Page 1 of 1

படுகை புதிய பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதி!!

Posted: Sun Jun 09, 2013 1:25 am
by ஆதித்தன்
வணக்கம்!

படுகை.காம்-இன் ஐந்தாவது பிறந்த நாள் வருகிற ஜீலை மாதம் வருகிறது. அதனை முன்னிட்டு ஏதேனும் புதிய வசதினை இணைத்து படுகையை என்னும் சிறப்புற நடத்த வேண்டும் என்ற ஆவலும், சமீபத்தில் மணி அண்ணன் பல சிரமங்களுக்கு இடையிலும் மூன்று நபர்களை தனது ரெபரலாகக் கொண்டமையும் சற்று சிந்தித்து பார்க்கும் பொழுது, என்னும் கொஞ்சம் அதில் எளிமை படுத்தினால் வளர்ச்சி அடையும் என்று புதியதாக ரெபரல் லிங்க் படுகையில் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்ட ரிஜிஸ்டர் பகுதியில் பெயர் சேர்க்கும் முறை தளர்த்தப்பட்டு, லிங்க் கிளிக் செய்து வந்தாலே கூக்கீஸ் மூலம், உங்கள் கணக்கில் சேர்ந்துவிடுவார்கள். ஆகையால், இலவச ரிஜிஸ்டரை மையப்படுத்திச் சென்றாலே நாளை அவர்கள் கோல்டன் மெம்பர் ஆகி வருவாயும் கிடைக்கும்.


ரெபரல் லிங்கினை User Control Panel சென்றால் Referrals என்றப் பகுதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதைப்போல், உங்களது லிங்க் வழியாக இணைந்து கொண்டவர்கள் என்பதனை அதற்கு உள்ளே அமையும் View Referrals என்றப் பகுதிக்குள் யார் யார் என்பதனைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதன் அருகினில் இருக்கும் Invite Friends என்ற வசதியின் மூலம் ஆன்லைன் ஜாப் விருப்பம் உள்ளவர் எனத் தெரிந்த நபர்களின் மெயிலுக்கு இன்வைட் அனுப்ப முடியும்.

இரண்டாவதாக மினி-Chatting section உருவாக்கப்பட்டுள்ளது. இது, விரைவான உதவிக்கு மற்றும் படுகை நண்பர்களுடன் பொழுதினைக் கழிக்க உதவும். பொழுது போக்குடன் சம்பாதிப்பதுதானே நம் திட்டம்.. அதுவும் பணம் என்பதனை விட மகிழ்ச்சியான இடத்திற்குத்தான் மதிப்பு அதிகம். ஆகையால், மகிழ்வாக நண்பர்களோடு சாட் செய்து பொழுதினை கழிக்கும் பொழுதும் நம் பணியினைச் செய்திட வேண்டும்.

படுகை முகப்பு பக்கம் Portal Mod என்ற புதிய வடிவமைப்பினை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டில் இன்ஸ்டால் செய்யப் போய் தான் கீழ் விழுந்த படுகையை நிமிர்த்த... பெரும்பாடு பட்டும் முடியாமல் இப்பொழுது இரண்டாவது முயற்சியில் இறங்கியுள்ளேன். இது உறுப்பினர்களுக்கான வசதி என்பதனை விட... புதியவர்களை கவரும் ஒர் வசதி.

மற்றப்படி எல்லாம் போகப் போக புளிக்கும் என்ற கதை தான். ஒர் வருடத்தினை இந்த வசதிகள் மூலம் நாம் சிறப்பான வளர்ச்சியினை எட்டுவோம்... அடுத்த வருடம், அதனைக் கொண்டு அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பாதைக்கான வசதிகளைச் சேர்ப்போம்.

:thanks:

Re: படுகை புதிய பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதி!!

Posted: Sun Jun 09, 2013 8:13 am
by mnsmani
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் சொல்லப்படுகிறது. அந்த வகையில் படுகையின் தோற்ற மாறுதலும் ஒரு விதிவிலக்கல்ல. இதுவும் அழகாய்தான் இருக்கிறது. படுகைக்கு வாழ்த்துகள். :great:

Re: படுகை புதிய பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதி!!

Posted: Sun Jun 09, 2013 6:14 pm
by சாந்தி
ஆதி சார்....
படுகையில் புது பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதிகள் எல்லோருக்கும் நிச்சயமாக மிகவும் உபயோகமாக இருக்கும்.
மேலும் படுகை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் இதன் மூலம் அதிகரிக்கும்...
:great:
:thanks:

Re: படுகை புதிய பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதி!!

Posted: Sun Jun 09, 2013 7:08 pm
by கிருஷ்ணன்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" காலம் காலமாக நடைபெறும் கால சுழற்சிதானே?படுகையின் பொலிவும் ஜொலிக்கின்றது.அருமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.இது போல் ஆறு மாதங்களுக்கு ஓர் முறையாவது புதிய மாற்றங்களை எதிர்பார்க்கிறோம்.மேலும் ரெஃப்ரல் லிங்க் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதில் பேனர் லிங்கும் கொடுக்க முடிந்தால் இன்னும் ஜொலிக்கும்.வாழ்த்துக்கள்.

Re: படுகை புதிய பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதி!!

Posted: Sun Jun 09, 2013 7:26 pm
by ஆதித்தன்
prabhu11 wrote:மேலும் ரெஃப்ரல் லிங்க் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதில் பேனர் லிங்கும் கொடுக்க முடிந்தால் இன்னும் ஜொலிக்கும்.வாழ்த்துக்கள்.
பேனர் நாம் உருவாக்கம் செய்து கொள்ளலாம். விரைவில் அதற்கான இமேஜ் தயாரித்து அப்டேட் செய்கிறேன். அதனை ரெபரல் லிங்க் கொண்டு இணைத்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Image

Image

Image

Image

Re: படுகை புதிய பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதி!!

Posted: Mon Jun 10, 2013 12:38 pm
by விமந்தனி
படுகையின் புது வடிவம் அழகாகவும் இன்னும் எளிமையாகவும் உள்ளது.
படுகைக்கு வாழ்த்துக்கள்.

Re: படுகை புதிய பொலிவுடன் சேர்க்கப்பட்ட வசதி!!

Posted: Thu Mar 17, 2016 4:26 am
by ArunStephy
என்னுடைய பக்கத்தில் user control panel இல் referel என்கிற option இல்லை.

Image