எனது ஊர் பற்றி சில தகவல்கள்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
Lathamnm
Posts: 7
Joined: Fri Jan 24, 2014 10:46 am
Cash on hand: Locked

எனது ஊர் பற்றி சில தகவல்கள்

Post by Lathamnm » Sat Jan 25, 2014 3:45 pm

எனது ஊர் மானாமதுரை.இதன் பழைய பெயர் வானரவீர மதுரை.எங்கள் ஊர் மண்பாண்டதிற்கு பெயர் பெற்றது.இங்கு தயாரிக்கப்படும் களிமண் பொருட்கள் உலகளவில் பெயர் பெற்றது.மதுரை சித்திரை திருவிழா போல் மானாமதுரையிலும் வைகையாற்றில் அழகர் இறங்குதல் பிரபலம்.சித்திரை திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.இங்கு ஆனந்தவள்ளி அம்மன் கோவில், வீர கள்ளழகர் கோவில்,இடக்காட்டூர் சர்ச்,வேதியேரந்தல் ஃப்ரத்தியேங்கரா ஆகிய கோவில்கள் உள்ளது.வேதியேரந்தல் அணைக்கட்டு,பெயர் இல்லாத மரம் உள்ளது. மானாமதுரை சிறு தொழில் மையம்(SIPCOT)உள்ளது.எங்கள் மாவட்டம் சிவகங்கை ஆகும்.சிவகங்கையை சுற்றி பிள்ளையார்பட்டி,குன்றக்குடி,மடப்புரம் காளி,தாயமங்களம் ஆகிய பிரபலமான கோவில்கள் உள்ளது.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”