சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by udayakumar » Sat Mar 10, 2012 2:09 pm

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்

சென்னை, மார்ச் 7 (டிஎன்எஸ்) இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பாக சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து நேற்று (மார்ச் 6) அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றச் செயல்களை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், போர்க் குற்றங்கள் புரிந்தவர்களைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும், இலங்கைத் தமிழர்களை மறுகுடியமர்வு செய்து அவர்கள் அந்த நாட்டில் கண்ணியத்துடனும், சமமான மரியாதையுடனும், அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து உரிமைகளையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.

இந்தப் பிரச்னை குறித்து தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பற்றி கடந்த ஆண்டு ஜுன் மாதம் தங்களைச் சந்திக்கும்போது கோரிக்கை மனுவாக அளித்திருக்கிறேன்.

ஜெனீவா நகரில் நடந்துவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து அந்நாட்டுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டுமென கடந்த 29-ம் தேதி எழுதிய கடிதத்தில் வற்புறுத்தியிருந்தேன்.

ஆனால், இந்தக் கடிதத்துக்கு இதுவரை எந்தப் பதிலையும் தாங்கள் அளிக்கவில்லை.

இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்படாது என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நடவடிக்கைகள், இலங்கைக்கு நேரடியான ஆதரவை இந்தியா தருவது போலாகி விடும். இது, ஏற்றுக் கொள்ள முடியாதது; துரதிருஷ்டவசமானது. எனவே, ஏற்கெனவே வலியுறுத்திய கோரிக்கையை இப்போது மீண்டும் வற்புறுத்துகிறேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.

உங்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்)

வைகோ என்ன சொல்கிறார்....
தமிழினத்தை படுகொலை செய்த சிங்களரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஜெனீவாவில் தமிழர்கள் திரள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்கள் ஜெனீவாவில் பேரணி நடத்துகிறார்கள். தாயகம் விடுதலைக்காக மாவீரர்கள் சிந்திய ரத்தம், உயிருக்கு பூபாளம் இசைக்கட்டும், ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் நீதியின் குரல் வெல்லட்டும், ஜெனீவா நகரில் பொங்குமாங் கடலாய் தமிழர் திரண்டு அகிலத்தின் செவியெல்லாம் கேட்க எழுப்ப இருக்கும் விடியல் அது.

தமிழினப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசை சர்தேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐ.நா. மன்றம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கள சிறையில் அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் உனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழர் தாயத்தில் இருந்து சிங்கள ராணுவமும், போலீசும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற கேரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடக்கிறது.

எட்டுத் திசைகளில் இருந்தும் ஈழத்திற்கு கட்டியம் கூற ஜெனீவாவிற்க்கு செல்லுங்கள், ஜெனீவாவில் வீர முழக்கம் மனித குலத்தின் மனசாட்சி கதவை ஓங்கி தட்டப் போகிறது. துடிக்க துடிக்க தமிழினத்தை படுகொலை செய்த சிங்களரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம். சுதந்திர தமிழ் ஈழ விடுதலை கொடியை ஏற்றுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

உங்கள் கருத்துக்களை கூறுங்கள் ... நாமொரு வாக்கெடுப்பு நடத்தி பார்க்கலாம் ... இலங்கை அரசாங்கத்திற்கெதிரான ஜெனீவா தீர்மானம் அவசியமானதும் நியாயமானதும் என்பது எனது கருத்து நீங்களும் வாங்க நேர்மையாக கருத்துக்களை கூறுங்கள்..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by umajana1950 » Sat Mar 10, 2012 3:46 pm

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றச் செயல்களை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், போர்க் குற்றங்கள் புரிந்தவர்களைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும், இலங்கைத் தமிழர்களை மறுகுடியமர்வு செய்து அவர்கள் அந்த நாட்டில் கண்ணியத்துடனும், சமமான மரியாதையுடனும், அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து உரிமைகளையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாம் நினைப்பது நியாயம் தான்.தமிழினம் பட்ட துன்பங்களுக்கு சர்வதேச அரங்கில் நியாயம் கிடைத்தே தீர வேண்டும். இதில் நம் குரல் உலகம் முழுவதும் ஒருமிக்க வேணும் என்பது கட்டாயம்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by udayakumar » Sat Mar 10, 2012 7:12 pm

umajana1950 wrote:

உங்கள் கருத்தினை வரவேற்கிறேன் .. படுகைக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் இதனைப் பார்த்தால் கட்டாயம் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...ஏனெனில் நியாயமாக தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்..
Last edited by udayakumar on Tue Mar 13, 2012 12:07 am, edited 1 time in total.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 7:41 pm

umajana1950 wrote:
இலங்கையில் நடைபெற்ற போர் குற்றச் செயல்களை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், போர்க் குற்றங்கள் புரிந்தவர்களைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும், இலங்கைத் தமிழர்களை மறுகுடியமர்வு செய்து அவர்கள் அந்த நாட்டில் கண்ணியத்துடனும், சமமான மரியாதையுடனும், அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து உரிமைகளையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாம் நினைப்பது நியாயம் தான்.தமிழினம் பட்ட துன்பங்களுக்கு சர்வதேச அரங்கில் நியாயம் கிடைத்தே தீர வேண்டும். இதில் நம் குரல் உலகம் முழுவதும் ஒருமிக்க வேணும் என்பது கட்டாயம்.

தமிழினப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசை சர்தேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐ.நா. மன்றம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் எந்த ஒரு தமிழருக்கும் இருக்காது, கிடையாது.சிங்கள இனவாத வெறி அரசை நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 8:08 pm

தமிழர்களுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருப்பதுவே நம் கடைமை.

அந்த வகையில், ஜெனீவா தீர்மானத்தில் தமிழகத்தின் பிரதிபலிப்பாகத்தான் இந்தியா வாக்களிக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by udayakumar » Sat Mar 10, 2012 8:38 pm

Athithan wrote:தமிழர்களுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருப்பதுவே நம் கடைமை.

அந்த வகையில், ஜெனீவா தீர்மானத்தில் தமிழகத்தின் பிரதிபலிப்பாகத்தான் இந்தியா வாக்களிக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
கண்டிப்பாக தமிழகம் இன்று தயாராக இருக்கிறது .. தழிழின அழிப்பை கண்டித்து இலங்கையை எதிர்த்து வாக்களிக்க கோரிக்கை வைக்கிறது..ஆனால் இந்திய மத்திய அரசாங்கம் ஜெனீவா அரங்கிலே வாயே திறக்காமல் மௌனம் சாதித்துள்ளது..

இது கொடுமையிலும் கொடுமை.... தமிழினம் இதைவிட இரந்தும் கேட்கமுடியாது ..இறந்தும் கேட்க முடியாது .. அந்த அளவிற்கு இழந்துவிட்டான்..
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by udayakumar » Sun Mar 11, 2012 11:03 pm

இலங்கையின் கொலைக்களங்கள்” பார்வையிட்ட இங்கிலாந்து கிறிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமா?
இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளேவர் இலங்கையின் கிறிக்கெட் மைதானங்கள் தொடர்பாக ஆராய இன்று இலங்கைக்கு பயணமாகவுள்ளார்.

இந்த நிலையில், சனல்4 தொலைக்காட்சியின் நிருபர் பென் டி பியர், இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன், அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையின் இறுவெட்டு ஒன்றினைக் கையளிக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.

ஏனெனில், இலங்கை கிறிக்கெட் சபை ஊழல் மோசடிகள் நிறைந்ததாகவும், கிறிக்கெட் மைதானங்களை இலங்கை இராணுவத்தினரே பராமரித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடாக கருதப்படும் இலங்கையில், விசாரணை நடத்த வேண்டுமென சர்வதேச பொதுமன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா என்பன கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் இலங்கைகான சுற்றுப் பயணமானது, இங்கிலாந்து மக்களிடம் பல கேள்விகளைத் எழுப்பியுள்ளது.

இதேவெளை, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிநாட்டுச் செய்தியாளர் ஜொனாத்தன் மில்லர், இலங்கையின் கொலைக்களங்கள் உள்ளடங்கிய இறுவெட்டினை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளேவரிடம் கையளித்தார்.

ஏனெனில், அன்டி பிளேவர் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டியின் போது, சிம்பாவேயில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கெதிராக கறுப்புப் பட்டியணிந்து, அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியவர். இவர் மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல்கொடுத்து வரும் நபரென்பதால் இலங்கையில் இடம்பறெ்ற மனித உரிமை மீறல்கள் அடங்கிய இறுவெட்டினை கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாட்டுடன் இங்கிலாந்து அணி எவ்வாறு போட்டியிடும் என்ற கேள்விக்கு, சனல் 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டு செய்தியாளர் ஜொனாத்தன் மில்லர் பதிலளிக்கையில்,

ஐ.நா சபை இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நான் ஒரு அரசியல் நடுநிலையாளனாகவே செயற்படுகின்றேன். இலங்கை தொடர்ச்சியாக கிறிக்கெட் விளையாடும் ஒரு நாடாகும்.

நாங்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது விளையாடுவதற்காகவே. அங்கு இடம்பெறும் அரசியல் மனித உரிமைகள் பற்றி ஆராய அல்ல என அன்டி பிளேவர் கூறிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

http://bcove.me/fxxwurda" onclick="window.open(this.href);return false;
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by rajathiraja » Mon Mar 12, 2012 5:58 pm

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் தீர்மானம் கொண்டு வருவது அமெரிக்காவாயிற்றே!
அதனால் தான் சிரிப்பு வருகின்றது்.
மனித உரிமை மீறலை பற்றி பேச அமெரிக்காவுக்கு கடுகளவு தகுதியும் கிடையாதே? பிறகு ஏன் இவ்வாறு செய்கிறது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அமெரிக்கா இதை காரணம் காட்டி இலங்கையில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தி அதை கைப்பற்றிவிட்டால் பின்னர் இந்தியாவிற்கும் ஆபத்தாக முடியுமே?

கொள்ளிக்கட்டைக்கு பயந்து நெருப்பில் போய் விழுந்த கதையாகி விடுமே?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 8:40 pm

rajathiraja wrote:
கொள்ளிக்கட்டைக்கு பயந்து நெருப்பில் போய் விழுந்த கதையாகி விடுமே?
அதைத்தான் இந்தியா செய்துவிட்டதே!

ராஜீவை கொன்றவர்களை அழிக்கிறோம் என்று, இந்தியாவின் ஒர் பக்க சுவரை இடித்துத் தள்ளிவிட்டார்கள்.

இந்தியா ஸ்ரீலங்காவை ஆதரிக்க தவறினால், சீனா தன் பாதத்தை முழுமையாக வைக்கக் காத்துக் கொண்டிருக்கிறது.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: சிங்கள இனவாதத்திற்கெதிராக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி நீங்கள் என்ன சொல்கீறீர்கள்?

Post by udayakumar » Tue Mar 13, 2012 12:05 am

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய ஜனாதிபதி எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை: திமுக அதிருப்தி
இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டிலினால் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகள் தொடர்பில் ஜனாதிபதி பாட்டில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இன்றைய உரை அதிருப்தி அளிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரேரணைக்கு ஆதரவளிப்பதனை தவிர வேறும் தீர்மானங்களுக்கு திமுக இணங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். tamilwin news today
இன்று நடப்பது உலக அரசியலே தவிர தமிழினத்திற்கு முழுமையான ஆதரவுக் குரல் எங்கும் கிடையாது..
இதில் உண்மையான விடயம் என்னவென்றால் அண்டை நாடுகளான இந்திய ,பாகிஸ்தான், சீனா இந்த மூன்று நாடுகளும் இலங்கையிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இயற்கைத் துறைமுகங்களையும் , அங்குள்ள எண்ணெய் வளங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு இன்று இலங்கைக்கு தாம்தான் சினேகமான நாடு என்பதை காட்டுவது முக்கியமாகிறது...

ஏனெனில் இன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கிடையே பனிப்போர் நடந்து வருகிறது ...
இது எவ்வாறெனில் இரண்டு நாய்கள் ஒன்றையொன்று பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும்.. ஆனால் கடிக்காது இரண்டுமே நகராமல் இருக்கும்..அப்போது எந்த நாய் வீரமானது என்று பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியாது..உறுமும் சத்தத்தை வைத்து நமக்கு ஏற்றவாறு எடை போட்டுக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் சண்டையை நாய்கள் ஆரம்பிக்கும் போது விரைவாகவே ஒரு நாய் தோற்று ஓடிவிடும்..
.

இந்த நிலை யாருக்கும் வராமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி இலங்கை அரசு சூசகமாக அண்டை நாடுகளை உபயோகித்து அப்பாவித் தமிழ் மக்களையும் குறிப்பாக பெண்களையும் கொடூரமான முறையில் துடிக்கத் துடிக்க கொன்றொழிக்கும்போது போது கூட இந்த பாலாய்ப் போன அரசியல் அரங்குகள் கலங்கவில்லையே...
கச்சதீவை வாரிக் கொடுத்தது ஒரு அரசு ,கச்சதீவை மீட்க வேண்டுமென்கிறது இன்னொரு அரசு... இதென்ன நாடகம் அரசியல்வாதிகளுக்கு தூரநோக்கு சிந்தனை நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட அறிவு கிடையாதா?
இன்று இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் இயற்கைத் துறைமுகங்களை கைப்பற்றினால் எந்தவொரு நாடும் அண்டை நாடுகள் மீது தங்களது போர்க்கப்பல்களை பாதுகாப்பான முறையில் மறைத்து வைத்து தாக்குதல் மேற்கொள்ளலாம் என்பது இராணுவ ஆய்வாளர்களின் கருத்து .
.
அதனால் யார் இலங்கையை பகைக்கிறார்களோ அவர்கள் உலகப் போர் ஒன்று வந்தால் அதில் தோற்றுப் போவார்கள் ... அமெரிக்கா வேறு விதத்தில் முயற்சிக்கிறது .. வடகிழக்கு மக்களுக்கு சுயாற்சிக் கிடைத்தால் தமிழனுக்குரிய பகுதியில்தானே எல்லாமே எல்லா வளங்களும் .இருக்கிறது அமெரிக்காவை உலகத் தமிழர்கள் ஆதரிப்பார்களல்லவா?
என்னவானாலும் கொடிய அரசாங்க அராஜகங்கள் அழிய வேண்டும்..தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்..
பின்பு அரசியல் மாற்ங்களுக்காக போராடித்தான் ஆக வேண்டும்...
Post Reply

Return to “படுகை ஓரம்”