அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 60

Post by Aruntha » Tue Jun 05, 2012 8:44 pm

ஹலோ டாடி சொல்லுங்க என்ற படி போனை எடுத்தான் செல்வன். செல்வா இங்க எல்லாருக்கும் சம்மதம் நீ செல்வி கூட பேச வேண்டியது மட்டும் தான் என்றார். சரி டாடி நான் நல்லபடியா முடிக்கிறன் என்று கூறி போனை கட் செய்தான். என்னடா டாடி என்னவாம் என்றாள் செல்வி. அதுவா அவர் பணம் எடுத்திட்டு ஆபிஸூக்கு தேவையான ஒரு சில பொருட்கள் வாங்கி வர சொன்னார் என்றான். ஓ அப்பிடியா சரி சரி சீக்கிரம் கிப்ட் ஷொப் க்கு போய்ட்டு டாடி சொன்னத பாக்கலாம் என்றாள் செல்வி. இதுக்குள்ள நிறையவே உள் நோக்கம் இருப்பதை உணர்ந்த ரமி அமைதியாக இருந்தாள்.

அவர்கள் கிப்ட் ஷொப்பை அடைந்தார்கள். நீங்க இரண்டு பேரும் இதில இறங்குங்க நான் போய் கார் பாக் பண்ணிட்டு வாறன் என்றான். சரி எனக் கூறி வாசலில் இறங்கினார்கள் செல்வியும் ரமியும். செல்வன் காரை கொண்டு கார் பாக்கிற்கு சென்றான். காரை பாக் செய்து விட்டு ரம்யாவிற்கு போன் செய்தான். செல்வனின் போனை பார்த்ததும் செல்வியை விட்டு சற்று விலகிப் போய் போனை ஆன்சர் செய்தாள்.

சொல்லு செல்வா என்ன என்றாள். செல்வி பக்கத்தில இருக்காளா என்று கேட்க இல்லை நீ, உன்னோட பேச்செல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சு இன்னிக்கு. அதுவும் இல்லாம நீ போன் பண்ண நான் செல்விய விட்டு விலகி வந்து தான் கதைக்கிறன் என்றாள். அது தானே என் ரமி குட்டிக்கு புரியாததா என்றான். சரி உனக்கு என்ன தான் பிரச்சினை என்றாள்.

ஒண்ணுமில்லடா உனக்கு செல்விய தனேஷ் விரும்பறான் எண்டத ஏற்கனவே சொல்லி இருக்கன்தானே. அத பத்தி டாடி கூட கதைச்சன். டாடி மம்மி கூட கதைச்சு சொல்றதா சொன்னார். இப்ப அவங்க கதைக்கிறதுக்காக தான் நாம வெளில வந்தம். அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க. இப்போ நாம செல்விய சம்மதிக்க வைக்கணும் அது தான் நீயும் கொஞ்சம் உதவி பண்ணு ஷொப்பிங் சும்மா பாத்திட்டு அவளோட கதைப்பம் என்றான். சரிடா கண்டிப்பா கதைக்கலாம் நீ சீக்கிரம் வா என்றாள் ரமி.

ஏய் யாரு போன்ல என்றபடி செல்வி வர அதுவா மம்மி போன் பண்ணினாங்க வெளில ஒண்ணும் சாப்பிடாம வரட்டாம் வீட்டில ஸ்பெஷலா சமைச்சிருக்காங்களாம் என்றாள். ஓ அப்பிடியா சரி அப்போ இன்னிக்கு ஒரு வெட்டு வெட்டலாம் என்று சிரிக்க செல்வனும் வர சரியாக இருந்தது. சரி வாங்க சீக்கிரமா போகலாம் என்றபடி கடைக்குள் நுழைந்தார்கள்.

அங்கே அழகான ஒரு நடனமாடும் சிறிய பொம்மை சிலையை வாங்கினான். அப்பிடியே செல்வியும் ரமியும் தங்களிற்கு சில பொருட்களை வாங்கினார்கள். சரிடா செல்வா ரொம்ப களைச்சு போயாச்சு வா போய் அந்த றெஸ்டோறன்ல ஏதாச்சும் குடிப்பம் என்றாள் ரமி. மூவரும் றெஸ்டோறன்க்குள் நுழைந்தார்கள்.

அங்கு சற்று நேரம் பேசிக்கொண்டிருக்க ரமி செல்வி விடயம் பற்றி பேச்சு கொடுத்தாள். சரி செல்வா நீயும் செல்வியும் ஒண்ணா பிறந்து ஒண்ணா தானே எல்லா விசேஷமும் கொண்டாடுறீங்க. இப்ப என்ன நீ அவளை விட்டிட்டு முன்னாடியே ரேவதிய நிச்சயம் பண்ணுறாய். எனக்கு இது பிடிக்கலடா என்றாள். எனக்கும் பிடிக்கல தான் அப்ப செல்விக்கும் சேர்த்து நிச்சயம் பண்ணுவமா என்றான். அதுக்கென்ன சீக்கிரமா மாப்பிளைய பாத்தால் ஒண்ணா நிச்சயம் பண்ணலாமே என்றாள்.

ஹலோ என்ன இரண்டு பேருமே உங்க பாட்டுக்கு பேசிட்டு போறீங்கள். இதில ஒருத்தி இருக்கிறன் கண்ணுக்கு தெரிதா என்றாள் செல்வி. தெரியாமலா உன்னை பத்தி பேசுறம் நாம நல்ல விசயம் கதைக்கிறம் குறுக்க பேசாம இருடி என்றாள் ரமி. ஹலோ மெடம் உங்க பேச்சு தாங்க முடியல. அவனை தான் ரேவதி தொங்கி தொங்கி காதலிச்சாள் அதால நிச்சயம் பண்ணறம். நம்மளையும் எதுக்குடி அந்த லிஸ்ட்ல சேர்க்கிறாய் என்றாள் செல்வி.

அப்போ மெடத்தையும் யாராச்சும் தொங்கி தொங்கி காதலிச்சா சம்மதிப்பாங்களோ என்றான் செல்வன். ஹலோ சார் நமக்கெல்லாம் அப்பிடி ஐடியாவே இல்லை. நாம யாரையும் காதலிக்கவும் மாட்டம். நம்மள யாரும் காதலிக்கவும் மாட்டாங்க சரியா என்றாள். ஓ யாருமே திரும்பி பார்க்க முடியாத அளவுக்கு நீங்க அசிங்கமா இருக்கிறீங்க எண்டத ஒத்துக்கிறீங்களா என்றான் செல்வன். டேய் ரொம்ப பேசாத நாம ஒரு பார்வை பார்த்தாலே பின்னாடி ரொமப பேர் வருவாங்க சரியா என்றாள் செல்வி.

அவ்வளவு நம்பிக்கையோ இருந்தாலும் பொண்ணுங்களுக்கு தங்கட அழகை பத்தி கதைச்சால் ரொம்ப தான் திமிர். விட்டுக்குடுக்க மாட்டாங்களே என்றான் செல்வன். டேய் செல்வா நானும் பேசாம இருக்க நீ பொண்ணுங்கள பத்திரொம்ப ஓவரா கதைக்கிறாய் நான் கதைக்க வேணாம் என்று அமைதியா இருக்கிறன் பேசாம இரு என்றாள் ரமி. சரி மெடம் நீங்க சொன்னால் சரி என்று கூறி அமைதியாகினான்.

டேய் செல்வா உனக்கு ஏனடா இப்பிடி கொலை வெறி. நீ உன் பாட்டில ரேவதிய நிச்சயம் பண்ணிக்கோ இப்போ என்னை விட்டிடு அப்புறம் கல்யாணத்தை ஒண்ணா பாக்கலாம் என்றாள் செல்வி. இல்லைடா எனக்கு அதில விரும்பம் இல்லை நம்மட நிச்சயதார்த்தம் ஒண்ணா நடக்கணும் என்றான் செல்வன். ஆமா செல்வி அவன் சொல்றதும் சரி நீ ஓகே என்றால் ஒண்ணாவே நிச்சயம் பண்ணலாம் என்றாள் ரமி.

என்ன மாப்பிளைய பாத்து முடிச்சிட்டு வந்த போல கதைக்கிறீங்க இரண்டு பேரும் என்ன தான் நடக்குது என்றாள் செல்வி. செல்வி உனக்கு நாங்க மம்மி டாடி எல்லாரும் பார்த்து எங்களுக்கு பிடிச்சா நீ சம்மதம் சொல்லுவாயா என்றான் செல்வன். என்னடா சொல்றாய் அதெல்லாம் எனக்கு முடியா. நீ மட்டும் அறிந்து பழகின ஒருத்திய கல்யாணம் பண்ணுவாய் நான் மட்டும் முன்ன பின்ன தெரியாத ஒருத்தன கட்டணுமா என்னால ஏலா இந்த விளையாட்டுக்கு நான் வரல என்றாள் செல்வி.

ஓஹோ அப்ப முன்ன பின்ன தெரிஞ்சா தான் சம்மதிப்பீங்களோ என்றாள் ரமி. ஆமா இன்னும் நிச்சயதார்த்ததுக்கு 15 நாள் கூட இல்ல. அதுக்கிடைல ஒருத்தன பாப்பீங்க பிடிச்சிருக்கா என்று கேக்க நானும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி சம்மதிக்கணுமா அதெல்லாம் முடியா என்றாள். அட நம்ம செல்வியா இப்பிடி பேசுறது ஏய் உனக்கும் இப்பிடி எல்லாம் பேச தெரியுமா என்றான் செல்வன்.

டேய் செல்வா என்னை ரொம்ப கெட்டவளா மாத்தாத என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது. பேசாமல் நீ ரேவதிய நிச்சயம் பண்ணு. அப்புறமா என்னை பார்க்கலாம் என்றாள் செல்வி. சரி நான் ஒண்ணு கேக்கலாமா என்றாள் ரமி. என்னை நீயும் அவனோட சேர்ந்திட்டியா நான் பாவமடி என்னை விட்டிடு என்றாள் செல்வி. இப்போ நாங்க சொல்றத கேள் அப்புறமா உன் முடிவ சொல்லு என்றாள் ரமி. சரி என்ன சொல்லுங்க என்று கூறி ரமியையும் செல்வனையும் பார்த்தாள்.

நீ நம்ம தனேஷ பத்தி என்ன நினைக்கிறாய் என்றான் செல்வன். அவன் எங்களோட நல்ல ஒரு நண்பன் அவ்வளவு தான் என்றாள் செல்வி. சரி இப்போ எதுக்கு அவன பத்தி கேக்கிறாய் என்றாள். இல்லை சும்மா தான் நீ சொல்லு என்றான். அது தானே சொல்லிட்டன் அவன் நம்ம எல்லாரோடயும் மனச புரிஞ்ச நல்ல ஒரு நண்பன் அப்புறம் என்ன என்றாள்.

சரி அவன் நண்பன் என்றது ஓகே எங்களுக்கு அவன பிடிச்சிருக்கு உனக்கு பிடிச்சிருக்கா என்றாள் ரமி. என்னடி உளறுறாய் அவனை பிடிக்காமலா நாம இவ்வளவு காலம் நட்பா இருக்கிறம் கொஞ்சம் கூட அறிவில்லாம பேசுறியே என்று கடிந்தாள். செல்வி விளையாடாத நாம நமக்குள்ள உள்ள நட்பை பத்தி கதைக்கல. எங்கள் எல்லாருக்கும் அவனை உனக்கு கட்டி வைக்கலாம் என்ற வகைல பிடிச்சிருக்கு உனக்கு பிடிச்சிருக்கா என்றான் செல்வன். அதிர்ச்சியடைந்து போய் அவனை பார்த்தபடி இருந்தாள் செல்வி.

தொடரும்……………!
பாகம் 61
Last edited by Aruntha on Wed Jun 06, 2012 12:31 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 61

Post by Aruntha » Wed Jun 06, 2012 12:30 pm

ஹலோ செல்வன் என்னை நினைவிருக்கா என்றபடி அவனருகில் வந்தான் விக்கி. டேய் என்ன இப்பிடி சொல்லிட்டாய் உட்காரு என்று அவனை அருகிலிருந்த கதிரையில் அமர வைத்தான். சும்மா தெரியாதா காலேஜ் முடிஞ்சதும் நல்ல வேலை கிடைச்சுது வெளியூர் போய்ட்டன். இப்போ ஒரு 4,5 நாள் லீவு கிடைச்சிச்சு அது தான் வந்தன் என்றான் விக்கி.

ரம்யா, செல்வி தாங்கள் எப்பிடி என்றான். நமக்கென்னடா நல்லா போகுது. காலேஜ் முடிஞ்சதும் கூட படிச்சவங்க யாரையும் கண்டுக்க முடியல. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேலை என்று பிரிஞ்சு போய்டாங்க என்றாள். உண்மை தான் அந்த காலேஜ் நாம எல்லாரும் போட்ட கலாட்டா எல்லாம் மறக்க முடியாத நினைவுகள். அப்பிடி ஒரு காலம் இனி நினைச்சாலும் திரும்ப கிடைக்காது என்றான் விக்கி.

சரி விக்கி என்ன சாப்பிடுறாய் என்றாள் ரமி. நமக்கென்ன நீ ஒரு பியர் ஓடர் பண்ணுவியா என்றான். டேய் உதை விழும் சொல்லு என்ன வேணும் என்றாள். என்னடி பிடிச்சத சொன்னால் உதைப்பன் என்று சொல்றாய் சரி சரி ஏதாச்சும் கூலா குடிப்பம் என்றான். சிற்றுண்டிகளுடன் குளிர்பானம் அருந்திய படி அவர்களின் காலேஜின் பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்த்த படி இருந்தார்கள்.

உங்களுக்கென்னப்பா நீங்க காலேஜ் வரும் போதும் நண்பர்கள். காலேஜ்ல முடிஞ்சதுக்கு அப்புறமும் நண்பர்கள். நாம தான் எல்லாரும் பிரிஞ்சு போய்ட்டம் என்றான் விக்கி. அப்பிடி இல்ல எப்போ எங்கு சந்திச்சாலும் நமக்குள்ள பழைய பசுமையான நினைவுகள் வருதே அது தான் முக்கியம் என்றான் செல்வன். என்ன செல்வி நீ சைலன்ஸ் ஆக இருக்கிறாய். காலேஜ்ல ரொம்ப அட்டகாசம் பண்ணுவாய். இப்போ என்ன குடும்ப பொண்ணா மாறி அமைதியாகிட்டாயா என்றான்.

குடும்ப பொண்ணா? அமைதியா அப்பிடி ஒண்ணு நடந்தால் இந்த உலகமே அழிஞ்சிடும் அது தெரியாதா என்றான் செல்வன். செல்வன் வேணாம் சும்மா என்னை சீண்டாத என்றாள் செல்வி. இல்ல விக்கி லேசா தலைவலி மாத்திரை போட்டிட்டு இருந்தன். இவங்க ஷொப்பிங் போகணும் என்று கேட்டதால வந்தன் என்றாள் செல்வி. ஓ அப்பிடியா சரி உடம்ப பத்திரமா பாத்துக்கோ நீங்க ஷொப்பிங் முடிச்சிட்டு கிளம்புங்க எனக்கு நேரமாச்சு நான் கிளம்பணும் உங்களை எல்லாம் சந்திச்சதில ரொம்ப சந்தோசம் என்று கூறி புறப்பட்டான்.

என்ன செல்வி இப்பிடி மூட் அப்சற் ஆகிட்டாய். நாம எல்லாரும் மனசிலபட்டத சொல்லி இருந்தம் அதுக்கு இப்பிடி குழம்பிறதா? விக்கி கூடவும் நீ சரியா பேசல கேட்டால் தலைவலி அதுஇது என்று சாட்டு சொல்றாய். நாம என்ன தப்பா கேட்டிட்டம் என்று இப்பிடி பண்ணுறாய் என்று கேட்டான் செல்வன். நீங்க ஒண்ணும் தப்பா கேக்கல எனக்கு தலை வலிக்குது நான் வீட்டுக்கு போகணும் என்றாள் செல்வி.

என்ன செல்வி பைத்தியகாரி போல பேசுறாய்? நாம இங்க வந்தது ஷொப்பிங் பண்ண இல்லை. உன்னோட இது பத்தி கதைக்க தான். டாடி கூட கதைச்சன் அவருக்கு சம்மதம். அவர் இப்போ மம்மி, பிரியா ஆன்டி, ராஜன் அங்கிள் எல்லாரோடையும் கலந்து பேசிட்டு அவங்களும் சம்மதம் சொன்னதும் எனக்கு சொன்னார். அது தான் உன்னோட கதைக்கிறம் என்றான் செல்வன்.

ஓ அப்போ நீங்க எல்லாம் கதைச்சு பேசி முடிவு பண்ணிட்டு தான் என்னிடம் கேக்கிறீங்களா? அப்பிடி எதுக்கு சம்மதம் கேப்பான் நீங்களே எல்லாத்தையும் முடிச்சிருக்கலாமே என்றாள். சரி இதை பத்தி நீங்க முடிவு எடுத்தீங்க முக்கியமான தனேஷ் கூட பேசினீங்களா? இல்லை அவனுக்கு நீங்க உதவி பண்ணி இருக்கிறீங்க எண்டதால அவனையும் உங்க முடிவ சொல்லி சம்மதிக்க வைக்கிறீங்களா என்றாள். செல்வி என்ன பேசுறாய் நீ கொஞ்சமாவது சிந்திச்சு பேசுறியா என்றாள் ரமி.

இப்போ உனக்கென்ன தனேஷ் பத்தி தெரியணும் அவ்வளவு தானே அவன் உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறான். அதுவும் இன்றைக்கு நேற்று இல்ல. உன்னை முதல் தடவை பார்த்து உன் காரில மோதின நிமிசத்தில இருந்து அது தெரியுமா உனக்கு என்றாள் ரமி. என்ன சொல்றாய் ரமி இதெல்லாம் உனக்கெப்பிடி தெரியும் என்றாள் சற்று அமைதியாக கேட்டாள் செல்வி.

நான் சொல்றன் என்று கூற ஆரம்பித்தான் செல்வன். தனேஷின் தந்தையின் சாவு வீட்டிற்கு போனது அவன் வீட்டில இரவு தங்கினது அப்போ அவனது டயறி தற்செயலா படிக்க நேர்ந்தது அதில அவன் உன் மேல எவ்வளவு காதல் வைத்திருக்கிறான் என்பது தெரிந்தது அந்த நேசத்தை கூட இவ்வளவு காலமும் சொல்லாமல் இருந்ததுக்கு குடும்ப நிலைமை காரணம் எல்லாம் கூறினான் செல்வன். செல்வன் கூற கூற செல்விக்கு உலகமே சுற்றியது.

ஆமா செல்வி செல்வன் சொல்றது எல்லாம் உண்மை தான். எனக்கும் இது முன்னாடியே தெரியும். செல்வன் சொல்லி இருந்தான். ஆனால் உனக்கு இத பத்தி கூறி உன்னை குழப்ப கூடாது என்றதால தான் எதுவுமே பேசல. அதுக்கும் மேல உங்க டாடி மம்மி இதுக்கு சம்மதிப்பாங்களா என்ற சந்தேகம் இருந்திச்சு. அவங்களுக்கு தெரியாமல் உனக்கும் கூறி உன் மனசிலும் ஆசைய வளர்த்து அப்புறம் அவங்க மறுப்பு சொன்னால் உனக்கும் தான் அது கஷ்டம் அது தான் உனக்கு சொல்லாம மறைச்சம் என்றாள் ரமி.

அப்போ இத்தனை நாள் நம்ம நட்புக்குள்ள, செல்வன்ட பாசத்துக்குள்ள எந்த ஒழிவு மறைவும் இல்லை நாங்க எல்லாமே வெளிப்படையா கதைப்பம் என்று எல்லாருக்கும் சொல்லி திரிஞ்சது எல்லாம் பொய்யா? இவ்வளவையும் மனசுக்க வைச்சிட்டு இரண்டு பேருமே எனக்கு மறைச்சிட்டிங்களே என்றாள் செல்வி.

இல்லடா டாடி கூட கதைச்சு சம்மதம் வாங்கிட்டு உனக்கு சொல்லுவம் என்று தான் இருந்தம் நாங்க உன் மனசை காயப்படுத்த கூடாது என்று தான் கதைக்கல ப்ளீஸ் நம்மள புரிஞ்சுக்கோ என்றான் செல்வன். ஆமா செல்வி இது தான் உண்மை நீ கஷ்ட பட கூடாது என்று தான் நாங்க சொல்லல. நீ தானே சொல்லுவாய் நல்ல விடயத்துக்கு பொய் சொல்லலாம் என்று. நாங்க உனக்கு பொய் சொல்லலயே ஒரு உண்மைய மறைச்சம் அவ்வளவு தான் என்றாள் ரமி.

என்னால தனேஷ அப்பிடி பாக்க முடியல. அவன் என்னோட நல்ல நண்பன். அவன் கூட கலாட்டா பண்ணி இருக்கன். சண்டை போட்டிருக்கன். ஏன் அவன் தோளில சாய்ந்து தூங்கி இருக்கன். அதெல்லாம் நட்போட மட்டும் தான். அதுக்கு என்னால காதல் என்ற பெயரை குடுக்க முடியாது என்றாள் செல்வி.

செல்வி அவன் உன்னை நட்பா பாக்கலயே. நல்ல நண்பனா உன் மனசை தெரிஞ்சவன உன்னை புரிந்தவன உன் உணர்வுகளை மதிக்கிற தனேஷ நீ வாழ்க்கைல ஏற்கிறது தப்பில்லையே என்றான் செல்வன். உண்மைலயே வாழ்க்கைக்கு தேவையான அத்தளை புரிந்துணர்வும் உனக்கும் தனேஷிற்கும் இருக்கு அப்புறம் எதுக்காக நீ யோசிக்கிறாய் என்றாள் ரமி.

செல்வி தனேஷ உனக்கு பிடிக்கலயா இல்லை ஏற்க முடியாதா என்றான் செல்வன். அவன பிடிச்சிருக்கடா ஆனால் நீங்க சொல்ற போல என்னால அவன பாக்க முடியல. அப்போ உன் மனசில வேற யாராச்சும் இருக்கிறாங்களா என்றாள் ரமி. ஏய் என்ன உழறுறாய் என்று அவளை கடிந்தாள் செல்வி. நான் நேர கேக்கிறன் உன் மனசில சிவா இருக்கானா என்றாள் ரமி. நீ சிவாவ விரும்பிறியா என்றாள். ஆமா செல்வி அவள் கேக்கிறதுக்கு சொல்லு ஆரம்பத்தில நாங்க உன்னை விளையாட்டா சீண்டி பார்த்திருக்கிறம் அவனை வச்சு என்றான் செல்வன். அந்த நொடி அவர்கள் கேள்வி செல்விக்குள் என்ன மாற்றத்தை உண்டு பண்ணியதோ தெரியவில்லை. அவர்களை சிரிப்போடு பார்த்தாள்.

சற்றும் தயக்கமின்றி ஆமா என்றாள். நான் சிவாவ மனசால காதலிச்சன். அவனோட டூயட் கூட பாடியிருக்கன். அதுக்கும் மேல அவன கல்யாணம் கூட பண்ணி இருக்கன் என்று கூறி சிரித்தாள். அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள் செல்வனும் ரமியும்.

தொடரும்……………!
பாகம் 62
Last edited by Aruntha on Sat Jun 09, 2012 2:06 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 62

Post by Aruntha » Sat Jun 09, 2012 2:05 pm

என்னடா இப்பிடி பாக்கிறீங்கள் நம்பலயா என்றாள் சிரித்தபடி செல்வி. அது நம்ம மம்மி டாடி ஏன் காலேஜ்க்கே தெரியுமே அப்புறம் என்ன என்றாள். என்னடி சொல்றாய் என்று கேட்க ஏய் லூசுங்களா நான் யாரையும லவ் பண்ணலப்பா நான் சிவா கூட காலேஜ் நாடகத்தில நடிச்சத சொன்னன் என்று சிரித்தாள்.

அடிப்பாவி ஒரு நிமிசத்தில எங்கள குழப்பிட்டாயே உன்னை என்ன பண்ணுறன் பார் என்று கூறி அவள் கன்னத்தை கிள்ளினான் செல்வன். சரிடா எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே. உங்க எல்லாருக்கும் தனேஷ பிடிச்சிருந்தால் எனக்கும் சம்மதம். அவன் என் நண்பன். அவனை எனக்கு பிடிக்கும். ஆனால் இதுவரைல அவன நான் லவ் பண்ணல. அவன் என்னை லவ் பண்ணுறான் என்று சொல்றீங்க. என்னை புரிஞ்சவன கல்யாணம் பண்ணுறதில எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்றாள்.

அது தானே என் செல்லக்குட்டிக்கு நாம எடுக்கிற முடிவு பிடிக்கும் என்று எனக்கு தெரியும் என்று கூறினான் செல்வன். ரொம்ப சந்தோசமா இருக்கு செல்வி. இப்பவே போன் பண்ணி வீட்டுக்கு சொல்லுவம் என்றாள் ரமி. செல்வனும் போன் பண்ணி தந்தைக்கு செல்வியின் சம்மதத்தை கூறி விட்டு நேரமாகியதால் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்கள்.

அங்கு ரமி வீட்டாரும் செல்வன் வீட்டாரும் ஒன்றாக செல்வன் வீட்டில் இருந்தார்கள். அவர்கள் எல்லரையும் பார்த்த செல்வி என்ன எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்திட்டு என்னை சம்மதம் மட்டும் கேக்கிறீங்களா? எனக்கு சம்மதம் ஆனால் நான் யார் கூடயும் பேச மாட்டன் என்றாள் செல்வி. அப்பிடியில்லம்மா நீ சம்மதிப்பாய் என்ற நம்பிக்கைல தான் கேட்டம் என்றாள் கமலி.

சரி இப்பவே தனேஷ்க்கு போன் பண்ணி விபரத்தை சொல்லுவம் என்றார் குமார். இல்லை டாடி தனேஷ நாளைக்கு அவன் அம்மாவ கூட்டிட்டு நம்மட வீட்டுக்கு வர சொல்லுவம். விபரம் இங்க வர அவனுக்கு சப்றைஸ் ஆக சொல்லுவம் என்றான் செல்வன். ஆமா அதுவும் சரி தானே. அவனுக்கு செல்விய பிடிக்கும் தானே அப்போ விபரம் சொல்லாம அப்பிடியே பண்ணலாம் என்றார் குமார்.

தனேஷ்க்கு போன் பண்ணினான் செல்வன். ஹலோ செல்வா சொல்லுடா என்ன இந்த நேரம் என்றான். அதுவா டாடி உன்னோட ஏதோ கதைக்கணுமாம் என்று கூறி போனை கொடுத்தான். ஹலோ சொல்லுங்க அங்கிள் என்ன விஷயம்? நாளைக்கு ஏதாச்சும் வேலை இருக்கா என்றார் குமார். இல்லை அங்கிள் நாளைக்கு வீட்டில தான் நிப்பன் என்றான். அப்பிடியா சரி செல்வன் நிச்சயதார்த்த வேலை கொஞ்சம் அரேன்ஜ் பண்ணணும் காலைல வாறியா என்றார்.

கண்டிப்பா வாறன் அங்கிள் நம்ம செல்வனுக்கு இல்லாததா என்றான். அப்பிடியே அம்மாவையும் கூட்டிட்டு வாப்பா இருந்து பேசிட்டு பின்னேரமா வீட்டுக்கு போகலாம். அவங்களும் பாவம் ஒரே வீட்டுக்குள்ள அடைஞ்சு போய் இருக்காங்க என்றார். சரி அங்கிள் காலைல அம்மாவையும் கூட்டிட்டு வாறன் என்றான். சரிப்பா என்று கூறி போனை கட் செய்தான் குமார்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு மாடிக்கு சென்றார்கள். செல்வன் செல்வி ரமி மூவரும் மொட்டை மாடிக்கு சென்று சற்று நேரம் பேசிட்டு இருந்தார்கள். ஏன்டா செல்வா தனேஷூக்கு எதுக்கு என்று சொல்லி இருக்கலாம் தானே பாவம் அவன் என்றாள் செல்வி. அட பாருடா இப்ப தான் அவன பற்றி பேசி இருக்கிறம் அதுக்கிடைல அவனுக்கு சப்போட் பண்ணுறாள் என்றாள் ரமி. என்னடி நான் சும்மா தான் சொன்னன் வேற ஒண்ணுமில்ல என்றாள் செல்வி.

என்ன தான் இருந்தாலும் பொண்ணுங்க தங்களுக்கு வர போறவன் அவன் தான் தன்னோட புருஷன் என்று தெரிஞ்சா கூட பிறந்தவங்க பெத்தவங்க எல்லாரையும் விட அவனுக்கு தான் முக்கியம் குடுப்பாங்க என்றான். டேய் வேணாம் தேவை இல்லாம தைக்காத என்றாள் செல்வி. டேய் நானும் பொண்ணு தான் எல்லாத்துக்கும் ஓகே ஆனால் உன்னோட இந்த கருத்துக்கு மட்டும் சம்மதம் இல்ல என்றாள் ரமி.

சரிங்க மகாராணிங்களா நீங்க சொன்னால் எல்லாம் சரி என்றான் செல்வன். என்னடா நீ மட்டும் என்ன ரேவதிய பாத்திட்டு நம்மள எல்லாம் குட்டிப்பிசாசு என்று தானே சொல்லிட்டு இருந்தாய் அப்பிடி தான் இதுவும் என்றாள் செல்வி. கடவுளே என்னை காப்பாத்துப்பா நல்லா மாட்டிக்கிட்டன் இந்த குட்டிப்பிசாசுகளிட்ட என்றான். கடவுள் ஒண்ணும் வர மாட்டார் முடிஞ்ச உனக்கு ஒரு வால் இருக்கே அது தான் ரேவதி அவள கூப்பிடு என்றாள் ரமி.

இருடி ரமி நீயும் ரொம்ப கதைக்க ஆரம்பிச்சிட்டாய். இரு உன்னையும் ஒருத்தன் கைல பிடிச்சு குடுக்க தானே போறம் அப்போ பாத்துக்கிறன் என்றான் செல்வன். ஹலோ நாங்க இப்பிடி எல்லாம் பண்ண மாட்டம் உங்கள பாத்து குட்டிப்பிசாசு என்று எல்லாம் சொல்ல மாட்டம் என்றாள். பாக்கலாமடி அதையும் என்று கூறி சவால் விட்டான் செல்வன். சரி அதையும் பாக்கலாம் என்று கூறினாள்.

சரிப்பா நேரமாச்சு வாங்க போய் தூங்கலாம் என்று கூறி மொட்டை மாடியில் இருந்து கீழ் இறங்கினார்கள். செல்வி என்ற ரமியின் குரலால் நின்றவள் என்ன என்றாள். இல்லை மனசை தனேஷ சுத்தி அலைய விடாமல் அவனை பத்தி கனவு காணாம தூங்கு என்றாள். அடிப்பாவி சீ போடி உன்னை என்று விரட்டிக் கொண்டு சென்றாள். சரி சரி உண்மைய யார் தான் ஒத்துகிறாங்க என்று கூறி சிரித்தபடி சென்றாள் ரமி.

தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்ட செல்வி தனேஷை நினைத்தாள். தான் அவனை முதல் முறை பார்த்தது அவனை தன் காரால் தவறுதலாக மோதியது அந்த நொடி அவன் பெருந்தன்மையா நடந்து கொண்டது, அவனோடு போட்ட சண்டைகள், செல்ல கோவங்கள் எல்லாவற்றையும் நினைத்தாள். அவளை அறியாமலேயே நாணம் அவளை எட்டிப்பார்த்தது.

தனேஷிற்கு போன் செய்து பேச நினைத்தாள். இருந்தும் தன்னை பார்த்த நொடி முதல் தன்னை காதல் செய்து தனக்கே தெரியாமல் மறைத்திட்டிருக்கானே திருட்டுபயல் என்று தனக்குள்ளே அவனை செல்லமாக திட்டினாள். அவனை ஒரு சீண்டிப் பார்க்க நினைத்தாள். அவளுக்கு எப்படி தெரியும் தினம் தினம் இவள் நினைவால் அவன் தூக்கமின்றி தவிப்பது.

தனேஷிற்கு போன் செய்தாள் செல்வி. ஹலோ என்ன செல்வி என்ன இந்த நேரத்தில போன் பண்ணுறாய் ஏதாச்சும் பிரச்சினையா என்றான். இல்லடா தூக்கம் வரல என் மனசு ரொம்ப குழப்பமா இருக்கு அது தான் உனக்கு போன் பண்ணினன் என்றாள். என்னம்மா செல்வி என்னாச்சுடா என்றான் பதற்றமாக. ஒண்ணுமில்லடா மனசு பூரா ஒருத்தன் நிறைஞ்சு இருக்கான் அத எப்பிடி அவன்கிட்ட சொல்றது என்று தான் தெரியல இத பத்தி செல்வன்கிட்ட கூட சொல்லல அது தான் உன் கி்ட்ட ஐடியா கேக்கிறன் என்றாள்.

என்ன சொல்றாய் செல்வி எனக்கு ஒண்ணுமே புரியல என்றான் சற்று கலவரமாக. நான் ஒருத்தன மனசால நேசிக்கிறன். அதுவும் இன்னிக்கு தான் அவன் என் மனசில காதலனா வந்தான். அவன் என் மனசுக்குள்ள வந்து பூரணமா இரண்டு மணி நேரம் கூட ஆகலடா. ஆனால் அவன் நினைவு என்னை கொல்லுதடா. நீ என்னை என் மனசை புரிஞ்ச நல்ல நண்பன் தானே அது தான் உங்கிட்ட சொல்றன் எப்பிடி அவன்கிட்ட சொல்றது என்று தெரியல என்றாள்.

தனேஷிற்கு பேரிடி தலையில் விழுந்தது போல் இருந்தது. என்ன செல்வி சொல்றாய் யாரவன் என்ன பார்த்ததும் லவ்வா? யாரது என்று கேள்வி மேல கேள்வி கேட்டான். எனக்கு தெரிஞ்ச பையன் தான் நாளைக்கு நான் உனக்கு காட்டுறன் வாறியா என்றாள். அவன் குரலில் தடுமாற்றம் ஏமாற்றம் வலி எல்லாமே தெரிந்தது. சரி செல்வி நாளைக்கு உன் டாடி வர சொன்னார் காலைல அவர சந்திச்சிட்டு உன் கூட வாறன் என்றான்.

சரி தனேஷ் தாங்ஸ்டா என்றாள். அவன் ஒற்றை வார்த்தையில் ம் என்று பதில் கூறினான். என்னடா ரொம்ப டல் ஆக பேசுறாய் என்னாச்சுடா என்றாள். ஒண்ணுமில்ல கொஞ்சம் களைப்பா இருக்கு வேற ஒண்ணுமில்ல தூங்கிட்டு இருந்தன் உன் போன் றிங் கேட்டு தான் எழுந்திருந்தன். அது தான் தூக்க கலக்கம் என்றான். ஓ அப்பிடியா சரி சரி தூங்கு மூஞ்சி நல்லா தூங்கு நான் போனை கட் பண்ணுறன் குட் நைற் என்று கூறி போனை கட் செய்தாள்.

அன்று இருவரின் தூக்கமும் தொலைந்து போனது. செல்வி தனேஷ் பற்றிய நினைவுகளுடன் தூங்காது இருந்தாள். தனேஷ் செல்வி கூறிய வார்த்தைகளின் சோகத்தால் தூங்காது இருந்தான். மொத்தத்தில் காதலால் இருவரும் தூங்காது இருந்தார்கள்.

திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. உயிருக்குயிராக தான் நேசித்த செல்வி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியாத தனேஷ் எழுந்து சென்று தன் அலுமாரியை திறந்து அதற்குள் இருந்த தூக்க மாத்திரையை கையில் எடுத்தான்.

தொடரும்……..!
பாகம் 63
Last edited by Aruntha on Wed Jun 13, 2012 12:06 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 63

Post by Aruntha » Wed Jun 13, 2012 12:05 pm

செல்வி கூறிய வார்த்தைகள் நிச்சயமாக அவனது தூக்கத்தை கலைக்கும் என்று தெரிந்தவன் அதிலிருந்து ஒற்றை மாத்திரையை எடுத்து போட்டு விட்டு தூங்க சென்றான். தூக்க மாத்திரையை கூட தோற்கடித்தது அவளது நினைவுகள். இருந்தும் சற்று நேரத்தில் அவன் தூங்கி விட்டான்.

காலையில் சீக்கிரமாய் எழுந்தவன் தனது தாயாரையும் ஆயத்தப்படுத்தி செல்வன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான். அவனால் செல்வியை நேருக்கு நேர் பார்க்க முடியாத மனநிலை இருந்தும் அவளது தந்தையின் வார்த்தைகளை மதித்து அங்கு சென்றான்.

தனேஷின் வருகைக்காகவே காலையில் சீக்கிரம் எழுந்து அழகாக உடை அணிந்து காத்திருந்தாள் செல்வி. கோலிங் பெல் சத்தம் கேட்டு துள்ளிக் குதித்தபடி சென்றாள் செல்வி. அங்கு தனேஷை பார்த்ததும் வா தனேஷ் வாங்க ஆன்டி என்று அவர்களை வரவேற்றாள். அழைத்து வந்து ஹோலில் இருத்தினாள்.

வாப்பா தனேஷ் எப்பிடி இருக்கிறாய் என்றபடி வந்தார் குமார். அம்மா நீங்க எப்பிடி இருக்கிறீங்க பையன் எப்பிடி நல்லா பாத்துக்கிறானா என்றார் குமார். எனக்கென்னப்பா என் வீட்டுக்காரர் இல்லை என்ற ஒரு குறையை தவிர என் பையன் என்னை ரொம்ப பாசமா பாத்துக்கிறான். அதுக்கும் மேல நீங்க வேலை போட்டு குடுத்ததில் பணம் பிரச்சினையும் இல்லை என்றார் தனேஷின் அம்மா.

சரிம்மா அதையெல்லாம் விடுங்க என்றான் குமார். சரி அங்கிள் செல்வன் நிச்சயதார்த்த வேலை இருக்கென்று பேசினீங்க என்ன பாக்கணும் என்றான் தனேஷ். அதுவா அது ஒரு நிச்சயதார்த்தம் இல்லை இரண்டு நிச்சயதார்த்தம். செல்வன் நிச்சயதார்த்ததோட செல்விக்கும் ஒண்ணா பண்ணலாம் எனறு இருக்கம் என்றார்.

அப்பிடியா ரொம்ப சந்தோசம். மஹாலக்சுமி போல இருக்கிற பொண்ணு அவளுக்கென்ன சீக்கிரமா பையன் கிடைப்பான் தானே என்றார் தனேஷின் தாய். பையன பாத்தாச்சு செல்விக்கும் பையன பத்தி சொல்ல அவளுக்கும் மனசுக்கு பிடிச்சிட்டு அது தான் ஒண்ணாவே முடிச்சிடலாம் என்று பாக்கிறன் என்றார் குமார்.

ஏற்கனவே செல்வி கூறிய வார்த்தைகளால் மனமுடைந்திருந்த தனேஷிற்கு குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது. அவன் செல்வியை நிமிர்ந்து பார்த்தான். அவள் புன்முறுவலுடன் அவனை பார்த்து கண்களை சிமிட்டினாள். அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென எழுந்து வெளியில் சென்றான்.

தனேஷ் எங்கப்பா போறாய் என்ற கமலியின் குரலால் நின்றவன் ஒண்ணுமில்ல ஆன்டி சும்மா தான் என்றான். தனேஷ் இந்தாப்பா இவ்வளவு சந்தோசமான விஷயங்கள் வீட்டில நடக்கிறப்ப உனக்கும் ஒரு சந்தோசம் காத்திருக்கு என்றான் குமார். அவனுக்கு குமார் கூறிய வார்த்தைகள் மனதிற்கு மகிழ்வாக இல்லை இருந்தும் போலியான புன்முறுவலுடன் சொல்லுங்க அங்கிள் என்றான். என்னப்பா நான் எவ்வளவு சந்தோசமா சொல்றன் உன் முகத்தில அந்த எதிர்பார்ப்பு எதுவுமே இல்லை என்று கூறி அவன் கையில் ஒரு கடித உறையை கொடுத்தார் குமார்.

என்ன அங்கிள் என்று கேட்க பிரிச்சு படிச்சுப்பாருப்பா என்றார். அவன் கடித உறையை பிரித்த போது அதற்குள் அவனை தங்கள் கம்பனியின் எம்டி ஆக பதவி உயர்வு பண்ணிய பத்திரம் இருந்தது. என்ன அங்கிள் இதெல்லாம் என்னை போய் உங்க கம்பனில எம்டி ஆக போட்டிருக்கிறீங்க அப்பிடி என்ன தகுதி என்னிடம் இருக்கு எனக்கு கம்பனி பத்தி அந்தளவுக்கு என்ன தெரியும் என்றான்.

அதெல்லாம் போக போக தெரிஞ்சுக்கலாம் உனக்கு திறமை இருக்கு அப்புறம் என்ன என்றார் குமார். அதுக்காக என்னை எதுக்கு அங்கிள் உங்க பையன் செல்வன் இருக்கான் அவனை போட்டிருக்கலாமே என்னை போய் எம்டி ஆக எல்லாம் என்று இழுத்தான். இல்லைப்பா என் பொண்ணை கட்டிக்க போற மாப்பிளை என்ன பண்ணுறான் என்று யாராச்சும் கேட்டால் எங்க கம்பனில எம்டி ஆக இருக்கான் என்று நான் பெருமையா சொல்ல வேணாமா என்றார் குமார்.

என்ன சொல்றீங்க அங்கிள் உங்க பொண்ணை கட்டிக்க போற மாப்பிளை…………………… என்று அவரை ஆச்சரியமாக பார்க்க ஆமாப்பா எங்களுக்கெல்லாம் நீ செல்விய எவ்வளவு தூரம் நேசிக்கிறாய் என்றது தெரியும். அதை நீ சொல்லாம இருக்கிறது கூட உன் குடும்ப நிலைமை ஸ்டேடஸ் பாத்து என்றதும் தெரியும் அது தான் என் பொண்ணை புரிஞ்ச ஒருத்தன கட்டி வைக்கணும் என்று யோசிக்கிறம் என்றார் குமார்.

அங்கிள இத பத்தி உங்களுக்கு யாரு சொன்னாங்க என்று கேட்க உன்னோட அப்பாட சாவு வீட்டுக்கு வந்தப்ப உன் டைறி எதேச்சயா செல்வன் சிவா கண்ணில பட்டிச்சு. அப்போ தெரிஞ்சது ஆனால் அவங்க இத பத்தி அப்போ எதுவும் பேசல. நேற்று தான் என் கூட பேசினான் செல்வன் என்றார்.

அப்பிடியா அங்கிள் அப்போ இது பத்தி செல்வி கூட பேசிட்டிங்களா? அவள் மனசில என்ன இருக்கென்று தெரிஞ்சதுக்கப்புமா தான் என்னோட கதைக்கிறீங்களா என்றான் தனேஷ். ஆமாப்பா அவளோட செல்வன் நேற்று சாயங்காலம் தான் கதைச்சான். நம்ம எல்லாருக்கும் சம்மதம் எண்டதுமே செல்வியும் சம்மதம் சொல்லிட்டாள் அது தான் உன் கூட பேசலாம் என்று வர உனக்கு சப்றைஸ் ஆக சொல்லலாம் என்று தான் நேற்று விபரம் சொல்லல என்றார் குமார்.

தனேஷ் செல்வியை நிமிர்ந்து பார்த்தான். ப்ளீஸ் தனேஷ் கோவிச்சுக்காத நீ என்னை லவ் பண்ணிட்டு இருந்தாய் ஆனால் எனக்கு சொல்லல. அது தான் செல்வன் என் கூட உன்னை பத்தி பேசினதுக்கப்புறமா வீட்டில ன் எல்லாரும் ஓகே சொன்னதால நான் நேற்று அப்பிடி போன் பேசினன் வேற ஒண்ணுமில்ல. உன் கூட வம்பு பண்ண தான் அப்பிடி சொன்னன் என்றாள்.

அடிப்பாவி உன்னை எவ்வளவு நல்லவள் என்று நினைச்சன் என்னை இப்பிடி ஏமாத்திட்டியே என்று அவளை அடிக்க ஓடினான். என்னப்பா நடக்குது இங்க ஒண்ணுமே புரியல என்றாள் ரமி. அதுவா நேற்று இரவு 11 மணிக்கு அப்புறமா செல்வி போன் பண்ணி தன்னோடு பேசியதை எல்லாம் கூறினான் தனேஷ். ஆஹா இதெல்லாம் நடந்திருக்கா சொல்லவே இல்லை என்று சிரித்தார்கள்.

அங்கிள் உண்மைலயே உங்களுக்கு பெரிய மனசு. உங்க வசதிக்கும் அந்தஸ்த்துக்கும் எவ்வளவு பெரிய இடத்தில சம்பந்தம் பண்ணலாம். செல்வி கூட என்னை லவ் பண்ணல ஆனால் நான் அவள நேசிக்கிற ஒரே காரணத்துக்காக எனக்கு கட்டி வைக்க முடிவு பண்ணி இருக்கிறீங்களே என்றான். அப்பிடி இல்லப்பா பணம் வசதி இதில என்ன இருக்கு? எங்க பொண்ணு வாழ போற இடம் குணமானவங்க இருக்கிற இடமா இருக்கணும். அது உன்கிட்டயும் உன் அம்மாகிட்டயும் நிறையவே இருக்கு.

அதுக்கும் மேல செல்வி செல்லமா வளர்ந்த பொண்ணு. அவளை மனசால புரிஞ்ச ஒருத்தனுக்கு தான் கட்டி வைக்கணும் என்று ஆசைப்பட்டம். நீ அவள ரொம்பவே புரிஞ்சு வைச்சிருக்கிறாய் அதுக்கும் மேல அவள ரொம்பவே நேசிக்கிறாய் இத விட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்? பணம் இன்னிக்கு இருக்கும் நாளைக்கு போகும் குணம் தான் எப்பவுமே நிரந்தரம் என்றார் குமார்.

ஆமா தனேஷ் நாளைக்கே நீ உழைச்சு நல்ல நிலைக்கு வந்தால் நீயும் ரொம்ப வசதியானவன் ஆகிடுவாய் அப்புறம் என்ன இதையெல்லாம் மனசில நினைக்க கூடாது உனக்கு செல்விய பிடிச்சிருக்கு தானே அப்போ அவளோட கடைசி வரைக்கும் சந்தோசமா வாழுறத பத்தி மட்டும் நினைச்சா போதும் என்றார் ராஜன்.

தனேஷின் தாயாரை பார்த்து என்னம்மா எதுவுமே பேசாம இருக்கிறீங்க என்றாள் கமலி. என்னம்மா சொல்ல ரொம்ப சந்தோசமா இருக்கு இப்பிடி ஒரு சம்பந்தம் என் பையனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. என்ன இதையெல்லாம் பார்க்க என் வீட்டுக்காரர் தான் உயிரோட இல்லை என்று கலங்கினார்.

அப்பிடி இல்லையம்மா அவர் உங்க கூட இல்லாவிட்டாலும் அவரோட அன்பான ஆன்மா உங்கள சுத்தி தான் இருக்கும். நீங்க சந்தோசமா இருந்தால் அந்த ஆத்மாவும் சந்தோசமா இருக்கும் என்றார் பிரியா. செல்வி உன் அத்தை காலில விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்றாள் பிரியா. செல்வியும் தனேஷின் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.

சரி நாங்க வாற 25 ம் திகதி செல்வன் நிச்சயதார்த்தம் வைச்சிருக்கிறம். அன்னிக்கே இவங்களுக்கும் பண்ணிடலாம். செலவ பத்தி எல்லாம் யோசிக்காதீங்க யார் யாருக்கு சொல்லணுமோ அவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க. ஒரு வருசத்தால கல்யாணத்தை பண்ணிக்கலாம் என்றார் குமார். திடீரென்று எல்லாம் முடிவு பண்ணிட்டம் அதால பெருசா திட்டம் போட்டு செய்ய முடியல. பணத்தை பத்தி கவல படாதீங்க. நம்ம பசங்க வாழ்க்கை. நீங்க எல்லாம் பாத்து எவ்வளவு பணம் வேணும் என்றாலும் கேளுங்க தாறன் உங்களுக்கும் ஒரே பையன் எனக்கும் ஒரே பொண்ணு அவங்க வாழ்க்கைல நடக்கிற நல்ல விசேஷம் நல்லா பண்ணணும் என்றார் குமார்.

தொடரும்……………!
பாகம் 64
Last edited by Aruntha on Fri Jun 15, 2012 8:33 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 64

Post by Aruntha » Fri Jun 15, 2012 8:32 pm

எதிர்பாராத சந்தோஷம் தான் ஆசைப்பட்ட காதல் தேவதையே தனக்கு மனைவியாக வரும் அதிஷ்டம் இதையெல்லாம் பார்த்து தனேஷ் ரொம்பவே மகிழ்வாக இருந்தான். அங்கிள் அப்போ நிச்சயதார்த்த வேலை இருக்கிறதா சொன்னீங்க என்றான் தனேஷ். அது தானே பேசி முடிச்சாச்சு அப்புறம் என்ன என்று சிரித்தார்கள். சரி டாடி நாங்க மாடில போய் பேசிட்டு இருக்கிறம் நீங்க இருங்க என்று கூறினான் செல்வன். செல்வன், செல்வி, தனேஷ், ரமி நான்கு பேரும் மாடிக்கு சென்றார்கள்.

ஏய் செல்வி நீ இவ்வளவு அமைதியா இருந்து கேட்டிட்டு எங்களுக்கே சொல்லாம தனேஷ் கூட பேசினாயா என்றாள் ரமி. ஆமா பேசணும் என்று ஐடியா இருக்கல. ஆனாலும் போய் தூங்குவம் என்று கட்டில்ல படுத்தனா செல்வன் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்திச்சு. இவன் டைறில என்னை பத்தி எழுதினதெல்லாம் நினைச்சன். அப்புறமா தான் இவ்வளவு காலமும் மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வைச்சிட்டு பழகி இருக்கானே என்றதால தான் போன் பண்ணினான் என்றாள்.

அடிப்பாவி நீ போன் பண்ணினப்ப நீ தனக்கு கிடைக்க மாட்டாய் என்ற விரக்தில அவன் தப்பா ஏதும் முடிவெடுத்திருந்தால் என்னடி பண்ணியிருப்பாய் லூசா நீ என்று திட்டினான் செல்வன். டேய் நான் லூசு இல்லடா நீ தான் லூசு. அவன் என்னை உண்மையா தானே நேசிச்சான். அவனோட நேசத்திலஅவன் உறுதியா இருந்தால் கண்டிப்பா கிடைக்கும் என்ற நம்பிக்கைல இருப்பான். அதுக்கும் மேல அவன் மனசில இருக்கிறது நான். தான் தப்பான முடிவெடுத்து உயிர விட்டு தன் மனசில இருக்கிற என்னை சாகடிக்க மாட்டான் என்றாள்.

இங்க பாருடா நம்மட செல்வியா இப்பிடி கதைக்கிறாள் என்று அதிர்ச்சியடைந்தாள் ரமி. ஆமாடி நான் தான் கதைக்கிறன் ஏன் நம்ப முடியலயா என்றாள். இல்லடி இவ்வளவு சின்னப்பிள்ளை தனமா சண்டை பிடிக்கிற உனக்கு காதலை பற்றி புரிஞ்சு அத பத்தி தத்துவம் எல்லாம் பேசுறியே அது தான் ஆச்சரியமா இருக்கு என்றாள்.

டேய் செல்வா இந்த சந்தோசமான விடயத்தை முதலில சிவாக்கு போன் பண்ணி சொல்லு. அவன் வேலை இல்லாம இருந்தால் வர சொல்லு என்றான் தனேஷ். ஆமாடா நான் மறந்தே போய்டன் என்று கூறி சிவாவிற்கு போன் செய்தான் விபரத்தை கூறி வீட்டுக்கு வரும் படி கேட்டான். அவனும் இன்னும் அரை மணி நேரத்தில வீட்டில இருப்பன் என்று கூறி போனை கட் செய்தான்.

அப்பா நான் செல்வன் வீட்டுக்கு போய்ட்டு வாறன் என்றான் சிவா. என்னப்பா திடீரென்று எனக் கேட்க இது தான் சந்தர்ப்பம் தந்தையின் மனதில் இருக்கிற செல்விக்கும் தனக்குமான சந்தேகத்தை போக்க எண்ணி இன்னிக்கு செல்விக்கு மாப்பிளை பாத்தாங்களாம். பேசி முடிச்சாச்சு. அது தான் எல்லாருமே சந்தோசமா இருக்கிறாங்க என்னையும் கூப்பிட்டாங்க என்றார். அவன் இவ்வளவு கூறியும் அவனை தடுக்க விரும்பாத மாசிலாமணி சரிப்பா போய்ட்டு சீக்கிரமா வா எங்களோ் வாழ்த்தையும் அவளுக்கு சொல்லிடு என்று கூறினார்.

அவன் தந்தையின் மனதை தெளிய வைத்த திருப்தியோடு காரை எடுத்துக் கொண்டு செல்வி வீட்டை நோக்கி சென்றான். அங்கு அவனை கண்ட கமலி வாப்பா என்ன திடீரென்று சொல்லாமலே வந்திட்டாய் ரொம்ப சந்தோசமப்பா என்றாள். செல்வன் போன் பண்ணினான் நம்ம செல்விக்கு நிச்சயம் பண்ணுறது பத்தி பேசினான் அது தான் உடனுமே வந்திட்டன் என்றான். சரிப்பா அவங்க மாடில இருக்கிறாங்க நீ மேல போ என்று கூறினாள்.

அவனும் மாடிக்கு சென்று அவர்களின் கலாட்டா கிண்டலுடன் ஒன்றாகினான். சரி நம்ம செல்விக்கும் இனி குடும்ப பொறுப்பு வர போகுது. அப்புறமா ரமி மட்டும் தான் பாக்கி சீக்கிரமா அவளுக்கும் மாப்பிளைய பார்த்தால் அவளுக்கும் கால் கட்டு போட்டிடலாமே என்றான். என்னகால் கட்டா உதை விழும் உனக்கும் தான் கால் கட்டு போடணும் அப்புறம் என்ன என்றாள். ஆஹா தேவையில்லாம வாய குடுத்து மாட்டிக்கிட்டமா? அம்மா தாயே நான் எஸ்கேப் என்றான்.

டேய் நீயும் தனேஷ் போல யாரயாச்சும் மனசுக்குள்ள நினைச்சிட்டு இருக்கிறியா அப்பிடி இருந்தால் இப்பவே சொல்லிடு சீக்கிரமா அவளை பிடிச்சு உனக்கு கட்டி வைக்கிறம் என்றாள் செல்வி. நானா? லவ்வா? அதெல்லாம் நமக்கு வேணாமப்பா அப்பா அம்மா ஒருத்திய பார்த்து இவள் கழுத்தில தாலிய கட்டிக்கோ என்றால் கட்டுவன் என்றான். அடப்பாவி அப்போ கழுதைய காட்டி கட்ட சொன்னாலும் கட்டுவியா என்றாள் ரமி. உன்னை போல ஒருத்திய காட்டி கட்ட சொல்லாம கழுதைய காட்டி கட்ட சொன்னால் சந்தோசமா கட்டிடுவனே என்றான்.

என்னடா நான் அவ்வளவு அசிங்கமாவா இருக்கிறன். என்னை பார்த்து கழுதை என்கிறியா உன்னை என்னை பண்ணுறன் பாரு என்று கூறி அவனை கலைத்து கலைத்து அடித்தாள். ஐயோ உன்னை பார்த்து யாருப்பா கழுதை என்று சொன்னாங்க உன்னை விட கழுதை எவ்வளவே மேல் என்று தானே சொன்னன் என்றான். டேய் வேணாம் மறுபடியும் என்ன வம்புக்கு இழுக்காத என்று கத்தினாள்.

பாருடா உனக்கு அசிங்கமா ஒரு பொண்டாட்டி வந்து உன்னை இருத்தி எழுப்பேக்க தெரியும் என்றாள் ரமி. ஹலோ நாங்க ஹீரோ நம்மளுக்கெல்லாம் தேவதை மாதிர பொண்ணு கிடைக்கும். என்ன நாம தான் யாரையும் திரும்பி பாக்கிறதில்ல ஒருக்கா சிரிச்சம் எண்டா நூறு பிகர் மடியும் மச்சி என்றான். சிவா நீ ரொம்ப பேசுறாய் நீங்க ஹீரோ என்று நாங்க சொல்லணும் தன்னை தானே சொல்ல கூடாது என்றாள்.

சரிப்பா உங்க சண்டைய அப்புறமா வச்சுகோங்க இப்ப ஒருத்தி மிஸ்ஸிங் பேசாம ரேவதிக்கும் போன் போட்டு கூப்பிட்டா ஜாலியா இருக்கும் என்றாள் செல்வி. ஆமால்லா நம்ம செல்வனும் ரேவதிய பாக்காம ரொம்ப இளைச்சு போய்டான் இல்லையா சிவா என்றான் தனேஷ். சரி இவங்க கும்பலா கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க நான் தான் பாவம் என்று கூறி நீங்க போன் பண்ண வேணாம் நானே பண்ணுறன் என்று ரேவதிக்கு போன் செய்தான்.

ஹலோ ரேவதி எங்க இருக்கிறாய் என்றான் செல்வன். நானா ரொம்ப பிஸியா என் boy friend ட பார்க்க போய்க்கொண்டிருக்கிறன் என்றாள். boy friend டா? அது யாருப்பா எனக்கு தெரியாமல் என்றான். அவனா அவன் ரொம்ப கெட்டவன். அவனுக்கு என்னை பத்தின நினைவே இல்லை அவனை பத்தி என் கூட பேசாத என்று திட்டினாள். ஓ அப்பிடியா நீ உன் boy friend மேல ரொம்ப கோவமா இருக்கிறாய் நான் உன்னை வீட்டுக்கு கூப்பிட தான் போன் பண்ணினான் அது சரி வரும் போல தெரியல நான் போனை வைக்கிறன் என்றான்.

ஹலோ என்ன நக்கல் பண்ணுறியா? சரி நீ போனை கட் பண்ணு என்றாள். என்ன ரேவதி இப்பிடி சொல்றாய் நான் சும்மா தான் கோவிச்சன் நீ கோவிக்கிறியா என்றான். ஐயோ இவங்க ரொமான்ஸ் தாங்க முடியலப்பா டேய் முதல்ல போனை கட் பண்ணிட்டு நிமிந்து பாருடா என்றாள் ரமி. ஏய் ரேவதி என்னை இங்க நிக்கிறாய் என்றான். டாடி அங்கிள் கூட ஏதோ பேசணும் என்று வந்தார். அப்போ நானும் வந்தன். உனக்கு சொல்லாம சப்றைஸா வர நினைச்சன் அது தான் என்றாள்.

என்னப்பா எல்லாருமே சப்ரைஸ் சப்ரைஸ் என்று மனுசரிட உயிர வாங்கிறீங்க. இந்த சப்றைஸ்க்கு ஒரு முடிவ கட்டுங்கடா என்றான் தனேஷ். சார் ரொம்ப கடுப்பில பேசுறார் என்றாள் ரமி. இருக்காதா பின்னை நேற்று என் தூக்கத்தை கெடுத்ததுமில்லாம எவ்வளவு குழப்பிட்டாள் இந்த செல்வி எண்ட லூசு என்றான். இவங்களாவது பறவாயில்லை இவங்க கூட அங்கிள் ஆன்டி எல்லாரும் சேர்ந்திட்டாங்க. சப்றைஸா பொண்ணு பாக்கிறது மாப்பிளை பாக்கிறது எண்ட பெயரில நாளைக்கு யாராயாச்சும் கொண்டு வந்து என் பையன் உன் பொண்ணு என்று அறிமுகப் படுத்த போறாங்க என்றான் தனேஷ்.

தனேஷ் கூறிய வார்த்தைகளால் தடுமாறிய ரமி என்னடா உழறுறாய் என்றாள். என்ன ரமி சும்மா விளையாட்டா தானே கதைச்சிட்டு இருக்கிறம் நீ ஏதோ அவள் சொன்ன போல நிஜமாவே கொண்டு வந்து அறிமுகப்படுத்த போற போல எதுக்கு ரென்ஷன் ஆகிறாய் என்றாள் செல்வி. அவள் போலியாக சிரித்தபடி இல்லடா சும்மா தான் என்று கூறினாள். ரமி நீ இப்போ அடிக்கடி சின்ன விசயத்துக்கெல்லாம் டென்ஷன் ஆகிறாய் அது உடம்புக்கு நல்லதில்ல என்றான் செல்வன். என்ன சார் டாக்டர் பொண்ண கட்டிக்கபோறதால நீங்க உடம்பு நல்லது கெட்டது பத்தி அட்வைஸ் பண்ணுறீங்களா என்றாள்.

ஏனடி நான் எதேச்சயா சொல்றதையெல்லாம் இப்பிடி சொல்றாய். சரி சரி ரொம்ப களைப்பா இருக்கு போய் ஏதாச்சும் குடிக்க எடுத்து வாங்க என்றான் செல்வன். இருங்க நான் போய் எடுத்து வாறன் என்று கூறி ரமி எழுந்தாள். அவள் மாடிப்படிகளில் இறங்க இறங்க தனேஷ் கூறிய வார்த்தைகள் அவள் காதிலே எதிரொலித்தது. தனேஷ் விளையாட்டா சொன்னது குமார் அங்கிள் விடயத்தில நடந்தால் கூட ஆச்சரியமில்லை என்று அவள் உள் மனது சொல்லியது.

தொடரும்…………!
பாகம் 65
Last edited by Aruntha on Sat Jun 16, 2012 9:44 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 65

Post by Aruntha » Sat Jun 16, 2012 9:43 pm

இறங்கி சென்றவள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்பானம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் சென்று எல்லாவற்றையும் மறந்து மகிழ்வாக இருந்தாள். எல்லாரும் விடைபெற்று சென்றதும் ரம்யா தன்னுடைய அறையில் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவளுக்கு குமார் அங்கிளின் மற்றைய பையன் எப்படி இருப்பான்? அவன் எங்கு இருப்பான் என்ற எண்ணம் அவள் மனதை சுற்றியபடி இருந்தது. அவளால் தன் மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

தன் தந்தையுடன் பேசலாம் என்று அவரின் அறையை நோக்கி சென்றாள். அங்கு ராஜனும் பிரியாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ரம்யாவிற்கும் சீக்கிரமா சம்பந்தம் பேசணும் என்று ஆசைப்பட்டார்கள். அவளோடு சேர்ந்த எல்லாரும் தமக்கென்று வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது அவளுக்கும் ஒண்ண பாக்கலாம் என்றாள் பிரியா.

அப்போது தான் நாம ரொம்ப காலமா நண்பர்களா இருந்து செல்வன ரமிக்கு பேசி உறவுக்காரங்கள் ஆகலாம் என்று பார்த்தம். அத பத்தி நாம இரண்டு குடும்பமும் பேசி கொண்டிருக்கும் போதே நரேஷ் வந்து ரேவதிய பேசி முடிச்சிட்டார். அந்த சூழ்நிலைல அவங்களும் சம்மதிச்சிட்டாங்க. செல்வனுக்கும் ரேவதிய ரொம்ப பிடிச்சிருந்திச்சு. அவன் மனசில கூட ரமி ஒரு நண்பியா நல்ல சகோதரியா தான் இருக்கிறாள் என்றார் ராஜன்.

நம்ம இரண்டு குடும்பமும் ஆயுளுக்கும் நண்பர்களாக தான் இருக்கணும் என்று அந்த கடவுளே ஆசைப்படுறான் போல முடிஞ்சு போனத விடுங்க என்றாள் பிரியா. அவங்களுக்கு மட்டும் இன்னொரு பையன் இருந்தால் ரமிய கட்டி வைச்சிருக்கலாம். கடவுள் எங்க நாம நினைக்கிறத எல்லாம் நடத்துறான் என்றாள் பிரியா. ஆமா பிரியா எல்லாம் நமக்கெழுதின எழுத்துப்படி தான் நடக்கும் என்று கூறினான். சரி இருங்க நான் சமையலறைல சில வேலை இருக்கு பார்த்திட்டு வாறன் என்று கூறி சென்றாள்.

என்ன டாடி நீங்க பேசினத எல்லாம் கேட்டிட்டு தான் இருந்தன். என்னை யாரோட கையில பிடிச்சுக் குடுத்திடணும் என்று தீவிரமா இருக்கிறீங்க. அதெல்லாம் இப்போ வேணாம். அவங்களுக்கு நிச்சயம் பண்ணுறதால எனக்கொரு கஷ்டமும் இல்லை. நாங்க எல்லாம் நல்ல நண்பர்கள் அதுக்கப்புறம் தான் அவங்களுக்குள்ள காதல் எல்லாம். சும்மா மனச போட்டுக் குழப்பாம இருங்க என்றாள் ரமி.

என்ன டாடி உங்களுக்கும் செல்வன் குடும்பத்துக்கும் நட்பு என்றதையும் மீறி உறவுக்காரங்களா சம்மந்தி ஆகணும் என்று ஆசை இருந்திச்சா அது நடக்கல என்று கவலையா? அப்பிடி எல்லாம் இல்ல டாடி எனக்கும் செல்வனுக்கும் அப்பிடி ஒரு உணர்வு வந்ததே இல்லை. நீங்க ஆசைப்பட்டால் கூட அதுக்கு நாங்க சம்மதிச்சிருக்க மாட்டம் என்றாள். குமார் அங்கிளோட மற்ற பையன் இருந்தா உங்க ஆசை நிறைவேறி இருக்குமா? அப்பிடி என்றால் அவன தேடிப்பிடியுங்க. அவன் எப்பிடி இருந்தாலும் நான் அவன கல்யாணம் பண்ணிக்கிறன் உங்க ஆசையும் நிறைவேறும் என்றாள்.

என்ன லூசு போல கதைக்கிறாய்? அவன் இருக்கானா இல்லையா? எப்பிடி இருக்கிறான் எதுவுமே தெரியாது. வாழ்க்கையில அவன சந்திப்பமோ என்று கூட தெரியாது நீ இப்பிடி சொல்றாய் என்றார் ராஜன். டாடி என்னோட உள் மனசு சொல்லுது குமார் அங்கிள் பையன நாம எல்லாருமே சீக்கிரமா சந்திப்பம் அவன் கூட சந்தோசமா இருப்பம் என்று. அவன் எங்கோ ஒரு மூலைல நல்லா இருப்பான் என்ற நம்பிக்கை இருக்கு என்றாள்.

என்னம்மா இப்பிடி சொல்றாய் என்ற ராஜனின் கேள்விக்கு டாடி நான் சொல்லி இதுவரையில எதுவுமே நடக்காம போனதில்லை. செல்வன் ஹாஸ்பிடலில இருந்த ரைம் கூட அவன் பழைய மாதிரி வருவான் என்று அடிச்சு சொன்னன். எல்லாமே நடந்திச்சு தானே. நீங்க எல்லாருமே சொல்லுவீங்க தானே உன் வாக்கில தெய்வீகம் குடியிருக்கு என்ன சொன்னாலும் அப்பிடியே பலிக்கும் என்று. அப்போ இதையும் நம்புங்க என்றாள் ரமி.

ரமி உன் பேச்சில உள்ள நம்பிக்கை திடம் எல்லாமே மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்றான். கண்டிப்பா இது நடக்கணும் குமார் முகத்தில என்றைக்குமே இல்லாத சந்தோசத்தை பார்க்கணும் என்று என் மனசு போட்டு துடிக்குதடா என்றான். டாடி அது மட்டுமில்ல அவர் பையன் கண்டிப்பா கிடைப்பான் கவல படாதீங்க அதோட நீங்க எல்லாருமே ஆசைப்பட்டது போல நீங்க குமார் அங்கிள் குடும்பத்தோட சம்மந்தி ஆகுவீங்க. கிடைக்கப்போற அவங்க பையன் தான் என் புருஷன் என்றாள் ரமி.

என்னடி பெரிய மனுசி போல பேசுறாய் நீ பேசுறத கேக்க சந்தோசமா இருக்கு. எல்லாமே நடக்கணுமே அதோட அவன் எப்பிடி இருப்பான் என்று கூட தெரியாமல் எப்பிடி சொல்லுவாய் அவன தான் கட்டிப்பன் என்று கேட்டான் குமார். என்னவோ தெரியல டாடி உங்க எல்லாரோட ஆசைக்கும் ஏற்ற போல அவன் நல்லவனா இருப்பான் நல்ல நிலைமைல இருப்பான் என்ற நம்பிக்கைல தான் சொல்றன் என்றாள் ரமி. கண்டிப்பா நீங்களும் குமார் அங்கிள் குடும்பமும் சம்மந்தி ஆகுவீங்க என்றாள்.

அவள் கண்களை பார்த்த ராஜனிற்கு புது நம்பிக்கையே பிறந்தது போல இருந்திச்சு. அதுக்கும் மேல தாங்கள் எல்லாரும் ஆசைப்பட்டதற்காக யார், பெயர், நிறம், முகம் தெரியாத ஒருத்தனையே தனக்கு புருஷனா நினைக்கிறாளே இப்பிடி ஒரு பொண்ண பெத்ததுக்கு ரொம்ப குடுத்து வைச்சிருக்கணும் என்று மனசுக்குள் அவள மெச்சினான் ராஜன். என்ன டாடி இப்பவே கனவா? ரொம்ப கனவு காணாதீங்க எல்லாம் நல்லா நடக்கும் என்று கூறி கண்களை சிமிட்டியபடி தனது அறையே நோக்கி துள்ளி குதித்தபடி சென்றாள்.

அவள் கூறிய வார்த்தைகளை மனசுக்குள் வைத்திருக்க முடியாமல் அதை யாருடனாவது பகிர்ந்து மகிழணும் என்று எதிர்பார்த்தான். அதை தன் மனைவி பிரியாவுடன் கூட பேச முடியாதே என்நு வருந்தியவன் குமாரிற்கு போன் செய்தான். என்னடா இப்ப தானே வீட்டுக்கு போனாய் என்ன அதுக்கிடைல போன் என்ற குமாரின் கேள்விக்கு ரமி கூறியவற்றை அப்படியே கூறினான். அப்பிடியாடா உண்மைலயே எவ்வளவு சந்தோசமா இருக்கு. அதுக்கும் மேல ரமி ஏதாச்சும் சொன்னாள் என்றாள் அது கண்டிப்பா நடக்கும் என்று கூறினான்.

இப்ப நாம பேசினதெல்லாம் அப்பிடியே நடந்தால் எவ்வளவு சந்தோசமா இருக்கும். அந்த கடவுளுக்கும் கருணையில்லையா நம்மட மனசில உள்ள ஆசையெல்லாம் அவனுக்கு புரியாதா? அந்த பிஞ்சு உள்ளம் ரமி கூட நாம சம்மந்தி ஆகணும் என்று ஆசைப்பட்டத தெரிஞ்சு என்னோட மற்ற பையன் கிடைச்சால் என்ன நிலைல இருந்தாலும் கட்டுவன் என்று சொல்றாளே அவளேட அந்த பெரிய மனசுக்காவது அவன் நல்ல நிலைமைல எங்களுக்கு கிடைக்கணும் நம்ம ஆசையெல்லாம் நிறைவேறணும் என்றான் குமார்.

ஆமாடா இப்போ தானே வீட்டில நல்ல விஷேசம் முதல் முதலில நடக்க போது அதோட எல்லாமே நல்லா நடக்கும். நீ எதுக்கும் யோசிக்காத நிம்மதியா போய் தூங்கு என்றான் ராஜன். சரியடா நீயும் நேரத்தோட தூங்கு என்று கூறி போனை கட் செய்தான் குமார். ரமி கூறியதாக ராஜன் சொல்லிய வார்த்தைகள் குமார் நெஞ்சில் பாலை வார்த்து குளிர்மை படுத்தியது போல இருந்திச்சு. அந்த மகிழ்வான வார்த்தைகளோடு கண்களை மெல்ல மூடி தூங்கினான்.

டாடி கூட பேசிய ரமி தன்னுடைய படுகையில் தூக்கம் வராமல் புரண்டபடி இருந்தாள். குமார் அங்கிளோட மற்ற பையன் எப்பிடி இருப்பான். செல்வன் போல நல்ல குணமானவனா இருப்பானா? நம்மட குடும்பத்தை எல்லாம் புரிஞ்சவனா இருப்பானா? அதுக்கும் மேல இப்போ எப்பிடி நல்ல நிலைல இருக்கிறானா? கஷ்டப்படுறானா? அவள் மனது ஆயிரம் கேள்விகளை கேட்டு அலை பாய்ந்தபடி இருந்தது. யார் என்று பெயர், குணம், முகமே தெரியாத அந்த ஒருத்தனை அவள் மனது ஒரு தலையாக காதல் செய்ய ஆரம்பித்தது.

தொடரும்……………!
பாகம் 66
Last edited by Aruntha on Tue Jun 19, 2012 10:27 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 66

Post by Aruntha » Tue Jun 19, 2012 10:27 pm

என்ன மம்மி ரமி வந்தாளா என்றபடி சமையலறை நோக்கி சென்றாள் செல்வி. இல்லையே ஏன் என்னாச்சு ஏதாச்சும் சண்டை போட்டிங்களா என்றாள் கமலி. இல்லை மம்மி அவள் காலைல சீக்கிரம் எழுந்திரிச்சு வந்து எங்களை எழுப்புவாள் இன்னுமே காணல என்னாச்சு போய் பாத்திட்டு வாறம் என்று கூறியபடி வந்தான் செல்வன். சரி வாடா போய் பாக்கலாம் என்று கூறி இருவரும் ரம்யா வீட்டிற்கு சென்றார்கள்.

ஹாய் அங்கிள் ரமி எங்க என்று கேட்ட படி செல்வனும் செல்வியும் சென்றார்கள். என்னடா அவள் அங்க வரலயா? நான் அங்க இருப்பாள் என்று நினைச்சிட்டு இருந்தன் என்று கூறியபடி வந்தாள் பிரியா. என்ன சொல்றீங்க எப்பவும் அவள் தானே நம்மகிட்ட வருவாள் இன்னும் காணல என்று கேட்க என்ன இரண்டு பேரும் அவளோட ஏதாச்சும் சண்டை போட்டிங்களா என்று ராஜன் கேட்க இல்லை அங்கிள் எதுவுமே ஆகல என்றான் செல்வன்.

சரி வா மாடிக்கு போய் அவள் றூம் ல பாக்கலாம் என்று செல்வி கூறியபடி அவள் றூமுக்கு செல்ல செல்வளும் அவள் பின்னால் சென்றான். என்னங்க என்னாச்சு ரமிக்கு இன்னும் எழும்பலயா என்று பிரியாவும் செல்ல அவளை தொடர்ந்து ராஜனும் சென்றான். அவள் அறைக்கு சென்ற அனைவரும் அதிர்ந்தார்கள். அவள் அங்கு தன்னுடைய பெயின்டிங் போட்டில் படம் வரைந்து கொண்டிருந்தாள். அதில் அழகிய ஒரு வாலிபனின் படம் வரையப்பட்டுக் கொண்டிருந்தது. ஏய் ரமி என்ன பண்ணுறாய் என்று செல்வன் கேட்க அவள் நிமிர்ந்து தன் தந்தையை பார்த்து கண்களை சிமிட்டினாள்.

டாடி எப்பிடி இருக்கு உங்க மருமகன் போட்டோ என்றாள் ரம்யா. அனைவரும் ஆச்சரியமாக அவளை பார்க்க என்னடி உழறுறாய் என்று பிரியா கேட்டாள். அதுவா மம்மி டாடி ராத்திரி உனக்கு எப்பிடி மாப்பிளை வேணும் என்று கேட்டார் அது தான் அவருக்கு மாப்பிளை போட்டோ வரைஞ்சன் என்றாள்.

என்னப்பா நடக்குது ஒண்ணுமே புரியலப்பா என்றாள் பிரியா. அது ஒண்ணுமே இல்ல மம்மி சும்மா என்று கூறி சிரித்தாள். என்னடி பண்ணுறாய் என்னாச்சுடி என்றபடி செல்வன் அவளருகில் வர அதுவா ஒண்ணுமே இல்லையே ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க நான் உங்களுக்கு படம் தாறன் என்றாள்.

டேய் செல்வி பாத்துக்கே இவன் தான் உன்னோட இன்னொரு அண்ணன். செல்வன் நீயும் பாத்துக்கோ இவன் தான் உன்னோட தம்பி சரியா என்றாள். என்ன எனக்கு அண்ணனா இவனுக்கு தம்பியா என்று செல்வி கேட்டாள். என்ன ரமி சொல்றாய் என்று பிரியா கேட்க சுயநிலைக்கு வந்த ரமி குழப்பமாக ராஜனை பார்த்தாள். அவர் லேசா புன்முறுவல் செய்ய சற்று தைரியமாக பேச ஆரம்பித்தாள்.

அதுவா என்னை கட்டிக்க போறவன் உங்க இரண்டு பேருக்கும் சகோதரம் போல தானே. அது தான் அப்பிடி சொல்றன் என்றாள். அப்பிடி சொல்றியா அதுவும் சரி தான் உன்னை கட்டிக்க போறவன் கண்டிப்பா எனக்கு அண்ணன் போல அல்லது தம்பி போல தான் ஏன் உனக்காக வேணும் என்றால் கூடப் பிறந்தவன் போல நினைச்சுக்கிறம் என்றார்கள் செல்வனும் செல்வியும். ரொம்ப தாங்ஸ்ப்பா இத தான் உங்க வாயில இருந்து எதிர்பார்த்தன் அது போதும் எனக்கு என்றாள் ரமி.

ரமி உன் கனவுக் காதலன் சூப்பரா இருக்கிறான். சரி இவன் எங்க இருக்கிறான் என்ன பண்ணுறான் எங்காச்சும் பாத்தியா இவன என்று கேட்க அடப்பாவி அது தான் கனவுக் காதலன் என்று சொல்லிட்டியே அப்போ எப்பிடியடா நான் பாக்கிறது என்று கேட்டாள். ஆமால்லா அதுவும் சரி தான் அப்போ எப்பிடி இப்பிடி எல்லாம் வரையுறாய் என்று கேட்க எனக்கு பிடிச்ச என் உயிரான நண்பனும் நண்பியும் நீயும் செல்வியும் தான். அப்போ என்னை கட்டி உங்களுக்கு சகோதரமா வரப் போறவன் எப்பிடியும் உங்க சாயலா தானே இருக்கணும் என்றாள் ரமி.

ஐயோ கடவுளே கமலியும் குமாரும் தப்பு பண்ணிட்டாங்க என்றாள் பிரியா. என்ன சொல்றிங்க என்று செல்வி கேட்க அதுவா பேசாம இன்னொரு பையன பெத்து இருந்தால் இந்த பிரச்சினை தீர்ந்திருக்குமே என்றாள். அதுக்கென்ன மம்மி நான் கட்டிக்க போறவன குமார் அங்கிளுக்கும் கமலி ஆன்டிக்கும் தத்துப்பிள்ளையா குடுத்திட்டா போச்சு என்றாள் ரமி.

என்ன நீ எனக்கு பிள்ளைய தத்தெடுத்து தர போறியா இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே என்றபடி கமலி வந்தாள். சீக்கிரமா அந்த பையன என் கண்ணில காட்டும்மா அவன பாக்க என் மனசு துடிக்குது என்றார் குமார். அங்கிள் சும்மா கவலை படாதீங்க கூடிய சீக்கிரம் எல்லாமே நல்லா நடக்கும் என்றாள் ரமி. ஆன்டி என் கற்பனைல இருக்கிற உங்க பையன் அழகா இருக்கானா என்று ரமி கேட்க நல்லா தான் இருக்கிறான் சீக்கிரமா கண்டு பிடிச்சிடு இவன ஒண்ணாவே நிச்சயம் பண்ணிடுவம் என்றாள்.

அதெல்லாம் இப்போ வேணாம் ஆன்டி. முதல் செல்வனுக்கும் செல்விக்கும் நிச்சயம் பண்ணுங்க எனக்கு ஒண்ணும் அவசரம் இல்லை. என் மனசில என் கற்பனைல இருக்கிற இந்த பையன நான் பாத்ததும் உங்களுக்கு சொல்றன். அப்புறமா எல்லாருமே சேர்ந்து நிச்சயம் பண்ணுங்க சரியா என்றாள். அது வரைக்கும் இந்த பெயர் தெரியாத முகம் தெரியாத பையன் தான் என்னோட வருங்கால புருஷன் என்றாள். சரி சரி வாங்கப்பா எல்லாரும் டிபன் சாப்பிடுவம் என்று பிரியா அழைக்க எல்லாரும் கீழே இறங்கினார்கள்.

அனைவரும் கீழே இறங்க குமாரும் ராஜனும் ரமியை பார்த்தார்கள். ரம்யா என் பையன் ரொம்ப அழகா இருக்கான். யார் என்றே தெரியாதவன் மேல நீ வைச்சிருக்கிற பாசம் ரொம்ப பிடிச்சிருக்கு. உன் மனசுக்காகவே அவன் நல்லா இருப்பான் சீக்கிரமா நமக்கு கிடைப்பான் என்றான் குமார். அங்கிள் அப்பிடி கிடைச்சால் நம்ம எல்லாருக்கும் சந்தோசம் தானே சரி வாங்க கீழ போகலாம் எல்லாரும் பாத்திட்டு இருக்க போறாங்க என்ற படி துள்ளிக் குதித்து ஓடினாள் ரமி.

அவள் வரைந்த படத்தையே பார்த்தபடி நின்றான் குமார். டேய் குமார் என்னடா இது படத்தையே பாத்திட்டு இருக்கிறாய் அவள் தான் சின்ன பொண்ணு தன் மனசில உள்ளதை அப்பிடியே கொட்டிட்டாள் என்றாள் நீயும் அதை நினைச்சு கவலைப்படுறாய். எல்லாம் நல்லதா நடக்கும் என்று நினை கடவுள் கைவிட மாட்டார். இப்போ நம்மட சிந்தனை எல்லாம் நம்ம செல்வன் செல்விட நிச்சயதார்த்தம் பத்தி தான் இருக்கணும் என்று அவனை ஆறுதல் படுத்தினான்.

மன போராட்டங்கள் தொடரும்…………..!
பாகம் 67
Last edited by Aruntha on Thu Jun 21, 2012 9:16 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 67

Post by Aruntha » Thu Jun 21, 2012 9:15 pm

அனைவரும் காலை உணவை உண்ட பின் ஹாலில் வந்து இருந்தார்கள். அந்த நேரம் ரேவதியும் நரேஷ்ம் வந்தார்கள். வாங்க நரேஷ் உங்க வீட்டுக்கு வரலாம் என்று தான் பேசிட்டு இருந்தம் நீங்களே வந்திட்டிங்க என்று குமார் கூறினான். என்ன நிச்சயதார்த்தம் பத்தி பேசவா என்று கேட்க ஆமா என்று கூறினான்.

எப்பவும் நிச்சயதார்த்தம் பொண்ணு வீட்டில தான் நடக்கும். ஆனால் நாம இப்போ செல்வனுக்கும் செல்விக்கும் ஒரே நாளில நிச்சயம் பண்ணுறதால செல்வன் நிச்சயதார்த்ததையும் நம்மட வீட்டில வைத்தால் என்ன என்று யோசிக்கிறம். அத பத்தி தான் உங்களோட கதைக்கலாம் என்று நினைச்சம் என்றான் குமார். இதென்ன குமார் உங்க வீடு எங்க வீடு என்று எல்லாமே நம்ம வீடு. எனக்கு இந்த சாத்திரம் சம்பிரதாயம் முறை இதில எல்லாம் நம்பிக்கை இல்லை. எது நம்மட மனசுக்கு சந்தோசமோ அப்பிடியோ செய்யலாம் என்றார் நரேஷ்.

ரொம்ப சந்தோசம் நரேஷ் நீங்க சம்மதிப்பீங்களோ இல்லையோ என்று யோசிச்சிட்டு இருந்தம் இப்போ தான் பெரிய நிம்மதி என்றான் குமார். என்னடா இது நம்ம வீட்டு விசேசத்தை யார் வீட்டில வைத்தால் என்ன? அங்க வரபோறவங்கள இங்க வர சொல்லிட்டா போச்சு என்றான் நரேஷ். அப்புறம் நிச்சயதார்த்த பத்திரிகை அடிக்கணும் அது என்ன மாதிரி? இரண்டு நிச்சயதார்த்ததையும் ஒரு பத்திரிகையிலயே போட்டு அடிக்கலாம் தானே என்றான் நரேஷ்.

ஆமா நாங்களும் அப்படி தான் சிந்திச்சம். அப்போ இன்னிக்கே அடிக்க குடுத்திடலாம். நாளைக்கு தர சொல்லி சொன்னால் நாளை மறுநாள் நல்ல நாள் எல்லாருக்கும் பத்திரிகை வைக்க ஆரம்பிக்கலாம் என்றான் நரேஷ். என்ன அங்கிள் நிச்சயதார்த்த வேலை ரொம்ப மும்முரமா நடக்குதா என்றபடி வந்தான் தனேஷ். என்ன தனேஷ் மாப்பிளை இப்பிடி சொல்றீங்க சரி சரி நல்ல நேரத்தில தான் வந்திருக்கிறாய் இப்பிடி உட்காருப்பா என்றார் குமார்.

சரி நரேஷ் நாம பேசினபடியே செய்திடலாம் என்று குமார் கூற தான் எடுத்து வந்த சில மொடல் பத்திரிகைகளை அவர்களுக்கு காட்டினான் நரேஷ். அதில் ரேவதி ஆசைப்பட்ட பத்திரிகையையே செல்வனும் எடுத்தான். டேய் செல்வா சூப்பர் செலக்ஷன் என்றான் தனேஷ். ஆமாடா இதில இரண்டு தேவதைகள் பூ தூவிட்டு இருக்காங்க அதுக்குள்ள இரண்டு இராஜகுமாரங்கள் அமர்ந்து இருக்காங்க. நம்ம அழகிய தேவதைகள் செல்வியும் ரேவதியும் போலவே இருக்கு ரொம்ப அழகா இருக்கு என்றாள் ரமி.

ஒரே பார்வையிலேயே அவர்கள் எல்லாரையும் கவர்ந்த அந்த அழைப்பிதழை எடுத்தபடி நரேஷூம் குமாரும் சென்றார்கள். என்னங்க அப்போ சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வாங்க எல்லாருக்கும் சேர்த்து சமைக்கிறன் என்றாள் கமலி. டாடி நானும் இங்க நிக்கிறன் நீங்க வேலை முடிச்சிட்டு வந்து கூட்டிப் போங்க என்றாள். சரிப்பா நாங்க நிச்சயபத்திரிகை அலுவலை முடிச்சிட்டு வாறம். ராஜன் நீ இன்னிக்கு ஆபிஸ் வேலைய பாருப்பா என்றான் குமார். அங்கிள் நீங்க எதையும் பற்றி கவலைபடாம போங்க அங்கிள் கூட நானும் செல்வனும் போய் ஆபிஸ் வேலைய பாக்கிறம் என்றான் தனேஷ்.

அனைவரும் தங்கள் தங்கள் வேலை என்று கிளம்பினார்கள். அங்கிள் நாம ஆபிஸூக்கு கிளம்புவமா என்று தனேஷ் கேட்க இல்லப்பா நீயும் செல்வனும் வீட்டில இருங்க. ஆபிஸில பெருசா வேலை இல்லை தானே நான் பாத்துக்கிறன். நீங்க போய் ஏதாச்சும் வெளி வேலை இருந்தா பாருங்க. இல்லாட்டி சிவாவையும் கூப்பிட்டு அவன் கூட சேர்ந்து எங்காச்சும் அவுட்டிங் போங்கடா என்றார். சரி அங்கிள் அப்போ நீங்க கிளம்புங்க என்றான் செல்வன்.

டேய் செல்வா நீ சிவாக்கு போன் போட்டு பார் அவன் ஆபிஸில ஏதாச்சும் வேலை இருக்கா என்று. இல்லாட்டா அவன லீவு போட்டு வர சொல்லு என்றாள் செல்வி. ஆமாடா நாம எல்லாம் ஒண்ணா தடாகத்தில குளிச்சு ரொம்ப நாளாச்சு அவனும் வந்தால் சந்தோசமா இருக்கலாம் என்றான் தனேஷ். சிவாவிற்கு போன் செய்தான் செல்வன் அவனும் சம்மதிக்கவே அரை மணி நேரத்தில் அனைவரும் ஒன்றாக கூடினார்கள்.

சரிப்பா எல்லாருமே ஆளாளுக்கு செட்டில் ஆகிறீங்க நம்ம ரமி என்னவாம் என்று ரேவதி கேட்க அவங்களா? அவங்க ஸ்ரோறி ரொம்ப பெருசு இருங்க நான் சொல்றன் என்று செல்வி ஆரம்பிக்க ஏய் வேணாம் வம்பு பண்ணாத என்று அவள் வாய பொத்தினாள் ரமி. நான் சொல்றன் என்றபடி செல்வன் ஆரம்பித்தாள். மெடம் லவ் பண்ணுறாங்களாம். போட்டோ கூட வச்சிருக்காங்க தெரியுமா என்றான் செல்வன்.

ரமி லவ் பண்ணுறாளா? சரி சொல்லு யாரு அந்த அதிஷ்டசாலி என்றான் தனேஷ். சரி அவன் யார போல இருப்பான்? அவன் பெயர் என்ன என்றான் சிவா? சரி நீ அவன எங்க பார்த்தாய்? என்ன பண்ணுறான் என்றாள் ரேவதி. மெடத்திட்ட இந்த கேள்வி எதுக்குமே பதில் இருக்குமா என்று தெரியல என்றான் செல்வன். என்ன சொல்றாய் செல்வா ஒண்ணுமே புரியல என்று அனைவரும் ஒரே குரலில் கேட்க நான் சொல்றன் என்று ஆரம்பித்தாள் செல்வி.

இந்த தேவதையோட மனசில ஒருத்தன் இருக்கானாம். அவன் யார் என்று தெரியாதாம். பெயரும் தெரியாதாம் ஊரும் தெரியாதாம். அது மட்டுமில்ல அவன பார்க்க கூட இல்லையாம். இருந்தாலும் அவன லவ் பண்ணுறாங்களாம். தான் சீக்கிரமா அவன கண்டு பிடிப்பாங்களாம். அவன் எனக்கும் செல்வனுக்கும் சகோதரமா அறிமுகம் செய்வாங்களாம். அதுக்கும் மேல அவன எங்க அம்மா அப்பாக்கு தத்து குடுப்பாங்களாம் அவங்க பையனா. இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல என்றாள் செல்வி.

என்னடி சொல்றீங்க ஒண்ணுமே புரியல. ரமி நீ நல்லா தானே இருக்கிறாய். உனக்கு ஒண்ணுமே ஆகல தானே? என்று கேட்டான் சிவா. லூசு எனக்கு எதுவுமே ஆகல நான் நல்லா தான் இருக்கிறன். நீங்க எல்லாம் நான் சொல்றத ஜோக் ஆக நினைக்கிறீங்க தானே இதெல்லாம் ஒரு நாளைக்கு நடக்கும். அப்போ எல்லாருக்கும் நிறைய உண்மை புரியும் என்றாள். ரமி கதைத்த கதையில் ரொம்பவே உறுதி தெரிந்தது. அவள் விளையாட்டாக எதுவுமே கதைக்கவில்லை என்பது அவளது முகத்தை பார்க்கவே புரிந்தது.

ரமி என்ன நாங்க எல்லாம் ஜோக் அடிக்கிறம் நீ ரொம்பவே சீறியசா கதைக்கிறாய் என்று செல்வன் கேட்க இல்ல செல்வன் நான் சொல்றதெல்லாம் நிஜம். சிலது உங்களுக்கு இப்போ சொன்னால் புரியாது. நான் எதிர்பார்க்கிற அந்த பெயர் முகம் எதுவுமே தெரியாத பையன கண்டு பிடிக்கும் வரைக்கும் நான் அவன காதலிச்சிட்டே இருப்பன் என்றாள். இது நான் பேச்சுக்கு சொல்லல. கடவுளுக்கு முன்னால சபதம் எடுத்திருக்கிறன். என் மனசில இருக்கிற இந்த நினைப்பு, ஆசை, சபதம் எல்லாமே கண்டிப்பா நிறைவேறும் என்றாள்.

அதுவரை விளையாட்டாக அவளை சீண்டிய அனைவரும் அவளது திடமான பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். என்ன ரமி லூசு போல கதைக்கிறாய்? உனக்கு என்னாச்சு? நாங்களும் ஏதோ நீ கலாட்டா பண்ணுறாய் என்று நினைக்க இப்பிடி சொல்றாய் என்று செல்வன் கேட்க செல்வன் சில விசயம் இப்போ உனக்கோ மற்றவங்களுக்கோ சொன்னால் புரியாது. கண்டிப்பா ஒரு நாளைக்கு விளக்கம் கிடைக்கும் அது வரைக்கும் பொறுமையா இருங்க என்றாள்.

ரமி உன்னோட இந்த மனசு, உறுதி பார்க்க ரொம்பவே சந்தோசமா இருக்கு. உன் மனசில என்ன இருக்கோ தெரியல ஆனால் நீ எதுவுமே தெரியாத ஒருதன் மேல வைச்சிருக்கிற மரியாதை, காதல், நம்பிக்கை பார்க்க அவன் நானா இருக்க கூடாதா என்று என் மனசு ஏங்குது என்றான் சிவா. அடப்பாவி அது வேறையா? அதெல்லாம் நீ ஆக முடியாது. நான் அவன கண்டு பிடிச்சு உங்களுக்கு முன்னாடி அறிமுகப்படுத்தும் போது என்னை ஏற்பானா தெரியல. அப்போ நான் அவன் மேல வச்சிருந்த பாசத்தை சொல்லுங்க அவன் என்னை புரிஞ்சுக்க உதவியா இருக்கும் என்றாள்.

கண்டிப்பா ரமி உன் மனசுக்கு எல்லாமே நல்லா நடக்கும். உன் மனசில இவ்வளவு தூரம் வாழ்ந்திட்டிருக்கிற அந்த ராஜகுமாரனை பார்க்க நாங்க எல்லாம் ரொம்ப ஆவலா இருக்கிறம் என்றான் செல்வன். எல்லாருக்குமே சொல்றன் ஏதோ என் மனசு நான் அவன சீக்கிரமா சந்திப்பன் என்று சொல்லுது. கண்டிப்பா நான் அவன பார்ப்பன் என்று நம்பிக்கையோடு கூறினாள்.

அவள் நம்பிக்கை ஜெயிக்க நாமும் பிரார்த்திப்போம்……..!
பாகம் 68
Last edited by Aruntha on Sat Jun 23, 2012 8:54 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 68

Post by Aruntha » Sat Jun 23, 2012 8:53 pm

அன்று மாலை செல்வன் சீக்கிரமே ஆபிஸிலிருந்து வந்திருந்தான். என்னடா டாடியும் அங்கிளும் எங்க என்று கமலி கேட்க அவங்க நிச்சயதார்த்த பத்திரிகை எடுத்திட்டு வருவாங்க நான் வந்திட்டன் என்றான். அவன் வந்து சோபாவில் அமர வீட்டு கோலிங் பெல் அலாரமிட்டது. அவன் எழுந்து பார்க்க செல்ல இருடா நான் பார்க்கிறன் என்றபடி ரம்யா சென்றாள்.

இது மிஸ்டர் ராஜனோட வீடு தானே என்று கேட்ட படி ஒருவர் குடும்பத்துடன் நின்றார். இல்ல அங்கிள் எங்க வீடு பக்கத்தில இருக்கிறது தான் சரி நீங்க உள்ள வாங்க என்று அழைத்தாள். அவர்களும் உள்ளே வந்தார்கள். ஹலோ அங்கிள் என்ன சொல்லாமலே வந்திட்டிங்க என்றபடி எழுந்து அவர்களை வரவேற்றான் செல்வன். ஹாலில் கேட்ட குரலை பார்க்க கமலி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

மம்மி இவங்க தான் நம்மட கம்பனிட பாட்னர் கம்பனி ஓனர் மிஸ்டர் வேதாச்சலம் என்றான். வாங்க என்ன கம்பனி விடயமா வந்திங்களா அவர் இன்னும் வரல என்றாள். இல்ல மெடம் நாங்க மிஸ்டர் ராஜன பாக்க வந்தம் இங்க வர அவர் பொண்ணு தான் நம்மள இங்க அழைச்சு வந்தாங்க என்றார். ஓ அப்பிடியா பிரியா ராஜன தேடி தான் வந்திருக்காங்க என்று கூற பிரியாவும் சமைலறைல இருந்து வெளியில் வந்தாள்.

நீங்க தான் குமார் பசங்களா என்று செல்வனையும் செல்வியையும் கேட்க ஆமா என்று செல்வன் கூறினான். இவள் ரம்யா ராஜன் அங்கிளோட பொண்ணு. இவங்க பிரியா ஆன்டி ராஜன் அங்கிளோட மனைவி. அவங்க எங்க மம்மி கமலி என்று அனைவரையும் அறிமுகப் படுத்தினான்.

அவர்களை தொடர்ந்து வேதாச்சலம் தன்னோட குடும்பத்தை அறிமுகப் படுத்தினார். இது என்னோட மனைவி அமுதா. இவ என் ஒரே பொண்ணு ஆஷா. இவன் என் பையன் ஆகாஷ் என்றார். நானும் பையனும் தான் ஆபிஸ பாத்துக்கிறம் என்று கூறினார்.

உங்க எல்லாரையும் பார்க்க ரொம்ப சந்தோசமாஇருக்கு இரண்டு குடும்பமும் ஒரே குடும்பமா இருக்கிறீங்க என்றார் வேதாச்சலம். நம்ம குடும்பம் மட்டுமில்ல இரண்டு வீடுமே ஒரே போல தான் இருக்கும் என்றான் செல்வன். கமலி அவர்களுக்கு ஏதாச்சும் சாப்பிட எடுக்க எழும்ப ஆன்டி நீங்க இருந்து கதையுங்க நானும் செல்வியும் எடுத்து வாறம் என்று கூறி இருவரும் சமையலறைக்கு சென்றார்கள்.

செல்வி ஒரு தட்டில் ஸ்வீட் எடுத்து வர அவளின் பின்னால் குளிர்பானம் எடுத்தபடி ரம்யா வந்தாள். ஹாய் பிரியா கண்ணு ராஜனும் ஹாய் கமலி கண்ணு என்று குமாரும் பெரிதாக அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தார்கள். அங்கே வேதாச்சலத்தை பார்த்ததும் வாங்க வேதா என்ன திடீரென்று சொல்லாம கொள்ளாம வந்திட்டிங்க என்றபடி வந்து அவர்களுடன் அமர்ந்தார்கள்.

என்ன இரண்டு பேருமே ரொமான்டிக் மூட்ல வர நாம குழப்பிட்டமா என்று வேதாசலம் சிரிக்க ஐயோ அப்பிடி எல்லாம் ஒண்ணுமில்லை சும்மா இப்பிடி தான் எப்பவும் எல்லாருமே கலாட்டா பண்ணுவம் என்று சிரித்தான் குமார். டேய் சும்மா இருடா என்று ராஜன் குமாரை தட்ட பிரியாவும் கமலியும் நாணத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். சரி சரி இப்போ வந்த விடயத்தை பேசுவமா என்றார் வேதா.

சரி குடும்பத்தோடவந்திருக்கிறீங்க ஏதாச்சும் விசேசமா என்றான் குமார். ஆமா நாம ராஜன பார்த்து நல்ல விசயம் ஒண்ணு பேசலாம் என்று வந்தம் என்றார் வேதா. ஓ அப்பிடியா சொல்லுங்க வேதா அப்பிடி என்ன தான் பேச போறீங்க என்றான் ராஜன். இல்ல நாங்க திடீரென்று வந்து இப்பிடி பேசுறம் என்று தப்பா நினைக்காதீங்க என்றார் வேதா. இதென்னப்பா சொல்லுங்க என்று ராஜன் கூற வேதா பேச ஆரம்பித்தார்.

எனக்கு உங்க இரண்டு பேரோட யார் கூட என்றாலும் சம்பந்தம் பண்ணணும் என்று ஆசை. குமார கேக்கலாம் என்றால் அவர் தன் இரண்டு பசங்களுக்கும் நிச்சயம் பண்ண பேசி முடிச்சிட்டார். இனியும் காலத்தை இழுத்தடிக்க கூடாது என்று தான் ராஜனோட பொண்ண என் பையனுக்கு கேட்கலாம் என்று வந்தம் என்றார். அவரின் அந்த சடுதியான வார்த்தைகளை கேட்ட ராஜன் குமாரை பார்த்தான்.

என்னப்பா நாங்க ஏதாச்சும் தப்பா பேசிட்டமா என்று அவர்களை கேட்க அப்பிடியெல்லாம் இல்லைப்பா என்றான் ராஜன். அவர்களின் அந்த வார்த்தைகளை கேட்ட ரம்யா பேரிடி விழுந்தவள் போல தந்தையை பார்த்தாள். அவள் மனதில் கொண்டுள்ள வைராக்கியத்தை அவள் சொல்லி கேட்டதாலும் அப்போது ஏற்பட்ட அவளின் தடுமாற்றத்தையும் பார்த்த குமார் அவளை கண்களால் சைகை காட்டி சமாதானப்படுத்தினார்.

குமார் ராஜனின் கைகளை பற்ற அவன் ரம்யாவை பார்க்க அவளின் முகம் கண்கள் எல்லாமே அவளிற்கு சம்மதம் இல்லை என்பதை வெளிப்படுத்த அவளின் நிலையை உணர்ந்தான். அதற்கும் மேல் அவள் மனதில் அவள் கொண்டுள்ள சபதம் தங்களின் ஆசைகளையும் ஒரு நொடி நினைத்தான். இருந்தும் அந்த சேரத்தில் அவர்களுக்கு என்ன கூறுவது என்று தெரியாது தடுமாறியவன் குமாரை பார்க்க, அந்த பார்வையே அவனுக்கும் சம்மதம் இல்லை என்பதை உணர்த்தியது.

வேதா உங்களுக்கு எப்பிடி சொல்றது என்று தெரியல நாங்க ஏற்கனவே என்னோட உறவுக்கார பையனுக்கு நம்ம ரம்யாவை பேசி முடிச்சிட்டம் என்றான் குமார். என் பசங்களோட நிச்சயதார்த்தம் முடிய இவளுக்கு நிச்சயத்தை பண்ணலாம் என்று இருக்கிறம் என்றான். அந்த நிமிடத்தில் சந்தர்ப்பத்திற்கு தகுந்த போல குமார் கூறிய பதிலால் திருப்தியடைந்த ராஜன் ஆமா வேதா குமார் சொல்றது தான் நிஜம். நீங்க ஏற்கனவே இதை பத்தி கதைச்சிருந்தால் இந்த விடயத்தை சொல்லியிருப்பம் இப்பிடி திடீரென்று வந்து கேட்டதால இப்ப சொல்ல வேண்டியதா போயிட்டு எங்கள மன்னிச்சுகோங்க வீடு தேடி வந்த உங்கள கஷ்டப்படுத்திட்டம் என்றான் ராஜன்.

இது என்ன ராஜன் உங்களோட இத பத்தி முன்னாடியே பேசாம வந்தது நம்மட தப்பு தான் நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேக்கிறீங்க என்றார் வேதா. சரிப்பா என்ன சம்மந்தி ஆகலாம் என்று பார்த்தம் வாழ்க்கை பூரா நம்ம பிஸினசில தான் பாட்னர் ஆக இருக்கணும் என்று இருந்தால் அதை யாரு மாத்த முடியும் என்று சிரித்தார். இதை எல்லாம் பெருசுபடுத்தாதீங்க என்றார். சரி சரி இந்த சந்தர்ப்பதோடயாவது வீட்டுக்கு வந்திங்களே அது போதும் என்றான் குமார்.

அப்போ ராஜன் உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டிங்களா? என்று கேட்க என்ன வேதா இப்பிடி கேட்டிட்டீங்க வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று அவரையும் அவர் குடும்பத்தையும் அழைத்து கொண்டு தன் வீட்டுக்கு சென்றான் ராஜன். அவர்களின் வீட்டை பார்த்ததும் என்ன இரண்டு வீடுமே ஒரே போல இருக்கு எது யாரோட வீடு என்று ஒண்ணுமே புரியல என்றார் வேதா. அதுவா நாம ஒண்ணா காணி வாங்கி ஒண்ணாவே ஒரே மாதிரி வீடு கட்டினம். சொல்ல போனால் தளபாடங்களில இருந்து வீட்டு ஒழுங்கு எல்லாமே ஒரே போல தான் என்றான் ராஜன்.

அது தான் உங்க பொண்ணு சொன்னாளா குமார் வீட்டுக்கு போக வாங்க அங்கிள் எல்லாமே நம்ம வீடு தான் என்று. அப்போ புரியல இப்போ புரிது என்றார் வேதா. ஆமாப்பா நமக்கே சில சமயத்தில போட்டோ எடுத்தால் யார் வீட்டில எடுத்தம் என்று கண்டு பிடிக்க முடியாது என்றான் குமார். என்ன தான் வாங்கினாலும் ஒண்ணாவே ஒரே மாதிரி தான் வாங்குவம் என்றான். அது பார்க்கவே தெரிதே என்றார் வேதா.

உண்மைலயே உங்க போல நண்பர்கள பார்க்க முடியாது. உங்க வீடு அதில ஒவ்வொருத்தரோட குணம் எல்லாமே ஒண்ணா இருக்கு. இப்பிடியான உங்க கூட சம்மந்தம் பண்ணல என்று வருத்தமா இருந்தாலும் இப்பிடியான நல்ல நண்பர்களோட நமக்கும் நட்பிருக்கென்று நினைக்க பெருமையா இருக்கென்றார் வேதா. சரிப்பா நேரமாச்சு நாங்க கிளம்பிறம் என்று கூறி புறப்பட்டார்கள் வேதாவும் குடும்பத்தாரும்.


அவர்கள் போனதும் கமலியும் பிரியாவும் ஒண்ணாகவே கேட்க ஆரம்பித்தார்கள். என்ன எங்களுக்கே தெரியாமல் நம்ம பொண்ணுக்கு நீங்க நிச்சயம் பண்ண பேசி முடிச்சிட்டிங்களா என்றனர். என்னப்பா நம்ம உறவுக்காறங்க யாரு இருக்கிறாங்க நம்ம ரமிக்கு ஏத்தா போல என்றாள் கமலி. அவரை சமாளிச்சு அனுப்பினாலும் இவங்கள சமாளிக்க முடியாது போல இருக்கே என்று சிந்தித்த ராஜன் குமாரை பார்த்தான்.

தொடரும்………………….!
பாகம் 69
Last edited by Aruntha on Tue Jun 26, 2012 2:01 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 69

Post by Aruntha » Tue Jun 26, 2012 1:59 pm

என்ன எல்லாருமே டாடியையும் அங்கிளையும் கேள்வி மேல கேள்வி கேக்கிறீங்க. அவங்க அப்பிடி சொன்னால் ஏதாச்சும் காரணம் இருக்கும் தானே என்றாள் செல்வி. ஆமா உங்கள் யாருக்குமே தெரியாமல் அங்கிளுக்கு ஒரு பையன் இருக்கான் அவன கட்டி வைக்கதான் பேசி முடிச்சிருக்கு அது தான் அப்பிடி சொன்னாங்க இப்ப சரியா என்றாள் ரமி. உனக்கு வாய் கூடிப் போச்சுடி என்றாள் கமலி. அப்புறம் என்ன சும்மா கேள்வி கேட்டால் என்னவாம் சொல்றது என்றாள் ரமி.

அது ஒண்ணுமில்ல கமலி அவங்களோட சம்பந்தம் பண்ண நமக்கு சரி வராது. அவங்களுக்கும் நம்ம குடும்பத்தும் ஒத்து வராது. நம்ம பொண்ணு செல்லமா வளர்ந்தவங்கள் அது தான் முடியாது என்று சொன்னம் என்றான் குமார். ஆமா அந்த நேரம் என்ன சொல்லி சமாளிக்கிறது என்று தெரியல அது தான் குமார் உறவுக்கார பையனுக்கு பேசி முடிச்சதா சமாளிச்சு சொல்லிட்டான் என்றார் ராஜன். ஓ அதுவா சங்கதி? நீங்க திடீரென்று இரண்டு பேருமே அப்பிடி சொல்ல குழம்பிட்டம் என்றாள் பிரியா. சரி இப்போ எல்லாம் சரி தானே என்றான் குமார்.

இந்தாங்க நிச்சயதார்த்த பத்திரிகை எல்லாருக்கும் பிடிச்சிருக்கா என்று கொடுத்தான் குமார். வாவ் ரொம்ப அழகா இருக்கு என்றாள் ரமி. எல்லாருக்குமே பத்திரிகை ரொம்பவே பிடித்திருந்தது. சரி நாளைக்கே பத்திரிகை கொடுக்க ஆரம்பிக்கலாம் என்றான் குமார். முதல் நரேஷ்க்கு போன் போட்டு எங்க நிக்கிறான் என்று பாக்கணும் அவனுக்கு தேவையான பத்திரிகைய கொடுக்கணும். அப்புறம் தனேஷிற்கும் பத்திரிகை கொடுக்கணும் என்றார் குமார்.

ராஜன் நாளைக்கு நான் கமலியோட ஊருக்கு போய் பத்திரிகை கொடுக்கணும். அப்பிடியே என்னோட உறவுக்காரங்களுக்கும் கொடுக்கணும் தனேஷூம் அப்பிடி தான் என்ற நினைக்கிறன். நீயும் செல்வனும் தான் ஆபிஸ கவனிக்கணும் என்றான் குமார். அதுக்கென்னடா நாங்க பாத்துக்கிறம் நீ போய் உன் வேலைய பாரு என்றான். நாளைக்கு உறவுக்காரங்களுக்கு பத்திரிகை வைச்சு முடிச்சிட்டால் நாளை மறுநாள் நாங்க ஆபிஸில முக்கியமானவங்களுக்கு கொடுக்கலாம் என்றான் ராஜன்.

ஆபிஸில கொடுக்கிறப்ப கவனமா கொடுக்கணும். தனித்தனிய கொடுக்காம தனேஷ் நாம எல்லாம் சேர்ந்து கொடுத்திட்டா பிரச்சினை முடிஞ்சுது என்றான் ராஜன். ஆமாடா நானும் அப்பிடி தான் சிந்திச்சன் நீயும் சொல்லிட்டாய் என்றான் குமார்.

மறுநாள் அதிகாலை சீக்கிரமாகவே கமலியும் குமாரும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார்கள். மதியம் ஊரை அடைந்தவர்கள் பத்திரிகை கொடுக்கும் வேலை மும்முரமாக ஈடுபட்டார்கள். கமலி நீண்ட நாட்களுக்கு பின் தன்னுடைய தாய் தந்தையுடன் மகிழ்வாக சிரித்து கதைத்தாள். ஊரில் முக்கியமானவர்களுக்கு மட்டுமே பத்திரிகை கொடுத்தார்கள்.

டாக்டரம்மாவிடம் பத்திரிகை கொடுக்க சென்றார்கள். அவர் குமாரை முகம் கொடுத்து பார்க்கவே தயங்கியபடி நின்றார். என்ன டாக்டரம்மா ஒரு மாதிரி இருக்கிறீங்க என்றாள் கமலி. ஒண்ணுமில்லம்மா வயசாயிச்சு அது தான் உடம்புக்கு கொஞ்சம் முடியல என்று கூறி குமாரை பார்த்தார். அவன் அவரை பார்வையால் சமாதானப்படுத்தி விட்டு நிச்சயதார்த்த பத்திரிகையை கொடுத்தார்.

நம்ம பசங்க இரண்டு பேருக்குமே ஒரே நாளில நிச்சயம் வைச்சிருக்கிறம். அவங்க ஒண்ணா பிறந்தாங்க என்ன விசேஷம் என்றாலும் ஒண்ணா நடத்தணும் என்று ஆசைப்பட்டம் கடவுள் கருணையில எல்லாமே நல்லா நடந்திட்டு என்றாள் கமலி. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும் என்று கூறினார் டாக்டரம்மா. கமலி வெளியில் வர குமார் அவரை நெருங்கி ஏதாச்சும் என்னோட மற்ற பையன் பத்தி அறிஞ்சீங்களா என்றான். அவனது குரலில் புத்திர சோகம் ஏக்கம் எல்லாமே நிறைந்திருந்தது. இல்லப்பா தெரிஞ்சா கண்டிப்பா சொல்றன் என்று கூறினார்.

அவர்களிடம் விடைபெற்று குமாரின் ஊருக்கு சென்றார்கள். அங்கு நெருங்கிய உறவுக்காரங்களுக்கு பத்திரிகை வைத்து சீக்கிரமே வீட்டுக்கு திரும்பினார்கள். இருந்தும் அவர்கள் வீட்டை அடைய இரவாகி விட்டது. பிரியா சமைத்து வைத்த இரவு உணவை உண்டபின் ரொம்ப களைப்பாக இருந்தமையால் அவர்கள் நேரத்தோடு தூங்கினார்கள்.

மறுநாள் ஆபிஸில் உள்ளவர்களுக்கு பத்திரிகை கொடுத்து விட்டு பின்னேரம் சிவா வீட்டிற்கு சென்றார்கள். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார் மாசிலாமணி. சார் இது நம்ம வீட்டு விசேசம் அந்த நேரம் வராமல் முன்னாடியே வந்திடுங்க என்றான் குமார். சிவா நீயும் தானப்பா நேரத்தோட வந்திடு செல்வன்தனேஷ் கூட நீதானப்பா சில முக்கியமான வேலைகளை கவனிக்கணும் என்றான் குமார். கண்டிப்பா அங்கிள் நாம இல்லாம நம்ம வீட்டு விசேஷமா? கண்டிப்பா முன்னாடியே வந்து இருந்து செய்வம் என்றான் சிவா. சரி நேரமாச்சு நாம கிளம்பிறம் என்று கூறி சென்றார்கள்.

நிச்சயதார்த்த வேலைகள் எல்லாம் நல்லபடி நடந்து கொண்டிருந்தது. அழகாக அலங்கரிக்கப்பட்ட அவர்களது வீடு பார்க்கவே கோலாகலமாக இருந்தது. ரேவதிக்கும் செல்விக்கும் ஒரே போல உடை எடுத்திருந்தார்கள். அதே போல செல்வனுக்கும் தனேஷிற்கும் ஒரே மாதிரி உடை எடுத்திருந்தார்கள். சரிப்பா எல்லாருமே சீக்கிரமா போய் தூங்குங்க நாளைக்கு நிச்சயதார்த்தம் சீக்கிரமா எழுந்திட வேணும் என்று கூறினார் ராஜன். அனைவரும் வேலைகளை முடித்து தூங்க சென்றார்கள்.

மறுநாள் காலையிலேயே அனைத்து உறவுகளும் வீட்டை அலங்கரிக்க வீடு கோலாகலமாக நிறைந்திருந்தது. ரேவதியும் சீக்கிரமாகவே வந்து செல்வி வீட்டில் அலங்காரம் செய்தாள். அலங்காரம் முடித்த செல்வியும் ரேவதியும் மாடிப்படிகளில் இருந்து தேவலோக தேவதைகள் போல இறங்கி வந்தார்கள். விண்ணுலகின் தேவதைகள் மண்ணுலகிற்கு கூட வருவார்களா என்ற எல்லாரின் ஏக்கத்திற்கும் தீனியா அவர்களின் அழகு இருந்தது. அவர்கள் இருவரையும் அழைத்த படி அழகிய இளவரசியாக ரம்யா வந்தாள்.

அவர்கள் வந்து அமர்ந்த மறுநிமிடம் ராஜகுமாரர்கள் போன்று அழகின் உருவமான செல்வனும் தனேஷூம் மாடியிலிருந்து இறங்கினார்கள். அவர்களை அழைத்தபடி அழகிய இளவரசனாக சிவா வந்து கொண்டிந்தான். அவர்களுக்கு கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லாதமையால் பொண்ணுங்க இருவருக்கும் ரமி தோழியாக வந்தாள். மாப்பிளை இருவருக்கும் சிவா தோழனாக வந்தான்.

அவர்கள் அனைவரும் அவமர்ந்திருந்த அழகை பார்த்து அத்தனை சொந்தங்களும் ஓர் நொடி அதிசயித்தார்கள். அழகிற்கு அழகு சேர்க்கும் அவர்கள் அனைவரின் அலங்காரமும் பார்ப்பவர்களிற்கே பிரமிப்பாக இருந்தது. ஆடல் பாடல்களுடன் நல்லபடியாக அவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்தது. எல்லோருமே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள். மாலை உறவுக்காரர்கள் அனைவரும் விசேஷம் முடித்து சென்றிருந்தார்கள்.

அங்கு கமலியின் பெற்றோரும் குமாரின் பெற்றோரும் இருந்தார்கள். அவர்களுடன் டாக்டரம்மாவும் இருந்தார். அவர்கள் மறுநாள் ஊருக்கு கிளம்புவதாக இருந்தார்கள். நீண்ட நாட்களின் பின்பு பேரன் பேத்தியுடன் மகிழ்வாக இருந்தார்கள்.

சரி இப்போ இருக்கிறது நம்ம சிவா குடும்பமும் நரேஷ், ஜோன் மற்றும் தனேஷ் குடும்பமும் தான். சரிப்பா எல்லாரும் தானே கிளம்பிட்டாங்க நாம சின்னதா ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணுவம் என்றான் குமார். சரி அத நான் நேற்றே திட்டம் போட்டிட்டன். தேவையானதெல்லாம் என்னோட வீட்டு பிரிஜ்ஜில இருக்கு என்றான் ராஜன். அட பாவிங்களா இதெல்லாம் எப்போ நடந்திச்சு என்றாள் பிரியா. சரி சரி எல்லாம் இன்னிக்கு தானே விடும்மா என்றான் குமார்.

எல்லாமே வீட்டிற்கு வெளியில் நீச்சல் தடாகத்திற்கருகில் கூடினார்கள். அங்கு அவர்கள் ஒழுங்குபடுத்தியபடி சிறிய பார்ட்டி ஆரம்பமானது. குமார், ராஜன், நரேஷ், ஜோன், மாசிலாமணி ஆகியோர் பார்ட்டியில் ஆர்வமாய் இருக்க பசங்க எல்லாரும் பாடல் பாடி நடனமாடினார்கள். அவர்களுடன் சேர்ந்து கமலி மற்றும் குமாரின் பெத்தவங்களும் மகிழ்ந்திருந்தார்கள். பேரப்பிள்ளைகளுடன் தாமும் குழந்தைகளாக சிரித்து மகிழ்ந்தார்கள். அவர்களின் சந்தோச தருணங்களை ரசித்தபடி இருந்தார் டாக்டரம்மா.

ஆடல் பாடல் தொடரும்…….!
பாகம் 70
Last edited by Aruntha on Wed Jun 27, 2012 11:37 am, edited 1 time in total.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”