Page 2 of 2

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Thu Mar 15, 2012 6:50 am
by ஆதித்தன்
udayakumar wrote:இதில் இன்னும் நிறைய சமுதாயத்திற்கு தேவையான விடயங்களை ஒவ்வொருவரும் குறிப்பிட்டால் சிறப்பாக அமையும்..
சமுதாயத்திற்கு ஏற்றபடி சொல்ல வேண்டும் என்றால், இவ்வாறு பெண்ணுக்கு பெண் தான் எதிரி என ஒட்டு மொத்தமாகக் கூறி நல்லவர்களையும் இழுப்பதைவிட,

எந்த ஒர் பெண் தவறு செய்தாலோ, அந்த ஒர் பெயரை எடுத்து சாடுங்கள். கண்டிப்பாக சரியானவர்கள், அந்த தவறினைச் செய்ய முற்படமாட்டார்கள்.

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Thu Mar 15, 2012 7:56 pm
by umajana1950
சுயமாக வாழக் கற்றுக் கொள் நீ ஆண் ,நான் பெண் என்று பேதமை பேச நேரமிருக்காது உனக்கு ... ஒரு ஒளிமயமான கனவு உனக்குள் ஒளிவீசிப் பிரகாசிக்கும்..
உண்மையான வார்த்தைகள்.தடைகளை தூக்கி எறிந்துவிட்டு, முன்னேறும் பெண்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். அந்த தடை ஆண்களால் வந்தாலும் சரி, பெண்களால் வந்தாலும் சரி......

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Thu Mar 15, 2012 8:02 pm
by muthulakshmi123
umajana1950 wrote:
சுயமாக வாழக் கற்றுக் கொள் நீ ஆண் ,நான் பெண் என்று பேதமை பேச நேரமிருக்காது உனக்கு ... ஒரு ஒளிமயமான கனவு உனக்குள் ஒளிவீசிப் பிரகாசிக்கும்..
உண்மையான வார்த்தைகள்.தடைகளை தூக்கி எறிந்துவிட்டு, முன்னேறும் பெண்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். அந்த தடை ஆண்களால் வந்தாலும் சரி, பெண்களால் வந்தாலும் சரி......

நன்றாக சொன்னீர்கள் உமாஜனா,

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Thu Mar 15, 2012 9:32 pm
by udayakumar
தனிமனித சுதந்திரம் எல்லோரும் விரும்பும் ஒன்று..ஆனால் அந்த தனிமனித சுதந்திரம் இன்னொரு மனிதனை பாதிக்காத வகையில் அமையும் வரை அது சமுதாயப் பிரச்சினையாக பார்க்கப்படாது..உங்கள் ஆற்றலும் சரி,அறிவும் சரி,அறியாமையும் சரி பிறருக்கு இடையூராய் இல்லாத வண்ணம் வாழ்ந்தால் சமூகத்தை குறை சொல்லத் தேவையில்லை..

ஒரு உதாரணம் -
வெள்ளைக்காரர்களிடம் உள்ள நல்ல விடயம் என்னவென்றால் பிறரை விமர்சிப்பதை விரும்புவதில்லை..அவர்கள் எப்படி ஆடை அணிந்திருக்கிறார்கள்..அவர்கள் நடத்தை எவ்வாறிருக்கிறது..என்பது உட்பட எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.. ஏனெனில் அவனை விமர்சிக்க அங்கு யாருமில்லை அவனுக்கும் அந்த வீண் வேலையில்லை..
நம்மவர்கள் நாம் எப்படியிருக்கிறோம் என்பதைவிட அயலவர் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்து பார்த்து கேலி பேசவும் ..விமர்சனம் செய்வதிலுமே நேரத்தை கழிக்கிறார்கள்..இவை சிலசமயம் பாரதூரமான விளைவுகளில் கூட கொண்டு சென்று தள்ளி விடுகிறது...

ஒரு விடயத்தில் நான் எப்படியானவன் என்றால் - என்னிடம் நேரில் யாராவது என் நண்பரைப் பற்றியோ ,யாரைப் பற்றியோ பிறரை விமர்சிக்க வந்தால் தயவு செய்து அவரிடமே சொல்லிவிடுங்கள் அவர் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என சொல்லிவிடுவேன்..இது என்னால் மற்க்க முடியாத என் நண்பனிடமிருந்து நான் கற்றுக் கொண்ட நல்ல விடயம்..

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Thu Mar 15, 2012 10:31 pm
by ஆதித்தன்
udayakumar wrote:அவர்கள் எப்படி ஆடை அணிந்திருக்கிறார்கள்..அவர்கள் நடத்தை எவ்வாறிருக்கிறது..என்பது உட்பட எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.. ஏனெனில் அவனை விமர்சிக்க அங்கு யாருமில்லை அவனுக்கும் அந்த வீண் வேலையில்லை..
:great:

சபாஷ்... நல்ல விடயம். நானும் வரவேற்கிறேன்.

நம் முன்னோர்களாகிய சித்தர்களின் வாழ்வுதனையும் ஒற்றுமைப்படுத்தியிருந்தால், வெள்ளைக்காரன் தோற்றான் போங்க.

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Fri Mar 16, 2012 8:30 pm
by udayakumar
உண்மையாகவே நாம் வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் வாங்கிவிட்டோம் ...அவனது ஆதிக்கத்தை வெறுத்ததாகக் கூறி முழுவதையும் ஒதுக்கிவிட முடியாதல்லவா? அவர்கள் கற்றுத் தரும் நல்ல விடயங்கள் ஏராளம் ..
நல்லதை கற்றுக் கொள்கின்றோமோ இல்லையே...அவர்கள் சாப்பிட்ட பர்கரை சாப்பிடுகிறோம்.. ஆனால் அவர்கள் சாப்பிடுகின்ற வெஜிடபிள் கோஷ் சாப்பிடுவதில்லை .. ஏனென்றால் நாம் நவீன கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறோமல்லவா!!!
டபுள் பர்கர்
Image
வெஜிடபுள் கோஷ்
Image

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Tue Apr 10, 2012 9:18 pm
by sumayha
ரொம்ப நல்ல பதிவு....படிக்காமல் விடுபட்ட பதிவுகளைப் படிக்கலாம்னு ஒண்ணு ஒண்ணா தேடிப் படிக்கும்போது பிடிச்சது...
இவ்ளோ நாள் படிக்காம விட்டுருக்கேன்னு வருத்தமா இருந்தது...
பெண்கள் தங்களுக்குக் கொடுக்கப் படும் உரிமைகளை நல்லபடியா புரிஞ்சு பயன் படுத்தினாலே போதும்...
udayakumar wrote:
நீ வளமாக வாழ்வதற்கும் உன் குடும்பத்தை ,சமுதாயத்தை ,இந்த நாட்டை முன்னேற்ற எந்த இடத்தில் ஆணுக்கு நிகராக உன் ஆற்றல் தேவைப்படுகிறதோ !!! அங்கு மட்டும் உபயோகிக்க தெரிந்தவள்தான் புத்திசாலியான பெண்ணுரிமையை காக்கத் தெரிந்த பெண்...
udayakumar wrote:
உங்களை நீங்கள் இந்த சமுதாயத்தில் அடையாளப்படுத்துங்கள் .. நீங்கள் நீங்களாக கொளரவமாக வாழ்ந்தாலே ஆண் சமூகம் அவர்களாக வாழ உங்களிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டு போகட்டுமே ..
:great: :great: :great: :clab: :clab: :clab:

Re: பெண்ணுக்கு பெண்ணே எதிரி!

Posted: Wed Apr 11, 2012 12:27 pm
by muthulakshmi123
ஒவ்வொரு பதிவுகளும் அருமை நாமும் வெஜ் பர்கர் சாப்பிடலாம்