நீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க!!

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நீங்களும் வெல்லலாம் பரிசு : 0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க!!

Post by ஆதித்தன் » Fri May 30, 2014 3:43 pm

எண் விளையாட்டு பரிசுப் போட்டி - ரூ.100


எளிமையான பரிசுப்போட்டியினை வைக்க வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்நோக்கியதில் கிடைத்ததுதான் இந்த எண் விளையாட்டு. இதில் ஒன்றும் பெரிதான கஷ்டம் ஏதும் இல்லை, நீங்கள் 0 - 9 க்குள் ஒர் எண்ணை சொல்ல வேண்டும். அதே எண்ணை பின்னால் வரும் பத்து நபர்கள் சொன்னால் நீங்கள் வெற்றியாளர்.

0 - 9 க்குள் ஒர் எண் சொல்லுங்க!


0 - 9 -க்குள் மட்டுமே சொல்ல வேண்டும் என்பதால், முதலில் வரும் பத்து நபர்க்கே போட்டியாளராக அதிக வாய்ப்பு கிடைக்கும். பின் வரும் பதிவுகளில் எந்த எண் முதலில் 10 பதிவுகளைத் தொடுகிறதோ, அந்த எண்ணை முதலில் சொன்னவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, பரிசுத் தொகை உடனே வழங்கப்படும்.


முடிந்தால் இப்பவே பின்னூட்டம் கொடுத்து போட்டியாளராகுங்கள், இல்லாவிட்டால் வெற்றியாளரை நிர்ணயிக்கும் நீதிபதி ஆகுங்கள்.

ஒருவர் கூட பத்து வாக்குகளைப் பெறாததால், இப்போட்டி இத்துடன் பரிசு வழங்கப்படாமல் முடிக்கப்படுகிறது.


பரிசுத் தொகை அடுத்தப் போட்டியில் பயன்படுத்தப்படும்.

விதிமுறைகள்:

1. போட்டிப் பதிவில் அனைத்து படுகை உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம், ஆனால் குறைந்தது 50 பதிவுகளைச் செய்திருக்க வேண்டும்.

2. பதிவில் அனைவரும் தான் விரும்பிய ஒரே ஒர் எண்ணை மட்டுமே குறிப்பிட வேண்டும்.

3. பதிவினைச் செய்தப் பின்னர் திருத்தம் செய்தல் என்பது கூடவே கூடாது. திருத்தப்பட்ட பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (போட்டியாளர்க்கும், வெற்றியினை நிர்மாணிப்பவர்க்கும் பொறுந்தும்)

4. ஒருவர் ஒர்முறை மட்டுமே இப்பதிவில் பின்னூட்டம் செய்தல் வேண்டும். போட்டியாளர் தவறுதலாக, பிறரை ஊக்குவிக்கும் விதமாக அல்லது, தவறுதலாக பின்னூட்டம் செய்தாலும், அவர் போட்டியாளர் தகுதியினை இழப்பார். இப்படியான சூழலில், இரண்டாவதாக அதே எண்ணைக் கூறிய நபர், போட்டியாளராக ஏற்றுக் கொள்ளப்படுவார்.

5. வெற்றியினை நிர்மாணிப்பவர்களும், இரண்டாம் பதிவினைச் செய்தல் கூடாது. தவறும் பொழுது அவரது பதிவுகளும் கணக்கில் வராது.

6. போட்டிக்கான நாட்கணக்கு கிடையாது. எந்தவொரு எண்ணாவது முதலில் 10 பதிவுகளைத் தொட்டுவிட்டால், உடனே அந்த வெற்றியாளர்க்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டுவிடும்.

7. போட்டியில் வெற்றி பெறும் விதமாக, போட்டியாளர்கள், தங்களது நண்பர்களை அறிமுகம் செய்து பின்பதிவு செய்ய வைக்கலாம். ஆனால், அது ஒரே கணிணி/IP மூலம் உருவாக்கப்பட்ட போலி எனக் கண்டிபிடிக்கப்பட்டால் ரூ.100-க்காக அவப்பெயரினைச் சம்பாதிக்க நேரிடும்.

குறிப்பு: போட்டியின் விதிமுறையினை மாற்றியமைக்கவே, போட்டியினை இடையில் நிறுத்தவோ, படுகை நிர்வாகத்திற்கு முழு உரிமை உள்ளது. வெற்றியாளர் அறிவிக்கப்பட்டப்பின் அதில் எந்தவொரு மாற்றமும் இராது, மற்றவர்களது கூற்றுக்கும் நிர்வாகம் பதில் அளிக்காது. ஆனால், தவறுகள் நடைபெறின் அதனை சுட்டிக்காட்டும் பொழுது, கண்டிப்பாக நிர்வாகம் அதனை சரிபார்க்கும்.
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”