என்னுடைய கனா கண்ட காலங்கள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

என்னுடைய கனா கண்ட காலங்கள்

Post by RukmaniRK » Sat Mar 10, 2012 12:01 pm

முதன் முதலில் எனக்கு எழுத்தறிவை கற்பித்தது லிட்டில் ஃப்ளவர் கான்வெண்ட் என்னும் என் நடுநிலைப் பள்ளியே. அது தமிழ் வழியே பாடம் கற்பிக்கும் பள்ளி. எங்க பள்ளிக்கூடத்தில் எல்லாம் PREKG, LKG, UKG எல்லாம் தனி தனியாக இல்லை. முதல் வகுப்பு படிக்கும் முன் பள்ளி செல்லும் பழக்கத்தை வழக்கமான ஒன்றாக மாற்றுவதற்காக ஒரு வருடத்தை பயன்படுத்தினர். அதற்கு பெயர் ½(அரை) வகுப்பு எனவும் வைத்துக் கொள்ளலாம்.

½(அரை) வகுப்பு: ஒரு மிகவும் வயதான கிறிஸ்தவ சகோதரி தான் வகுப்பை பார்த்துக் கொள்வார். பள்ளி செல்லும் வயது வரும் 1 வருடத்திற்கு முன்னரே எனது பெற்றோர் என்னை பள்ளியில் சேர்த்தனர். அதனாலோ என்னவோ தினமும் என்னை பள்ளிக்கு அழைத்து செல்லும் என் அம்மா நான் அழுகிறேனா இல்லையா என நீண்ட நேரம் நின்று பார்த்து விட்டு செல்வார்களாம். ஆனா நான் கொஞ்சம் கூட அழுகாம போய் வகுப்புக்குள் உட்கார்ந்துகுவேணாம். (அம்மா சொன்னது. என் நினைவில் இல்லை).

முதல் வகுப்பு: என் வகுப்பு ஆசிரியர் பெயர் சுதந்திர வடிவு. எனக்கு இன்னும் நல்லா நியாபகம் இருக்கு. வீட்டுப்பாடம் செய்துட்டு வரலைனா ஜன்னல்ல கட்டி தொங்க விட்டுருவாங்க. நான் ஒரு நாளும் மாட்டுனது இல்லை. (நாங்கலாம் அப்பவே அப்பிடி.) என்னோட முதல் தோழி நாகலக்ஷ்மி கிடைச்சதும் அந்த வகுப்பில் தான்.

இரண்டாம் வகுப்பு: என் வகுப்பு ஆசிரியர் பெயர் பாக்கியலக்ஷ்மி. முதல் வகுப்பில் இருந்தே நான் ரொம்ப ப்ரைட் ஸ்டூடண்ட். (ட்யூப் லைட், குண்டு பல்பு எல்லாம் எடுத்துட்டு போக மாட்டேன்). நல்லா படிப்பேன். எனக்கும் நாகலக்ஷ்மிகும் தான் முதல் ரேங்க் வாங்குறதுல போட்டி நடக்கும்.

மூன்றாம் வகுப்பு: என் வகுப்பு ஆசிரியர் பெயர் ஜான்சி ராணி. அந்த வகுப்புல தான் எனக்கு இன்னொரு ஃப்ரெண்ட் கிடைச்சா. அவள் பெயர் வரலக்ஷ்மி. 2 பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப possessive வா இருந்தோம். நான் யார்கிட்ட பேசினாலும் அவளுக்கு பிடிக்காது. நானும் அப்பிடி தான் இருந்தேன். சாப்பிடும் போது கூட நாங்க 2 பேரும் தனியா தான் சாப்பிடுவோம். அந்த வகுப்புல தான் நான் முதல் முறையா பாட்டு போட்டியில கலந்துக்கிட்டேன். 2வது பரிசும் வாங்குனேன்.

நான்காம் வகுப்பு: வகுப்பு ஆசிரியர் பெயரை மறந்துட்டேன். பெருசா ஒண்ணும் நியாபகம் இல்லை.

ஐந்தாம் வகுப்பு: வகுப்பு ஆசிரியர் பெயரை மறந்துட்டேன். ஆனா வாங்குன அடியை மறக்க முடியுமா? என்ன நடந்துச்சுண்ணா... நான் தான் எங்க வகுப்பு தலைவினு எங்க டீச்சர் முதல் நாளே முடிவு பண்ணிடாங்க. அவங்க சொந்த செலவுல எனக்கு சூனியம் வச்சுருபாங்கா போல. அப்போ இந்த பச்சை மண்ணுக்கு புரியலையே. அதனால எல்லா பொறுப்பும் என்கிட்டே வந்துச்சு. அட்டெண்டன்ஸ் என்ட்ரி, மார்க் ரிஜிஸ்டர் என்ட்ரி போடுறது, சிறுசேமிப்பு பணம் எல்லார்கிட்ட இருந்தும் வாங்கி கரெக்ட் அ கணக்கு கொடுக்குற வரை எல்லாம் பாத்துகிடனும். அப்பிடி இருக்கும் போது ஒரு நாள் டீச்சர் இல்லாதப்ப எல்லாரையும் அமைதியா பாத்துகிற சொல்லிட்டு டீச்சர் எல்லாம் மீட்டிங் போயிட்டாங்க. அப்போ பாத்து ஒரு ஊமை பையன் எல்லா கிளாஸ் லயும் படிப்புக்கு பணம் கேட்டு வந்தான். எல்லா வகுப்பு தலைவிகளும் சேந்து காசு எல்லார்கிட்டயும் வாங்கி அவனுக்கு கொடுத்து அனுப்பிட்டோம். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் எல்லாரையும் ஏமாத்தி பணம் வாங்கிடான்னு. மீட்டிங் முடிச்சு வந்த டீச்சர் எல்லா கிளாஸ் லீடர்யும் கும்மு கும்முனு கும்மிடாங்க. முதல் தடவை நான் அடி வாங்குனது அப்போ தான்( வீட்டுல என் அப்பா அம்மா என்னைய இப்போ வரை அடிச்சது இல்லை).

ஆறாம் வகுப்பு: என் வகுப்பு ஆசிரியர் பெயர் ரமணி. பள்ளிக்கூடத்துல நடக்குற நாடகம் ல நடிக்க ஆரம்பிச்சேன். நிறைய போட்டிகளிலும் சேருவேன். சில நேரம் பரிசு கிடைக்கும். சில நேரம் கிடைக்காது. அப்போ தான் ஒரு தடவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில எங்க பள்ளி நாடகம் நடத்துனோம்.

ஏழாம் வகுப்பு: வகுப்பு ஆசிரியர் பெயரை மறந்துட்டேன். பெருசா ஒண்ணும் நியாபகம் இல்லை.

எட்டாம் வகுப்பு: வகுப்பு ஆசிரியர் பெயரை மறந்துட்டேன். நட்பு வட்டாரம் மிகவும் பெருசா இருந்தது. நாகலக்ஷ்மி, வரலக்ஷ்மி, பூர்ணிமா, ஜெயந்தி, சுகப்ரியா, முத்துமனோகரி மற்றும் சிலர். எட்டாம் வகுப்பு வரை மட்டும் தான் எங்கள் பள்ளியில் இருந்தது. அப்புறம் வேற பள்ளி செல்ல வேண்டும். அங்கயும் நாங்க எல்லாம் ஒண்ணா சேந்துடோம்லா..

ஒன்பதாம் வகுப்பு: புனித வளனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி (ST. JOSEPH’S GIRLS HIGHER SECONDARY SCHOOL) (தமிழ் வழி கல்வி). என் வகுப்பு ஆசிரியை பெயர் எலிசபத் சிஸ்டர். அங்கயும் ப்ரைட் ஸ்டூடண்ட் தான்.

பத்தாம் வகுப்பு: என் வாழ்க்கையே மாத்தும்னு நினைச்சேன். நல்லா படிச்சேன். நான் நினைச்ச மாதிரியே நல்ல மார்க் வாங்குனேன். ஆனா என்னோட குரூப் செலக்சன் ரொம்ப தப்பாயிருச்சு.

பதினொன்றாம் வகுப்பு: கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் முதன்மை பாடமா எடுக்க வச்சாங்க(அண்ணன் செலக்சன்), என்னையும் டாக்டர்கு படிக்க வைக்க நினைச்சங்க. எதிர்பாராத விதமா என் படிப்பு ரொம்ப பாதிக்க பட்டுச்சு. எனக்கு சுத்தமா பிடிக்கலை. டியூஷன் போனேன் என் வகுப்பு தோழி ஜீவா கூட. நட்பு வட்டாரம் இன்னும் பெருசு ஆச்சு. படிப்புல கொஞ்சம் தேருனேன். ஒரு வேலை கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருந்த கூட படிச்சுருபேணு இப்போ தோணுது. அப்போ எனக்கு விவரம் பத்தலை.

பனிரெண்டாம் வகுப்பு: பதினொன்றாம் வகுப்பிலே ரொம்ப டல் ஸ்டூடண்ட் ஆயிட்டேன். எப்பிடியோ கஷ்டப்பட்டு படிச்சேன். பாஸ் பண்ணேன். இன்ஜினியரிங் சேத்து விடுங்கணு கேக்க மனசு வரலை. மார்க் குறைஞ்சுருச்சு. அதுனால மதுரை ல நல்ல கலை கல்லூரில படிக்க முடிவு பண்ணேன். தியாகராஜா கல்லூரில BCA.

BCA: நான் அங்க சேர போறேனு சொல்லிட்டு BIOTECHNOLOGY சேர இருந்த வரலக்ஷ்மியும், பி‌எஸ்‌சி சேர இருந்த ஜீவாவும் என் கூடயே BCA ஜாயின் பண்ணுணங்க. ஜீவா வீடு என் பக்கத்து வீட்டுக்கே குடி வந்துட்டாங்க. ஒண்ணா தான் காலேஜ் போவோம். வருவோம். எக்ஸாம் அப்போ எப்பவும் குரூப் ஸ்டடி தான் முதல் வருஷம் மத்த யார்கூடயும் அவ்வளவா பழகலை. இரண்டாவது வருஷம் என் வகுப்பு தோழி பாரதி கூட நல்ல குளோஸ் ஆனேன். அடிக்கடி அவ வீட்டுக்கு போவேன். அவளும் வருவாள். கல்லூரி ப்ராஜக்ட் கூட பாரதி கூட தான் பண்ணேன். கல்லூரி வாழ்கையில் கிடைச்ச இன்னொரு ஃப்ரெண்ட் தான் ராஜா. இப்போ வரை கால் பண்ணி நலம் விசாரிக்கிறது அவன் மட்டும்தான்.

MCA: MCA நல்ல காலேஜ் ல தான் படிச்சேன். அழகப்பா பொறியியல் கல்லூரி. எப்பவும் நல்ல பழகுன ஃபிரண்ட்ஸ் கூடயே இருந்து பழகுன எனக்கு காலேஜ் போகவே பிடிக்கலை. ஏன்னா அங்க என் ஃபிரண்ட்ஸ் யாரும் கூட இல்லை. முதல் முறை விடுதியில் வேற தங்குனேன். வீட்டு நியாபகம் வேற அடிக்கடி வரும். கூட படிக்கிற பசங்க, சீனியர் எல்லாரும் முதல் ஒரு 2 மாசம் ரொம்பவே ஒட்டுவாங்க. ராகிங் பண்ணுவாங்க. பல தடவை படிச்ச வரை போதும். வீட்டுக்கு போய்டலாம்னு நினைப்பேன். ஆனா அப்பா எனக்காக கட்டுன பீஸ் நியாபகம் வரும். பேசாம இருந்துடுவேன். அப்புறம் எல்லாத்தயும் ஸ்போர்டிவ் வா எடுத்துக்கிட்டு நானும் பதிலுக்கு பேச ஆரம்பிச்சேன். பயம் போய்யிருச்சு. படிப்புல ரொம்ப ப்ரைட் கிடையாது. ஆனாலும் எப்பிடியே நல்ல சாஃப்ட்வேர் கம்பெனில பிளேஸ் ஆனேன்.

கனா கண்ட காலங்கள் முடிஞ்சது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என்னுடைய கனா கண்ட காலங்கள்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 1:11 pm

பரவாயில்லை ருக்மணி உங்களுக்கு அரை வகுப்பு டீச்சர் பெயரெல்லாம் ஞாபகம் இருக்கு..பாராட்டுக்கள்.. உங்கள் தோழிகளுக்கு இதை அனுப்புங்கள் படித்து சந்தோஷ்ப்படுவார்கள்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கனா கண்ட காலங்கள்

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 8:21 pm

மிக்க படித்த மேதாவிகளை எல்லாம், படுகை சுமந்து நிற்கும் பொழுதும்...இவர்களோடு நாமும் என்ற பொழுதும், மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்த வகையில் உங்கள் பள்ளி நினைவுகள் எங்களுக்கு பெருமை சேர்க்கிறது.

படித்த கல்வி என்றும் நமக்கு பயனாய் இருக்கும், அதனை சரியாக செயல்படுத்தும் பொழுது பெருமை கிடைக்கும். அதற்கு படுகை ஒர் துணையாய் நிற்கும்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கனா கண்ட காலங்கள்

Post by umajana1950 » Sat Mar 10, 2012 9:31 pm

பள்ளிக் காலங்கள், நினைக்க நினைக்கத் தான் சுவை அதிகமாக இருக்கும். வாழ்க்கையை அசை போட வைக்கும் காலங்கள் அவை. உண்மை தான்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”