
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலக உயிரினங்களுக்கு எல்லாம் அடிப்படை இறை சக்தியாகிய ஆதி. ஆதியும் அந்தமும் இல்லா ஆதித்தாயை நாம் தத்துவத்துவத்தின் அடிப்படையில் ஆதிபரா சக்தியாக, கடவுளாக வணங்குகிறோம்.
ஆதிபராசக்தியின் அற்புதக் கொடையே அறிவும் அகர முதல எழுத்தெல்லாம்.
எழுத்தறிவைக் கொடுத்த இறைவனை வணங்குவோம்.
படாமலே படிப்பறிவு மூலம் நாளும் வளர்ந்து, கைக்குள் உலகத்தினை உள்ளடக்க எழுதிவைத்து உதவிய அனைத்து பெரியோரை வணங்குவோம்.
ஈரடியில் பா கொடுத்து மனிதகுல வாழ்வினை மேன்மைப்படுத்திய வள்ளுவனை வணங்குவோம்.