உள்ளது.

மண்ணீரல் சக்தி ஓட்டப்பாதை:
கால் பெருவிரல் உட்புற ஓரம் கால் நகக்கண் கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் ஆரம்பித்து உட்புற ஓரமாக காலின் இருநிறங்களும் சேரும் கோடு வழியாக உட்புற கணுக்கால் மூட்டைச் சுற்றி டிபியா எலும்பின் உட்புற ஒரமாக, உடலின் வயிற்றுப் பகுதியில் மத்தியக் கோட்டிலிருந்து 4 அங்குலம் விலகியும், நெஞ்சுப்பகுதியில் 6 அங்குலம் விலகியும் சென்று 2வது 3வது விலா எலும்புவரை சென்று திரும்பி அக்குள் சென்று அங்கிருந்தே கீழே 6வது 7வது விலா எலும்புகளின் மத்தியில் முடிவடைகிறது.

மண்ணீரல் ஐந்து மூலகப்புள்ளிகள், SP-1 -மரம் = SP-2-நெருப்பு = SP-3-நிலம் = SP-5-காற்று = SP-9-நீர்

SP-1-மரப்புள்ளி - கால்கட்டை விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிலிருந்து மேல் 0.1 அங்குலம் தொலைவில் அமைந்துள்ளது.
SP-2-நெருப்புள்ளி - கால்கட்டை விரல் ஆரம்பிக்கும் இடத்தில் உட்புறம் தோலின் இருநிறங்களும் சேருமிடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.
SP-3-நிலப்புள்ளி - கால் கட்டை விரல் எலும்பின் தலைப்பகுதிக்கு கீழே (Sp2க்கு முன் மேட்டின் இறக்கத்தில்) தோலின் இரு நிறங்களும் சேருமிடத்தில் அமைந்துள்ளது.
SP-5-காற்றுப்புள்ளி - கால் கட்டைவிரல் உயர்த்தும் பொழுது உட்புற கணுக்கால் மூட்டு எலும்பின் ஓரத்தில் தசைநாரின் பக்கத்தில் ஏற்படும் பள்ளத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
SP-9-நீர்ப்புள்ளி - கால் டிபியா எலும்பின் உட்பக்க தலைப்பக்க பாகத்திற்கு கீழே அமைந்துள்ளது.

இரைப்பை சக்தி ஓட்டப்பாதை:
இரைப்பை சக்தி ஓட்டப்பாதை கண் கீழ் இமைப்பையின் கீழ் நடுவில் ஆரம்பித்து, அங்கிலிருந்து கீழிறங்கி கீழ்தாடை பகுதியில் இரண்டாகப் பிரிந்து ஒன்று தாடை ஓரமாக மேல்பக்கமாக காதின் அருகே கன்னம் ஓரமாக மேலேறி தலைப்பகுதியில், புருவ ஓரத்திலிருந்து 3.5 அங்குலம் மேல் முடிவடைகிறது. இரண்டாவது பாதை தாடையிலிருந்து கழுத்து வழியாக கீழிறங்கி நெஞ்சுப்பகுதியில் மத்தியக்கோட்டிலிருந்து 4 அங்குலம் அகன்று கீழிறங்கி வயிற்றுப் பகுதியில் 2அங்குலம் அகலமாக குறைந்து முன்புற தொடைவழியாக கீழிறங்கி, முழங்கால் மூட்டுப்பகுதியில் துருத்திக் கொண்டிருக்கும் டிபியா எலும்பின் மூட்டின் பக்கவாட்டு வெளிப்புறமாக கீழிறங்கி, கணுக்கால் முன்புற ரேகையின் நடுவாக சென்று 2வது கால் விரலின் வெளிப்புற நகக்கண் கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் தொலைவில் முடிவடைகிறது.

இரைப்பை ஐந்து மூலகப்புள்ளிகள், ST-45-காற்று = ST-44-நீர் = ST-43-மரம் = ST-41-நெருப்பு = ST-36-நிலம்

ST-45-காற்றுப்புள்ளி, கால் கட்டைவிரல் அடுத்த 2-வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் உள்ளது.
ST-44-நீர்ப்புள்ளி, கால் உட்புறத்திலிருந்து 2-வது மற்றும் 3-வது விரல் இடைவே முனைப்பகுதியில் அமைந்துள்ளது.
ST-43-மரப்புள்ளி, பாதத்தின் மேற்புறத்தில் 2-வது மற்றும் 3-வது கால்விரல் எலும்புகள் சேரும் இடத்தில் பின்புறம் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.
ST-41-நெருப்புப்புள்ளி, பாதத்தின் மேற்புறத்தில் 2-வது மற்றும் 3-வது கால்விரல்களுக்கு நேர் மேலே, கணுக்கால் மூட்டில் தெரிகின்ற இரண்டாவது சிறிய தசைநார்க்கு உட்புறம் நடுவில் அமைந்துள்ளது.
ST-36-நிலப்புள்ளி, கால் டிபியா எலும்பின் தலைப்பகுதியில் துருத்திக் கொண்டிருக்கின்ற பாகத்திலிருந்து 1 அங்குலம் கீழே பக்கவாட்டில் வெளிப்புறம் அமைந்துள்ளது.

நுரையீரல் சக்தி ஓட்டப்பாதை, உடலின் மத்தியக் கோட்டிலிருந்து 6 அங்குலம் தொலைவில் காலர் எலும்பின் ஓரத்தில் 1வது மற்றும் 2வது விலா எலும்பிற்கு நடுவே தொடங்கி தோல்பட்டைக்கு மேலேறி, கைகளின் வெளிப்புற முன்புறமாக முழங்கை மற்றும் மணிக்கட்டு வழியாகச் சென்று, கை பெருவிரலின் நகத்தின் வெளிப்புறமாக கீழ் விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் முடிவடைகிறது.

நுரையீரல் ஐந்து மூலகப்புள்ளிகள் : LU-11-மரம் = LU-10-நெருப்பு = LU-9-நிலம் = LU-8-காற்று = LU-5-நீர்

LU-11-மரம் புள்ளி, கைக்கட்டை விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
LU-10-நெருப்புப்புள்ளி, கைக்கட்டை விரலின் உள்ளங்கை எலும்பின் மத்தியில் வெளிப்புறமாக தோலின் இருநிறங்களும் சேருமிடத்தில் அமைந்துள்ளது.
LU-9-நிலப்புள்ளி, கை மணிக்கட்டு முதல் ரேகையில் வெளிப்புற ஓர முடிவில் அமைந்துள்ளது.
LU-8-காற்றுப்புள்ளி, கை மணிக்கட்டு முதல் ரேகையிலிருந்து வெளிப்புற ஓரத்தில் உள்ள LU9 புள்ளியிலிருந்து 1 அங்குலம் தொலைவில் அமைந்துள்ளது.
LU-5-நீர்ப்புள்ளி, முழங்கையை மடக்கும் போது தெரியும் மடிப்பு ரேகையிலுள்ள தசைநாரின் வெளிப்பக்கத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

பெருங்குடல் சக்தி ஓட்டப்பாதை, கை 2வது விரலின் வெளிப்புற நகக்கண் கீழ் விளிம்பிலிருந்த் 0.1 அங்குலம் தொலைவில் ஆரம்பித்து, கையின் பின்பக்க ஓரமாக முழங்கை> முன்பக்கத்தோள்பட்டை > முன்பக்க கழுத்து வழியாக முகம் ஏறி, மூக்கிற்கும் மேல் உதடுக்கும் நடுவே மீசைப்பகுதியில் எதிர்புற மூக்கு ஓரத்தில் சென்று முடிவடைகிறது.

பெருங்குடல் ஐந்து மூலகப்புள்ளிகள் - LI-1-காற்று = LI-2-நீர் = LI-3-மரம் = LI-5-நெருப்பு = LI-11-நிலம்

LI-1-காற்று புள்ளி, ஆட்காட்டி விரல்நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
LI-2-நீர்ப்புள்ளி, ஆட்காட்டி விரல், தன் விரல் எலும்போடு சேரும் மூட்டிற்கு கீழே வெளிப்புறமாக அமைந்துள்ளது.
LI-3-மரப்புள்ளி, ஆட்காட்டி விரல், தன் விரல் எலும்போடு சேரும் மூட்டிற்கு மேலே வெளிப்புறமாக அமைந்துள்ளது.
LI-5-நெருப்புப்புள்ளி, கையின் மேற்புறத்தில் கட்டை விரலை உயர்த்தும் பொழுது, கட்டை விரலுக்கும் மணிக்கட்டு பக்கவாட்டிற்கும் இடையில் ஏற்படும் பள்ளத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
LI-11-நிலப்புள்ளி, முழங்கை மடிப்பு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் அமைந்துள்ளது.

சிறுநீரகச் சக்தி ஓட்டப்பாதை, கால் பாதத்தில் 2வது விரல் வெளிப்புற ஓரத்திலிருந்து நேர் கீழே பெருவிரல் மேட்டுப்பகுதியின் அருகே உள்ள பள்ளத்தில் ஆரம்பித்து, காலின் உட்புறமாக கணுக்கால் > முழங்கால் > தொடை வழியாக மேலேறி வயிற்றுப்பகுதியில் மத்தியக்கோட்டிலிருந்து 0.5 அங்குலம் பக்கவாட்டாகவும், நெஞ்சுப்பகுதியில் 2 அங்குலம் பக்கவாட்டாகவும் பயணித்து 1&2வது விலா எலும்புகள் மத்தியில் முடிவடைகிறது.

சிறுநீரக ஐந்து மூலகப்புள்ளிகள் - KI1-மரம் = KI2-நெருப்பு = KI3-நிலம் = KI7-காற்று = KI10-நீர்

KI-1-சிறுநீரக மரப்புள்ளி, உள்ளங்காலில் காலின் இரண்டாவது மூன்றாவது விரல்களுக்கு நேர் கீழே பெருவிரல் பாதமேட்டுப்பகுதியின் உட்பக்க கீழ் ஓரத்தில் அமைந்துள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.
KI-2-சிறுநீரக நெருப்பு புள்ளி, கணுக்கால் மூட்டின் முன்புறத்திற்கு கீழே உட்புற பக்கவாட்டு பாத எலும்பின் மேல்புறமாக மூன்றாவது பள்ளத்தில் அமைந்துள்ளது.
KI-3-சிறுநீரக நிலப்புள்ளி, உட்பக்க கணுக்கால் மூட்டிற்கும், குதிகால் நரம்பிற்கும் இடையில் அமைந்துள்ளது.
KI-7-சிறுநீரக காற்றுப்புள்ளி, KI-3 புள்ளியிலிருந்து நேர்மேலே 2 அங்குலத் தொலைவில் அமைந்துள்ளது.
KI-10-சிறுநீரக நீர்ப்புள்ளி, முழங்கால் மடிப்பு ரேகையின் உட்பக்க ஓரத்தில் அமைந்துள்ளது.

சிறுநீர்ப்பை சக்தி ஓட்டப்பாதை, கண்ணின் உட்புற ஓர பள்ளத்தில் ஆரம்பித்து நேரே தலைக்கு ஏறி, பின்பக்க கழுத்தில் இறங்கி, கழுத்துப்பகுதியில் இரண்டாகப் பிரிந்து முதுகு மத்தியக்கோட்டிலிருந்து 1.5 அகலம் பக்கவாட்டாக ஒர் பாதையாகவும், 3 அக்ங்குலம் பக்கவாட்டாக ஒர் பாதையாகவும்
கீழறங்கி பிட்டம் > தொடை வழியாக பிரிந்தே வந்து முழங்கால் மடிப்பு ரேகையின் மத்தியில் இரண்டு பாதைகளும் இணைந்து, பின் ஒற்றை பாதையாக முழங்கால் பின்பக்கமாகவே இறங்கி கணுக்கால் மூட்டிற்கும் பின்பக்க தசைநார்க்கும் மத்தியாக கீழிறங்கி, பாதத்தின் வெளிப்புறமாக தோலின் இருநிறங்களும் சேரும் கோடு வழியாகவே சென்று சுண்டுவிரல் நகக்கண் கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் முடிவடைகிறது.

சிறுநீர்ப்பை ஐந்து மூலகப்புள்ளிகள் - BL-67-காற்று = BL-66-நீர் = BL-65-மரம் = BL-60-நெருப்பு = BL-40-நிலம்

BL-67-சிறுநீர்ப்பை காற்றுப்புள்ளி, கால் சுண்டுவிரல் வெளிப்புற நகக்கண் விளிம்பிலிருந்து மேல் 0.1 அங்குலத் தொலைவில் அமைந்துள்ளது.
BL-65-சிறுநீர்ப்பை நீர்ப்புள்ளி, கால் சுண்டுவிரல் எலும்பு பாதத்துடன் இணையும் மூட்டின் விரல்பக்கம் வெளிப்புறமாக தோலின் இருநிறங்களும் சேரும் பள்ளத்தில் அமைந்துள்ளது.
BL-65-சிறுநீர்ப்பை மரப்புள்ளி, கால் சுண்டுவிரல் எலும்பு பாதத்துடன் இணையும் மூட்டின் பாதப்பக்கம் வெளிப்புறமாக தோலின் இருநிறங்கள் சேரும் இடப் பள்ளத்தில் அமைந்துள்ளது.
BL-60-சிறுநீர்ப்பை நெருப்புப்புள்ளி, குதிகால் நரம்பிற்கும் வெளிப்புற கணுக்கால் மூட்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
BL-40-சிறுநீர்ப்பை நிலப்புள்ளி, முழங்கால் பின்னே உள்மடிப்பு ரேகையின் மத்தியில் அமைந்துள்ளது.

கல்லீரல் சக்தி ஓட்டப்பாதை, கால் கட்டைவிரலின் வெளிப்புற ஓரமாக நகக்கண் கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் தொடங்கி, பாதத்தின் மேற்புறமாக > கணுக்கால் வழியாக ஏறி, காலின் உட்புற ஓரமாக மூட்டுப்பகுதி> தொடை கடந்து இடுப்பிலிருந்து குறுக்காக நெஞ்சுக்கூட்டுப்பகுதி ஓரம் சென்று அங்கிருந்து குறுக்காக சென்று மார்புக் காம்பிற்கு கீழே 6&7வது விலா எலும்பிற்கு மத்தியில் முடிவடைகிறது.

கல்லீரல் ஐந்து மூலகப்புள்ளிகள் - LR-1-மரம் = LR-2-நெருப்பு = LR-3-நிலம் = LR-4-காற்று = LR-8-நீர்

LR-1-கல்லீரல் மரப்புள்ளி, கால் கட்டைவிரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேல் 0.1 அங்குலம் தொலைவில் உள்ளது.
LR-2-கல்லீரல் நெருப்புப்புள்ளி, கால்கட்டைவிரல் மற்றும் அடுத்த 2-ஆம் விரல் பாதத்துடன் சேருமிடத்தில்னடுவே மேல் அமைந்துள்ளது.
LR-3-கல்லீரல் நிலப்புள்ளி, LR2-லிருந்து 2 அங்குலம் மேலே கால்கட்டைவிரல் மற்றும் 2-ஆம் விரல் பாத எலும்புகள் சேருமிடத்தின் பள்ளத்தில் அமைந்துள்ளது.
LR-4-கல்லீரல் காற்றுப்புள்ளி, பாத மேல்புறத்தில் உட்புற கணுக்கால் மூட்டிலிருந்து ஏற்படும் ரேகையில் முதல் தசை நரம்பின் வெளிப்புறம் ஓரம் உள்ள பள்ளத்தில் உள்ளது.
LR-8-கல்லீரல் நீர்ப்புள்ளி, முழங்கால் மடிப்பு ரேகையின் உட்புற ஒரத்திலிருந்து(KI10) - 0.5 அங்குலம் செங்குத்தாக மேலே அமைந்துள்ளது.

பித்தப்பை சக்தி ஓட்டப்பாதை, கண்ணின் வெளிப்புற ஓரத்தில் ஆரம்பித்து காதின் முன்பக்க கீழ் ஓரம் சென்றுபின் திரும்பி அங்கிருந்து தலையின் பக்கவாட்டுக்கு சென்றுவிட்டு பின் திரும்பி காதின் பின்புற ஓரமாக கீழ் ஓரம் வரை சென்று பின் திரும்பி > பிறை வடிவமாக தலைப்பகுதி ஓரத்தில் கண்ணின் புருவ மத்தியிலிருந்து 1 அங்குலம் மேல் வரை சென்றுவிட்டு திரும்பி, பிறை வடிவத்தினை தொடங்கிய காதின் பின்பக்க கீழ்பக்கமே வந்து, பின் கழுத்துக்கு இறங்கி>முன்பக்கமாக அக்குளுக்கு கீழ் சென்றுவிட்டு அங்கிருந்து உடம்பில் M வடிவத்தினை உருவாக்கும் வகையில் குறுக்காக மார்புக் காம்புக்கு நேர் கீழ் 6-7வது விலா எழும்பு மத்திவரை சென்று, பின் 12வது விலா எலும்பு முடிகிற ஓரத்திற்கு சென்றுவிட்டு குறுக்காகவே இடுப்பு பகுதிக்கு சற்று மேல்வரை சென்றுவிட்டு அங்கிருந்து பிட்டத்தின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் M வடிவம் முடிகிறது, பின் அங்கிருந்து வெளிப்புற ஓரமாக தொடை கடந்து முழங்கால் வெளிப்புற ஓரமாக கணுக்கால் மூட்டை கடந்து பாதத்தின் மேற்புறம் வெளிப்புற ஓரமாக சென்று நான்காவது விரல் வெளிப்புற நகக்கண் கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் முடிவடைகிறது.

பித்தப்பை(GB) ஐந்து மூலகப்புள்ளிகள், GB-44-காற்று = GB-43-நீர் = GB-41-மரம் = GB-38 - நெருப்பு = GB-34-நிலம்

GB-44-பித்தப்பை காற்றுப்புள்ளி, காலின் நான்காவது விரலின் வெளிப்புற நகக்கண் கீழிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
GB-43-பித்தப்பை நீர்ப்புள்ளி, மேல்புறம் காலின் நான்காவது ஐந்தாவது விரல்கள் பாதத்துடன் சேரும் இடத்தின் அமைந்துள்ளது.
GB-41-பித்தப்பை மரப்புள்ளி, பாத மேல்புறம், நான்காவது ஐந்தாவது கால் விரல் பாத எலும்புகள் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
GB-38-பித்தப்பை நெருப்புப்புள்ளி, வெளிப்பக்க கணுக்கால் மூட்டின் உச்சியிலிருந்து 4 அங்குலம் மேலே பிபுலா எலும்பின் முன்பக்க ஓரத்தில் உள்ளது.
GB-34-பித்தப்பை நிலப்புள்ளி, வெளிப்பக்க பிபுலா எலும்பின் தலைப்பாகத்திற்கு கீழே அமைந்துள்ளது.

இனவிருத்தி சக்தி ஓட்டப்பாதை:
இனவிருத்தி மைய சக்தி ஓட்டப்பாதை உடலின் முன்புற மத்தியக் கோட்டில் ஆசன வாய்க்கும் இனவிருத்தி உறுப்பிற்கும் இடையில் ஆரம்பித்து கீழ் உதட்டிற்கு கீழே முடிவடைகிறது.

இனவிருத்தி மைய பஞ்சபூதப் புள்ளிகள் அமைவிடம்:
CV-5-இனவிருத்தி நெருப்புப்புள்ளி, தொப்புளிருந்து கீழ் 2 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-6-இனவிருத்தி நீர்ப்புள்ளி, தொப்புளிருந்து கீழ் 1.5 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-7-இனவிருத்தி மரப்புள்ளி, தொப்புளிருந்து கீழ் 1 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-9-இனவிருத்தி காற்றுப்புள்ளி, தொப்புளிருந்து மேல் 1 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-13- இனவிருத்தி நிலப்புள்ளி, தொப்புளிருந்து மேல் 5 அங்குல தூரத்தில் உள்ளது.

ஆளுமை சக்தி ஓட்டப்பாதை, (GV ) பின்புற மத்தியக்கோட்டில் ஆசன வாய்க்கும் வால் எலும்பு நுனிக்கும் மத்தியில் ஆரம்பித்து மத்தியக்கோட்டின் வழியாக தலை - மூக்கு என மேல் உதடு வழியாக வந்து வாய் உட்புற மேல் உதட்டின் கீழ் ஈறின் மத்தியில் முடிவடைகிறது. இதில் கட்டளைப்புள்ளிகள் கிடையாது.

அக்குபங்சர் மருத்துவத்தில் சிகிச்சை என்பது பஞ்சபூதப் புள்ளிகளிலேயே அதன் தத்துவத்தின்படி தேர்ந்தெடுத்து கொடுக்கபடுகிறது. பஞ்சபூதப்புள்ளிகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மெய்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் முழுமையான, நிரூபணமான மருத்துவச் சிகிச்சைப் புள்ளிகள் ஆகும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”