93 ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு சொந்தக்காரர்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1778
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

93 ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு சொந்தக்காரர்

Post by marmayogi » Mon Jul 23, 2018 9:58 am

Image
Image
childhood poetry
Image
childhood poetry
Image
childhood poetry
Image
childhood poetry
Image
childhood poetry
உலகிலேயே நாங்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்று
அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். தொண்ணூற்று மூன்று ரோல்ஸ் ராய்ஸ்களை வைத்து நான் வேடிக்கை காட்டியவுடனே.
அவர்களுடைய கர்வமெல்லாம் தொலைந்து போய்விட்டது.
குடியரசுத் தலைவருக்குக் கூட பொறாமை வந்துவிட்டது.
ஆளுநர்களுக்குப் பொறாமை. குருமார்களுக்குப் பொறாமை.

வாஸ்கோ கவுன்டியின் ஒரு மதகுரு, ஞாயிற்றுக் கிழமை கோயிலுக்குப் போவதை மறந்தாலும் இயேசு கிறிஸ்துவையே மறந்தாலும் ரோல்ஸ் ராய்ஸ்களை மறக்க மாட்டார்போலிருக்கிறது. அதைக் கண்டிப்பதற்குச் சில வழிகளையும்
கண்டுபிடித்தார்.நான் சிறையிலிருந்து வந்தவுடன், எனக்கொரு கடிதம்
எழுதியிருந்தார். 'ஒரே ஒரு ரோல்ஸ் ராய்சையாவது தேவாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கலாமே! நீங்கள்தான் சொந்த நாட்டிற்குத் திரும்பப் போகிறீர்களே! அது ஒரு
பெரிய தருமச்செயலாக அமையுமே!' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அவரது மனோபாவத்தை நீங்கள் புரிந்து
கொள்ளலாம்...

ஆயிரக்கணக்கானவர்களுக்கு நான் தியானம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன் அமெரிக்காவுக்கு அதில்ஆர்வம் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் கம்யூனுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்கா அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
ஒவ்வொரு திருவிழாவின் போதும், உலகெங்கும் இருந்து
இருபதாயிரம் பேர் வருகிறார்கள். அமெரிக்காவுக்கு அதைப் பற்றி
அக்கறையில்லை. ஊடகங்கள் முழுவதும் தொண்ணூற்று மூன்று
ரோல்ஸ் ராய்ஸ்களைப் பற்றியே செய்தி வெளியிட்டும் பேசிக்கொண்டும் இருந்தன.

ஓர் ஏழை நாட்டில் இதை எதிர்பார்க்கலாம்தான்... நான்
அமெரிக்காவின் கர்வத்தைத் தகர்த்து விட்டேன்! எனக்கு
தொண்ணூற்று மூன்று ரோல்ஸ் ராய்ஸ்கள் தேவையே இல்லை.
நல்ல வேடிக்கையாக இருந்தது அது!

ஓஷோ
ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”