தொழிலுக்கு அதிபதி சனி கிரகம் - அள்ளிக் கொடுப்பவன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11920
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தொழிலுக்கு அதிபதி சனி கிரகம் - அள்ளிக் கொடுப்பவன்

Post by ஆதித்தன் » Fri Sep 07, 2018 8:38 pm

தொழிலுக்கு அதிபதி சனி கிரகம் தான். சனியினைப் போல் கொடுப்பவன் யாரும் இல்லை என்றுச் சொல்வார்கள், சனியின் மின்காந்த சக்தி நம்மிடம் அதிகம் இருந்தால், இரும்புச் சத்து அதிகம் இருக்கும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வேலை வாய்ப்பு கிடைக்க, தொழில் சிறப்படைய சனி கிரக சக்தி பலன் கொடுக்கிறது.

உடல் ஆரோக்கியத்தில் செரிமான உறுப்புகளில் தன் பங்கினை பெரிதும் வெளிப்படுத்துகிறது. செரிமான நன்றாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் வேலையில் சுறுசுறுப்பு இருக்கும்.

சனி ஒய்வுக்கான காலம். ஆகையால் சனிக்கிழமைகளில் ஓய்வு எடுப்பது என்பது நல்லது.

சனி கிரகத்தின் மின் காந்த சக்தி அதிகமாக இருக்கும் நேரம், சனிக்கிழமை சூரிய உதய நேரத்திலிருந்து 12 நிமிடம் ஆகும். ஆகையால் சனிக்கிழமை காலையில் சூரிய உதயத்தின் பொழுது சனியினை மனதார நினைத்து நன்றாக மூற்றுக் காற்றினை உள் இழுத்து சனியின் மின் காந்த சக்தியினை உட்கிரகித்துக் கொள்ளுங்கள்.

சனியினைப் போல் கொடுக்க ஆளில்லை. ஆகையால், நன்மையான செயல்களை செய்வோர்க்கு அவன் அள்ளிக் கொடுப்பான்.

சனி ஒர் நீதிமான். அவனிடம் நேர்மையாக இருங்கள், தொழிலில் நல்ல முன்னேற்றத்தினைக் கொடுப்பான்.

சனி மந்தமாக இருந்தாலும், கொடுக்கும் காலத்தின் பொழுது எல்லாத்துக்கும் சேர்த்து கொடுப்பான்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”