ணராமல் போகும்தந்தையின் உணர்வுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

ணராமல் போகும்தந்தையின் உணர்வுகள்

Post by kavinayagam » Mon Oct 05, 2015 9:51 pm

---------------------------------------------

பிரபாகர், சென்னையில் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறான். திருமணமாகி ஒரு குழந்தையுடன் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வரும் பிரபாகருக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை.

பிரபாகரின் தந்தை ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர். அரசு துறையில் பணி புரிந்ததால், ஆசிரியருக்கு அரசு ஓய்வூதியம் கிடைக்கிறது. பிரபாகரின் தாய் பல வருடங்களுக்கு முன் நோய்வாய்பட்டு மறைந்துவிட்டார்.

அரசு ஊழியராக இருந்தும் பிரபாகரின் தந்தை தனக்கென்று எந்த சொத்தும் சேர்க்கவில்லை. இதனால் பிரபாகருக்கு தந்தையை கண்டால் ஆகாது. பிரபாகரின் மனைவிக்கு கேட்கவே வேண்டாம். புருஷனுக்கே ஆகாத மாமனார் மீது, எந்த மருமகளுக்கு அன்பு இருக்கும்.

இதில் சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக இருமினார் ஆசிரியர். வேண்டா வெறுப்புடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் பிரபாகர். அங்கு நடத்த பட்ட மருத்துவ சோதனையில், ஆசிரியருக்கு இதய நோய் இருப்பது தெரியவந்தது. சில லட்சங்கள் செலவு செய்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

பிரபாகர் நினைத்தால் செலவு செய்யக்கூடிய தொகைதான். ஆனால் தந்தை மீதிருந்த வெறுப்பினால், பணம் இல்லை என்று கையை விரித்த பிரபாகர், தந்தையை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டான். ஆசிரியருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் முதியோர் இல்லத்திற்கு கட்டணமாக சென்றது.

பிரபாகர் பிறந்தது சென்னையில்தான் என்றாலும், அவரின் தந்தை பல கிராம பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார். இருந்தாலும் மனைவியையும் மகனையும் சென்னையிலேயே தங்கவைத்து படிக்க வைத்தார். பிரபாகருக்கு வேலை கிடைக்கும்வரை ஆசிரியரின் வருமானம்தான்..

இருந்தும் தனக்கு சொத்து ஏதும், குறைந்தபட்சம் ஒரு சொந்த வீடுகூட சேர்த்து வைக்காமல், வாங்கிய சம்பளத்தை செலவு செய்துவிட்டாரே என்கிற கோபம் பிரபாகருக்கு.

ஒருநாள் பிரபாகருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது..

"சார்.. அந்த பக்கம் பேசுறது பிரபாகரா" என்றது குரல்..

"ஆமாம் பிரபகர்தான் பேசுறேன்.. நீங்க யாரு" என்றான் பிரபாகர்.

"பிரபாகர்.. நான்தான் சுந்தர்.. உன்கூட பத்தாவது வரைக்கும் படித்தேனே.. ஞாபகம் இருக்கா" என்றது குரல் (இனி சுந்தர்)

"ஹேய் சுந்தர், எப்படி இருக்க, எங்க இருக்க" என்றான் பிரபாகர்.

பிரபாகருக்கு பழைய நினைவுகள் வர தொடங்கியது.

சுந்தர் பிரபாகருடன் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில், ஒரே வகுப்பில் ஐந்து வருடங்கள் படித்து வந்தான். பத்தாவது படிக்கும்போது, சுந்தரின் தந்தை இறந்து போனதால், அவன் படிப்பு பாதியிலேயே நின்று விட்டது. பள்ளிக்கு கட்டணம் செலுத்த முடியாததால், நின்றுவிட்டான்.

பின் ஏதோ அரசு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்ததாக ஞாபகம்.

பிரபாகர், இருக்கியா - என்றான் சுந்தர்..

"இருக்கேண்டா.. பழைய நினைவுகள் வந்திருச்சி" என்றான் பிரபாகர்.

"நான் இப்போ சிகாகோவுல இருக்கேன், வந்து ஒரு ஏழு வருஷம் ஆகுது" என்றான் சுந்தர்.

இதைகேட்ட பிரபாகருக்கு ஒரு சிறு அதிர்ச்சி ஏற்பட்டது.. தனியார் பள்ளியில் படித்த நாம் இங்கே சென்னையில் வேலை செய்கிறோம்... அரசு பள்ளியில் படித்த சுந்தர் அமெரிக்காவிலா..

"ரொம்ப சந்தோஷம்டா சுந்தர்.. எப்படி என் நம்பர் கிடைச்சுது" என்றான் பிரபாகர்.

"தேடி கண்டுபிடிச்சேன்.. நான் அடுத்த வாரம் சென்னை வரேன்... உங்க வீட்டுக்கு வரலாம்னு நினைக்கிறேன்" என்றான் சுந்தர்.

"கண்டிப்பா வாடா, ரொம்ப நாளாச்சு பார்த்து" என்றான் பிரபாகர்.

ஒரு வாரம் கடந்தது.. ஒரு நாள் மாலை, பிரபாகருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது..

"பிரபாகர், நான்தான் சுந்தர் பேசுறேன்.. நாளைக்கு காலை ஒரு பத்து மணிக்கு உங்க வீட்டுக்கு வரவா" என்றான் சுந்தர்.

"பத்து மணிக்கா, வா.. நான் ஆபீசுக்கு லீவு சொல்லிடுறேன்" என்றான் பிரபாகர்.

அடுத்தநாள் காலை.. பிரபாகர் வீடு..

சரியாக பத்து மணிக்கு வீட்டு வாசலில் ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நபரை கண்டதும் பிரபாகருக்கு புரிந்தது, வந்திருப்பது சுந்தர் என்று.

"ஹாய் சுந்தர்.. வா வா" என வீட்டிற்குள் அழைத்து சென்றான் பிரபாகர்.

மனைவியையும் மகனையும் அறிமுகபடுத்தி வைத்தான் பிரபாகர்.

காபி மற்றும் சிற்றுண்டி வந்தது.. அப்பொழுது சுந்தர் "பிரபாகர், உங்க அப்பா அம்மா எங்கே, ஊருக்கு போயிருக்காங்களா" என்றான்.

"அம்மா தவறிபோயி சில வருடங்கள் ஆயிடிச்சு" என்றான் பிரபாகர்.

"உங்க அப்பா" என்றான் சுந்தர்.

"உன்கிட்ட சொல்றதுக்கு என்ன, எங்க அப்பாவுக்கும் எனக்கும் ஒத்து போகலை. அவரு சம்பாதிச்ச காலத்துல அடுத்தவங்களுக்கு உதவி பண்றேன்னு சொல்லி, மாசாமாசம் சம்பளத்துல ஒரு பகுதியை அழிச்சிட்டாரு... ஒரு சொந்த வீடுக்கூட இல்லை.. பாரு இன்னும் நான் வாடகை வீட்டில்தான் இருக்கேன்.. அதனால எனக்கும் அவருக்கும் செட் ஆகலை.. அவரை முதியோர் இல்லத்தில் சேத்துட்டேன்" என்றான் பிரபாகர்.

"இதுல அவருக்கு இப்போ இதயநோய் வேற.. எவன் காசு செலவு செய்வான்.. என்னால முடியாதுன்னும் சொல்லிட்டேன்" என்றான் பிரபாகர்.

மேலும்,"அவரு கெடக்குறாரு விடுடா.. நீ எப்படிடா அமெரிக்காவுக்கு போன.. உன்னால ஸ்கூல் பீசே கட்ட முடியாம போயிடிச்சே" என்றான் பிரபாகர்.

சுந்தரின் மனம் எதையும் கேட்பதாக இல்லை.

"பிரபாகர், கொஞ்சம் இரு.. நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்" என்றான்.

"சரிடா.. போன் வேணுமா" என்று கேட்டான் பிரபாகர்.

வேண்டாம் என்பதுபோல் தலையசைத்த சுந்தர், தன்னுடைய சட்டைப்பையில் இருந்து ஒரு நவீன கைபேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.

"ஹலோ.. சார், நான் சுந்தர் பேசுறேன்.. நீங்க என் பேரு, மற்றும் தகவல் எல்லாம் கேட்டீங்கள் இல்லியா.. அது வேணாம்.. நான் இப்போ என் நண்பர் பிரபாகர்கிட்டே போன் தரேன்.. அவரோட தகவல்களை வாங்கிக்கோங்க... ஆமாம் அதுக்குத்தான்' என்றான் சுந்தர்.

இதை கேட்ட பிரபாகருக்கு ஒன்றும் புரியவில்லை.

சுந்தர் பிரபாகரிடம் போனை கொடுத்து, "அவரு போனில் உன்னைப்பற்றி சில தகவல்கள் கேப்பார்.. அதை கொடு" என்றான்.

பிரபாகரும் போனை வாங்கிகொண்டு, எதிர்முனையில் இருந்தவர் கேட்ட தகவலை கொடுத்தான்.

பின் சுந்தரிடம், "யாருடா அது.. எதுக்கு என்னை பற்றிய தகவலை கொடுக்க சொன்னே" என்றான் பிரபாகர்.

"பிரபாகர், கொஞ்சம் பொறு. அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் சொல்றேன். உனக்கு நான் அமெரிக்கா போனது அதிசயமா இருக்கும். பத்தாவது படிக்கும்போது, பாதியில எங்கப்பா செத்துட்டதாலே, என்னால தொடர்ந்து படிக்க முடியல."

"படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போகலாம்னு முடிவு செஞ்சப்போ, உங்கப்பா என்னை பார்க்க வந்தாரு. நான் கொஞ்சம் நல்லா படிச்சதால், என்னை வேலைக்கு போகவேண்டாம் என்று சொல்லி, அவருக்கு தெரிஞ்ச அரசு பள்ளியில சேர்த்துவிட்டார். மாதாமாதம், நான் வேலைக்கு சென்றிருந்தால் எவ்வளவு கிடைக்குமோ, அந்த பணத்தை எனக்கு தந்துவந்தார். இதனால் என்னால் தொடர்ந்து படிக்க முடிந்தது. நன்றாக படித்ததால், இலவசமாக கல்லூரியில் இடம் கிடைத்தது.. பின் வேலையும் கிடைத்தது.. இன்று நான் அமெரிக்காவில்.. எல்லாம் உங்கப்பாவால்" என்றான் சுந்தர்.

"சரி அதுக்கும் இப்போ என்னுடைய தகவலை கேட்டதற்கும் என்ன சம்பந்தம்' என்று கேட்டான் பிரபாகர்.

"சம்பந்தம் இருக்கு. நீ சொன்னே இல்லியா, உங்கப்பா தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை யாருக்கோ கொடுத்துவிட்டார். அதனால் உனக்கு இன்றைக்கு ஒரு சொந்த வீடுகூட இல்லை என்று.. நான் சென்னையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன்.. அதை என் பெயரில் பதிவு செய்யத்தான் சென்னை வந்தேன்.. உன் பேச்சை கேட்டபின், என்னால்தான் உனக்கு சொந்த வீடு கிடைக்கவில்லை என்பதால், அந்த வீட்டை உன் பெயரில் பதிவு செய்ய சொல்லிட்டேன்.. இனி அது உன் வீடு" என்றான் சுந்தர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான் பிரபாகர்.

காபியும் சிற்றுண்டியும் தொடப்படாமல் அப்படியே இருந்தது.

"பிரபாகர், எனக்கு ஒரு உதவி வேண்டும்.. உங்கப்பாவை சேர்த்துள்ள முதியோர் இல்லத்தின் முகவரியை கொடு.. இனி நான் அவரை பார்த்துகொள்கிறேன்" என்று சொன்னான் சுந்தர்.

பிரபாகருக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரிடம் முதியோர் இல்லத்தின் முகவரியை கொடுத்தான்.

"சுந்தர், காபியையும் சிற்றுண்டியையும் சாப்பிடவில்லையே" என்றான் பிரபாகர்.

"வேண்டாண்டா, இனி ஒரு வினாடிகூட என்னால இங்க இருக்க முடியாது.. முதல்ல உங்கப்பாவ ஒரு சிறந்த மருத்துவ மனையில் சேர்த்து குணபடுத்தணும்.. அதுக்கப்புறம் அவரை என்னுடன் அமெரிக்கா அழைத்து சென்றுவிடுவேன்.. நான் சென்று வருகிறேன்" என்று புறப்பட்டுவிட்டான் சுந்தர்.

பிரபாகர், சுந்தர் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான்..

ஆனால் தந்தையின் அருமையை மட்டும் உணரவில்லை.. ஒரு நாள் உணருவான்.
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: ணராமல் போகும்தந்தையின் உணர்வுகள்

Post by vk90923 » Fri Jan 20, 2017 9:19 pm

மிக ஆனந்த கண்ணீர் மகிழ்ச்சி.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”