EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன?

Post by ஆதித்தன் » Sat Apr 20, 2013 1:14 am

Image
நடந்து முடிந்த 15/19 ஆம் தேதி வாரத்தில் EUR/USD கரன்சிக்கு எதிரான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் எவ்வாறு இருந்தது என்பதனை அலசும் டெக்னிகல் சார்ட் ரிப்போர்ட்.

மார்கெட் தொடங்கியது = 1.3111
மார்கெட் முடிவுற்றது = ~~~1.305

அதாவது கிட்டத்தட்ட 50 பைப் கரடி கெயின் பண்ணியிருக்கிறது..

வாரத்தின் உச்சம் = 1.3201
வாரத்தின் மட்டம் = 1.3001

சுருக்கமாகச் சொன்னால், இந்த வாரம் மார்கெட் 200 பைப் மேல் கீழ் என ப்ளக்சிபுள் கொண்டு ஆட்டம் போட்டியிருக்கிறது.

இந்த சார்ட் வைத்துக் கொண்டுதான் அடுத்தக்கட்ட மூவ்மெண்ட் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு ஃபோரக்ஸ் PRO அல்லது எக்ஸ்பர்ட் எனப்படும் சிறந்த வெற்றியாளர்கள் தீர்மானிக்கிறார்கள். ஏன் டேட்டாக்களை கலெக்ட் செய்பவர்களும், இந்த சார்ட் மூவ்மெண்ட்க்குத் தகுந்தவாறே அடுத்தக்கட்ட மூவிங்க் பாயிண்ட் தேர்வு செய்கிறார்கள்.

அதன்படி அடுத்த வாரத்தின் முதல் நாளும் இதே பாட்டம்/ரெசிஸ்டன்ஸ் லைன் ஆகியவற்றினைக் கொண்டுதான் ஆர்டர் மூவ்மெண்டைக் கணிக்க இருக்கிறார்கள். நாமளும் இந்த சார்ட்டைக் கொண்டு வாரத்தின் ஓய்வில் அலசினால், வரும் வாரங்களில் சிறப்பாக ஆர்டர் செய்து தோல்வி இல்லாமல் வெற்றியடையலாம்.


அதன்படி அலசலைத் தொடர்வோம்!

[*] இந்த சார்ட்டில் பிவோட் பாயிண்ட் எனச் சொல்லப்படும் மத்திப் பாயிண்டான 1.3100 என்ற இடத்தில் நீங்கள் பை ஆர்டர் போட்டாலும், செல் ஆர்டர் போட்டாலும் சரி இலாபம். பின் ஏன் பிவோட் பாயிண்டை மட்டும் சொல்லி ஏதோ ஆர்டர் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் ... ரெசிஸ்டன்ஸ் ... பாட்டம் என தேடி அழைகிறோம்???

[*] டபுள் பாட்டம் அல்லது டபுள் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் அடுத்தடுத்து ரிட்டர்ன் வந்தால் அடுத்த மூவ் எதிர் திசையில் இருக்கும் என்று இன்று மாலை சொன்னேன் நினைவிருக்கலாம். அதனை மேலும் உறுதியாக்கும் விதமாக இந்த வரைபடத்திலும் உச்ச உயரத்தினை ஆரம்பிக்கும் முன் பாட்டம் லைனை மீண்டும் மீண்டும் வந்து பார்த்திருப்பதனைப் பாருங்கள். அதைப்போல், இறக்கத்தினை கொடுப்பதற்கு முன்னும் இரண்டாவது முறையாக உச்சத்தினை தொட்டிருப்பதனைப் பாருங்கள். (குறிப்பு: அதற்காக எல்லா இடத்திலும் இதைப்போல் நடக்கும் என்பது இல்லை... 80% நம்பலாம்)

[*] இது மிக முக்கியம் ... மார்கெட் உச்சத்திலிருந்து இறங்கியதினைப் பாருங்கள்... 1.3120 என்ற இடத்தில் திரும்பி ஏறும் என நினைத்து ஆர்டர் ப்ளேஸ் செய்வதற்குள்.... கீழாக இறங்கி ... 20 நிமிடத்தில் 80 பைப்ஸ் கீழே சென்று 1.3040 என்ற இடத்திற்கு சென்று விட்டது... ஒர் வேளை நீங்கள் 15 பைப்ஸ் ஸ்டாப் லாஸ் கொடுத்து பை ஆர்டர் போட்டிருந்தால்? 15 டாலர் அவுட்... இல்லை ஸ்டாப் லாஸ் கொடுக்காமல் விட்டு கணக்கில் 50 டாலர் மட்டும் இருந்தால்? எல்லாமே அவுட்!!! இந்த சட்டன் மூவ்மெண்ட் நேரத்தில் உங்களால் லாஸ் ஆகிறது என்று க்ளோஸ் செய்ய டென்சனுடன் முயற்சிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிடும். அதுவே, நிறைந்த ஈக்குவிட்டி/பேலன்ஸ் நம் கணக்கில் இருந்தால்? மார்கெட் என்னும் இறங்குகிறது... 120 பைப் ஆர்டர் லாசில் இருக்கிறது.... ஆனாலும், ஆர்டர் ரன் ஆகிக் கொண்டே இருக்கிறது... இறங்கியது பின்னர் நிதானமாக மேலே ஏறுகிறது.... இரண்டு நாள் கழித்து மீண்டும் நாம் ஆர்டர் போட்ட இடத்திற்கே வந்துவிட்டது. அதாவது 5 பைப் இலாபத்திற்கு வந்துவிட்டது... இந்த நேரத்தில் என்னும் உயரட்டும் என பார்க்கக் கூடாது ஒர் பைப் கிடைத்தாலும் போதும்டா என க்ளோஸ் செய்துவிட வேண்டும்... ஏனெனில் நமது மொத்த இலாபம் 120 பைப்!! ஆகையால் தான் எப்பொழுதும் ஸ்டாப் லாஸ் கொடுக்க வேண்டாம். இலாபத்தினை மட்டும் குறைவாக எதிர்பாருங்கள்... நெகட்டிவ் பாயிண்டை நிறைய எதிர்பாருங்கள், என்று நான் சொல்லிக் கொள்வது. அதைப்போல் இறங்குவது மீண்டும் திரும்புவது என்பது, அதன் இறக்கத்தில் 50% இறக்கத்தினை பின் ஏறி கழித்துவிடும் என நம்பலாம்... அதற்கு மேலும் வரும் என காத்திருப்பது தவறு.

இது நீங்கள் இடையில் போட்டதால் தப்பித்தீர்கள்... அதுவே, உயருகிறது என்பதற்காக உச்சத்தில் இருக்கும் பொழுது பை என ஆர்டர் புக் செய்துவிட்டால்... திரும்பும் என்பது மார்கெட்டின் ஒவர் ஆல் மூவ்மெண்ட் பொறுத்துத்தான். அதாவது மார்கெட் கரடி முகம் என்றால் 1.279 என்ற பாயிண்டை நோக்கிச் செல்லும் பொழுது 1.3100 என்பதே இப்போதைய உச்சம்... இல்லை மார்கெட் என்னும் காளை முகத்தினை இழக்கவில்லை என்றால் 1.3400 வரை உச்சம் இருக்கிறது. ஆகையால் பயம் இல்லை. தானாக அடுத்த இரண்டு மூன்று நாட்களில் இப்போதைய 1.3200 உச்சத்தினை தொட்டுவிடும். சரி, கரடி முகம் அப்படியென்றால் என்ன செய்வது????

தவறுதலாக போட்டுவிட்டோம் என்பது முதல் 10 பைப்பிற்குள் தெரிந்தால் க்ளோஸ் செய்து கொள்ளலாம். இல்லை, சரியாகத்தான் போட்டேன், மார்கெட் திடீர் அலை உள்வாங்கிவிட்டது என்றால், கரடி முகம் என்றாலும் ஆர்டரை அவவசரப்பட்டு க்ளோஸ் செய்ய வேண்டாம். நீங்கள் போட்டது பை ஆர்டர் தானே! ஒகே, இப்போ மார்கெட் கடைசி உச்சத்தினை எட்டுகிறது எனப் பாருங்கள் .... அதாவது 1.3100 கடைசி உச்சம் என தெரிகிறது... நமக்கு 100 பைப் லாஸ். சரி கரடி முகம், ஆகையால் அடுத்து 1.295 என்ற டார்கெட்டை நோக்கி கீழ் இறங்கும். இப்போ 1.3100 என்ற இடத்தில் ஒர் செல் ஆர்டர் போடுங்கள். அதன் ப்ராபிட்டை 1.3030 வரை போடுங்கள்.. ஆகையால் மார்கெட் மேலும் 70 பைப் இறங்கும் பொழுதும் உங்களுக்கு லாஸ் இல்லை, ப்ராபிட்டும் இல்லை. உச்சக்கட்ட பாட்டத்தினை தொட்டுவிட்டது என்னும் பொழுது செல் ஆர்டரை க்ளோஸ் செய்துவிடுங்கள்.... சோ, இதுவரைக்கும் இறங்குவதனால் ஏற்படும் லாசினைத் தடுத்தாகிவிட்டது.. இப்பொழுது மார்கெட் மீண்டும் உயர ஆரம்பிக்கும்... அதாவது வந்த இடத்திற்கே திரும்பாவிட்டாலும் 60% உறுதியாக உச்சக்கட்ட பாட்டத்திலிருந்து திரும்பும். நீங்கள் ஏற்கனவே சரியான பாட்டம் தெரியாமல் 80%ல் க்ளோஸ் செய்தாலும் ... பொறுமையாக இருந்து.... 60இல் 20 போக... மீதம் 40% ஐ ப்ராபிட்டாக மாற்ற மார்கெட் திரும்புவதற்காக காத்திருங்கள்... இப்பொழுதும் முழுமையான உச்சத்தினை தொடும் வரை காத்திராமல் ... ஒர் 25% வந்தவுடன் மீண்டும் ஒர் செல் ஆர்டர் போடுங்கள்....

இப்போ, 100 பைப் லாஸ் என்பது 75 பைப்ஸ் லாஸ் என்ற லெவலுக்கு வந்திருக்கும்... இப்பொழுது மீண்டும் மார்கெட்டை நன்றாக வாட்ச் செய்து கொண்டே வாருங்கள்... மார்கெட் கரடி முகம் என்றால் மட்டுமே செல் ஆர்டர் போட்டு லாசை தடுத்து ரிட்டன் ப்ராபிட் பார்க்க வேண்டும்.... காளை முகம் என மாறும் பொழுது ஆர்டர் போடக்கூடாது. இப்படி நிதானமாகவும்.... முழுமையான மார்கெட் அனலைசிஸ் ரிப்போர்ட் பார்த்தப்படியும் இருந்தால்.... எளிதாக ஏற்ற இறக்கத்தில்... 5 பைப் ... 5 பைப் என ஆர்டரை எதிரில் போட்டு மொத்த நெகட்டிவ் பைப்பையும் ப்ளஸ் ஆக மாற்றிவிட்டு.... ஆர்டரை க்ளோஸ் செய்து கொள்ளலாம்.

இப்படி எல்லாம் விளையாடி... எந்த நேரத்திலும் இழப்பு இல்லாமல் தப்பிக்க வேண்டும் என்றால் நம் கணக்கில் பேலன்ஸ் இருக்க வேண்டும்... இல்லாவிடில் மேலும் ஆட முடியாமல் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். ஆகையால் எப்பொழுதுமே 500 பைப்ஸ் ஈக்குவிட்டியுடன் ட்ரேடிங்க் விளையாட்டினை ஆட ஆரம்பியுங்கள்.

நீங்களும் மேலும் அலசுங்கள் ... உங்கள் ஆலோசனையும் கூறுங்கள்..
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன

Post by கிருஷ்ணன் » Sun Apr 21, 2013 12:31 am

அருமையாக விளக்கியுள்ளீர்கள்.புதிதாக வருபவர்களுக்கு புரிய சற்று நாளாகும்.அதுவரை உங்கள் அனுபவங்களை வாசிக்க வாசிக்க அனைவரும் அனாலிஸ்ட் ஆகிவிடுவார்கள் என நினைக்கிறேன்.என்னுடைய அனுபவத்தில் ஸ்டாப் லாஸ் என்பது இரண்டு பக்கமும் பாயக்கூடியு ஓர் ஆயுதம்தான்.ஏனெனில் நம் ஸ்டாப் லாஸை உடைத்த பிறகு நாம் வாங்கிய இடத்திற்கே வந்து கலாய்ப்பதும்,ஸ்டாப் லாஸ் போடாமல் வேடிக்கை பார்த்தோமானால் நம்மை நடுத்தெருவிற்கும் கொண்டு வந்து விடும்.ஆனால் அதனை சரியான இடத்தில் ப்ளேஸ் செய்தோமானால் அதனை விட அருமையான கருவி எதுவும் இல்லை.மேலும் இந்த வார நிலைமையைப் பார்க்குபொழுது நீங்கள் கணிப்பது போலவே அடுத்த வாரமும் முற்பாதியில் கரடியின் கையே ஓங்கும் போல் தெரிகிறது.WEEKLY CHART ல் ஒரு DARK CLOUD PATTERN உருவாகியுள்ளதே காரணம்.மேலும் வார இறுதி நாளில் கரடியின் கை ஓங்கி தொடங்கிய இடதிலேயே முடிந்திருப்பதால் வரும் வாரத்தில் 1.304 ஐ உடைக்கும்பட்சத்தில் 1.300 ஐயும் அதனையும் உடைக்கும்பட்சதில் 1.296 வரையும் செல்ல வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.பவுன்ஸ் ஆகி திரும்பும் பட்சத்தில் 1.308ல் ஸ்டாப் லாஸ் புக் செய்து வெளியேறிவிடலாம்.ஏனெனில் ஓவர் ஆலாக காளையே பலம் பெற்றுள்ளதால் மீண்டும் அது 1.330 தாண்டி பயணம் செய்யும் வாய்ப்புள்ளதால் மூவ்மெண்டைப் பொருத்து ப்ராஃபிட் புக்கிங்கோ,ஸ்டாப் லாஸ் கவர் செய்யவோ தயாராகிக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன

Post by ஆதித்தன் » Sun Apr 21, 2013 2:13 am

Stop Loss என்ற ஒன்றினை எப்பொழுது நாம் இலாபத்தினைத் தாண்டி, செல்ல நினைக்கிறோமோ... அப்பொழுது ஸ்டாப் லாஸ் கொடுத்துக் கொண்டே இலாபத்தின் பின்னால் செல்லலாம் என்பதுதான் எனது எண்ணம்.


மற்றப்படி ஸ்டாப் லாஸ் போட்டு ஒர் ஆர்டரை நெகட்டிவில் க்ளோஸ் செய்துவிட்டால், மீண்டும் ஒர் ஆர்டரைப் போட்டு அந்த நெகட்டிவ் பணத்தினை எடுப்பதற்குப் பதில்... நேர் எதிர் ஆர்டர் போட்டு... அப் & டவுனில் ப்ராபிட் ஆர்டரைக் க்ளோஸ் செய்து மீண்டும் சரியாக ப்ராபிட்டுக்கு ஆர்டர் போடுதல் என விளையாடி நட்டம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்...

ஆர்டர் போடும் இடத்திலேயே எதிரில் போய்விடுமோ என்று ஸ்டாப் லாஸ் போடுவதற்கு, அந்த ஆர்டரே போடாமல் விட்டுவிடலாம். 50 பைப் நெகட்டிவ் போனாலும் திரும்பி 100 பைப் வரும் என்ற இடத்தில் தான் ஆர்டர் போடனும்... அந்த இடத்தில் நெகட்டிவ்வுக்கு எதற்கு ஸ்டாப் லாஸ் போட்டு... பின் இப்படித்தான் வரும்னு ஆர்டர் போட்டு??? அது நல்லதல்ல என்பது எனது கருத்து...


என் கருத்து... 20 பைப் ப்ராபிட் பார்த்தாகிவிட்டது... என்னும் 10 பைப் ப்ராபிட் பார்க்க வேண்டும் என்றால்... இந்த நேரத்தில் 5 பைப் ப்ராபிட் இடத்தில் ஒர் ஸ்டாப் லாஸ் கொடுத்து தொடர்வதும்... நாம் நினைத்தது போல மீண்டும் இறங்கினால்... அந்த இடத்தின் உச்ச பாயிண்டிற்கு ஸ்டாப் லாஸ் என ..... மார்கெட் ஸ்டெப் பை ஸ்டெப்பாக இறங்க இறங்க... ஸ்டாப் லாசை மாற்றிக் கொண்டே செல்லலாம்... அப்படி ப்ரிவியஸ் கையை உடைத்து ஏறுகிறது என்றால் மார்கெட் மூவ் மெண்ட் மாறுகிறது என்பது தானே!! இப்படி அதிகப்படியான ஆசைக்கு ஸ்டாப் லாஸ் கொடுக்கலாம்.

ஆர்டர் போடும் இடத்தில் நாமே முட்டுக்கட்டை போடக் கூடாது... போட்ட ஆர்டரை வெற்றிகரமாக... நமது பேலன்ஸ்க்கு பங்கம் இல்லாமல்...ஆடி முடிக்கணும்... அதுக்கு 500 பைப்ஸ் ஈக்குவிட்டியினை கால்குலேட் செய்து வைத்துக் கொண்டு ஆர்டர் போட்டால்... தைரியமாக வெற்றியாக முடிக்கலாம்.

நீங்கள் சொல்வது போல்... மார்கெட்டையே வாட்ச் செய்ய முடியவில்லை என்ற நேரத்தில் நடுத்தெருவுக்கு கொண்டு சென்றுவிடும் என்பது நடக்கக் கூடிய வாய்ப்பு... அப்படி மார்கெட் வாட்ச் செய்ய முடியாத நேரத்தில் ஆர்டர் போட்டால்... கண்டிப்பாக ஒர் குறிப்பிட்ட ஸ்டாப் லாஸ் கொடுப்பது ரொம்ப நல்லது.

வரும் முதல் நாளில் மார்கெட் எளிதாக 1.3030 வரை வரும்.... ஆசிய வர்த்தகம் கடந்த ஒர் வாரமாக ஏறுமுகத்தினையே காட்டி வருவதால்... மார்கெட் காலையில் கொஞ்சம் ஏறி பின் இறங்கும்... அடுத்து ஈரோ வங்கி ஒன்றில் இன்ட்ரஸ்ட் பிரச்சனை உலா வருவதால்... மார்கெட் செல் ஆப் கொடுத்து, கீழ் நோக்கி கரடி முகத்தினை காட்ட வாய்ப்பு இருக்கிறது போல் தான் தெரிகிறது....

ஏனெனில் காளை முகம் என்பது சமீபத்திய ஒர் மாத கால இறக்கத்திற்கு வந்த ரிபவுண்ட் ஆக இருக்கலாம். 3 நாட்களாகியும் எந்தவொரு அப்பும் 1.3200 வைத் தாண்டிக் காணவில்லை. வரும் முதல் நாளிலும், 3200 ஐத் தாண்ட வாய்ப்பில்லை(பெரிய டேட்டா இல்லை... வந்தாலும் அது ஈரோவின் செல் ஆப் செய்தியாகத்தான் இருக்கும்).

ஈரோ ஒர் பக்கம் ஆட்டம் காண, டாலரும் ஆட்டம் கண்டு கொண்டிருப்பதுதான், கடந்த ஒர் வார உச்சத்திற்கு காரணம்... டாலர் டேட்டா பலம் கண்டுவிட்டால் கரடி தன் முகத்தினை நேருக்கு நேர் காட்ட ஆரம்பித்துவிடும்...

எது எப்படியோ.... முகம் தெரியாது ஒரே இடத்தில் இருந்து கொண்டிருந்தால்.... அடுத்த மூவிங்க் இன்ஸ்டண்டாக அதன் முகத்தினை நோக்கி பாயும்... அதாவது 30 நிமிடத்தில் 100 முதல் 150 பைப் வரை ஒரே திசையினை நோக்கி செல்லும் காட்சியினை வரும் வாரத்திலும் பார்க்கலாம்.... ஆகையால், அது எந்தப் பக்கம் என எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றே என் உள் மனம் சொல்கிறது.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன

Post by கிருஷ்ணன் » Sun Apr 28, 2013 2:19 am

prabhu11 wrote:
மேலும் இந்த வார நிலைமையைப் பார்க்குபொழுது நீங்கள் கணிப்பது போலவே அடுத்த வாரமும் முற்பாதியில் கரடியின் கையே ஓங்கும் போல் தெரிகிறது.WEEKLY CHART ல் ஒரு DARK CLOUD PATTERN உருவாகியுள்ளதே காரணம்.மேலும் வார இறுதி நாளில் கரடியின் கை ஓங்கி தொடங்கிய இடதிலேயே முடிந்திருப்பதால் வரும் வாரத்தில் 1.304 ஐ உடைக்கும்பட்சத்தில் 1.300 ஐயும் அதனையும் உடைக்கும்பட்சதில் 1.296 வரையும் செல்ல வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.பவுன்ஸ் ஆகி திரும்பும் பட்சத்தில் 1.308ல் ஸ்டாப் லாஸ் புக் செய்து வெளியேறிவிடலாம்.ஏனெனில் ஓவர் ஆலாக காளையே பலம் பெற்றுள்ளதால் மீண்டும் அது 1.330 தாண்டி பயணம் செய்யும் வாய்ப்புள்ளதால் மூவ்மெண்டைப் பொருத்து ப்ராஃபிட் புக்கிங்கோ,ஸ்டாப் லாஸ் கவர் செய்யவோ தயாராகிக் கொள்ளலாம்.
சென்ற வாரத்தில் ஆதி சாருடன் அலசி ஆராய்ந்தபோது நாம் கணித்தபடியே போன வாரம் 1.304 ஐ உடைத்து முதல் டார்கெட்டான 1.300 ஐயும் 2வது டார்கெட்டான 1.2960 ஐயும் தாண்டி 1.2950 வரை சென்று திரும்பியுள்ளது..சென்ற வாரம் 80 பைப்ஸ் வரை நமக்கு லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்து போயுள்ள‌து. இது ஒரு வாரத்திற்கான அலசல் என்றாலும் ஒவ்வொரு நிமிடத்திலும் ட்ரெண்டினை நம்மால் இது போல் கணிக்க முடியும். நமக்குத் தேவையெல்லாம் ஆதி சார் கூறியது போல‌ தேவையான பேங்க் பேலென்ஸ்,பொறுமை,ட்ரெயில் ஸ்டாப் லாசை மனதில் வைத்துக் கொண்டு ட்ரேட் செய்தல்,சரியான தருணங்களில் ப்ராஃபிட் புக்கிங் செய்தல்,அவ்வளவுதான்.சரி இந்த வாரம் எப்படி இருக்கும்? நாளை அலசுவோம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

FOREX LEVEL FOR THIS WEEK COMMENCING 29 APR 13

Post by கிருஷ்ணன் » Sun Apr 28, 2013 12:46 pm

Image
ஆதி சார் இது எனக்கு தெரிந்த‌ கணிப்பு,தவறு இருந்தால் மன்னிக்கவும்.தங்கள் கணிப்பும் கருத்தும் படுகையை வழிநடத்தட்டும். இந்த வாரம் EURUSD Movement ஒரு சேனலில் சென்று கொண்டிருப்பதால் அது மீண்டும் சற்று மேலெழும்ப வாய்ப்புகள் உள்ளது.அது சேனலை உடைக்கும்பட்சத்தில் கரடி முகம் காட்ட ஆரம்பித்துவிடும்.இரண்டு பக்கமும் பயணம் செய்வதற்கான வ்ழிமுறைகள். BUY ABOVE - 1.309.....http://adf.ly/N0xra
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன

Post by ஆதித்தன் » Sun Apr 28, 2013 1:13 pm

கடைசி வாரத்தில் தங்களது கணிப்பு வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி....


===========================================================

உங்களது ட்ரெண்ட் முறையினையும் தாராளமாக முழுமையாக இங்கு பதிவிட்டு, பிறரும் பயன் பெற உதவலாம்.

அவ்வாறு பத்து நபர்களுக்கும் மேல், தனது ட்ரெண்ட் சிக்னல் என்று பதிவிடுவதனையே நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சிக்னல் தவறுவது என்பது தினம் தினம் நடப்பது தானே... உதாரணத்திற்கு சொல்லப் போனால், 20/ந்தேதி வாரத்தில் 1.3400 செல்லும் என்று மூன்று வாரங்கள் சரியாக சிக்னல் கொடுத்த ஒர் வெப்சைட் சொன்னது.. அதனையே கடந்த 24 ந்தேதி பார்க்கும் பொழுது கீழ் திசை நோக்கி 1.286 -க்கு மாற்றி, நீங்கள் கடந்த வாரம் சொன்ன அதே shoulder - head - shoulder > looking leg என்ற பாணியில் அப்படேட் பண்ணிவிட்டார்கள்...

ஆக, எல்லா தளங்களுமே சிக்னல் என்று கொடுப்பதற்கு முன் ஒர் அக்ரிமெண்ட்டில் ஒர் டிக் வாங்கிக் கொள்கிறார்கள், Disclosure, Risk warning என எல்லாம் சொல்லித்தான் கொடுக்கிறார்கள்... அதைப்போல் ட்ரெண்டினை காலை ஒன்று, மாலை ஒன்று என மார்கெட் மூவ்மெண்ட்க்கு தகுந்தவாறு மாற்றிக் கொண்டே செல்கிறார்கள்....

ஆகையால் நாம் செய்வது தவறாக இருக்கும் என்று நினைக்கவே வேண்டாம். இது சரியாக நடக்க வேண்டும் என்று உறுதியோடு... உங்களது கணிப்பினை வெளியிடுங்கள்...
:thanks:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: FOREX LEVEL FOR THIS WEEK COMMENCING 29 APR 13

Post by கிருஷ்ணன் » Tue Apr 30, 2013 7:54 pm

prabhu11 wrote:Image
ஆதி சார் இது எனக்கு தெரிந்த‌ கணிப்பு,தவறு இருந்தால் மன்னிக்கவும்.தங்கள் கணிப்பும் கருத்தும் படுகையை வழிநடத்தட்டும். இந்த வாரம் EURUSD Movement ஒரு சேனலில் சென்று கொண்டிருப்பதால் அது மீண்டும் சற்று மேலெழும்ப வாய்ப்புகள் உள்ளது.அது சேனலை உடைக்கும்பட்சத்தில் கரடி முகம் காட்ட ஆரம்பித்துவிடும்.இரண்டு பக்கமும் பயணம் செய்வதற்கான வ்ழிமுறைகள். BUY ABOVE - 1.309.....http://adf.ly/N0xra
நாம் கணித்தபடியே EUR/USD காளையின் பிடியில் வெகு ஜோராக பயணிக்கிறது.நமது முதல் டார்கெட் ரீச் ஆகிவிட்டதால் பாதி ப்ராஃபிட் புக் செய்து கொள்ளுங்கள்.சீக்கிரமே 2வது டார்கெட்டும் ரீச் ஆக வாய்ப்புள்ளதால் ...http://adf.ly/N0xra
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: FOREX LEVEL FOR THIS WEEK COMMENCING 29 APR 13

Post by கிருஷ்ணன் » Thu May 02, 2013 12:16 am

prabhu11 wrote:Image
ஆதி சார் இது எனக்கு தெரிந்த‌ கணிப்பு,தவறு இருந்தால் மன்னிக்கவும்.தங்கள் கணிப்பும் கருத்தும் படுகையை வழிநடத்தட்டும். இந்த வாரம் EURUSD Movement ஒரு சேனலில் சென்று கொண்டிருப்பதால் அது மீண்டும் சற்று மேலெழும்ப வாய்ப்புகள் உள்ளது.அது சேனலை உடைக்கும்பட்சத்தில் கரடி முகம் காட்ட ஆரம்பித்துவிடும்.இரண்டு பக்கமும் பயணம் செய்வதற்கான வ்ழிமுறைகள். BUY ABOVE - 1.309.....http://adf.ly/N0xra
Image
கடந்த பதிவுகளில் கணித்தபடியே நமது இரண்டு டார்கெட்டுகளும் இரண்டு நாட்களுக்குள் ரீச் ஆகிவிட்டது.இலாபத்தை கொண்டாடுங்கள்.ஆனால் நமது ஒவ்வொரு அடியும் நஷ்டத்தைச் சமாளிப்பதைப் பற்றியே இருக்க வேண்டும்.மோசமான தினங்களைச் சமாளிக்க ஒரே வழி http://adf.ly/N0xra
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன

Post by ஆதித்தன் » Thu May 02, 2013 1:05 am

அடுத்த டார்கெட்டுக்கும் வழிவகுத்து புள்ளி வைத்திருக்கிறது அமெரிக்க மதிய வங்கியான Federal Reserve(Fed)..

அதனை ரோடாகா ஐரோப்பா மாற்றுமா என நாளை மதியம் தெரிந்துவிடும்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: EUR/USD Weekly Report இந்த வாரம் ஃப்ரக்ஸில் நடந்தது என்ன

Post by கிருஷ்ணன் » Sun May 05, 2013 12:16 am

Image
இந்த வாரம் சார்ட்டினைப் பார்க்கும்பொழுது ஏற்ற இறக்கங்கள் ஒரே சேனலில் பயணிப்பது தெளிவாகத் தெரியும். இது போன்ற பயணங்கள்தான் பணம் பண்ண எளிதான தருணங்கள்.அது சப்போர்ட் லைனைத் தொடும்போது வாங்குவதும்,ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடும் பொழுது ப்ராஃபிட் புக் செய்வதும் பின்பு அங்கிருந்து விற்று வைப்பதும் என பல வாய்ப்புகளை நமக்கு வழங்கும்.கடந்த இரண்டு வாரமாக நமது டார்கெட்டுகள் அனைத்தும் உடைபடாமல் ரீச ஆனது இந்த சேனலின் பயணத்தால்தான்
http://adf.ly/N0xra
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”