திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by ஆதித்தன் » Mon Sep 25, 2017 5:44 am

திருக்குறள் விளக்கம்


Image

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகுஉலக உயிரினங்களுக்கு எல்லாம் அடிப்படை இறை சக்தியாகிய ஆதி. ஆதியும் அந்தமும் இல்லா ஆதித்தாயை நாம் தத்துவத்துவத்தின் அடிப்படையில் ஆதிபரா சக்தியாக, கடவுளாக வணங்குகிறோம்.

ஆதிபராசக்தியின் அற்புதக் கொடையே அறிவும் அகர முதல எழுத்தெல்லாம்.

எழுத்தறிவைக் கொடுத்த இறைவனை வணங்குவோம்.

படாமலே படிப்பறிவு மூலம் நாளும் வளர்ந்து, கைக்குள் உலகத்தினை உள்ளடக்க எழுதிவைத்து உதவிய அனைத்து பெரியோரை வணங்குவோம்.

ஈரடியில் பா கொடுத்து மனிதகுல வாழ்வினை மேன்மைப்படுத்திய வள்ளுவனை வணங்குவோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by ஆதித்தன் » Tue Sep 26, 2017 6:25 am

Image

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

நன்கு படித்த மாவீரனாக இருந்தாலும், தன்னுள் உறைந்திருக்கும் அறிவு ஓளிச்சுடராகிய இறைவனை தாழ்பணிந்து வணங்கி அதன்படி செயல்பட வேண்டும். இல்லாவிடில் தனக்கான பெரும் பயன் ஒன்றுமில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by ஆதித்தன் » Wed Sep 27, 2017 7:43 am

Image

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

ஆயிரெத்தெட்டு இதழ் வட்டத்துக்குள் அமைந்த ஞான மதியினை கண்டுற்று இறைவனடி சேர்ந்தவர், சாவா நிலைப்பெற்று இப்பூவுலகம் உள்ளவரை நீடித்து வாழ்வார்.
partthasarathy
Posts: 13
Joined: Wed Sep 27, 2017 3:54 pm
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by partthasarathy » Wed Sep 27, 2017 6:08 pm

Anbilar ellam thamakkuriyar anbilar
enbum uriyar pirarkku

anbillathavar ella porulumthamakku mattumuriyathu ena ennuvar.
Anbu udaiyaro tham udal porul aavi akiya anaitthum pirarkkena enniduvar.
partthasarathy
Posts: 13
Joined: Wed Sep 27, 2017 3:54 pm
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by partthasarathy » Wed Sep 27, 2017 6:19 pm

Eniya ulavaka innatha kooral
kaniyiruppak kaai kavarthattru

inimayana sorkkal pala iruka kadumaiyana varrthaikalai pesuvathu suvaiyana pazhangalai vittu kaayai virumbuvatharkku oppakum
partthasarathy
Posts: 13
Joined: Wed Sep 27, 2017 3:54 pm
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by partthasarathy » Wed Sep 27, 2017 7:13 pm

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by ஆதித்தன் » Fri Sep 29, 2017 6:00 am

Image

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

இல்லை என்ற வெற்றிடமே இறைவன், அவன் இல்லாது ஒருபொருளும் இயங்காது. தன் உச்சந்தலையிலே இருக்கும் இறை வெற்றிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் குறுகிய மனம், தனது விருப்பு வெறுப்பாகிய ஆசையை அறுத்து வெற்றிடத்திலே தன் இருப்பினை நிலை நிறுத்தி வெறுமையை பூர்த்தி செய்து பிரகாசிக்கும் நிலையினை பெற்றுவிட்டால், அவருக்கு துன்பம் ஒருபொழுதும் இல்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by ஆதித்தன் » Sun Oct 01, 2017 8:48 am

Image

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

புறவினைகளைக் கடந்து தன் வினை சுகத்தில் பேரானந்தம் எனும் பெரும் பொருளை விரும்பி எண்ணங்களை ஆகாய மார்க்கமாய் செலுத்தி இறைப்புகழ் அடைபவர்க்கு எவ்வினையாலும் துன்பம் அண்டுவதில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by ஆதித்தன் » Sun Oct 01, 2017 9:52 am

Image

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஐம்பூதங்களைக் கொண்டு மெய்,வாய்,கண்,செவி,மூக்கு என நெறிப்படுத்தி நம்மை மனிதனாக உருவகப்படுத்திய இறைவனின் உள்ளார்ந்த ஆழ்மன வழிநின்றார், பிறப்பின் நோக்கம் தீர தன் முழு ஆயுளை வாழ்ந்து மாயை பிறப்பினை கடப்பார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்

Post by ஆதித்தன் » Mon Oct 02, 2017 5:44 pm

Image
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


தனுக்குள்ளே இருக்கும் ஒப்புமையில்லா இறைவனடிச் சேர்வதுதான் தன் மனக்கவலையை போக்குவதற்கான எளிதான வழி, மாற்றாக மனக்கவலையை தீர்ப்பது என்பது கடினம்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”