நோய்களை குணப்படுத்தும் அக்குபஞ்சர் மருத்துவம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அக்குபங்சர் 60 மூலகப் புள்ளிகள் இருக்கும் இடம்

Post by ஆதித்தன் » Sat Sep 08, 2018 6:33 pm

நெருப்பு மூலகத்தின் ஐம்பூதப்புள்ளிகள்:

இருதய சக்தி நாளம், அக்குளின் மத்தியில் ஆரம்பித்து கைகளின் உட்பக்க கீழ்பகுதி வழியாக முழங்கை, மணிக்கட்டு மற்றும் உள்ளங்கை வழியாக சென்று கைசுண்டு விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 அங்குல தூரத்தில் முடிவடைகிறது.

இருதயத்தின் ஐந்து மூலகப்புள்ளிகள் : மரம் - HT-9 - நெருப்பு HT-8 - மண்- HT-7 - காற்று HT-4 - நீர் HT-3

HT-9 = இருதய மரப்புள்ளி, கை சுண்டுவிரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிலிருந்து மேலே 0.1 அங்குல தொலைவில் அமைந்துள்ளது.
HT-8 = இருதய நெருப்புள்ளி, உள்ளங்கையில் 4வது 5வது விரல் எலும்பின் மத்தியில் இருதய ரேகையில் அமைந்துள்ளது.
HT-7 = இருதய நிலப்புள்ளி, கை மணிக்கட்டு நேரகையில் உட்புற ஒரத்தில் அல்நா எலும்பின் வெளிப்புற ஓரத்தில் அமைந்துள்ளது.
HT-4 = இருதய காற்றுபுள்ளி, நிலமூலகப்புள்ளியிலிருந்து 1.5 அங்குலம் மேலே அமைந்துள்ளது.
HT-3 = இருதய நீர்ப்புள்ளி, முழங்கை மடிப்பு ரேகையின் உட்பக்கம் கடைசியில் அமைந்துள்ளது.

சிறுகுடலின் ஐந்து மூலகப் புள்ளிகள் : காற்று-SI-1 = நீர்-SI-2 = மரம்-SI-3 = நெருப்பு-SI-5 = நிலம்-SI-8

SI-1 = சிறுகுடல் காற்றுப்புள்ளி, கை சுண்டுவிரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 அங்குலம் தொலைவில் அமைந்துள்ளது.
SI-2 = சிறுகுடல் நீர்ப்புள்ளி, சுண்டுவிரல் கையுடன் சேரும் மூட்டுப்பகுதியின் முன்புறம் உட்புறப் பகுதியின் பள்ளத்தில் உள்ளது.
SI-3 = சிறுகுடல் மரப்புள்ளி, கைவிரல்களை மடக்கும் பொழுது இதயரேகை மடிப்பின் உட்புற ஓரத்தில் ஏற்படக்கூடிய மேட்டில் தோலின் இருநிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
SI-5 = சிறுகுடல் நெருப்புப்புள்ளி, மணிக்கட்டு எழும்பும் அல்நா எலும்பின் கீழ்பகுதியும் இணையுமிடத்தில் உள்ள பள்ளத்தில் உள்ளது.
SI-8 = சிறுகுடல் நிலப்புள்ளி, மேற்கை எலும்பின் உட்பகுதியும் அல்நா எலும்பும் சேரும் மூட்டின் பள்ளத்தில் உள்ளது.


மண்ணீரல் ஐந்து மூலகப்புள்ளிகள், SP-1 -மரம் = SP-2-நெருப்பு = SP-3-நிலம் = SP-5-காற்று = SP-9-நீர்

SP-1-மரப்புள்ளி - கால்கட்டை விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிலிருந்து மேல் 0.1 அங்குலம் தொலைவில் அமைந்துள்ளது.
SP-2-நெருப்புள்ளி - கால்கட்டை விரல் ஆரம்பிக்கும் இடத்தில் உட்புறம் தோலின் இருநிறங்களும் சேருமிடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.
SP-3-நிலப்புள்ளி - கால் கட்டை விரல் எலும்பின் தலைப்பகுதிக்கு கீழே (Sp2க்கு முன் மேட்டின் இறக்கத்தில்) தோலின் இரு நிறங்களும் சேருமிடத்தில் அமைந்துள்ளது.
SP-5-காற்றுப்புள்ளி - கால் கட்டைவிரல் உயர்த்தும் பொழுது உட்புற கணுக்கால் மூட்டு எலும்பின் ஓரத்தில் தசைநாரின் பக்கத்தில் ஏற்படும் பள்ளத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
SP-9-நீர்ப்புள்ளி - கால் டிபியா எலும்பின் உட்பக்க தலைப்பக்க பாகத்திற்கு கீழே அமைந்துள்ளது.

இரைப்பை ஐந்து மூலகப்புள்ளிகள், ST-45-காற்று = ST-44-நீர் = ST-43-மரம் = ST-41-நெருப்பு = ST-36-நிலம்

ST-45-காற்றுப்புள்ளி, கால் கட்டைவிரல் அடுத்த 2-வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் உள்ளது.
ST-44-நீர்ப்புள்ளி, கால் உட்புறத்திலிருந்து 2-வது மற்றும் 3-வது விரல் இடைவே முனைப்பகுதியில் அமைந்துள்ளது.
ST-43-மரப்புள்ளி, பாதத்தின் மேற்புறத்தில் 2-வது மற்றும் 3-வது கால்விரல் எலும்புகள் சேரும் இடத்தில் பின்புறம் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.
ST-41-நெருப்புப்புள்ளி, பாதத்தின் மேற்புறத்தில் 2-வது மற்றும் 3-வது கால்விரல்களுக்கு நேர் மேலே, கணுக்கால் மூட்டில் தெரிகின்ற இரண்டு தசைநார்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.
ST-36-நிலப்புள்ளி, கால் டிபியா எலும்பின் தலைப்பகுதியில் துருத்திக் கொண்டிருக்கின்ற பாகத்திலிருந்து 1 அங்குலம் கீழே பக்கவாட்டில் வெளிப்புறம் அமைந்துள்ளது.

நுரையீரல் சக்தி நாளம், உடலின் மத்தியக் கோட்டிலிருந்து 6 அங்குலம் தொலைவில் 2வது மற்றும் 3 வது விலா எலும்பிற்கு நடுவே தொடங்கி தோல்பட்டைக்கு மேலேறி, கைகளின் வெளிப்புற முன்புறமாக முழங்கை மற்றும் மணிக்கட்டு வழியாகச் சென்று, கை பெருவிரலின் நகத்தின் வெளிப்புறமாக கீழ் விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் வரை நீள்கிறது.

நுரையீரல் ஐந்து மூலகப்புள்ளிகள் : LU-11-மரம் = LU-10-நெருப்பு = LU-9-நிலம் = LU-8-காற்று = LU-5-நீர்

LU-11-மரம் புள்ளி, கைக்கட்டை விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
LU-10-நெருப்புப்புள்ளி, கைக்கட்டை விரலின் உள்ளங்கை எலும்பின் மத்தியில் வெளிப்புறமாக தோலின் இருநிறங்களும் சேருமிடத்தில் அமைந்துள்ளது.
LU-9-நிலப்புள்ளி, கை மணிக்கட்டு முதல் ரேகையில் வெளிப்புற ஓர முடிவில் அமைந்துள்ளது.
LU-8-காற்றுப்புள்ளி, கை மணிக்கட்டு முதல் ரேகையிலிருந்து வெளிப்புற ஓரத்தில் உள்ள LU9 புள்ளியிலிருந்து 1 அங்குலம் தொலைவில் அமைந்துள்ளது.
LU-5-நீர்ப்புள்ளி, முழங்கையை மடக்கும் போது தெரியும் மடிப்பு ரேகையிலுள்ள தசைநாரின் வெளிப்பக்கத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.

பெருங்குடல் ஐந்து மூலகப்புள்ளிகள் - LI-1-காற்று = LI-2-நீர் = LI-3-மரம் = LI-5-நெருப்பு = LI-11-நிலம்

LI-1-காற்று புள்ளி, ஆட்காட்டி விரல்நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
LI-2-நீர்ப்புள்ளி, ஆட்காட்டி விரல், தன் விரல் எலும்போடு சேரும் மூட்டிற்கு கீழே வெளிப்புறமாக அமைந்துள்ளது.
LI-3-மரப்புள்ளி, ஆட்காட்டி விரல், தன் விரல் எலும்போடு சேரும் மூட்டிற்கு மேலே வெளிப்புறமாக அமைந்துள்ளது.
LI-5-நெருப்புப்புள்ளி, கையின் மேற்புறத்தில் கட்டை விரலை உயர்த்தும் பொழுது, கட்டை விரலுக்கும் மணிக்கட்டு பக்கவாட்டிற்கும் இடையில் ஏற்படும் பள்ளத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
LI-11-நிலப்புள்ளி, முழங்கை மடிப்பு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் அமைந்துள்ளது.

சிறுநீரக ஐந்து மூலகப்புள்ளிகள் - KI1-மரம் = KI2-நெருப்பு = KI3-நிலம் = KI7-காற்று = KI10-நீர்

KI-1-சிறுநீரக மரப்புள்ளி, உள்ளங்காலில் காலின் இரண்டாவது மூன்றாவது விரல்களுக்கிடையில் வரையப்படும் நேர்கோடும், பாதத்தினை மூன்று பாகமாக பிரித்தால் கிடைக்கும் முதல் பாக குறுக்கு கோடும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
KI-2-சிறுநீரக நெருப்பு புள்ளி, கணுக்கால் மூட்டின் முன்புறத்திற்கு கீழே குதிகால் எலும்பின் முன் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.
KI-3-சிறுநீரக நிலப்புள்ளி, உட்பக்க கணுக்கால் மூட்டிற்கும், குதிகால் நரம்பிற்கும் இடையில் அமைந்துள்ளது.
KI-7-சிறுநீரக காற்றுப்புள்ளி, KI-3 புள்ளியிலிருந்து நேர்மேலே 2 அங்குலத் தொலைவில் அமைந்துள்ளது.
KI-10-சிறுநீரக நீர்ப்புள்ளி, முழங்கால் மடிப்பு ரேகையின் உட்பக்க ஓரத்தில் அமைந்துள்ளது.

சிறுநீர்ப்பை ஐந்து மூலகப்புள்ளிகள் - BL-67-காற்று = BL-66-நீர் = BL-65-மரம் = BL-60-நெருப்பு = BL-40-நிலம்

BL-67-சிறுநீர்ப்பை காற்றுப்புள்ளி, கால் சுண்டுவிரல் வெளிப்புற நகக்கண் விளிம்பிலிருந்து மேல் 0.1 அங்குலத் தொலைவில் அமைந்துள்ளது.
BL-65-சிறுநீர்ப்பை நீர்ப்புள்ளி, கால் சுண்டுவிரல் எலும்பு பாதத்துடன் இணையும் மூட்டின் விரல்பக்கம் வெளிப்புறமாக தோலின் இருநிறங்களும் சேரும் பள்ளத்தில் அமைந்துள்ளது.
BL-65-சிறுநீர்ப்பை மரப்புள்ளி, கால் சுண்டுவிரல் எலும்பு பாதத்துடன் இணையும் மூட்டின் பாதப்பக்கம் வெளிப்புறமாக தோலின் இருநிறங்கள் சேரும் இடப் பள்ளத்தில் அமைந்துள்ளது.
BL-60-சிறுநீர்ப்பை நெருப்புப்புள்ளி, குதிகால் நரம்பிற்கும் வெளிப்புற கணுக்கால் மூட்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
BL-40-சிறுநீர்ப்பை நிலப்புள்ளி, முழங்கால் பின்னே உள்மடிப்பு ரேகையின் மத்தியில் அமைந்துள்ளது.


கல்லீரல் ஐந்து மூலகப்புள்ளிகள் - LR-1-மரம் = LR-2-நெருப்பு = LR-3-நிலம் = LR-4-காற்று = LR-8-நீர்

LR-1-கல்லீரல் மரப்புள்ளி, கால் கட்டைவிரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேல் 0.1 அங்குலம் தொலைவில் உள்ளது.
LR-2-கல்லீரல் நெருப்புப்புள்ளி, கால்கட்டைவிரல் மற்றும் அடுத்த 2-ஆம் விரல் பாதத்துடன் சேருமிடத்தில் மேல் அமைந்துள்ளது.
LR-3-கல்லீரல் நிலப்புள்ளி, கால்கட்டைவிரல் மற்றும் அடுத்த 2-ஆம் விரல் பாத எலும்புகள் சேருமிடத்தின் மேல் அமைந்துள்ளது.
LR-4-கல்லீரல் காற்றுப்புள்ளி, பாத மேல்புறத்தில் உட்புற கணுக்கால் மூட்டிலிருந்து ஏற்படும் ரேகையில் முதல் தசை நரம்பின் வெளிப்புறம் உள்ள பள்ளத்தில் உள்ளது.
LR-8-கல்லீரல் நீர்ப்புள்ளி, முழங்கால் மடிப்பு ரேகையின் உட்புற ஒரத்திலிருந்து 0.5 அங்குலம் செங்குத்தாக மேலே அமைந்துள்ளது.

பித்தப்பை(GB) ஐந்து மூலகப்புள்ளிகள், GB-44-காற்று = GB-43-நீர் = GB-41-மரம் = GB-38 - நெருப்பு = GB-34-நிலம்

GB-44-பித்தப்பை காற்றுப்புள்ளி, காலின் நான்காவது விரலின் வெளிப்புற நகக்கண் கீழிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
GB-43-பித்தப்பை நீர்ப்புள்ளி, மேல்புறம் காலின் நான்காவது ஐந்தாவது விரல்கள் பாதத்துடன் சேரும் இடத்தின் அமைந்துள்ளது.
GB-41-பித்தப்பை மரப்புள்ளி, பாத மேல்புறம், நான்காவது ஐந்தாவது கால் விரல் பாத எலும்புகள் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
GB-38-பித்தப்பை நெருப்புப்புள்ளி, வெளிப்பக்க கணுக்கால் மூட்டின் உச்சியிலிருந்து 4 அங்குலம் மேலே பிபுலா எலும்பின் முன்பக்க ஓரத்தில் உள்ளது.
GB-34-பித்தப்பை நிலப்புள்ளி, வெளிப்பக்க பிபுலா எலும்பின் தலைப்பாகத்திற்கு கீழே அமைந்துள்ளது.

இருதயமேலுறை(PC) ஐம்பூதப்புள்ளிகள்

இருதயமேலுறை சக்தி நாளம், மார்புக் காம்பிலிருந்து ஒர் அங்குலம் வெளிப்பக்கமாக ஆரம்பித்து தோல்பட்டை வழியாக மேலேறி, நுரையீரல் & இருதய சக்தி ஓட்டப்பாதைகளுக்கு நடுவாக, மணிக்கட்டு வழியாக உள்ளங்கை மத்தியாக சென்று நடுவிரலின் மேல் நுனியில் முடிவடைகிறது.

இருதயமேலுறை ஐம்பூதப்புள்ளிகள், PC-9-மரம் = PC-8-நெருப்பு = PC-7-நிலம் = PC-5-காற்று = PC-3-நீர்

PC-9-இருதயமேலுறை மரப்புள்ளி, கை நடுவிரல் உச்சி நுனியில் நகமும் சதையும் சேருமிடத்தில் மத்தியில் உள்ளது.
PC-8-இருதயமேலுறை நெருப்புப்புள்ளி, உள்ளங்கையில் இரண்டாவது மூன்றாவது விரல் சேரும் மூட்டுக்கு நடுவில் இருதய ரேகை அருகில் உள்ளது.
PC-7-இருதயமேலுறை நிலப்புள்ளி, மணிக்கட்டு ரேகை மத்தியில் உள்ளது.
PC-5-இருதயமேலுறை காற்றுப்புள்ளி, PC7-லிருந்து 3 அங்குலம் மேலே உள்ளது.
PC-3-இருதயமேலுறை நீர்ப்புள்ளி, முழங்கையில் இருதலை தசைநாரின் உட்பக்கத்தில் அமைந்துள்ளது.

மூவெப்பமண்டல ஐந்து மூலகப்புள்ளிகள், TE-1-காற்று = TE-2-நீர் = TE-3-மரம் = TE-6-நெருப்பு = TE-10-நிலம்

மூவெப்பமண்டல சக்தி நாளம், கை நான்காவது விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேல் 0.1 அங்குலத்தில் ஆரம்பித்து, கைகளின் வெளிப்பக்கமாக சிறுகுடல் & பெருங்குடல் சக்தி ஓட்டப்பாதைகளுக்கு நடுவாக தோள்பட்டையின் பின்புறத்தினை அடைந்து கழுத்தின் பக்கவாட்டு வழியாக காதின் கீழ் நுனிக்குச் சென்று காதோரமாக மடல் முழுமையாக வளைந்து சென்று பின் எதிரே கண் புருவத்தின் ஓரத்தில் முடிவடைகிறது.

TE-1-மூவெப்பமண்டல காற்றுப்புள்ளி, நான்காவது கைவிரல் நகத்தின் உட்புற கீழ்விளிம்பிலிருந்து 0.1 அங்குலம் மேல் அமைந்துள்ளது.
TE-2-மூவெப்பமண்டல நீர்ப்புள்ளி, நான்காவது விரல் கையுடன் சேரும் இடத்தில் உள்ள மூட்டின் முன்புறம் உட்புற ஓரமாக அமைந்துள்ளது.
TE-3-மூவெப்பமண்டல மரப்புள்ளி, கை மேற்புறத்தில் நான்காவது விரல் கையுடன் சேரும் மூட்டின் பின்புறம் உட்புற ஓரமாக ஐந்தாவது விரல் எலும்புக்கும் நடுவே அமைந்துள்ளது.
TE-6-மூவெப்பமண்டல நெருப்புப்புள்ளி, மணிக்கட்டு ரேகை பின்புற மையத்திலிருந்து 3 அங்குலம் தூரத்தில் மத்தியில் அமைந்துள்ளது.
TE-10-மூவெப்பமண்டல நிலப்புள்ளி, முழங்கையை மடக்கும் போது முழங்கை மூட்டின் மத்தியில் மேற்கை எலும்பு சேரும் இடத்தில் உள்ள பள்ளத்தில் உள்ளது.


இனவிருத்தி மைய பஞ்சபூதப் புள்ளிகள் -CV-5-நெருப்பு = CV-6-நீர் = CV-7-மரம் = CV-9-காற்று = CV-13-நிலம்

இனவிருத்தி மைய சக்தி நாளம் உடலின் முன்புற மத்தியக் கோட்டில் ஆசன துவாரத்திற்கும் இனவிருத்தி உறுப்பிற்கும் இடையில் ஆரம்பித்து கீழ் உதட்டிற்கு கீழே முடிவடைகிறது.

CV-5-இனவிருத்தி நெருப்புப்புள்ளி, தொப்புள் கீழ் ஒரத்திற்கு கீழ் 2 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-6-இனவிருத்தி நீர்ப்புள்ளி, தொப்புள் கீழ் ஓரத்திற்கு கீழ் 1.5 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-7-இனவிருத்தி மரப்புள்ளி, தொப்புள் கீழ் ஓரத்திற்கு கீழ் 1 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-9-இனவிருத்தி காற்றுப்புள்ளி, தொப்புள் மையத்திலிருந்து மேல் 1 அங்குல தூரத்தில் உள்ளது.
CV-13- இனவிருத்தி நிலப்புள்ளி, தொப்புள் மையத்திலிருந்து மேல் 5 அங்குல தூரத்தில் உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நோய்களை குணப்படுத்தும் அக்குபஞ்சர் மருத்துவம்

Post by ஆதித்தன் » Sat Sep 29, 2018 11:49 am

அக்குபங்சர் முறைப்படி அறுசுவையும் அவை தூண்டும் உடல் உள்ளுறுப்புகளும்,

காரம், நுரையீரலைத் தூண்டுகிறது

கசப்பு இதயத்தினை தூண்டுகிறது,

புளிப்பு கல்லீரலைத் தூண்டுகிறது,

இனிப்பு, இரைப்பையைத் தூண்டுகிறது,

துவர்ப்பு மண்ணீரலைத் தூண்டுகிறது,

உப்பு சிறுநீரகத்தைத் தூண்டுகிறது.


சித்த மருத்துவப்படி,
வாதம் சுவை = துவர்ப்பு புளிப்பு.
பித்தம் சுவை = உப்பு கசப்பு.
கபம் சுவை = இனிப்பு காரம்.

உண்ணும் உணவினை தன் தேவைக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ற சுவையுடன் சமைத்து, பசிக்கு பசியோடு புசித்து பசிப்போடு உண்டு கழிப்படைந்து எழுபவர் விரைவான செரிமாணத்தினை வலது நாசியின் சூரிய நாடியினால் நாடி நடப்பர்.

சுவைக்கு எதிர்சுவை, அக்குபங்சர் முறை,

இனிப்பு X காரம்
புளிப்பு X உப்பு
துவர்ப்பு X கசப்பு

ஒர் சுவை அதிகமாகி உடல் உபாதை ஏற்படும் பொழுது, எதிர்சுவை கொடுத்து மட்டுப்படுத்தலாம்.

செரிமாணப்பணி சிறப்பாக நடக்கும் இடத்தில் இயக்கமும், பராமரிப்பும் நன்றாக இருக்கும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”