Page 1 of 1

என் முதல் காதல்

Posted: Thu Apr 23, 2015 10:32 am
by GibiPoul
Image
என் முதல் காதல் இல்லை என் முதல் ஈர்ப்பு எப்டி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . ஆனால் அது தான் என் மனதில் அடித்த முதல் அலை.

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் . பட்டாம்பூச்சியாய் பள்ளி செல்வது அப்புறம் சாயுங்காலம் ஆனால் வந்து அம்மாவின் கூட்டில் பிள்ளைபூச்சியாய் மாறி செல்லம் கொஞ்சும் அம்மா பிள்ளையாக தான் இருந்தேன் நான்.

என்றும் போல பள்ளியிலிருந்து சரியாக நாலரைக்கு வீடு திரும்பிய நான் வழக்கம் போல நாள் முழுதும் நடந்த கதைகளை வாய் மூடாமல் சொல்ல ஆரம்பித்தேன் அம்மாவிடம் இடையிடையே அம்மா தந்த டீயை சுவைத்தபடி. எங்கள் கதைகள் முடிந்ததும் அம்மா என் கையில் திணித்த மிக்சர் டப்பாவோடு அன்றைய தினத்தந்தியை எடுத்துக்கொண்டு என் வீட்டு திண்ணையில் சாய்ந்து படிக்க ஆரம்பித்தேன் .

திடீரென ஒரு பறவையின் சத்தம் ஆனால் வழக்கம்போல கீச் கீச் இல்லை சுரேஷ் சுரேஷ் என்றது . அப்போது சத்தியமாக எனக்கு தெரியாது அது அவன் பேரென்றும் அதையே நான் பைத்தியமாய் அசைபோட்டு கொண்டிருக்கப் போகிறேன் என்றும். ஆச்சிர்யமமும் அதிசயமுமாக நான் எட்டிப் பார்த்தபோது என் கண்ணில் பட்டது ஒரு அழகிய பச்சைக்கிளியும் அதன் அருகில் புன்னகை பூத்து கொண்டிருந்த அவன் முகமும். அதன் பின் தினத்தந்தியின் எந்த எழுத்தும் என் மனதில் பதியவில்லை.

அம்மாவிடம் கிளியைப் பற்றி சொன்ன போது ஆமா எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்க என்று சாதரணமாய் சொல்லி விட்டு நகர்ந்தாள். அப்புறம் பக்கத்துக்கு வீட்டு அக்காவிடம் டியுஷன் படிக்க செல்ல பையை எடுத்தேன். அப்புறம் இரவு உணவு என் எல்லாம் அதுவரை இயல்பாய் நடந்தது நான் என் தலையணையில் தலை சாயும் வரை .

கண்ணை மூடினால் வந்து ஒட்டிக்கொள்ளும் தூக்கம் அன்று என்னை திக்கு முக்காடத்தான் செய்தது. என் போர்வைக்குள் வந்து பதிந்து கொண்டது அன்று சாயங்காலம் பார்த்த முகம். எவளவோ துரத்த முயன்று பார்த்தேன் அது ஏனோ என் இதயத்தோடு ஒட்டிகொண்டது. இது என்ன உணர்வு என் இப்படி என்று புரியாமல் எப்படியோ போராடி தூங்கிப் போனேன். காலையில் அம்மாவிடம் சொல்லத் தோன்றியும் சொல்லாமல் இட்லியோடு சேர்த்து சொல்ல நினைத்ததையும் விழுங்கினேன். முதல் முறையாக அம்மாவிடம் எதோ சொல்ல யோசிக்கிறேன் சே என்னாச்சு என்று உள்ளுக்குள் உளறியபடி அம்மாவுக்கு கையசைத்து விடை பெற்றேன் .

தோழியிடம் மதிய சாப்பாட்டின் போது விஷயத்தை சொன்னபோது சிரித்தாள். கூடவே ரொம்ப சினிமாலாம் பாக்காத டி என்று வேற சொல்லி வைத்தாள். அவளிடம் என் சொன்னேன் என்று யோசித்தேன் ஆனால் அம்மாவிடம் சொல்வதைவிட இதை அவளிடம் சொல்ல வெகு இலகுவாய் இருந்தது.

அந்த சாயங்காலத்தின் வரவை ஏனோ என்னை அறியாமலே அதிகமாய் எதிர்பார்க்க தொடங்கினேன் . தினதந்தியோடு நான் திண்ணை சென்றபோது எங்கள் வீட்டு முல்லையின் வாசம் அன்று அதிகமானது போல் தோன்றியது. வீட்டு முன் நின்ற கொய்யா மரம் அதீத அழகுடன் தென்பட்டது. மெல்ல எட்டி பார்த்தேன் கிளியையும் காணவில்லை கூடவே அவனையும் தான்.

என்னை ரொம்ப ஏமாற்றாமல் கொஞ்ச நேரத்திலே வந்து சேர்ந்தான் கிளியோடும் குட்டி செடியோடும். எதோ பூச்செடி போல தெரிந்தது வெகு நேரமாய் மண்ணை கிளறினான் அப்புறம் செடி நட்டான். வீட்டுக்குள்

Re: என் முதல் காதல்

Posted: Thu Apr 30, 2015 11:35 pm
by சாதிக்
NICE= :): :clab: :clab: :clab: