அண்டம் ஒர் மாயை - ஆசை ஒர் முடிவிலி

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அண்டம் ஒர் மாயை - ஆசை ஒர் முடிவிலி

Post by ஆதித்தன் » Tue Jun 05, 2012 9:02 pm


அண்டம் ஒர் மாயை
அறிவியல் ஒர் புதிர்
ஆண்டவன் ஒர் தேடல்
ஆசை ஒர் முடிவிலி

இன்பம் அறிந்துவிடு
துன்பம் ஏற்றுவிடு
சமானம் கற்றுவிடு
மயானம் பெருவீடு

வருவது ஒன்று
வாழ்வது ஒன்று
வீழ்வது ஒன்று

நடுவில் வாழ்வது நீ
நாடகத்தின் நாயகன் நீ
நாளும் நன்மையே செய்நீ


ஆதி.in :ros:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அண்டம் ஒர் மாயை - ஆசை ஒர் முடிவிலி

Post by Aruntha » Wed Jun 06, 2012 10:49 am

உண்மை தான் ஆதி. வாழ்வின் தத்துவம் அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் வரிகளில்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அண்டம் ஒர் மாயை - ஆசை ஒர் முடிவிலி

Post by ஆதித்தன் » Thu Jun 07, 2012 5:51 pm

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி அருந்தா.

கவித எழுதணும்னு ஆசையா இருக்கு ... ஆனா .. கற்பனை தான் வர மாட்டேங்குது....
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அண்டம் ஒர் மாயை - ஆசை ஒர் முடிவிலி

Post by Aruntha » Thu Jun 07, 2012 11:49 pm

கற்பனையின் சிகரத்திற்கே பஞ்சமா? ஐயஹோ :aah: :aah: :aah:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அண்டம் ஒர் மாயை - ஆசை ஒர் முடிவிலி

Post by ஆதித்தன் » Fri Jun 08, 2012 10:06 pm

Aruntha wrote:கற்பனையின் சிகரத்திற்கே பஞ்சமா? ஐயஹோ :aah: :aah: :aah:
ஆமாம் ஆமாம்.. எல்லோரும் சொல்லிக்கிட்டாங்க, அது நீங்கதான்னு. ஆனால், இந்த சின்னப் பையனைப் பார்த்து கற்பனைச் சிகரம்னு சொல்லி ஐஸ் வைக்கிறீங்களே!!!!!! அது அடுக்குமா!!!! இந்த ஊரு நம்புமா!!! :wal: :wal: :wal:
Post Reply

Return to “கவிதை ஓடை”