அண்ணாச்சி, இதாங்க நம்ம ஊரு - ஸ்ரீவைகுண்டம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

அண்ணாச்சி, இதாங்க நம்ம ஊரு - ஸ்ரீவைகுண்டம்

Post by Mutharasu » Sun Jan 12, 2014 9:29 pm

வணக்கம்னே.... நான்தான் முத்தரசு வந்திருக்கேன்...
வாலே... வா. வா.. என்னலே... கொஞ்ச நாளா ஆளே பாக்க முடியலே... வெளியூர் போய்ட்டியாலே...
அய்யோ.. அதெல்லாம் இல்லேன்னே... அது நா புதுசுல்ல. இடம் தெரியாம கொஞ்சம் சுத்திட்டேன்..
நேத்துதான் நம்ம பெரிய அண்ணாச்சிட்ட பேசுனேன். இன்னைக்கு வந்துட்டேன்.

நேத்து எங்கவே போனீக.
ராமய்யான்னே. நேத்து ஏகாதேசி ஆச்சே... அதான் நா பொறந்த ஊருக்கு ஸ்ரீவைகுண்டம் போய்ட்டு
வந்தேன். சாய்ங்காலம் சொர்க்க வாசல் பாக்க முடியல. வேலைக்கு வர வேண்டியதாய்ட்டு..

அட உம்மோரு ஊரு ஸ்ரீவைகுண்டமா? நானும் சின்ன அண்ணாச்சியும் அங்க பலதடவ போகனும்னு நெனச்சும் முடியல. அந்த ஊர பத்தி கொஞ்சம் சொல்லுவே. கேப்போம்.
எங்க ஊர பத்தி சொல்றத இருந்தா எனக்கு குஷி வந்துடும்னே. சரி. சொல்றேன்னே. ஸ்ரீவைகுண்டம் ஊரு
நம்ம திருநெல்வேலிக்கும் திருச்செந்தூர்க்கும் நடுவால இருக்கு. அந்த ஊர்ல விசேஷம் என்னன்னா, 108
திவ்யதேசத்த்துல ஒன்னா இருக்கு. தென் தமிழகத்துல நவ கைலாயத்துல ஒன்னாவும் நவ திருப்பத்தில
ஒன்னாவும் அது இருக்கு. நவ கைலாயம் திருநெல்வேலி மாவட்டத்துல தாமிரபரணி ஆறு தொடங்குற
பாவநாசத்துல சிவன் கோயில் முதலா தொடங்கி சேர்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர்ன்னு 4
கோயிலும் தூத்துக்குடி மாவட்டததுல முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி,
சேந்தபூமங்களம் அப்படினு 5 ஊரும் இந்த ஒன்பது ஊர்ல உள்ள சிவன் கோயிலும் நவ கைலாயம்
அப்படின்னு சொல்வாங்கன்னே... அப்புறம் ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோயில்ல ஆரம்பிச்சி நத்தம்,
திருபுளியங்குடி, பெருங்குளம், ரெட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், அழ்வார்திருநகரி இப்படி
ஒன்பது ஊர்ல உள்ள பெருமாள் கோயிலும் நவ திருப்பதின்னு சொல்வாங்க. நவ கைலாயமும் நவ
திருப்பதியும் தாமிரபரணி கரையோரத்துல இருக்குறது அந்த நதிக்கு ஒரு சிறப்பு. இதுல நவ திருப்பதி
தூத்துக்குடி மாவட்டத்துல இருக்குறது தூத்துக்குடிக்கு சிறப்பு. அப்புறம் இன்னொரு முக்கியமான சிறப்பு எங்க
ஊருக்கு. அஞ்சி வயசு வரைக்கும் ஊமையா இருந்து திருசெந்தூர் முருகன் கோயில் போயி, அவனோட
அருளால, கந்தர் கலி வெண்பாவ அப்பவே பாடின குமரகுருபரர் பொறந்ததும் எங்க ஊருதான்னே.

அட.. அருமையா சொன்னேலே உம்ம ஊர பத்தி. சரி அந்த நவதிருப்பதிய பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமாலே.
சங்கரன்னே அத பத்தி இன்னொரு நாள் சொல்றேன்னே. நானு ஜங்சன் வர இப்ப போகனும்.
வரட்டுமான்னே. வரட்டுமா ராமய்யான்னே. வரேன்னே.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அண்ணாச்சி, இதாங்க நம்ம ஊரு - ஸ்ரீவைகுண்டம்

Post by ஆதித்தன் » Sun Jan 12, 2014 9:50 pm

நல்ல தகவல்களை, சுவையுடன் அருமையாக கூறியுள்ளீர்கள்.
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

Re: அண்ணாச்சி, இதாங்க நம்ம ஊரு - ஸ்ரீவைகுண்டம்

Post by Mutharasu » Mon Jan 13, 2014 4:51 pm

நன்றி அண்ணாச்சி..
நானு பெரிய அண்ணாச்சின்னு சொன்னது உங்களத்தான் அன்னாச்சி.
பெரிய அண்ணாச்சின்னு சொன்னது கோவம் இல்லையே?
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”