சிறுகதை மற்றும் தொடர்கதைகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

சிறுகதை மற்றும் தொடர்கதைகள்

Post by kselva » Thu Jun 12, 2014 10:34 am

டேய் பையா என்று அம்மா அழைக்கும் குரல் . அந்த பையனுக்கு பத்து வயது இருக்கும். அவன் பெயர் கந்தன். ஏம்மா சும்மா சும்மா கூப்பிடரெ . பாருடா வெயில் உச்சந்தலைக்கு வந்துட்டது இந்தா கஞ்சிய குடி ,குண்டாவில் கரசிய கஞ்சியை டம்லரில் ஊற்றி கொடுக்கிறாள். ஏம்மா எப்பதான் நெல்லஞ்ச்சோறு போடுவ பையன் குரலில் ஏமாற்றம் . இரவும் வருகிறது பையன் தூங்கி விடுகிறான் , அந்த தாய் இயலாமையால் வருத்தமடைகிறார் வாஞ்சையுடன் தலை முடியை கோதிவிடுகிறார் . மின்சாரம் இல்லா காலம் அது , மயான அமைதி , வாசலில் கிழிந்த பாயின் மீது அவர்கள் . இதமான காற்று வீசுகிறது . பையனின் அப்பாவை பற்றிய நினைவு அந்த தாயின் உள்ளத்தில் அரைவயிறு தூக்கம் வர மறுக்கிறது .

டேய் பையா அம்மாவின் குரல் ; போயி இந்த கோழியை விற்று வா போ . பக்கத்து ஊருக்கு நடந்து போக வேண்டும் . ஏம்மா இத எத்தனை ரூபாக்கு விக்கறது , பத்து சொல்லு எட்டு ரூபாய்க்கு கொடுத்திட்டு வா . முன்பாகவே கோழியின் கால்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. பையன் கோழியை தூக்கிக்கொண்டு நடக்கிறான். பக்கத்து ஊர் பக்கம் வர வர பையனின் கைகள் வலிக்க ஆரம்பித்தன. கை மாற்றி கை மாற்றி கோழியை தூக்கிக்கொண்டு நடக்கிறான். கை வலி குறைந்தபாடில்லை. பக்கத்து ஊரும் வருகிறது . கோழி கோழி என்று பையன் நடந்துகொண்டே கூவுகிறான் . சைக்கிளில் சென்ற பெரியவர் நின்று விசாரிக்கிறார் , தம்பி கோழி விக்கிறயா, வினவுகிறார். ஆமாம் பையன் தலை ஆட்டுகிறான் . எத்தனை ரூபாய்ப்பா. பதினாறு ரூபாய் என்கிறான் பையன் ஏம்ப்பா நீ விலை அதிகம் சொல்கிறாய் குறைத்து சொல் ; இத தூக்கி பாருங்க நிறைய கணம் என்கிறான் பையன். கோழியை வாங்கிய பெரியவர் கணம் பார்த்து பதினான்ங்கு ரூபாய் கொடுத்துச் செல்கிறார்.


டேய் பையா என்று அம்மாவின் குரல் ஒலிப்பது இல்லை . அம்மா படுத்தே இருக்கிறார் . பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் . ஊர் பெண்கள் வந்து வந்து பார்த்துச் செல்கின்றனர். இன்னைக்கி அம்மாவாசை இது தேறாது இந்த பையன் பாவம் , குசு குசு என்று பெண்கள் பேசுவது பையனின் காதிலும் விழுகிறது அந்த பையன் அவன் அம்மாவை பார்க்கிறான் அவனின் அம்மா கண் மூடி அசைவற்று படுத்திருக்கிறார். அம்மா செத்திருவாங்களா பையனின் நெஞ்சில் நெருடல் . ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார் ஏதோ மருந்து கொடுத்தார்.

சிறிது நாளில் டேய் பையா என்ற அம்மாவின் குரல். எதுக்கு அம்மா கூப்பிடற பையனின் குரல்.


வயிரு சுண்டி, குடல் சிறுத்து ,உணவுக்கு ஏங்கும் அவர்கள்.

" கொடியது கொடியது வருமை கொடியது இளமையில் வருமை அதை விட கொடியது அவ்வையின் வார்த்தையில் எத்துணை வலிமை" .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சிறுகதை மற்றும் தொடர்கதைகள்

Post by ஆதித்தன் » Thu Jun 12, 2014 11:08 am

கதையை அவசரப்பட்டு முடிச்சிட்டீங்களோ???
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சிறுகதை மற்றும் தொடர்கதைகள்

Post by cm nair » Thu Jun 12, 2014 1:59 pm

நல்ல அருமையான கதை.ஆனாலும் கோவிலில் பால் அபிஷேகம், அன்னதானம் என்று அங்கும் இங்கும் பொருள் விரயம் செய்பவர்கள் இப்படி வறுமை இருக்கும் ஏழைகளுக்கு உதவ முன் வரலாம் இல்லயா...கடவுள் அபிஷேகம் கேட்டாரா..? ஏழையின் சிரிப்பில் இறைவன்..ஏழைக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுப்பது தான்.
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: சிறுகதை மற்றும் தொடர்கதைகள்

Post by kselva » Thu Jun 12, 2014 10:17 pm

இந்த கதையில் . கோவிலும் அபிசேகமும் இடம் பெறவில்லை.
Last edited by kselva on Fri Jun 13, 2014 7:41 am, edited 1 time in total.
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: சிறுகதை மற்றும் தொடர்கதைகள்

Post by kselva » Fri Jun 13, 2014 7:38 am

மனித நேயம் மறைந்து வருகிறது .
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”