எளிதாக கிடைக்கக்கூடிய வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

எளிதாக கிடைக்கக்கூடிய வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

Post by SUGAPRIYA » Thu May 31, 2018 9:54 am

வெள்ளரிக்காய் முக்கியமாக வெப்பத்தை தணிக்க பயன்படுகிறது. வேறு பல விதங்களில் நமக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. வெள்ளரிக்காயில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் வெள்ளரிக்காயை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து காக்கும்.
வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும். அதனை சீரான முறையில் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இதில் உள்ளது. இதனை கீரை மற்றும் கேரட்டுடன் சேர்த்து ஜூஸ் போட்டு குடியுங்கள். மேலும் வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் தோளில் தேவையான அளவு வைட்டமின் சி உள்ளது


வெள்ளரிக்காயில் அதிக அளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிகான் உள்ளது. வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். ஆகவே இதனை சூப் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும்.

இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்துகிறது. வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும். சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.


வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும். அதிலும் இதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”