உடலை இயக்கும் உயிரணுவின் இயக்கம் அறிவோம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உடலை இயக்கும் உயிரணுவின் இயக்கம் அறிவோம்

Post by ஆதித்தன் » Tue Mar 12, 2019 10:37 am

உலகம் அணுக்களால் ஆனது, நாம் பார்க்கின்ற அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனதுதான். அதைப்போல் உயிரினங்கள் அனைத்தும் உயிரணுக்களால் ஆனவை. நம் உடலின் எந்தப் பகுதியையும் துண்டுத்துண்டாக பகுத்து இறுதி வடிவமாகப் பார்த்தாலும் கிடைப்பது உயிரணுதான். ஆம், நம் உடல் உயிரணுவின் தொகுப்பால் ஆனது. ஆகையால், உயிரணுவினைப் பற்றி அறிவது நம் முழு உடலின் இயல்புகளையும் இயக்கத்தையும் புரிந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வியலை கடைப்பிடிக்க உதவும்.

உயிரணு என்பது ஆங்கிலத்தில் செல் என அழைக்கப்படுகிறது. இது உடலின் கடைசித்துகளாகிய உயிருள்ள கடைசிப்பொருள் ஆகும். இதனை நேரடியாக கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியின் துணைகொண்டு பார்க்கலாம்.

உடலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட செல்களின் சிறிய கூட்டுத் தொகுப்பு திசு(Tissue) என்றும், திசுக்களின் கூட்டுத் தொகுப்பு பகுதி/உறுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. திசுக்களின் கூட்டுத் தொகுப்பிற்கு தகுந்தவாறு உறுப்புகள் வேறுபடுகிறது. உறுப்பின் பெயரால் அப்பகுதி செல்களும் திசுக்களும் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, சிறுநீரகத்தில் உள்ள திசுக்கள்-சிறுநீரகத்திசுக்கள், செல்கள் - சிறுநீரகச் செல்கள், இதயத்தில் உள்ள திசுக்கள்-இதயத்திசுக்கள், செல்கள்-இதய செல்கள், இவ்வாறு தோல் திசுக்கள்&தோல்செல்கள், நரம்பு செல்கள்- நரம்பு திசுக்கள்,எலும்பு செல்கள் -எலும்பு திசுக்கள் என பெயரினால் பிரித்தறியப்படுகிறது.

பல்வேறு உறுப்பின் தொகுப்பாக நமது உடல் அமைந்துள்ளது. இவை அடிப்படையில் அனைத்தும் உயிரணுவால் ஆனதுதான். அமைந்திருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் பண்பிலும் பணியிலும் வேறுபட்டாலும் செயல்நோக்கம் அடிப்படையில் அனைத்து செல்களுக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
Image
உயிரணுவின் அமைப்பு:
கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சிறியதாக இருக்கும் உயிரணு ஒழுங்கற்ற வட்ட வடிவமாக இருப்பதுடன் தன்னுள்ளே நியுக்ளியஸ், நியுக்ளியோலஸ், சைட்டோபிளாசம், மைட்டோகாண்ட்ரீயா என பலவற்றையும் தன்னகத்துள்ளே கொண்டுள்ளது. இவற்றின் துணையுடனே தன் அடிப்படைப் பணிகளைச் செய்வதுடன், தேவைப்பட்டால் இவற்றைப்போன்று புதிய வேதிமாற்றத்துடன் துணைஉறுப்பையும் உருவாக்கிக் கொள்ளும் பன்முகத்தன்மை கொண்டது.

உயிரணுவின் அடிப்படை இயக்கம்:
ஒவ்வொரு உறுப்பின் பகுதியில் அமைந்திருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் உயிரணுக்கள் பண்பிலும் வெளிப்படையான பணியிலும் வேறுபட்டாலும் அனைத்து விதமான உயிரணுவின் அடிப்படை இயக்கமும் ஒன்றாகவே அமைந்துள்ளன. அவை, உணவை உட்கிரகத்தில், கழிவுகளை வெளியேற்றுதல்.

சவ்வூடு பரவல் முறைப்படி, உயிரணுவின் சுவர் அருகே வெளியே வெளிப்புறம் இருக்கும் உணவு உட்கிரகக்கப்படுகிறது, உட்புறம் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. உயிரணுவின் சுவராக அமைந்துள்ள சவ்வினை ஊடுறுவி உணவு உள்ளேயும், கழிவு வெளியேயும் பரவுவதால் "சவ்வூடு பரவல்" என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு செல்லின் பண்பிற்குத் தகுந்தவாறு அதன் உணவும் கழிவும் மாறுபடுகிறது. உணவும் கழிவும் மாறுபட்டாலும், அதன் செயல் உணவினை உட்கிரகித்தல் கழிவினை வெளியேற்றுதல் எனும் சவ்வூடு பரவல் இயக்கம் ஆகும். சிலநேரங்களில், உணவின் தன்மைக்கு ஏற்ப அதனைச் சூழ்ந்து உட்கொள்வதும், நெகிழ்ந்து கழிவுகளை வெளியேற்றுதலும் என பணி நடைபெறுகிறது.

உயிரணுவின் அடிப்படை இயக்கத்தின் படியே நமது உடலின் ஒவ்வொரு பகுதியும் உறுப்பும் தனக்குத் தேவையான உணவை உட்கிரகித்து, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

உடலில் உயிரணுவின் பணி:
செல் திரவத்தால் நிரப்பட்ட செல்லின் மேலே பிற உள்ளுறுப்புகள் உடலில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த உயிரணுவாகிய செல்லின் சக்தி தேவைதான் பசியாக நமக்கு உணர்த்தப்படுகிறது. செல்களுக்கு சக்தி தேவைப்படும் பொழுது நரம்புகள் மூலமாக மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு, அங்கிருந்து அறிவிப்பு வழியாக இரைப்பை,மண்ணீரல் தூண்டப்பட்டு பசி ஏற்படுகிறது. பசி எடுத்தவுடன் நாம் உண்ணும் உணவு, வாயிலிருந்தே செரிமானம் ஆக ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, அங்கங்கு இருக்கும் செல்கள் ஒவ்வொன்றும் தனக்கான உணவினை எடுத்து சக்தியினை கிரகித்துவிட்டு கழிவினை வெளியேற்றுகிறது. செல்களால், உடனடியாக சக்தியினை கிரகிக்க முடியா கடின உணவுகள் பற்களால் நொறுக்கப்பட்டும்....செரிமான மண்டலம் மூலம் செரிக்கப்பட்டும் இரத்தத்தில் கலக்கப்படுகிறது. இரத்தத்தில் கலக்கும் உணவுச்சத்து உடலெங்கும் பரவுகிறது, அங்கங்கு இருக்கும் ஒவ்வொரு செல்லும் தனக்கான உணவினை உட்கிரகித்து,கழிவினை வெளியேற்றுவது இரத்தத்தில் கலக்கப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் வெவ்வேறு தன்மையுடன் இருப்பதுடன், ஒவ்வொன்றின் உணவு உகிரகித்தலும் கழிவும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, மேற்புறமாக இருக்கும் செல்கள் நீர்மமான உணவினை உட்கிரகித்து கழிவுகளை வெளியேற்றுகிறது, உட்புற செரிமான மண்டல உறுப்புகள், கடினமான உணவினை சூழ்ந்து சத்தினை கிரகித்து கழிவுகளை வெளியேற்றும் சத்தான நீர்மம் இரத்தத்தில் கலக்கப்பட்டு பிற செல்களுக்கு உணவுக்கான தரத்தில் உள்ளது. அதைப்போல், இரத்தில் கலக்கப்பட்ட சத்துக்களை பிற செல்கள் கிரகித்துவிட்டு வெளியேற்றும் கழிவுகள் சிறுநீரகத்தில் உள்ள செல்கள் உணவாக உட்கிரகித்து கழிவுகளை வெளியேற்றுகிறது. இவ்வாறு உடலில் உள்ள செல்களால் உணவின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டப்பின்னர் எஞ்சிய கழிவுகள், மலமாகவும், சிறுநீராகவும், வியர்வையாகவும் இயல்பாக வெளியேற்றப்படுகிறது. நாம் முகத்தினை கழுவும் பொழுது கூட நீரில் இருக்கும் சத்துக்களை செல்கள் உறிஞ்சி சக்தி பெற்று புத்துணர்வு அடைகிறது என்பதனையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். ஆக, செல்கள் தன் அடிப்படை பணியினையே மனித உடலிலும் செய்கின்றன.

செல்லும் கழிவு நீக்கமும்:
நம் உடலில் கழிவுகள் என்பது உணவைச் செரிக்கும் பொழுது, உடலுக்குத் தேவையற்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவதுதான். சாதாரண உடல்நிலையில் கழிவுகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். இக்கழிவுகள் அவ்வப்பொழுது இயல்பாக வெளியேற்றப்படுகிறது. தினமும் வியர்வை மூலமும், சிறுநீர் மூலமும், மலம் மூலமாகவும் இன்னும் பிற வழிகளிலும் இயல்பாக உருவாகிக் கொண்டிருக்கும் கழிவுகள் வெளியேறுகின்றன. இப்படி தொந்தரவுகள் எதுவும் தராமல் தினமும் வெளியேறும் கழிவுகள் சாதாரணக் கழிவுகள் என்ற பெயரில் அழைக்கலாம்.

செல்களில் உருவாகும் கழிவுகள் சாதாரணமாக வெளியேறிவிட்டால் எந்தவொரு கவலையும் இல்லை. ஆனால், அவ்வாறு வெளியேறாமல் உடலில் தேக்கம் ஏற்படும் சூழலையும் இயற்கை விதிமீறலால் நாம் உடலுக்கு ஏற்படுத்திவிடுகிறோம். இவ்வாறு உடலில் தேங்கும் கழிவுகள்தான் தொந்தரவுகளுக்கு காரணம் ஆகுகின்றன. மலம் போன்ற சாதாரண கழிவுகள் தேங்குவது மட்டும் பிரச்சனைகளை உண்டு பண்ணுகின்றன என்பது மட்டுமல்ல, நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் விதவிதமான கழிவுகள் உருவாகுகின்றன. அப்படி உருவாகுகிற கழிவுகள் ஒவ்வொன்றும் வெளியேறிவிட்டால் ஒருபிரச்சனையும் இல்லை. அவ்வாறில்லாமல், உடலிலேயே, செல்லிலேயே, உள்ளுறுப்புகளிலேயே என எங்கேனும் தங்கிவிட்டால் பல தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றன.

சாதாரணமான கழிவாகிய மலம் தேக்கம் அடையும் பொழுது, வயிற்றுக் கனமாக நமக்கு உணர்த்துகிறது உடல். பசி உணர்வினையும் நிறுத்துகிறது. மலக்குடலில் தேங்கியதை நேரடியாக வெளியேற்ற முடியாமல், அபான வாயுவாக மாற்றி சிறுகச் சிறுக வெளியேற்ற முயல்கிறது. அபான வாயு வெளியேறுவதனை நாம் தொந்தரவாக கருதுகிறோம், அது உடல் ஆரோக்கியத்திற்காக கழிவுகள் வெளியேற்றப்படுகிறது என்பதனை அறியாமல். பசியில்லாமல் நாம் உண்ணும் இயற்கை விதிமீறல் செயல், உடலினை மேலும் கடினப்படுத்துவதோடு, அடுத்தக்கட்ட செயலாக அஜீரணக் கோளாறு, தோலில் தொந்தரவுகள் என சாதாரணமாக மலக்குடல் வழியாக செல்ல வேண்டிய கழிவு தேக்கம் அடையும் பொழுது, பிற வழிகளில் கழிவுகளை வெளியேற்றுவது உடல் தொந்தரவாக நோயாக கருதுகிறோம்.

செல்களில் தினசரி உருவாகும் கழிவுகள் சாதாரண கழிவுகள் என்றும், அவ்வாறு உருவானவை வெளியேற்றப்படாமல் தேங்கும் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. உருவாகும் தேக்கமுற்ற கழிவுகளால்தான் உடலில் நோய் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

செல்லின் பணியில் குறுக்கீடு:
நம்முடைய இயற்கை விதிமீறலால்தான் செல் தன் இயல்பான வேலைகளை ஒழுங்காகச் செய்ய முடியாமல் தேக்கமுற்ற கழிவுகள் உருவாகுகின்றன. அப்படி என்ன செய்து நாம் செல்லின் பணிகளில் குறுக்கிடுகிறோம்? என்றால், செல் கேட்கிற நேரத்திற்கு அதன் பசிக்கு உணவளிப்பதில்லை, அதற்கு ஓய்வு தேவைப்படும் பொழுது வேலை செய்வது, குறைவான பசிக்கு, அதிகமாக உண்பது, பசியே இல்லாவிட்டாலும் நல்லா உண்பது, செல்லின் தண்ணீர் தேவையை தாகத்தின்பொழுது தண்ணீர் குடிக்காமலிருப்பது, தாகமில்லாத பொழுது அதிகமாக தண்ணீர் அருந்துவது, சரியாக தூங்காமை, இப்படி நம் அன்றாட வாழ்வின் நடைமுறைகளில் இயற்கையான செல்லின் தேவையின் உணர்வுகளை மறுத்து, நமக்கு நேரம் கிடைக்கிற பொழுது நம் விருப்பப்படி செய்கிறோம். இவை இயற்கை விதிமீறல்களே. இவற்றையும் கடந்து சுவையின் தேவை அறிந்து உண்ணாமல்... இராசயனம் கலந்த ஒரே சுவைக்கு அடிமையாகுவது, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்று தெரிந்தும் புகை,மது போன்ற பழக்க வழக்கங்கள் என ஏதேனும் ஒன்றும் அல்லது பல என தவறுகள் செய்து செல்லின் பணியில் தொய்வை உருவாக்கி தேக்கக்கழிவுக்கு வித்திடுகிறோம்.

இவ்வாறான இயற்கை விதிமீறல்கள் இரண்டு தன்மை கொண்டவை. 1) உடலின் தேவையை மறுதலித்தல். 2) உடலுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்கள். இவ்வகை பழக்கங்களால், நம்முடைய உடல் செல்களின் இயல்பு பணி கெடுகிறது. அதன் அடிப்படை இயக்கமான உணவுகளிலிருந்து சத்துக்களைப் பிரித்தெடுத்தல், அதிலிருந்து உருவாகும் கழிவுகளை வெளியேற்றுதல் என்ற வேலைகளில் குழப்பம் உருவாகி, சாதாரணக் கழிவுகள் தேக்கமுற்ற கழிவுகளாக மாறுகின்றன.

நோயும் செல்லும் தேக்கமுற்ற கழிவும்:
கழிவுகள் தேக்கமுற்றாலும் அவற்றையும் நம் செல் வெளியேற்றவே முயல்கிறது. அப்படி வெளியேற்றும் பொழுதுதான் நம் உடலில் தொந்தரவுகள் தோன்றுகின்றன. கண்களிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும் பொழுது கண்ணீர் வடிதல், மூக்கின் உட்புறச் சவ்விலிருந்து வெளியேற்றப்படும் பொழுது மூக்கில் நீர்வடிதல், தும்மல், நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படும் பொழுது இருமல், தோலிலிருந்து வெளியேற்றப்படும் பொழுது அரிப்பு, எரிச்சல், தேங்கிய கழிவுகள் கரைக்கப்படும் பொழுது வலி, கழிவுகளை வெளியேற்றுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்கும் காய்ச்சல்.... என எல்லா விதமான உடல் தொந்தரவுகளையும் பிரித்துப் பார்ப்போமானால் அனைத்துமே உடல் நோயல்ல, உடலின், அதன் செல்லின் கழிவு வெளியேற்றம் தான்.

இப்படி தேக்கமுற்ற கழிவுகள் வெளியேற்றப்படும் பொழுது உருவாகும் தொந்தரவுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டவை. தானாகவே தான்றி தானாகவே இயல்பான தொந்தரவுகள் மறைந்துவிடும். இதனை புரிந்துகொண்டு, கழிவு வெளியேற்றத்திற்கு நாம் துணை நின்றோமானால் மிக விரைவாகவும்,எளிமையாகவும் நிகழும். ஆனால், இவற்றை நோய்களாக அறிந்து கொண்டு கழிவு வெளியேற்றத்திற்கு தடை செய்தோம் என்றால் செலிகளிலிருந்து கழிவுகள் வெளியேறுவதற்குப் பதிலாக தேக்கம் அதிகரித்து, கழிவுகள் இரசாயனக் கழிவுகளாக மாறும்.

அடிப்படை நோய்களை நாம் சரியாகக் கையாள்வோமானால் எந்தவிதமான நீடித்த நோயும் உருவாகாது. உடலில் இருந்து, செல்களில் இருந்து எல்லா கழிவுகளும் வெளியேற்றப்படும்.

உயிர் கொல்லி நோயும் காக்கும் செல்லின் லைசோசோமும்:
சாதாரணக் கழிவுகள் தேக்கமுற்ற கழிவுகள் ஆகி, தேக்கமுற்ற கழிவு சூழலில் வெளியேற்ற நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், அவை இராசாயனக் கழிவுகளாக மாறி உயிர் கொல்லி நோய் என்று சொல்லக்கூடிய பெரிய தொடர் உபாதகளை நமக்கு கொடுத்துவிடுகிறது.

சாதாரணக் கழிவுகள் தேக்கமுற்ற கழிவுகளாக மாறும் பொழுதே அதன் தன்மை மோசமானதாக மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு தேக்கமுற்ற மலம் கூட இரண்டு மூன்று நாட்கள் கழித்து வெளியேறுபவை அதன் தன்மை மாறி குறுக்கப்பட்டும் மிக அதிக அமிலத்தன்மையோடும், ஒட்டுத்தன்மையோடும் மற்றும் அதிக துர்நாற்றத்துடனும் காணப்படுகிறது. இப்படி செல்களிலும் உருவாகும் கழிவுகள் தேக்கமாகி அடுத்தக்கட்ட நிலையான இரசாயனக்கழிவுகளாக மாறுகிறது. இப்படி மோசமான இரசாயனக் கழிவுகள் செல்லில் தேங்கும் பொழுது தொந்தரவுகள் பெரிதாகிறது.அதாவது அப்பொழுதும், உடல் செல்கள் கழிவுகளை வெளியேற்றவே முயல்கிறது. ஆனால், முன்பு போல சாதாரணக் கழிவுகள் வெளியேற்றியது போல எளிதாக வெளியேற்றிவிட முடியாது. ஏனெனில் இரசயான கழிவுகள் வெளியேறும் பொழுது பிற செல்கள் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்படலாம். ஆகையால், செல் புதிய உத்தியாக லைசோசோம் எனும் புதிய வேதிப்பொருளை தன்னகத்தேஉருவாக்கி, அதன் மூலம் இரசாயன கழிவுகளை முடக்கி அழிக்கிறது.

இரசாயனக் கழிவுகள் உருவான உடனே செல், அந்த இரசாயனக் கழிவுகள் பிற செல்களை பாதிக்காத அளவிலும், தன்னையும் பாதிக்காத அளவிலும் தன்னகத்தே உள்ள செல் திரவத்தினைக் கொண்டு சவ்வு போன்ற ஒர் அமைப்பினை உருவாக்கி முதலில் தன்னுள் போத்தி மூடி அடக்குகிறது. இரசாயனக் கழிவுகள் உருவான உடனேயே செல் தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த முதல்கட்ட பாகாப்பு பெட்டகத்தினை உருவாக்குகிறது. அதே நேரத்தில் மேலும் மேலும் இயற்கை விதிமீறல்கள் செய்து மேலும் மற்றும் வேதி மருந்துகள் மூலம் கழிவுகளை உடலுக்குள் அமுக்கி தேக்கமுற்ற கழிவுகள் உருவாக்கினால் நிலைமை மோசமாகிவிடும். ஆனால்,இரசாயனக் கழிவுகள் உருவான உடனேயே தன்னை சவ்வுப்பெட்டகத்தினை உருவாக்கி அதற்குள் அடக்கிக்கொள்ளும் செல், அதற்குள்ளேயே வைத்து அழித்துவிட, லைசோ சோம் எனும் புதிய உட்பொருளை உருவாக்கி வளர்க்கிறது. லைசோ சோம்கள் இரசாயனக் கழிவுகளை சூழ்ந்து அழிக்கும் தன்மைக்கு வளர்ந்தவுடன் சரியான சூழல் செல்லில் உருவாகும் பொழுது இரசாயனக் கழிவுகளை லைசோசோம்கள் தாக்கி அழிப்பதுடன் தானும் அழிந்துபோகின்றன.

எதிரியையும் அழித்து, தானும் அழிந்து போவதால் இதற்கு அழிக்கும் பொருள் என்று பொருள்படும் வகையில்தான் லைசோ சோம் என பெயரிட்டுள்ளனர்.அதுமட்டுமில்லாமல் Suside Sox (தற்கொலைப்படை) என்றும் அழைக்கிறார்கள்.இதைப்போல் செல்கள் தன் ஆரோக்கியத்தினை தக்கவைத்துக் கொள்ள சத்தினை உட்கிரகிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் தேவைக்கு ஏற்ப நியுக்ளியஸ், நியுக்ளியோலஸ், சைட்டோபிளாசம், மைட்டோகாண்டிரியா, லைசோ சோம் என பல வேதி உருப்பொருளை உருவாக்கும் பன்முகத்திறன் படைத்த உயிர்மை ஆகும்.

செல்லின் இயக்கமே உடலின் இயக்கம்:
உடலின் மிகச் சிறிய துகளான செல் தன் ஆரோக்கியத்தினை தக்கவைத்துக்கொள்ள தன்னை அழிக்கும் தன்மை கொண்ட இரசாயனக் கழிவுகளிலிருந்து கூட பாதுகாத்துக் கொள்கிறது என்பதனைப் பார்த்தோம். இவ்வாறு ஒவ்வொரு செல்லும் தனக்கான நன்மை தீமைகளை தானே முடிவு செய்து, நன்மைகளை உட்கிரகித்தும், தீமைகளை வெளியேற்றியும் சிறப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.
செல்லின் அடிப்படையைக் கொண்டு உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்பையும் அணுகுவோமானால், உடலின் இயக்கத்தினை முழுமையாகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ள முடியும்.

உடலின் ஆரோக்கியம் என்பது செல்லின் அடிப்படை ஆரோக்கியத்திலிருந்தே தொடங்குகிறது. ஆகையால், செல்லின் இயல்பினை புரிந்த நாம், உடலின் தொந்தரவுகளையும் புரிதலோடு அணுகி, அதன் கழிவு வெளியேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், உடலின் மொழியான பசி, தாகம்,ஓய்வு, தூக்கம் போன்றவற்றுடன் ஒன்றி சரியான முறையில் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”