Page 1 of 1

வேப்பம்பூ தரும் அழகு குறிப்புகள்

Posted: Fri Nov 29, 2013 9:46 am
by cm nair
காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் – அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
• வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.
• நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..
• வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..
• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.
• தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.