என் காதலிக்கு கல்யாணம்!!!

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

என் காதலிக்கு கல்யாணம்!!!

Post by மன்சூர்அலி » Thu Apr 24, 2014 3:00 pm

:blove: என் காதலிக்கு கல்யாணம்!!! :blove:

ஏதோ நடந்தது நடந்து போச்சு...அதையே நினச்சு உன் வருங்கால வாழ்க்கையும் நாசம் பண்ணிடாதே அருண்...
காதலிச்ச அத்தனை பேரும் கல்யாணத்துலதான் முடியனுமுன்னா காதலுக்கு என்ன விலை இருக்கு...சொல்லு...உன்ன பொறுத்த வரை நீ காதலித்தது ஒரு கனவா நினச்சு...கடந்த கால வாழ்கையை மறத்துட்டு நடக்க போறதா பாருடா....
அவ......... அவ வாழ்கைய அமைச்சுக்க போறா...நீ உன் வாழ்க்கைய வீனாக்கிடாதே...இதுக்கு மேல நான் சொல்றத்துக்கு ஒன்னும்மில்ல என்று சொல்லி நிறுத்தினான் சங்கர்...
சங்கர் நீ என் நிலமையில இருந்து பாருடா...அப்பத்தான் உனக்கும் தெரியும் அதோட வலியும் வேதனையும்...
அவ என்கூட பழகியது ஒரு காதலனா இல்லடா...ஒரு கட்டிய கணவன் கிட்ட ஒரு மனைவி எப்படி நடந்துக்குவாளோ அப்படியெல்லாம் என் கிட்ட நடந்துகிட்டா.... அந்த அந்தரங்க உறவை தவிர...அவ வேனுமும்னனா என்னை ஒரு நிமிஷத்துல மறந்துடலாம்.என்னால அவள மறக்க முடியாதுடா...அவ நினைவாத்தான் வாழ்துட்டு இருப்பேன்...
இப்ப என்ன சொல்லவர...உன் வாழ்கையும் கெடுத்துட்டு..அவ வாழ்கையும் கெடுக்க போரே.... அவ உன்ன காதலித்ததுக்கு தண்டனை கொடுக்க போறியா?...இல்ல பரிசு கொடுக்க போறியா?.....
அவ நிலமையிலும் நீ இருந்து பாருடா அருண்.... அவ உன்ன மனசார தான் காதலித்து இருக்கா....அவ அப்பா ஒரு ஹார்ட் பேசன்ட்....அவ வீட்டுக்கு ஒரே பெண்...காதலித்தவனதான் நீ கல்யாணம் பண்ணிகனும்முன்னு நீ ஒரே முடிவா இருந்தா உன் முடிவ நீ மாத்திக்க வேண்டாமம்மா...என் முடிவ நான் மாத்திகிரேன்... சுதா....நான் தூக்கு மாட்டி செத்த பிறகு எம் புனம் இந்த வீட்டை விட்டு போன பிறகு...நீ இஸ்டபட்ட படி உன் காதலனோட சந்தோசம் வாழுமா என்று அவ அப்பா திர்த்து சொல்லிட்டாராம்...அது மட்டும்மில்ல.... அவ அம்மா என்ன சொன்னங்கலாம் தெரியுமா???? சுதா அப்பா சொன்ன மாதிரியே...நம்ம குடும்ப கவுரவத்த என்னைக்கு தெருவுல கொண்டு வந்து நிருத்தினியே இனி நாங்க இந்த சமுதாயத்தின் முன்பு வாழறதா விட போய் சேர்ந்திறோம்....உங்க அப்பாவே போன பிறகு நான் மட்டும் இருந்து என்ன செய்ய நானும் தற்கொலை செச்சுகிரேன்...எங்களுக்கு கர்மாந்த்தரம் பண்ணிட்டு...நீ நல்ல படி கல்யாணம் பண்ணிக்கோ சுதா..என்று அவ அம்மாவும் முடிவா சொல்லிட்டாங்கலாம்....
இதை கேட்டு கொண்டு இருந்த அருண்... தன கண்களில் வடிந்து கொண்டுருந்த கண்ணீரை துடைத்து கொண்டு லேசாக புன்னைகித்து..... சாவ போறவங்க சொல்லிட்டு சாவ மாட்டாங்க சங்கர்....
சுதா ஏதோ ஒன்ன மனசுல வச்சுட்டு தான் ஏதோ ஒரு காரனத்த சொல்லி என்ன கலட்டி விட பாக்குறா...
அப்பா செத்துருவார்...அம்மா செத்துருவாங்கன்னு இப்ப சொல்லுறவ காதலிக்க முன்ன தெரியாதா???....ஏன்? மனச கொடுத்துட்டு திருப்பி கொடுன்னு கேட்கணும்....அவ விளையார்த்துக்கு நானா கிடைச்சேன்....
அவள மறந்திடு..அவள விட்டுருன்னு சுலபமா இப்ப சொல்லுறியே...நானும் அவளும் சினமாவுக்கு போகும் போது எத்தன வாட்டி நீயே டிக்கெட் புக் செய்து கொடுத்திருபே...எத்தன வாட்டி சுதாவையும் என்னையும் பார்த்து குட் மேச்சிக்ன்னு சொல்லிருபே.....ஒரு நாலாவது அவ என் கூட இருக்கும் போது என்ன அள்ளி சாப்பிட விடுவாளா குழந்தைக்கு நிலவ காண்பித்து சாப்பாடு ஊட்டி விடுவது போல ஊட்டி விட்டவலாச்சே....உன் செல்லுலையும்..என் செல்லுலையும் எடுத்த போட்டோவை எல்லாம் டெலிட் பண்ணிடலாம்....எம் மனசு எடுத்த போட்டவை டெலிட் பண்ண முடியல அருண்...
நீ சொல்லுறது எல்லாம் சரிதாண்டா....நம்மளால ஒரு பெண்ணோட வாழ்க்க வீண்ணாக கூடாது... உன்னால ஒரு குடும்பமே கேள்வி குறி ஆக கூடாது...இதுக்கு மேல எனக்கு பதில் சொல்லவும் தெரியல அருண்...மனச திட படுத்திகோ தைரியமா இரு...ஒரு பெண்ணே தன் காதலான மறந்துட்டு வேற ஒருத்தனோட வாழ த்யார்ரகும் போது நீ ஏன் உன்ன நீ மாத்திக்க கூடாது...எல்லாம் மனசு தான் காரணம்...
இன்னைக்கு உன் காதல் கதையே பேசி நேரம் போனது தெரியல ஆபிஸ் வேலையும் முடிந்தது...கிளம்பு வீட்டுக்கு போகலாம்...என்று இருவரும் வீட்டை நேக்கி சென்றனர்...
அருணும்,சங்கரும்...ஒரே வீதியில் குடி இருப்பதால்...இருவரும் நல்ல இணை பிரியா நண்பர்கள்...
அருனின் வரவை எதிர் பார்த்தவளாய் வாசலில் நின்று கொண்டு இருந்தாள் அருனின் அம்மா வரலக்ஸ்மி.....
அவள் எதிர் பார்த்த படி இருவரும் ஒன்றாக ஆஜர் ஆகினர்..
அருனின் முகமே தெளிவாக இல்லை....
என்னப்பா சங்கர் எதாவது புத்தி மதி சொன்னியா...அவன் மனச கொஞ்சம் எப்படியாவது நீ தான் மாத்தணும்...உன்ன நம்மி தான் இருக்கேன்...
இல்லம்மா எல்லாம் சரியாகும் நீங்க ஒன்னும் கவலை பாடாதிங்க....
சரிமா நான் கிளம்புறேன் என்று அங்கு இருந்து அவன் வீட்டை நோக்கி நகர்ந்தான்..சங்கர்.....
வரலச்மியால் த்ன் மகனை ஆறுதல் படுத்த முடியவில்லை....
அருண் சொல்லறத நல்ல கேளுப்பா....காதல் தோல்வின் வலியும் வேதனையும் எனக்கு நல்லா தெரியும்...என் தங்கை... உன் சித்தி கல்பனாவும் இப்படிதான் காதல் தோல்வி..அந்த நேரத்துல அவ பட்ட பாடு எனக்கு தான் தெரியும்..அதல்லாம் மறந்து இன்னைக்கு ரெண்டு பிள்ளைகள் பெற்று குடும்பம் நடத்துல எல்லாம் கொஞ்ச நாள் போனா சரியாகி போகும்...யார்யாருக்கு யாருன்னு எல்லாம் அந்த பிரம்மன் எழுதி வச்சுட்டன்..இனி மாத்தி எழுத போறதில்ல...உனக்கு யார் எங்கே பிறந்து இருக்காளோ...
எத்தனைதான் தான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அருனால் மறக்க முடியவில்லை.....
ஒவ்வொரு இரவும் சுதாதான் அவன் கண்முன்பில் பிரதிபலிக்கிறாள்....அவள் அவனின் உதட்டோடு உதடு சேர்த்தது..அவனின் தொடையில் அவளின் கைவிரல்களால் வருடியது...கட்டி அனைத்தது...அவளின் தலையில் சூடிய முல்லை பூவை அவன் முகந்தது பார்த்தது.. முகத்தோடு முகம் சேர்த்து...கைவிரல்களாய் ஒன்று கோர்த்து பின்னியது...தன் மார்பில் முளைத்திருந்த முடிகளை அவள் கை விரல்களால் வருடி வருடி பிடித்திலுத்தது...ஆ....வலிக்குதே..என்று அவளை அவன் செல்லமாக அடித்தது.... அவன் அவளை மெல்ல தடவி அவளின் உடல் சூட்டை கூட்டியது...அது நேரம் அவள் முனங்கியது....இவற்றை எல்லாம் அவன் நினைக்கும் போது தூக்கம் இல்லாமல் தவிக்கிறான் அருண்...
அவளை அவன் மறக்க முடியாமல் துடிக்கிறான்...
சுதாவும் காதலித்தவனை கல்யாணம் செய்ய வேண்டும் என்று அவள் வீட்டில் போராடுகிறாள்...அவளின் போராட்டம் தோல்வில் தான் முடிகிறது....
அருணை மறக்க மனம் இல்லாமல் வற்புர்தலின் பேரில் மண மேடை ஏற தயார் ஆகிறாள்....
சுதாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாண தேதியும் குறித்தாகி விட்டது....
சுதாவுக்கு கண்யான தேதி நெருங்க,நெருங்க....அருணுக்கு நெஜ்சம் துடிக்கிறது...இருப்பு கொள்ளவில்லை....
சங்கரிடம் புலம்புகிறான்.....அருண்.....சங்கரால் பதில் ஏதும் சொல்ல முடியாமல் தவிக்கிறான்...
தன் மனதுக்கு ஒரு திட்டம் தீட்டுகிறான் அருண்....சுதா கல்யாணத்தை நேரில் பார்க்க ஆசை படுகிறான்..அவளை மண மேடையில் வைத்து..மண கோலத்தில் அவளை வாழ்த்த வேண்டும் என்று....
இது பற்றி சங்கரிடம் சொல்கிறான்....
உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன??உன்னையே வேண்டாம் என்று ஒதிங்கி போகும் அவள் கல்யாணத்தை பார்க்கணுமா...என்னடா உனக்கு என்ன ஆச்சு....
எத்தனையே எடுத்து சொல்லியும்.அருண் கேட்பதாக இல்லை....
வரலக்ஸ்மியும் அருணிடம் சொல்லிபார்த்தாள்....இதெல்லாம் வேண்டாப்பா.....
அருண் எடுத்த முடிவில் மாறுவதாக இல்லை...
வரலட்சுமி சங்கரை கூப்பிட்டு...
சங்கர்.. அருண்.. சுதா கல்யாணத்திற்கு போய்தான் ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான்.அவனை தடுக்க முடியாது..ஆகவே அவன தனியா விட எனக்கு விருப்பம் இல்ல..நீயும் அவன் கூட கொஞ்சம் போப்பா.....
சரிமா கண்டிப்பா நானும் போறேன்..
அன்று தான் கல்யாணம் சுதாவுக்கு....
உறவுகள்..ஊரார்கள்..நண்பர்கள் என் படை சூழ அந்த கல்யாண மண்டபம் நிறைந்து கொண்டு இருக்கிறது....
அது நேரம் அருண் சங்கருடன் அந்த மண்டபத்தை அடைகிறான்...
மணகோலத்தில் சுதா...வந்தவர்களை இரு வீட்டாரும் வரவேற்று கொண்டு இருகின்றனர்...
அருணும் சங்கரும் முன் வரிசையில் உள்ள நாற்காலில் அமர்ந்து கொண்டனர்....
சுதாவை பார்த்தவரே அருண் அமர்த்திருக்கிறான்....
மண மேடையில் இருந்த சுதா அருணை பார்த்து விட்டாள்...உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தாலும் கூட முக சுலிவிள்லாமல்...இருக்கிறாள்....
அவள் அருகில் மணமகன் என்ற ஒரு உருவம்...சாமி சிலையவே எடுத்து அவள் அருகில் வைத்தார் போல் ஒரு அழகிய தேற்றம்...தன்னை விட இத்தனை அழகானவனை மாபிள்ளையாக அவளுக்கு கிடைத்தது பற்றி அருண் பெருமிதம் அடைந்து கொண்டவனாய்.....ஐயர் கொடுத்த அட்சதை அவளுக்கு தூவி ஆசி வதிக்கிறான் என் காதலி வாழ்க என்று தன் மனதுக்கு சொல்லி கொண்டு....
சிறிது நேரம் கழித்து மேடையில் ஏறிய அருண் சுதாவை நோக்கி மேடம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தி விட்டு வீடு திரும்புகிறான்...
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”