அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:10 pm

அந்த அழகிய கிராமம். பச்சை பசேலென பரந்து விரிந்த நெல் வயல்கள். ஆங்காங்கே நாற்று நடும் சில பெண்கள். களை பிடுங்கும் கன்னிகள். ஏரினை காளையில் பூட்டி ஏய் ஏய் என அவற்றை ஓட்டும் ஆடவர். மண்வெட்டிகளை பக்குவமாய் பாய்ச்சி வரம்பு செய்யும் காளைகள். அவர்களை மேற்பார்வை செய்யும் அந்த வயல்களின் முதலாளியின் சேவகன்.

பார்க்குமிடமெங்கும் கண்கவர் புல்வெளிகள். ஆங்காங்கே தம் பசியை போக்கிட புற்களை சுவைக்கும் பசுக்களின் கூட்டம். பாசத்தோடு சென்று தாயின் முலைகளை மெல்ல சுவைத்து ருசிக்கும் கன்றுக்குட்டி. தன் தாய்மையை வெளிப்படுத்தி பாசத்தோடு உச்சிமோரும் தாய் பசு. பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அத்தனை இயற்கைக் காட்சிகள் நிறைந்த அழகிய கிராமம் தான் அது.

பாசத்திற்கு பக்குவப்பட்ட அவ்வூர் மக்கள். அக்கிராமத்தின் தலைவர் பசுபதி. அவரின் மனைவி பார்வதி. இவர்களின் இருமனம் ஒருமித்த திருமண பந்தத்தில் உதித்த அழகு தேவதை தான் கமலினி. இன்று அவள் பெற்றவர் மனதுக்கு பிடித்தவனை கணவனாக்கி திருமண பந்தத்தில் இணைந்துள்ளாள்.

அமைதியான இரவு வேளை. அழகிய மொட்டை மாடி. பொளர்ணமி நிலவு தன் கதிர்களால் ஒளிக்கீற்றுக்களை பூமிக்குப் பரப்பியபடி. குமரன் தான் அன்று கைப்பிடித்த தன் அழகிய மனைவியை பார்வைகளால் பருகிய படி....! கமலினி அவன் பார்வைக்கு ஈடு கொடுக்க முடியாதவளாய் வெட்கத்தில் புதைந்த படி....!

அன்று காதலர் தினம்... ஆனால் அதை பற்றிய அறிவில்லாத குமரன் கமலினி ஜோடி. பெரியவர்களால் நிச்சயிக்கபட்டு நடந்தேறிய திருமணம். பார்த்து பழகிய முகங்கள் இல்லாவிட்டாலும் பாசத்தை பங்கு கொள்ள துடித்த படி. முதல் முறையாக ஓர் ஆணின் பார்வையையும் நெருக்கத்தையும் பார்த்து மேனி சிலிர்த்தபடி அவள். ஆண் என்றால் இதுவரை தந்தையின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே! தந்தையின் அணைப்பில் பாசத்தை பார்த்தவள் தன் கணவனின் மூச்சுக்காற்றில் முட்டி மோதினாள். அவனது நெருக்கம் அவளுக்கு இதத்தை கொடுத்தாலும் மனதுக்குள் ஏதோ படபடப்பு.

மாடிக்கட்டில் பதித்திருந்த இவள் கரங்களை மெல்ல பற்றிய குமரனின் தொடுகை அவள் மேனியை சிலிர்க்க வைத்தது. நாணத்தால் கைகளை சற்றே விலக்கியவள் மறுகரை திரும்பி நிலவினை பார்த்தாள். அவன் குரல் மென்மையாக நிலவே நிலவை இரசிக்கலாமா? நிலவை ருசிக்க காத்திருக்கும் என்னையும் பாரேன் என்றது. அவனது வார்த்தைகளால் நெகிழ்ந்தவள் மெல்ல அவன் மார்பில் சாய்ந்தாள். அன்பாக அவளை அரவணைத்த படி தம் வாழ்க்கை பணயத்தை ஆரம்பிக்க என பெரியவர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவர்களின் அறையை நோக்கி.....!

அவர்கள் வரவிற்காக காத்திருந்த அந்த அறை, அதில் மிளிரும் மெல்லிய விளக்கொளி. பூக்களினால் அலங்கரிக்கப்பட்ட அந்த பஞ்சு மெத்தை. ஓர் நாள் வாழ்க்கையில் இறந்து போக காத்திருக்கும் பூக்கள் கூட இந்த காதல் மனங்களில் பொன் மேனிகளை தாங்க காத்தபடி அழகாய் மணம் பரப்பிய படி...! நிலவொளியில் பருகிய அவளது அழகு அவனை உள்ளுக்குள் வாட்டி எடுக்க மெல்லிய விளக்கொளியில் அவளது மேனி தழுவ காத்திருந்தான்.

மெல்லிய சேலைக்குள் முட்டி மோதும் அவளது அழகு ஸ்பரிசங்களை அணு அணுவாய் நிலவொளியில் ரசித்தவன் அள்ளி பருகும் ஏக்கத்துடன் அவள் அருகில்...! அவளோ பெண்மைக்கே உண்டான மென்மையும் நாணமும் பொங்க அவன் அருகில்...! அவன் தாகமும் அவள் நாணமும் சேர்ந்து விளக்கொளியை மெல்ல அணைக்க அவர்கள் வாழ்க்கையில் பலரசம் பொருந்திய புதுஓளி அரங்கேறியது. ஆம் இது இற்றைக்கு 20 வருடங்களுக்கு முந்திய காதலின் சங்கமம்.

காதல் தொடரும்...
பாகம் 2
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 9:50 pm, edited 2 times in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 2

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:11 pm

அன்றைய காலையின் உதயம்.... புதுமணத்தம்பதிகளின் புத்துணர்வான ஆரம்பம். கனவுகள், கற்பனைகளை களிப்போடு அனுபவித்து காலையை வரவேற்றனர். சிறிதான நாணமும் சில்மிச நினைவுகளும் எட்டிப் பார்க்க குளியலறை சென்றாள் கமலினி. அவளை அவளாலேயே நம்ப முடியவில்லை. அத்தனை மாற்றங்கள் அவளிலே....!

அத்தனை நாட்களாய் அள்ளிக் குளித்த அந்த குளிர்ந்த நீரை கைகளில் வைத்தபடி அழகு பார்த்தாள். தண்ணீர் கூட புதிதாக தெரிந்தது. மெல்ல மேனியில் ஊற்றி மெதுவாய் சோம்பல் முறித்தாள். சவர்க்காரம் எடுத்து உடலிலே போட்டாள். அதில் கூட அவளை நாணம் தீண்டியது. இத்தனை நாட்களாய் அவளை தீண்டிய அந்த சவர்க்காரம் கூட இன்று அவளை தீண்ட தயங்கியது. அவன் கணவனின் தீண்டல்கள் அவளை இன்னும் நிஜ உலகிற்கு மாற்ற தயங்கின. தன்னை பார்த்து தானே தனிமையில் நாணப்பட்டாள். தன்னையே சுதாகரித்தவள் சீக்கிரம் குளிர்த்து விட்டு ஈரத்தோடு நாணம் சொட்ட அறைக்கு சென்றாள்.

சீக்கிரம் சேலை கட்டி தலை துவட்டும் போதே எழுந்த கணவனை பார்த்து இருங்க 5 நிமிசத்தில தேனீரோட வருகிறேன் என்று விலகினாள். காலை பொழுதின் சூரியனின் ஒளி போல அந்த அறையே அவளின் ஒளியின் மின்னியது. மெல்ல கை பிடித்த கணவனை விலக்கியபடி சமையலறை நோக்கி சென்றாள்.

அங்கு அவளது சுற்றங்கள் அவளை அன்பாக பார்த்தார்கள். ஆயிரம் கேள்விகள் அவளிடம் அவளின் வாழ்க்கை பற்றி.....! வெளியில் சொல்ல தயங்கும் விடயங்களை கூட சிலேடையாக கேட்ட பெரியவர்களை கோவிக்கவும் முடியாமல் விடை சொல்லவும் தெரியாமல் திண்டாடினாள். என்னம்மா மாப்பிளை என்னவாம் உன்னை சந்தோசமா வச்சிருக்காரா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவளாய் சீ போங்கப்பா பத்து மாதத்தில பதில் சொல்றம் என்று கூறி தேனீர் குவளையுடன் தன் அறையை நோக்கி ஓடினாள்.

இந்தாங்க என்று தேனீரை கொடுத்தவள் என்ன ஒரு மாதிரி இருக்காய் என்று கேட்க இல்ல வெளில பெரியவங்கள் கேள்வி கேக்கிறாங்க. பதில் சொல்ல முடியல. இப்பிடியா ஒரு பெண்ணிடம் அவள் அந்தரங்கத்தை கேப்பாங்க சீ என்ன மனுசரப்பா என்று சலித்தாள். அவன்அன்பாக அணைத்து இது அவங்க கடமையம்மா அத தான் கேட்டங்க. இத போய் கோவிச்சுக்கிறதா என்று கேட்டான். போங்க எனக்கு வெளில போக வெட்கமா இருக்கு என்றாள். அதுக்கென்ன போகவே வேணாம் என் கூட அறைலயே இரு என்றான். ஐயோ இதுக்கு அவங்களே பறவாயில்ல என்று சொல்லி அவனை செல்லமாக கோபித்தாள்.

செல்ல குழந்தையாக வளர்ந்தவள் அப்படியே வாழ்க்கையும் அமைந்ததால் இன்பமாக வாழ்ந்தாள். காலங்கள் வேகமாக ஓடின. கிராமத்து வாசனையில் வாழ்ந்தவள் அழகிய தேவதை ஒருத்தியை மகளாக பெற்றெடுத்தாள். தேவதை மட்டுமல்ல அவன் குடும்ப பெயர் சொல்ல ஓர் இளவரசனும் மகனாக பிறந்தார்கள். இரண்டும் இரட்டைக் குழந்தைகள். இன்பத்திற்கு குறைவே இல்லாது வாழ்ந்தார்கள்.

குமாரின் வேலை நிமித்தம் அவர்கள் கிராமத்தை பிரிந்து பட்டணம் செல்ல வேண்டி இருந்தது. 10 வயது வரை குழந்தைகள் கிராமத்து வாசனையில் வளர்ந்து இன்று முதல் முறையாக பட்டினம் செல்கிறார்கள் தங்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க.....!

கிராமத்தின் அமைதி பசுமையை ரசித்து வாழ்ந்தவர்களுக்கு பட்டிணத்தின் சப்தம், இரைச்சல் ஏதோ செய்தது. இருந்தும் பழக வேண்டிய கட்டாயம். காலையில் எழுந்து கிணற்று நீரில் குளிக்கும் அந்த குளிர்மை பறி போனது. குழாய் நீர் குளிர்மையை மட்டுமல்ல இதத்தையும் தரவில்லை. அவளிற்கு குழாய் நீரை பார்த்தாலே பிடிக்கவில்லை. இருந்தும் பழகிக் கொண்டாள். தனி வீடு குளுகுளு மரங்கள் என பசுமைக்குள் வாழ்ந்தவளால் பட்டினத்தில் மாடித் தொடரில் ஏசியின் குளிர்மையில் வாழ்வது கடினமாக இருந்தாலும் வாழ பழக வேண்டியதால் அனுசரித்தாள். கலகல என்ற மாட்டு வண்டியின் ஓசை அவளது காதில் எதிரொலித்தது. இங்கு வாகனங்களின் நெரிசல், அவற்றின் கோர்ன் சப்தம், புகை மூட்டம் எல்லாமே இயற்கையின் எழிலை தொலைத்து நின்றது.

குப்பி விளக்கின் ஒளியில் குளிர்மையாக வாழ்ந்தவளால் குமிழ் பல்ப்பின் ஒளியை ரசிக்க முடியவில்லை. பட்டின வாழ்க்கையை படங்களில் பார்த்து பரவச பட்டவளால் பட்டின வாழ்க்கையை மகிழ்வாக ஏற்க முடியவில்லை. அவள் வாழ்க்கையும் நவீன உலகிற்கு ஏற்றதாய் மாற ஆரம்பித்தது. கட்டி அணைத்து பாசத்தை பரிமாறிய தாய் தந்தையுடன் தொலைபேசி பாசம் தொடர்ந்தது. இதுவே வாழ்க்கையும் ஆகியது.....! நாகரீக உலகிலும் தொழில் தேடும் நிலையிலும் இதுவே இன்று பலரது வாழ்க்கை ஆகி விட்டது....!

காதல் வாழ்க்கை தொடரும்.......
பாகம் 3
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 9:51 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 3

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:11 pm

கமகமக்கும் மல்லிகை பூவுடன் குளித்து விட்டு கணவனை துயில் எழுப்பியவள் இன்று ஒற்றை ரோஜாவுடன் துயில் எழுப்புகிறாள். தொழுவத்திலே பசுவில் கறந்த பாலில் கலக்கிய தேனீர் உடன் நின்றவள் பக்கற் பாலின் சுவையற்ற தேனீருடன்.....! பூஜைக்கென்றே தனி அறையை கோவில் போல் பார்த்து பழகியவள் இன்று அறையின் ஓர் மூலையில் கடவுள் படங்களை வணங்கிய படி....! மணம் கமளும் சாம்பிராணி புகையில் இல்லத்தை நிறைத்தவள் இன்று ஆட்டிவிஷல் றூம் ஸ்ப்ரே உடன்....! உரலிலே இடித்து சுவைமிக்க சம்பலை பரிமாறியவள் இன்று மிக்சியில் அரைத்த சம்பலுடன்...! இப்படியே அவள் வாழ்க்கை வந்த ஒரு நாளிலேயே பாரிய மாற்றம். பரம்பரையாக கேட்ட கோவிலின் மணி ஓசையையும் பக்தியுடன் வணங்கிய அந்த பிள்ளையார் சிலையையும் துள்ளிக் குதித்து சென்ற சோலைகளையும் இழந்த வெறுமையை மனதில் தாங்கிய படி தன் பணிகளை பார்த்து கொண்டு இருந்தாள்.

கமலி நாங்க இன்று பிள்ளையள ஸ்கூல் ல சேர்க்க அட்மிஷன் எடுக்க போகணும். சீக்கிரம் ரெடி ஆகு என்றான். சரி என அவளும் பம்பரம் போல வேலைகளை முடித்து பிள்ளைகளையும் ஒழுங்குபடுத்தி பாடசாலை செல்ல தயாராக இருந்தாள். எல்லோரும் சேர்ந்து காலை உணவை உண்ட பின் பாடசாலைக்கு சென்றார்கள்.

கறுப்புக் கம்பளம் விரித்த போன்ற அந்த தெருவிலே வானுயர்ந்த கட்டிடங்கள், விலக முடியா சன நெரிசல்கள், செல்பவரின் அவசரத்திற்கு தடை போடும் சிக்னல் விளக்குகள், ஆங்காங்கே பொலிஸ், ஆயிர கணக்கில் வாகனங்கள், புகை மூட்டம், மாடன் டிசர்ஸில் மங்கையர், ஆணா பெண்ணா என அடையாளம் காண முடியாத முடிகளின் அலங்காரம் அதற்கு ஏற்ற ஜீன்ஸ் ரீ-ஷர்ட், தெருக்களை நிறைத்த வீதியோர கடைகள், ஒவ்வொரு தரிப்பிலும் கையில் பாத்திரத்துடன் பிச்சை கேட்கும் சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவர் கையிலும் செல்போன் இப்படியே இயந்திர மயமாக காட்சியளித்தது அந்த வீதி. ஒரு வழியாக இத்தனையையும் தாண்டி பாடசாலை வளாகத்திற்குள் மெல்ல நுழைந்தது அவர்களின் கார்.

மெதுவாக அதிபரின் தலைமைபீடத்திற்கு சென்று எக்சியூஸ் மி உள்ள வரலாமா என்றான் குமார். யா கம் இன் என்ற அவர்களின் குரலை அடுத்து அவர்கள் காரியாலயத்திற்குள் நுழைந்தார்கள். இரண்டு பிள்ளைகளினதும் முக்கிய ஆவணங்களை எல்லாம் அவரிடம் சமர்ப்பித்து அவர்களிற்கு அனுமதி கேட்டார். அவர் குழந்தைகள் இருவரும் படிப்பில் வெகு சுட்டிகள். என்றுமே முதல் ராங் தான். படிப்பு மட்டுமன்றி விளையாட்டு கலை நிகழ்வுகள் எல்லாவற்றிலும் சமத்துகள். பொறுப்பதிகாரி குழந்தைகளை பார்த்து என்ன பெயர் என்றார். அவர்களும் பணிவுடன் தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் என்று தங்கள் பெயரை அறிமுகம் செய்தார்கள். இரட்டை குழந்தைகள் அழகிய தமிழ் பெயர் பெயருக்கேற்றால் போல் நீங்களும் அழகா இருக்கிறீங்க என்று கூறி அவர்களுக்கு அனுமதி வழங்க சம்மதித்தார். இருந்தும் அனுமதி கட்டணமாக இருவருக்கும் 20 ஆயிரம் ரூபா வழங்கும் படி கேட்டார். அவர்களும் சம்மதித்து பணத்தை கட்டினார்கள்.

இலவசமாக அரசு வழங்கும் கல்விக்கு இங்கு அனுமதிக்கட்டணம் நினைக்கவே வெறுப்பாக இருந்தது நாட்டின் நடைமுறை பார்த்து. இருந்தும் பிள்ளைகளின் நலன் கருதி கட்ட வேண்டிய கட்டாயம். இப்படி எல்லா பெற்றவர்களும் பிள்ளைகளின் நலனை பார்த்து இவர்களை கண்டிக்காமல் விட்டமையால் தான் இந்தளவிற்கு கல்விக்கான பணம் சென்று கொண்டிருந்தது. இதுவே வாழ்க்கையாகி விட்டமையால் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்கிய பின் தங்கள் வீடு நோக்கி விரைந்தார்கள்.

பயணம் தொடரும்.......
பாகம் 4
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 9:52 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 4

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:12 pm

தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வியை வீட்டில் செல்லமாக செல்வன், செல்வி என்று அழைப்பார்கள். பெயருக்கேற்றால் போல் அவர்கள் ராசி செல்வத்தை குவித்து கொண்டிருந்தது அவர்களுக்கு. இப்படியாக அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. குமாரின் வீட்டிற்கு அருகில் பிரியாவும் அவளது கணவர் ராஜனும் வந்து குடியேறினார்கள். பிரியா கமலினியுடன் நல்ல நட்பாக பழகினாள். அவர்களும் பட்டிணத்திற்கு வேலையின் நிமித்தம் வந்தமையால் இவர்களின் குடும்ப வாழ்க்கையுடன் ஒத்து போனார்கள். குறுகிய காலத்திற்குள்ளேயே அவர்கள் நல்ல குடும்ப நண்பர்கள் ஆனார்கள். அவர்களுக்கு அழகிய ஓர் பெண் பிள்ளை ரம்யா இருந்தாள். ஒரே பிள்ளை என்பதால் அவள் வீட்டின் செல்ல பெண். அந்த வீட்டு ராஜகுமாரியாக வளர்ந்தாள். ரம்யா, செல்வன், செல்வி மூவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். மூவரும் ஒரே பாடசாலையிலேயே படித்தார்கள்.

குமாரின் வேலையும் நன்றாக சென்றமையால் அவர்கள் தமக்காக ஒரு சொந்த வீட்டை பட்டினத்தில் வாங்க திட்டமிட்டார்கள். அதன்படி அவர்கள் குடும்பமும் ராஜன் குடும்பமும் சேர்ந்து ஒரு காணி வாங்கி இரண்டாக பிரித்து எடுத்தார்கள். அதில் அழகான அடக்கமான மாடி வீடு ஒன்று கட்டினார்கள். அவர்கள் இரண்டு குடும்பமும் நல்ல நண்பர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரும் ஒரே மாதிரி வடிவத்தில் வீடு கட்டினார்கள். அவர்கள் நட்பை பார்த்து அந்த அயலவர்களே பொறாமைப்படும் படி இருந்தது. இரண்டு வீடுமே வித்தியாசம் இல்லாது அமைந்து இருந்தது. அதற்குள் வீட்டு அலங்கரிப்பு தளபாடங்கள் எல்லாமே ஒரே போன்று செய்தார்கள். அவர்களின் நட்பை பார்க்க அவர்களுக்கே பொறாமையாக இருந்தது. குறைவில்லாத செல்வமும் அளவான ஆடம்பர வாழ்க்கையுமாக அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் இரு குடும்பமும் கடற்கரை மற்றும் வெளியிடங்களிற்கு சென்று மகிழ்ச்சியாக கழிப்பார்கள்.

நாட்களும் வருடங்களாக கடந்து சென்றது. பள்ளிப் படிப்பில் தேர்ச்சியுடன் தேறிய செல்வன், செல்வி மற்றும் ரம்யா கல்லூரி செல்ல தயாரானார்கள். செல்வன் மற்றும் செல்வி என்றுமே இருவரும் இணை பிரியாத உடன்பிறப்புக்களாகவே இருந்தார்கள். அவர்களுக்கிடையிலே மிக நெருக்காமான புரிந்துணர்வான நட்பு இருந்தது. சகோதரர் என்றதற்கப்பால் தமிழ்ச்செல்வியின் உயிர் தோழனாக தமிழ்ச்செல்வனும் அவனின் உயிர்த் தோழியாக தமிழ்ச்செல்வியும் இருந்தார்கள். பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் நட்பான சகோதர பாசம் இருந்தது. அவர்களின் பாசத்திற்கு குறைவில்லாத படி ரம்யாவும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தாள்.

அவர்களின் நட்பு கல்லூரியில் கூட பார்ப்பவர்கள் பொறாமைப்படும் படி இருந்தது. மூவரும் ஒரே காரில் செல்வார்கள். ஒன்றாகவே சாப்பிடுவார்கள். யாரிடடும் யாரையும் விட்டுக் கொடுத்து கதைக்க மாட்டார்கள். ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருந்தார்கள். ஒருத்தருக்கு கவலை என்றால் இரண்டு கண்களில் மட்டுமல்ல ஆறு கண்களிலுமே கண்ணீர் வரும் அப்படி இருந்தது அவர்கள் நட்பு. இவர்கள் மூவரிடமும் எந்த இரசியமும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவார்கள். பகிடி விடுவார்கள். தேவையான போது தேவையான அறிவுரை பரிமாறுவார்கள். மூவரும் இரவில் ஒன்றாக இருந்து குறூப் ஸடடி செய்வார்கள். ரம்யா சில சமயங்களில் படித்துவிட்டு செல்வன் செல்வியுடனே தூங்கி விடுவாள். அவர்களும் ரம்யா வீட்டில் படித்து விட்டு சில சமயம் அங்கே தூங்கி விடுவார்கள். அந்தளவிற்கு இருவர் குடும்பமும் ஒரு குடும்பமாய் வாழ்ந்து வந்தார்கள்.

செல்வியும் ரம்யாவும் பருவ மங்கைகள் பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகு தேவதைகள். செல்வன் கூட அழகிய ராஜகுமாரன். அழகு என்ற சொல் இவர்கள் மூன்று பெயருக்காகவே படைக்கப்பட்டது போன்று இருந்தது. இவர்கள் படிப்பில் சுட்டிகள். மூவருமே மாறி மாறி முதல் மூன்று இடங்களையும் பிடிப்பார்கள். அவர்கள் கல்லூரி வாழ்க்கை அப்போது தான் ஆரம்பமாகி இருந்தது. இவர்கள் தாமும் தம் பாடுமாய் இருப்பார்கள். எல்லாருடனும் நட்பாக பழகுவார்கள். இவர்களின் கெட்டித்தனம், நட்பு, சகோதரத்துவம் பார்த்து கல்லூரி விரிவுரையாளர்கள் முதல் தலைமை அதிபர் வரை இவர்களுடன் நல்ல பாசமாக பழகுவார்கள். இவர்களை உதாரணபடுத்தி அறிவுரை சொல்வார்கள். இவர்கள் நட்பை பாராட்டுவார்கள். அதை பார்த்து இவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.

இவர்களுக்கு புதிய நட்பாக சிவா வந்து இணைந்தான். பார்ப்பதற்கு செல்வன் போன்றே அழகாக இருப்பான். அவன் குணமும் இவர்களுடன் ஒத்து போனதால் நான்கு பேரும் நட்பானார்கள். சிவா அடிக்கடி அவர்கள் மூவர் விட்டிற்கும் செல்வான். அவர்கள் பெற்றோரும் சிவாவுடன் அன்பாக பழகினார்கள். சிவாவை கமலிக்கு ரொம்ப பிடிக்கும். அவனும் அவளுடன் அம்மா என்று நல்ல பாசமாக பழகுவான். சிவா ஓர் பணக்கார பண்ணைக்காரனின் பிள்ளை. பாரிய சொத்திற்கு அதிபதி. பல வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதிகளான பண்ணைக்காரனுக்கும் அவளின் அன்பு மனைவிக்கும் பிறந்த செல்ல மகன். நீண்ட காலத்திற்கு பின் பிறந்த பிள்ளை என்பதால் அவன் குடும்பத்தில் பாசமாக வளர்ந்தான். பாசமான உறவுகள் ஒன்றாக இணைந்தமையால் அவர்கள் நட்பு மிக அழகோவியமாக அமைந்தது.

நட்பு தொடரும்.......
பாகம் 5
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 9:54 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 5

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:12 pm

அன்று செல்வன் சற்று உடல்நிலை சரியில்லாததால் கல்லூரியிலிருந்து வரும் போது செல்வி காரை ஓட்டியபடி வந்தாள். ரம்யா அவனை மடியில் தாங்கிய படி ஆறுதலாய் தலைகோதிய படி இருந்தாள். ஏய் செல்வி நீ பாதைய பாத்து வண்டிய ஓட்டு நான் செல்வன பாக்கிறன் என்று சொன்னாலும் அவள் மனது செல்வனை அடிக்கடி பார்த்தது. அவளின் நட்பான வார்த்தையையும் மீறி இவள் இரத்த பாசம் துடித்தது. செல்வனை பார்த்த படி ஓடியதால் அவள் கார் நிதானமிழந்து முன்னுக்கு வந்த மோட்டார் வண்டியுடன் மோதியது. தடுமாறி வண்டியை நிறுத்தியவள் மெல்ல கீழே இறங்கினாள். நல்ல காலம் இருந்தமையால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அவள் காரை மோதியது தனேஷ் மேல் தான். அவனும் அவர்களின் கல்லூரியில் அவர்களுடன் கல்விகற்பவன் தான். அதனால் பிரச்சினை ஒன்றும் வரவில்லை. நீங்க போங்க செல்வி எனக்கு ஒன்றும் இல்லை என கூறி அவர்களை வழியனுப்பி வைத்தான். இருந்தும் அவனிற்கு காலில் பலத்த அடி தான். அதை அவர்களுக்கு அந்த நேரம் காட்டிக் கொள்ளவில்லை.

வீட்டிற்கு சென்றவர்கள் உடனடியாக வைத்தியரிடம் சென்று செல்வனிற்கு மருந்து வாங்கினார்கள். சாதாரண ஜூரம் என்பதால் உடனே சுகமாகி விட்டது. மறுநாள் மூவரும் கல்லூரி சென்று தனேஷை தேடினார்கள். அவன் கல்லூரிக்கு வரவில்லை. அவன் நண்பர்களிடம் கேட்டதில் தான் தெரிந்தது நேற்றய தினம் அவனுக்கு பலத்த அடி அவர்களுக்கு காட்டிக் கொள்ளவில்லை என. கல்லூரியில் விடுமுறை சொல்லிவிட்டு அவனை பார்க்க வீட்டிற்கு சென்றார்கள். தனேஷ் அவன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். அவர்கள் வீட்டிற்கு சென்றதும் இவர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவன் காலில் காயம் ஏற்பட்டிருந்தது. கால் முட்ட ஜீன்ஸ் போட்டிருந்ததால் அப்போ செல்விக்கு தெரியவில்லை. அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவனிற்கு ஆறுதல் விட்டு வந்தார்கள். அவனிற்கு 3,4 நாட்களில் கால் சுகமாகி விட்டாலும் அவனால் மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியவில்லை. அதனால் அவர்களே அவனை போகும் வழியில் கல்லூரிக்கு கூட்டி செல்வார்கள். இவர்களின் நட்புக் கூட்டுக்குள் இணைய காத்திருந்தவன் தனேஷ். எதிர்பாராத விதமாக அதற்கு சந்தர்ப்பம் அமைந்தது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

செல்வன், செல்வி, ரம்யா, சிவா, தனேஷ் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். இவர்கள் நட்பிற்கு யார் வீட்டிலும் எந்த தடையும் இருக்கவில்லை. தம் பிள்ளைகளின் நட்பையும் அவர்களின் சந்தோசத்தையும் பார்த்து குமார் குடும்பமும் பிரியா குடும்பமும் மகிழ்ந்தார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்வன் செல்வி வீட்டிற்கு என்று பொதுவாக கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தில் எல்லாரும் நீச்சலடித்து மகிழ்வார்கள். அவர்கள் நட்புக்குள் ஆண் பெண் வேற்றுமை இருக்கவில்லை. எல்லாரும் சகஜமாகவே பழகுவார்கள். அன்பு மட்டுமே நிறைந்திருந்தது.

நாணற்புற்களாய் வளைந்து கொடுத்து இருந்தார்கள். ஐவரும் நட்பாக இருந்தாலும் செல்வன், செல்வி, ரம்யா குடும்ப நட்புக்குள் ஓர் தனிசக்தி இருந்தது. அவர்களின் புரிந்துணர்வு மற்றும் பாசம் தனியாக இருந்தது. அது அவர்களின் பல வருட நட்பின் வெற்றியாக இருந்தது. சிவா, தனேஷ் கல்லூரி நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் மூவரும் பத்து வயது முதலே நண்பர்கள் என்பதால் நெருக்கம் அதிகமாக இருந்தது.

கல்லூரியிலும் இவர்கள் நட்பை பார்த்து பொறாமைப்படுபவர்கள் இருந்தார்கள். இவர்களின் ஆண் பெண் நட்பை பார்த்து காதலா என்று கிண்டலடிப்பவர்களும் இருந்தார்கள். இது ஆண் பெண் நட்பிற்குள் எப்போதும் நடைபெறும் ஒன்று. அவர்கள் மனது புனிதமான நட்பு ஓடையாக இருந்தாலும் மற்றவர்கள் அந்த ஓடையில் கல் வீசி பார்க்க ஆசைபடுவார்கள். அது இவர்கள் நட்பையும் விட்டு வைக்கவில்லை. இருந்தும் அதை எதையுமே மனசில் வாங்காது தம் நட்பு வானிலே சிறகடித்து பறந்தார்கள். தம் மனதில் கங்கமில்லாத போது தாம் ஏன்பயம் கொள்ள வேண்டுமென்ற உறுதி அவர்கள் மனதில் ஆணித்தரமாய் இருந்தது.

நட்பு வானில் பறவைகள் வட்டமிடும்……..

பாகம் 6
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 9:55 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 6

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:13 pm

கல்லூரியின் கலை விழா நாள் வந்தது. அதற்காக நிகழ்ச்சி செய்வதற்காக ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். கண்டிப்பாக எல்லாரும் பங்குபற்ற வேண்டி இருந்தது.

நாடகம் ஒன்றில் நடிப்பதற்கு இவர்கள் சம்மதித்தார்கள். தனேஷ் கால் சரியாகி இருந்தாலும் உடம்பை வருத்தி செய்யும் நிகழ்வுகளை வைத்தியர் ஆலோசனை படி தவிர்த்தான். அதனால் அவன் அந்த நாடகத்தில் பங்குபற்றவில்லை.

அது ஒரு மரபு கதை நாடகம். அதில் நாயகியாக ஓர் நாட்டு இளவரசியாக செல்வி நடிக்கிறாள். அந்த நாட்டு இளவரசனாக செல்வன் நடிக்கிறான். தந்தைக்கு பின் அரியணை ஏறி நன்றாக நாட்டை வழி நடத்தி கொண்டிருந்தான்.

அந்த நாட்டை அழிக்க வரும் எதிரி நாட்டு இளவரசனாக சிவா நடிக்கிறான். இந்த நாட்டின் செல்வ செழிப்பை வசப்படுத்த நாட்டை கைப்பற்றுவதே அவன் நோக்கம். தன் தந்தையின் கட்டளைப்படி படைகளை தாங்கிய படி போரிற்கு வருகிறான்.

இதில் நடக்க போகும் நல்லது கெட்டது கூற என்றே வானில் இருந்து அனுப்பப்பட்ட தேவதை தீர்க்க தரிசியாக ரம்யா…..! இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம்.

அவர்கள் நாடகத்தை ஒப்புதல் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களின் கலை விழாவிற்கு இன்னும் சில நாட்களே இருந்தமையால் சீக்கிரம் நாடகம் பழக வேண்டி இருந்தது.

நாடகபடி தீர்க்கதரிசியாகிய ரம்யா இளவரசாகிய செல்வனிடம் உன் நாட்டை நோக்கி அயல் நாட்டு மன்னன் போர் தொடுக்க உள்ளான். அதனால் நீ யாக்கிரதையாக இரு என்று கூறினாள்.

அதே வேளை எதிரி நாட்டு மன்னனான சிவாவின் தந்தையிடம் நீ அயல் நாட்டின் மீது தொடுக்கப்போகும் போரில் தோல்வி காண்பாய். இருந்தும் நீ நினைப்பது போல் அந்த நாட்டின் செல்வங்கள் உனக்கு கிடைக்கும் என்றாள்.

இதனால் சிவாவின் தந்தையான சோம மன்னன் குழப்பமடைந்தான். இருந்தும் துணிவாக போர் தொடுத்தான். போர் பல நாட்களாய் நடை பெற்றது. தன் வீரர்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தான் சோம மன்னன்.

தீர்க்கதரிசி சொல்லியது உண்மையோ என அஞ்சினான். இருந்தும் அவள் கூறிய செல்வங்கள் கிடைக்கும் என்ற வாக்கை நம்பி போரை கைவிடாது தொடரும் படி இளவரசனிடம் கூறினார்.

இளவரசனான சிவாவும் தந்தையின் சொற்படி போரை தொடர்ந்து கொண்டிருந்தான். களைப்படைந்த அவன் ஆற்றோரம் சென்று நீர் அருந்த போனான். அங்கு பெண்களின் சிரிப்பொலி கேட்டு மறைந்திருந்து பார்த்தான்.

அங்கே எதிரி நாட்டு இளவரசியான செல்வி தன் தோழிகளுடன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தாள். அவளின் அழகை பார்த்து மயங்கியவன் தண்ணீர் குடிக்க மறந்து அவளையே ரசித்த படி நின்றான்.

மரங்களின் சலசலப்பை கேட்ட செல்வி நிமிர்ந்து பார்த்தாள். எதிரே புதிய நபர் ஒருவர் தம்மை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து பெண்மைக்கே உரிய நாணத்துடன் தன் ஆடைகளை எடுத்து கொண்டு ஆற்றை விட்டு நகர்ந்தாள்.

தினமும் அவள் தோழிகளுடன் ஆற்றுக்கு சென்று சில சமயங்களில் நீராடுவாள் இல்லாவிட்டால் அருகில் உள்ள பூஞ்சோலையில் உள்ள பூக்களை ரசித்து மரங்களிலுள்ள ஊஞ்சலில் ஆடுவாள்.

அன்றும் அப்படியே…….! வீட்டில் அவளின் சகோதரனான இளவரசன் போர் பற்றிய சிந்தனையில் இருந்தமையால் இவளிற்கு பொழுது போக்கு இருக்கவில்லை. அதனால் சீக்கிரமாகவே ஆற்றங்கரைக்கு வந்து பூஞ்சோலையில் ஊஞ்சல் ஆடியபடி இருந்தாள்.

அங்குள்ள மரங்களின் கிளைகளில் நின்று ஆற்றை பார்ப்பதில் தனி அழகு. அதனை பல தடவை இரசித்திருந்தாலும் மறுமுறை பார்த்திட எண்ணி மரக்கிளையில் ஏறினாள். அங்கிருற்கு ஆற்றின் அழகை இரசித்தபடி தன்னையே மறந்து இருந்தாள்.

காலடி ஓசை கேட்டு திடுக்குற்று திரும்பியவள் நிலை தடுமாறி மரக்கிளையிலிருந்து தவறி வீழ்ந்தாள். அவள் விழும் தறுவாயில் இளவரசனான சிவா அவளை தன் கைகளில் தாங்கி கீழே இறக்கினான். அவள் திடுக்குற்றாள். தன்னை ஒருவன் கை தொட்டு தூக்கி விட்டானே என்று. இருந்தும் நன்றி கூறி விலகினாள்.

அவள் விலக நினைக்க அவன் விடவில்லை. தாங்கள் யாரென தெரிந்து கொள்ளலாமா என்று அன்பாக வினவினான். அவள் பதில் கூற தயங்கினாலும் அவனின் அன்பான வார்த்தைகளை முறித்து செல்ல முடியவில்லை. நான் இந்த நாட்டு இளவரசி தோழிகளுடன் விளையாட வந்தேன். அவர்கள் இன்னும் வரவில்லை என்றாள்.

தாங்கள் புதியவராக இருக்கிறீர்களே என்று அவனை பார்க்க நான் இந்த நாட்டிற்கு வாணிபம் தேடி வந்துள்ளேன் என்று கூறினான். தான் எதிரி நாட்டு இளவரசன் என்பதை அவளிடம் கூறாது மறைத்தான். அவளுக்கும் தோழிகள் வராதமையால் அவனது பேச்சு துணை தெம்பாக இருந்தது.

தூரத்தில் தோழிகளின் சிரிப்பொலி கேட்க சரி உங்கள் தோழிகளள் வருகிறார்கள் போலும் நான் வருகிறேன் என்று கூறி விலகினான். அவளும் சரி என்று கூறி வழியனுப்பினாள். இருந்தும் அவன் பிரிவு அவளை மெதுவாக வாட்டியது.

அவளை அறியாமலே அவன் சென்ற வழியை பார்த்தபடி நின்றாள். தோழிகள் என்னடி ஒரு மாதிரி இருக்காய் என்னாச்சு என்றார்கள். அவள் எதுவும் இல்லை என்று கூறி விலகினாள். அவர்களுடன் மகிழ்ந்திருந்து விட்டு அரண்மனை விரைந்தாள்.

இரவு பொழுது பஞ்சணை மெத்தையில் தூங்க சென்றவளுக்கு தூக்கம் வரவில்லை. அவன் தன்னை கைகளில் ஏந்திய நினைவும் அவனின் அன்பான மொழிகளும் மாறி மாறி வந்து போய்க்கொண்டிருந்தது.

அவளின் அந்தரங்க தோழி அவளிடம் வந்தாள். என்ன நீ இன்னும் தூங்கலயா என்றாள். அவளின் கேள்வியால் சுய உலகிற்கு வந்தவள் தூக்கம் வரல இப்படி இரு கதைப்பம் என்றாள்.

தூக்கம் வரலயா? என்ன புதுசா இருக்கு? யாரையாச்சும் நினைச்சிட்டு இருக்கிறியா தூக்கம் வராமல் என்று சீண்டினாள். ஏய் உனக்கு எப்பவும் ஜொள்ளு தான் எனக் கூறி நான் தூங்க போறன் நீ போ என்று அவளை திசை திருப்பி வழியனுப்பினாள். மீண்டும் அவன் நினைவோடு கட்டிலே புரண்டாள்!

பூஞ்சோலை மீண்டும் மணம் வீசும்………!
பாகம் 7
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:09 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 7

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:13 pm

மறுநாள் பூஞ்சோலைக்கு சற்று நேரத்துடன் சென்றாள். அங்கு அவள் பார்வை அவனை தேடியது. அவனும் இவளை பார்ப்பதற்காகவே வந்து மறைவில் நின்று அவதானித்தான். தன்னை தான் தேடுகிறாள் என்பதை அறிந்தவன் மேலும் அவளை காக்க வைக்காது அவளை நோக்கி சென்றான்.

அவனுக்காக காத்திருந்தவளின் முகத்தில் அவனைக் கண்டதும் ஆயிரம் வோல் பல்ப் மின்னுவதை போன்ற பிரகாசம். இருந்தும் அவனை பார்த்ததும் தன் பார்வையை வேறு திசை திருப்பினாள்.

இப்படியாக இருவரின் சந்திப்பும் தொடர்ந்தது. அவர்களுக்குள் காதல் மெல்ல துளிர்க்க ஆரம்பித்தது.

ஒரு நாள் அவளுடன் அவன் கதைத்து கொண்டிருந்த போது ஓடி வந்த காவலன் இளவரசே போரிற்கு படைகளை தயார்ப்படுத்த வேண்டும் சீக்கிரம் வாருங்கள் என்றான். அவனை அனுப்பி விட்டு தடுமாற்றத்துடன் அவளை பார்த்தான்.

அவள் அவனிடமிருந்து விலகி சென்றாள். அப்போ நீங்கள் வாணிபம் செய்ய வந்தது என சொல்லியது பொய்யா எனக் கேட்டாள். என் அண்ணனை எதிர்த்து போரிட வந்த எதிரி நாட்டு இளவரசனா என கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

அவனால் மறுப்புக் கூற முடியாமல் ஆமா என்ற ஒற்றை பதிலை கூறிவிட்டு அவ்விடம் விட்டகன்றான். அதனை கேட்ட அவள் தடுமாற்றம் அடைந்தாள். தன் மனதின் ஆசைகள் யாவும் ஓர் நொடியில் உடைந்ததை எண்ணி வருந்தினாள்.

நேரே அரண்மனைக்கு சென்றாள். அங்கு அவள் அந்தரங்க தோழியிடம் நடந்ததை எல்லாம் கூறினாள். தான் அவனை மனதார நேசிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள். இதை கேட்ட தோழி அதிர்ச்சியில் உறைந்தாள்.

மறுநாள் அவளுடன் பூஞ்சோலைக்கு சென்றாள். அவனை பார்த்து நடந்ததை எல்லாம் கேட்டாள். அவனும் தான் இவளின் அன்பை பெறவே தான் இளவரசன் என்பதை மறைத்ததாக கூறினான்.

அவர்கள் இதுபற்றி செல்வியின் அண்ணான இளவரசுடன் கதைக்க முடிவெடுத்தார்கள். அதன்படி அவன் போரை நிறுத்திவிட்டு தன் நாட்டிற்கு சென்று தந்தையான மன்னனிடம் நடந்தவற்றை கூறினான்.

சிந்தித்த மன்னன் தீர்க்க தரிசி கூறிய வார்த்தைகளை நினைத்தான். அதனால் முறைப்படி வந்து அந்த இளவரசிடம் அவன் தங்கையான இளவரசியை பெண் கேட்பதாக சம்மதித்தான்.

அதன்படி மறுநாளே சோம மன்னன் தன் மகனான இளவரசுடன் செல்வனின் நாட்டை நோக்கி விரைந்தான். தான் நடத்திய போரிற்கெல்லாம் மன்னிப்பு கேட்டு அவன் தங்கையை தன் மகனிற்கு மணம் முடித்து தரும்படி கேட்டான்.

தன் தங்கைக்கும் அவன் மீது காதல் இருந்தமையால் அவளின் விருப்பத்தை அவனால் மறுக்க முடியவில்லை. திருமணத்திற்கு சம்மதித்தான்.

அடுத்த முகூர்த்ததிலேயே தன் சொத்துக்களை எல்லாம் வாரி வழங்கி இளவரசிக்கு திருமணம் செய்து வைத்தான்.

தீர்க்க தரிசி கூறிய படியே எல்லாம் நடந்து முடிந்தது. இதனால் இரு நாட்டு மன்னர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இப்படியாக அவர்களின் நாடகம் முடிவுற்றது.

இளவரசியாக வந்த செல்வியின் அழகாலும் நடிப்பு திறனாலும் எல்லார் மனதிலும் இடம் பிடித்தாள். அவளை எல்லோரும் பாராட்டினார்கள். அழகு தேவதையான அவளிற்கு இளவரசி வேடம் மிகவும் பொருத்தமாக இருந்தது.

கலைவிழா முடிவடைந்த மறுநாளே சிவா அவனின் பெற்றோருடன் அவசரமாக ஊருக்கு கிளம்பி சென்று விட்டான்.

அவன் ஊருக்கு சென்ற மறுநாள் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியே இந்த விடயத்தை கூறினான்.மேலும் அவன் வர ஒரு வாரம் ஆகும் என்பதால் கல்லூரியில் விடுமுறை சொல்லும் படியும் கூறினான்.

செல்வன், செல்வி, ரம்யா மூவரும் மகிழ்வாய் கதைத்திருந்த சமயம் தனேஷ் வந்தான். ஹாய் தனேஷ் உன்ன தான் தேடிட்டு இருந்தம் வந்திட்டாய் என்று கூறி வரவேற்றனர்.

ஏய் செல்வி உனக்கு ஒரு சப்ரைஸ் என்று கூறி அவள் முன் ஒரு பரிசு பொதியை வைத்தான். என்னடா அப்பிடி என்ன சப்ரைஸ் என்று கேட்க பிரிச்சு பாரேன் என்றான்.

அவளும் அதை மெதுவாக பிரித்தாள். அதற்குள் ஓர் அழகிய பெண் தேவதையின் சிலை.

ஏய் ரொம்ப அழகா இருக்கடா என்று கூறி அவனுக்கு நன்றி சொன்னாள். இது நாடகத்தில ரொம்ப அழகா நடிச்சு எல்லார் மனசிலயும் இடம் பிடிச்ச எங்கட இளவரசிக்கு என் அன்பு பரிசு என்றான்.

அப்பிடியா! ம்ம்ம்ம் பாத்திங்களாடா நீங்களும் இருக்கிறீங்களே எனக்கு ஏதாச்சும் பாராட்டி வாங்கி தந்திங்களா தனேஷ பாருங்க என்று செல்லமாக கோவித்தாள் செல்வனையும் ரம்யாவையும்.

சரி சிவா எங்க காணம் என்ற தனேஷின் கேள்விக்கு அவன் ஊருக்கு போய்டான் வர ஒரு வாரமாகும் என்று வருத்தமா கூறினாள் செல்வி. என்ன இளவரசி இளவரசன் போன வருத்தமோ இப்படி சலிச்சுகிறாய் என்று செல்லமாய் சீண்டினாள் ரம்யா.

இருக்காதா என்ன இளவரசன் அங்க ஊரில போய் என்ன பண்ணுறானோ இந்த இளவரசிய நினைக்கிறானோ யார் கண்டா என்று அவர்களுக்கு பதில் தானும் நக்கலாக பேசினாள்.

சரிங்க இளவரசி எனக்கு ரொம்ப பசிக்குது உன் இளவரசனை பார்த்தது போதும் நானும் இளவரசன் தான் ஆனால் உன் அண்ணன் கூப்பிடுறன் வாடி போய் சாப்பிட என்று அவளை வம்புக்கு இழுத்தான்.

ஏய் என்னப்பா யாருமே இன்னும் நாடக மூட்ல இருந்து வெளில வரல போல காணும் காணும் உங்க வம்பெல்லாம் வாங்க போய் சாப்பிடலாம் என்று அவர்களின் பேச்சை திசை திருப்பினான் சிவா.

நால்வரும் போய் தங்களின் உணவு வேளையை முடித்து கொண்டு மீண்டும் வகுப்பறை சென்றார்கள். வகுப்பிற்கு வந்த விரிவுரையாளர்கள் கூட செல்வியின் நடிப்பு திறமையை பார்த்து வாழ்த்து சொன்னார்கள்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் தேர்வு நெருங்குவதால் கவனத்துடன் தங்கள் படிப்பை கவனித்தார்கள். ஒருவரை ஒருவர் சந்தேகங்களை தீர்த்து உதவி புரிந்தார்கள்.

நேரம் இரவு 11 ஐ தாண்டியது. தூக்கம் கண்களைதழுவ மூவரும் தூங்க சென்றார்கள். செல்வி நான் வீட்டுக்கு போறன் காலைல நீங்க படிக்க எழும்பும் போது என்னையும் போன் பண்ணி எழுப்பி விடு நான் சீக்கிரம் எழும்பணும் என்று கூறி ரம்யா விடை பெற்றாள்.

சரிடி ரம்யா அத சொல்ல உனக்கு வேறஆள் கிடைக்கலயா இந்த சோம்பேறிட்ட சொல்றாய் அவளையே நான் தான் எழுப்பணும் என்றான் செல்வன். சரி யாராச்சும் ஒருத்தர் எழுப்புங்கடா என்று கூறி சென்றாள்.

நட்பின் வாசம் வீசும்……………!
பாகம் 8
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:10 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 8

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:22 pm

மறுநாள் சீக்கிரமாகவே எழுந்த செல்வன் செல்வியையும் எழுப்பினான். அப்பிடியே ரம்யாக்கும் போன் போட்டு எழுப்பி விட்டு படிப்பில் கவனம் செலுத்தினார்கள்.

கல்லூரி சென்று தம் படிப்பினை கவனித்தார்கள். தேர்வுக்கு தேவையான குறிப்புக்களை நூலகத்திலிருந்து எடுத்தார்கள்.

என்னடா செல்வி ஒரு மாதிரி இருக்காய் உடம்புக்கு முடியலயா என்றான் செல்வன். இல்லடா சும்மா தான். இரவு ரொம்ப நேரம் படித்ததோ என்னமோ அசதியா இருக்கென்றாள்.

குறிப்பெடுத்துவிட்டு கல்லூரி முடித்து வீட்டிற்கு சென்றார்கள். ரம்யா பின்னேரம் நேரத்தோட வந்திடு நாங்க கொஞ்ச நேரம் நீச்சல் தடாகத்தில் நீச்சலடிப்பம் என்றான் செல்வன்.

சரிப்பா சீக்கிரம் வாறன். செல்வி நீயும் ரெடியாகு. ரொம்ப நாளாச்சு இன்னிக்கு ஓர் கை பாக்கலாம் என்று கூறி சென்றாள்.

மாலை மூவரும் நீச்சல் தடாகத்தில் மகிழ்வாக நீச்சலடித்த வண்ணம் இருந்தார்கள். ஒருவர் மேல் ஒருவர் நீரை தெளித்து விளையாடினார்கள். ஒருவரை ஒருவர் தூக்கி தண்ணீரில் எறிந்து சண்டைகள் செய்தார்கள்.

செல்வன், ரம்யா முகத்தில் இருந்த கலகலப்பு செல்வி முகத்தில் இருக்கவில்லை. ரொம்பவே சோர்வாக இருந்தாள். இதை இருவரும் கவனிக்க தவறவில்லை.

என்ன செல்வா செல்வி ரொம்ப மூட் அப்செட் போல இருக்கு என்ன என்று கேட்டியா என்றாள். இல்லடா ரமி இரவும் கேட்டன் ஒண்ணும் சொல்லல. ஏதோ பீல் பண்ணுறாள் என்ன என்று தெரியல வா கேப்பம் என்று கூறி செல்வியை நெருங்கினான்.

ஹாய் செல்வி குட்டி ஏன்டா டல் ஆக இருக்காய் என்னாச்சும்மா என்று செல்வன் கேட்டான். ஒண்ணுமில்லடா என்று விலகியவளை அணைத்து தூக்கி நீச்சல் தடாகத்தின் படிக்கட்டில் இருத்தினான்.

இல்லடா எங்கட அம்மாக்கு கூட உன்னை இருபது வருசமா தான் தெரியும். ஆனால் எனக்கு உன்னை அதை விட பத்து மாதம் அதிகமா தெரியும். என்கிட்ட எதுவும் மறைக்காத சொல்லு என்றான்.

இல்லடா மனசு ஒரு மாதிரி இருக்கு அவளவு தான் வேற ஒண்ணுமில்ல என்று தன் பார்வையை வேறு திசை திருப்பி மகிழ்வாய் இருப்பது போல் பாவனை செய்தாள்.

இருந்தும் செல்வன் விடவில்லை. இல்லம்மா உன் அசைவு ஒவ்வொன்றிட அர்த்தத்த நான் அம்மா வயிற்றில இருந்தே பார்த்திட்டு இருக்கன்! உன் கூட அம்மாட கருவிலயே கை கோர்த்து கதை பேசி இருக்கன்! அன்பா அணைச்சிருக்கன்! ஆசையா முத்தமிட்டிருக்கன்!

எனக்காக என் கூட கை கோர்த்து விளையாட ஒருத்தி இருக்காளே என்று கற்பனை பண்ணி இருக்கன்! உனக்கு பசிச்சா கூட உன் முகத்தை பார்த்து தெரிஞ்சிருக்கன்.

வெளியுலகமே தெரியாத அந்த தாய்மையின் கரு உலகத்திலயே உன் கூட சிரிச்சு சண்டை போட்டிருக்கன். உன்னில இருக்கிற பாசத்தில இந்த உலகம் எப்பிடி உனக்கு பிடிக்குமா நீ சந்தோசமா இருப்பியா என்று பார்க்க உனக்கு ஒரு நிமிசம் முதலே நான் பிறந்திருக்கன்!

இப்பிடி உன் சந்தோசத்த எல்லாம் ஒண்ணா இருந்து பார்த்த எனக்கு உன்ன தெரியாதா சொல்லுடா என்னாச்சு என்று அவளை தன் நெஞ்சோடு அன்பாக அரவணைத்தான்?

அவர்களின் பாசத்தை பார்த்து ரம்யா ஒரு நொடி கண்கலங்கி விட்டாள். தனக்கு ஓர் உடன் பிறப்பு இல்லையே என்று வருந்தினாள்.

செல்வியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவனின் நெஞ்சோடு சாய்ந்து அவன் கைகளை பற்றினாள். அவளின் கைப்பிடி அவள் மனதை தெளிவாக சொல்லியது. ஏதோ சொல்ல தயக்கமாய் இருப்பதை.

அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தியவன் சிவாவ பத்தி யோசிக்கிறியா என்றான். அதிர்ச்சியாய் அவனை பார்த்தவளின் இரண்டு கண்களும் கலங்கியிருந்தது. இதை பார்த்த செல்வன் துடித்து விட்டான்.

என்னம்மா என்னாச்சு நான் ஏதும் தப்பா சொல்லிட்டனா சொல்லுடா என்று அவளை கெஞ்சினான். அவளின் சில நொடி மௌனம் அவனை கலவரப்படுத்தியது. என்னாச்சுடா என்றான்.

இல்லடா அந்த நாடகத்தில நடிச்சதில இருந்து என் மனசு ஒரு மாதிரி இருக்கு ஒரே அவன பத்தியே நினைக்குது. அவன் என் நண்பன் தான் இருந்தாலும் ஏதோ குழப்பமா இருக்கடா என்றாள்.

என்ன அவன பிடிச்சிருக்கா? நாடகத்தில இளவரசனா வந்து உன்ன லவ் பண்ணி உன்னோட பழகினது குழப்பமா இருக்கா? சொல்லு என்னாச்சு எது எண்டாலும் ஓகே நாம் பாக்கிறன் என்றான்.

ம்…………. அவன் நாடகத்தில தான் நடிச்சான் அது தான் என்னவோ எனக்கு ஏதோ அவன பிடிச்சிருக்கு. இவ்வளவு நாளும் எங்க நட்ப மற்றவங்க கேலி பண்ணினப்பா விளையாட்டா இருந்திச்சு ஆனால் இப்ப ஏதோ போல இருக்குடா என்றாள்.

அவளின் மாற்றம் மனசு பார்த்து சற்றே குழம்பினாலும் சிவா நல்லவன் அவன இவள் விரும்பினாலும் தப்பில்ல நம்ம குடும்பத்துக்கு ஏத்தவன் என்று இவன் மனசு சொல்லியது.

என்னடா எதுவுமே பேசாம இருக்கிறாய். நான் தப்பா சொல்லிட்டனா? ஏதோ என் மனசில பட்டத சொல்லிட்டன். விடு அதெல்லாம் வேணாம். நாங்க நல்ல நண்பர்கள் அதை குழப்ப வேண்டாம் என்றாள்.

அந்த நேரம் பார்த்து சிவா ஊரிலிருந்து வந்திருந்தான். இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக யாருக்குமே சொல்லாமல் தனேஷ் உடன் செல்வன் வீட்டிற்கு வந்தான்.

அவனை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளினாள் செல்வி. இருந்தும் தன்னை சுதாகரித்தவளாய் மெல்ல நீச்சலடிக்க ஆரம்பித்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் செல்வன் அவதானிக்க தவறவில்லை.

ரம்யாவும், செல்வனும் தடாகத்திலிருந்து வெளியே வந்தனர். ஆனால் செல்வி மட்டும் வரலில்லை. என்ன செல்வி நான் உன்னையே நினைச்சிட்டு வந்ததும் ஓடி வாறன் நீ நீச்சலடித்திட்டு இருக்காய் வெளில வா என்றான்.

அவளால் அவனை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. இல்லடா இரு கொஞ்ச நேரத்தில வாறன் என்று சொல்லி நின்றாள். பாருடா செல்வன் இவள பார்க்க நான் எவ்வளவு ஆசையா ஊரில இருந்து ஓடி வாறன் இவள் இப்பிடி சொல்றாள் என்று கூற செல்வன் செல்வியை பார்த்தான்.

இவர்களின் பேச்சு தனேஷ்க்கு ஒரு மாதிரியாக இருந்தது. சரி சிவா அவள் தான் நீச்சலடிக்கிறாள் அப்புறமா வரட்டும் விடு என்றான். என்னடா நீ அவளுக்கு சப்போட் பண்ணுறாய் இரு அவள எப்பிடியும் வெளில கூப்பிடுறன் என்றான்.

சரிடா விடுங்க அவள் அங்கயே நீச்சலடிக்கட்டும் நாங்க அவளிட்ட போவம் என்று கூறி சிவாவையும் தனேஷையும் நீச்சல் தடாகத்துக்குள் இழுத்தான்.

ஐவரும் சேர்ந்து நீச்சலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களை விட்டு சற்று விலகியே நின்றாள் செல்வி. அப்போ தான் செல்வன் அந்த பேச்சை ஆரம்பித்தான்.

நட்போடு காதல் கதை பேசும்…………………….
பாகம் 9
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:11 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 9

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:23 pm

என்னடா சிவா ஊருக்கு போய் எங்கள நினைச்சு பாத்தியா இல்ல மறந்திட்டியா என்றான் செல்வன். என்னடா நீங்க எல்லாம் மறக்க கூடிய மூஞ்சியா என்றான்.

என்னடா அவ்வளவு அசிங்கமாவா இருக்கிறம் என்று ரம்யா சண்டைக்கு போனாள். சிவா சீக்கிரம் சொல்லு இல்லாட்டி இப்பிடியே தண்ணில போட்டு அமுக்கிடுவம் என்றாள்.

சரி சரி நம்ம நட்ப சொன்னன்டா அதுக்குள்ள இப்பிடி குதிக்கிறாய் என்றான்.

தனிமையில் நின்ற செல்வியை நோக்கி சென்ற தனேஷ் என்ன ஒரு மாதிரி இருக்காய் செல்வன் கூட ஏதாச்சும் சண்டை பிடிச்சியா இல்ல ரம்யா ஏதாச்சும் சொன்னாளா? வந்ததில இருந்து பாக்கிறன் உன் மூட் சரி இல்ல என்றான்.

அப்பிடி எதுவும் இல்ல லேசா தலைவலி அது தான் என்றாள். இல்ல செல்வி காலைல காலேஜ்லயும் பாத்தன் நீ ஒரு மாதிரி இருந்தாய் என்னாச்சு தலைவலி தானா இல்ல உடம்புக்கு ஏதும் முடியலயா என்றான்.

இல்லடா தலைவலி தான் மாத்திரை போட்டன் சரியாகிடும் என்றாள்.

தலைவலி ஏலாது எண்டா அப்புறம் என்னத்துக்கு நீச்சலடிக்கிறாய் போய் ரெஸ்ட் எடு என்று அவள் கையை பிடித்து வெளியேற சொன்னான் சற்று உரிமையுடன் கண்டிப்பாக.

என்னடா நீங்க வேற சண்டை பிடிக்கிறீங்க என்று கூறிய படி வந்தான் செல்வன். இல்லடா சோம்பலா இருந்தாள் என்ன என்று கேக்க தலைவலி எண்டாள் போய் ரெஸ்ட் எடு எண்ட மாட்டாளாம் என்றான்.

ஓஹோ என் செல்லத்துக்கு தலைவலியோ………… என்று அருகில் சென்ற செல்வன் அதுக்கு பேர் தலைவலி இல்ல மச்சி அது வந்து என்று ஏதோ சொல்ல எடுத்தவனின் வாயை கைகளால் பொத்தினாள் செல்வி.

அடேய் வாய திறந்தாய் கொன்னுடுவன் என்று சொல்லி அவனை தண்ணிக்குள் போட்டு அமுக்கினாள் செல்வி. ஐயோ என் அன்பு ராட்சசி என்ன கொல்லுறாள் என்று கத்தினான் செல்வன்.

ஏய் ரம்யா, நான் சொன்னது தப்பாடி? பாரு இவள என்ன எண்டு கேள் என்னை காப்பாத்த மாட்டியா என்று அவளை வம்புக்கு இழுத்தான் செல்வன்.

ஐயோ உங்க சண்டைக்குள்ள என்ன இழுக்காதீங்க நான் எஸ்கேப் என்று விலக போன ரம்யாவை செல்வன் எங்கடி நழுவுறாய் பதில சொல்லிட்டு போ என்று பிடித்தான்.

செல்வன், செல்வி இருவரையும் மாறி மாறி பார்த்திட்டு இருந்தாள் ரம்யா. ஏய் என்னடி பாக்கிறாய் ஏதாச்சும் வாய திறந்தாய் உனக்கும் இதே கதி தான் என்று செல்லமாய் மிரட்டினாள் செல்வி.

ஐயோ கொலை கார கும்பலுக்க மாட்டிட்டனே என்னை யாரும் காப்பாத்த மாட்டிங்களா என்று கத்தினாள். அடேய் சிவா, தனேஷ் நீங்க எல்லாம் ஒரு பிரண்ட்ஸா பாத்திட்டு நிக்கிறீங்க என்ன வந்து காப்பாத்துங்கடா என்றாள்.

என்ன நடக்குது இங்க மூன்று பேரும் சேர்ந்து எதையோ சொல்ல வாறீங்கள் இருந்தும் மறைக்கிறீங்க. முதல்ல செல்விய பிடிச்சா எல்லாம் சரி வரும் அவள் தான் எதையோ சொல்ல விடாம தடுக்கிறாள் என்று தனேஷ் செல்வியை பிடித்தான்.

சிவா நீ செல்வன்கிட்ட என்ன என்று கேள் நான் இவள பாக்கிறன் என்றான். மாட்டிக்கிட்டியா வசமா என்கிட்ட இப்ப என்ன பண்ணுவாய் செல்வன் சிவாகிட்ட எல்லாம் சொல்ல போறானே என்று அவளை சீண்டினான்.

சரி மச்சி நீ சொல்லு தனேஷ் செல்விய பாக்கிறான் அவள் என்ன சொல்ல விடாம தடுத்தாள் சொல்லு என்று செல்வனை வினவினான்.

அவர்களின் முன் வார்த்தைகளால் பேச முடியாத ரம்யா செல்வனின் அருகில் சென்று அவன் கைகளை மெல்ல அழுத்தி வேண்டாம் என்று சைகையால் தடுத்தாள். அவளை திரும்பி நேருக்கு நேர் பார்த்தவனை அவள் விழிகள் அவசரபடாதே என்று கூறியது.

அப்படியே மெல்ல செல்வியை திரும்பிப் பார்க்க அவள் கண்கள் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சியது. அவளின் அந்த கெஞ்சலான பார்வையையும் ரம்யாவின் விழிகளின் கட்டளையையும் மீறி அவனால் சிவாகிட்ட எதையும் சொல்ல முடியவில்லை.

ஒண்ணுமில்லடா வாற கிழமை நம்ம தனேஷ் பிறந்த நாள் வருதில்லா அதை எப்பிடி அவனுக்கு தெரியாம சப்றைஸா கொண்டாடலாம் என்று சொல்லிட்டு இருந்தம் அத யோசிச்சு தான் மெடத்துக்கு தலைவலி. அது தான் அவன் நிக்கிறதால சொல்ல வேணாம் என்று தடுத்தாள் என பேச்சை மாற்றினான்.

செல்வனின் பேச்சை கேட்டு தன் மேல் செல்விக்கு எவ்வளவு பாசம் என வியந்த தனேஷ் மெல்ல அவளை திரும்பி பார்த்தான். அவளும் எதுவும் செய்ய முடியாதவளாள் ஆமா என்று தலையசைத்தாள்.

அவளின் தலையசைப்பை பார்த்த அந்த நொடி ஆயிரம் பட்டாம் பூச்சிகள் வட்டமிடுவதாய் உணர்ந்தான் தனேஷ். செல்வியை அழுத்தி பிடித்திருந்த அவளின் கைகளை மெல்ல வருடியபடி விட்டான்.

தப்பித்தேன் பிழைத்தேன் என பெருமூச்சுடன் ஓடிய செல்வி பார்வையாலே செல்வனுக்கும் ரம்யாக்கும் நன்றி சொன்னாள். அப்படியே ஐவரும் மகிழ்வாக நீச்சலடித்து சண்டைகள் செய்தார்கள்.

என்ன கமலி இவங்க இன்னுமே நீச்சலடிச்சு முடியலயா என்று கூறிய படி பிரியா கமலி வீட்டுக்குள் நுழைந்தாள். இல்லப்பா இவங்களுக்கு காப்பி போட்டிட்டு போய் தான் கூப்பிடணும் என்று சொல்லி காப்பி தயார் செய்தாள் கமலி.

பிரியா அந்த அலுமாரில கேக், பிஸ்கட் இருக்கு எடுத்து பிளேட்ல போடு அவங்களுக்கு குடுப்பம் என்று சொல்ல அவளும் அந்த ஒழுங்கை பார்க்க காப்பி ரெடியானது.

என்னப்பா ரொம்ப ரைம் ஆச்சு இன்னும் வெளில வாற ஐடியா இல்லயா என்று கையில் காப்பியுடனும் சிற்றுண்டிகளுடனும் கமலியும் பிரியாவும் சென்றார்கள்.

நட்பின் சீண்டல்கள் தொடரும்……
பாகம் 10
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:12 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 10

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:23 pm

ஐவரும் வந்து சிற்றுண்டிகளை உண்டு காப்பி குடித்தார்கள். செல்வன் உன் டிறஸ் குடுடா கதைக்க வந்த எங்கள நீச்சலடிக்க வைத்து நனைத்தாய் தானே சீக்கிரம் குடு என்றான் சிவா.

இருங்கப்பா நான் ட்றஸ் கொண்டு வாறன் என்று கூறிய படி உள் சென்றார் கமலி. இருவருக்கும் ட்றஸ் உடன் வந்து நேரம் ஆகிறது சீக்கிரம் மாத்துங்க என்றாள்.

உடைமாற்றி விட்டு வந்த தனேஷைப் பார்த்து எப்பிடியப்பா இருக்கிறாய். அப்பா அம்மா எல்லாம் நலமா என்று கேட்க அவனும் அவளின் பாசத்துக்குள் கட்டுப்பட்டவனாய் ஆமா அவங்க எல்லாம் நலம் தான் அம்மா அப்பாக்கு தான் அடிக்கடி நெஞ்சு வருத்தம். இப்ப நல்ல டாக்கடரிட்ட காட்டினதால ஓகே என்றான்

உடை மாற்றி விட்டு வந்ததும் கமலி சிவாவையே பார்த்த படி நின்றாள். என்னம்மா அப்படி பாக்கிறீங்க என்ற சிவாவின் குரலால் நிமிர்ந்தவள் இல்லப்பா அப்பிடியே நம்ம செல்வன பாத்த போல இருக்கப்பா உன் கலர், உருவம், இப்ப அவன் ட்றஸோட உன்ன பாக்க என்றாள்.

அவனும் அவளின் பாசமான வார்த்தைகளில் அடைக்கலமானவனாய் அவளை நெருங்கினான். அவனை தன் தோளோடு அணைத்து உச்சி மோந்தாள்.

செல்வனுக்கும் செல்விக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சி அம்மா இப்பிடி சிவாவுடன் பழகுவது. அவனை அம்மாக்கும் பிடிக்கும் என்பதால் செல்விக்கு மனதில் ஏதோ தெம்பாக இருந்தது. தான் சிவாவை நேசித்தாலும் அம்மா தடை சொல்ல மாட்டாள் என்று.

உங்க எல்லாரையும் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. நட்பு எங்க எங்க இருக்கிறவங்கள எல்லாம் எப்பிடி ஒண்ணு சேர்க்குது பாருங்க அது தான் நட்புக்குள்ள தனி சக்தி என்று கூறினாள்.

சொந்தம் பந்தம் எல்லாமே ரத்த உறவாலயும் கட்டின வழியாலயும் தான் வரும். எந்த பந்தமுமே இல்லாம மனசில உள்ளதை எல்லாம் பகிர்ந்து சந்தோசத்தை அனுபவிச்சு சோகத்தில தோள் தட்டி ஆறுதல் சொல்ல நட்பால மட்டும் தான் முடியும் என்றாள்.

ஆமா கமலி கூறியதில 100 வீதம் உண்மை இருந்தது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எதிர்பாராம சந்திச்ச அவங்க உறவு இன்று ஓர் தாய் பிள்ளைகள் போல் ஒரே வீட்டில் மகிழ்ந்திருக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தது.

அவர்களிடையே ஏற்றத்தாழ்வு, ஜாதி, மதம், போட்டி இப்படி எதுவுமே இருக்கவில்லை. அன்பு என்ற ஒரே சொல் தான் தழைத்திருந்தது. அவரவர் மனங்களை புரிந்து நாணற் புட்களாய் வளைந்து கொடுத்து வாழ்ந்தார்கள்.

பல திசைகளிலிருந்து ஓடிவரும் நதிகள் போல ஆரம்பித்த இவர்கள் நட்பு மேடு பள்ளம் என்று ஏறி இறங்கி நட்பு என்ற சமுத்திரத்தை அடையும் போது ஒன்றாகியது.

நட்புக்கு வரைவிலக்கணம் கொடுப்பதற்கு வார்த்தைகளும் இல்லை. உவமானங்களும் இல்லை. எல்லையற்ற வானம் பூமி போன்ற பரந்த உறவு தான் அது.

கதைத்தபடி இருந்ததிலே நேரம் ஆகியதால் தனேஷூம் சிவாவும் சீக்கிரம் வெளிக்கிட்டார்கள். சரிப்பா நாளை கல்லூரியில் சந்திப்போம் என்று கூறி விடை பெற்றார்கள். பாத்து பத்திரமா போங்கப்பா என்ற தாய்மைக்கே உரிய பாசத்துடன் கமலியும் பிரியாவும் கூறினார்கள்.

அவர்களுக்கு கையசைத்து விடைகூறி விட்டு சென்றார்கள். சிவாவின் மோட்டார் சைக்கிள் தனேஷ் வீடு நோக்கி விரைந்தது. தனேஷ் மெல்ல வாயசைத்து பாடல் பாடியபடி இருந்தான். என்ன தனேஷ் ரொம்ப சந்தோசமா இருக்காய் என்னாச்சு என்ற சிவாவின் குரலால் சுயநினைவுக்கு வந்தவன் இல்லடா நம்ம எல்லாரோடயும் நட்ப பார்த்து சந்தோசமா இருந்திச்சு அது தான் என்றான்.

உண்மை தான்டா அவங்க அம்மாட பாசம், இவ்வளவு வசதி இருந்தும் அடக்கமான குணம் எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கடா. எங்க அப்பா கூட பணம் இருக்கிறதால கொஞ்சம் திமிரா கதைப்பார்.

ஆனால் ரம்யா குடும்பமும் சரி, செல்வனாக்களிட குடும்பத்திலயும் சரி பணம் இருக்கென்ற பணத்திமிர் கொஞ்சமும் இல்லடா. பார்க்க மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கடா.

இப்படி அவங்க இரண்டு குடும்பதோட நட்புக்குள்ள நாங்களும் நட்பா இருக்கிறம் எண்டத நினைக்க உண்மையிலயே பெருமையா இருக்கடா என்றான்.

உண்மை தான் சிவா நான் கூட இத நிறைய தடவை யோசிச்சிருக்கன். ஆனால் சொல்லல. நீ சொல்லிட்டாய் என்றான். தனேஷை அவன் வீட்டில் இறக்கி விட்டு தன் வீடு நோக்கி விரைந்தான்.

இரவு செல்வன், செல்வி, ரம்யா படிக்க உட்கார்ந்தார்கள். அப்போ செல்வன் ஏன்டி ரம்யா சரி நீ ஏன் சொல்ல விடாம தடுத்தாய் என்றதற்கு அதில தனேஷ் நின்றான் அதோட சிவா மனசில சில சமயம் அப்பிடி ஒரு நினைப்பு இல்லாம இருந்து நமக்குள்ள இருக்கிறது நட்பென்று சொல்லிட்டா என்ன பண்ணுவாய் அது தான் அவசரபட வேணாம் என்றன் என்றாள்.

செல்வி முகம் சட்டென மாறியது. இருந்தும் அவளும் தான் சொல்ல விடாம தடுத்ததுக்கு அதே காரணத்தையே சொன்னாள். அவன் கூட கொஞ்ச நாள் பழகி அவன் மனச தெரிஞ்சதுக்கப்புறமா சொல்லுவம் இப்ப வேணாம் என்றாள்.

அவனுக்கும் அது சரியாகவே பட்டது. அதனால் எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு படிப்பை கவனித்தார்கள்.

வீட்டிற்கு சென்ற தனேஷ்ற்கு செல்வி தனக்காக பிறந்த நாள் சப்றைஸா கொண்டாட இருக்கிறாள் என்றதை நினைத்து மகிழ்ந்தான். எனக்கு அவள பிடிக்கும் அவளுக்கும் என்னை பிடிச்சதால தான் அப்பிடி வெட்கப் பட்டாள் என்று நினைத்து மகிழ்ந்தான்.

ஏற்கனவே அவள் மேல் துளிர்த்த காதல் அவன் மனதில் இன்று விருட்சமாய் வேரூன்றியது. தன் காதலை சொல்ல தகுந்த சந்தர்ப்பமாய் தன் பிறந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் பிறந்த நாளிற்கு இன்னும் 1 வாரம் இருந்தது. அந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்தான்.

அன்று ஆனந்தமாய் அவன் பேனா அவனது டயரியில் வரைய ஆரம்பித்தது. இத்தனை நாட்களாய் அவனின் மன ஆசைகளை வரைந்த பேனா இன்று அவன் செல்வி மேலுள்ள காதலின் ஆழத்தை வரைந்தது.

வீட்டிற்கு சென்ற சிவாவிற்கு செல்வனின் தாயின் பாசம் ரொம்ப பிடித்திருந்தது. அந்த குடும்பத்தில் தானும் ஒருவனாய் சேரணும் என்று மனசால் துடித்தான்.

அந்த நொடி தான் அவனிற்கு செல்வியின் நினைவு வந்தது. அந்த நாடகத்தில் அவளுடன் பேசிய காதல் வார்த்தைகள் கொஞ்சலான நிமிடங்கள் கண் முன் வந்து போனது.

அவனையே அறியாது அவன் மனம் செல்வியை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது.

காதல் மனங்கள் நடை பயிலும்………………………
பாகம் 11
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:12 pm, edited 1 time in total.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”