உமா என் உத்தமி!!!

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

உமா என் உத்தமி!!!

Post by மன்சூர்அலி » Wed Nov 27, 2013 11:54 am

உமா என் உத்தமி!!!

உமா... சொல்றத....கொஞ்ச கேளுமா....சொந்தம் விட்டுற....கூடாதுன்னு....தான் சொல்லுறேன்.....ஆகாஸ்க்கு என்ன குறைச்சல்...நல்லா படிச்சு நல்ல வேலை செய்துட்டு தான் இருக்கான்....உனக்கு சொந்த தாய் மாமன் ஆச்சு.....ஒன்னுகுள்ள ..ஒன்னு....எல்லாம் ஒத்து போகும் அதுக்குதான் சொலுறேன்.......
முடியாது....முடியாது....முடியாது.... என்று விடா பிடியாக பிடிவாதமாய் நிற்கிறாள்.உமா....அம்மா எனக்கும் ஜான்சன்கும்ன்னு முடிவாகி போச்சு எம் மனச அவன்ட்ட கொடுத்துடேன்....கல்யாணம் என்று ஒன்னு இருந்த அது ஜன்சன்னோட தான்....இல்லாவிட்ட அப்படியே இருந்துரேன்.......
அவளின் பேச்சும், வீரமும், தைரியமும்,அம்மாவை...ஒரு நிமிடம் யோசிக்கச் செய்தது. தகப்பன் இல்லாம உன்ன வளர்த்து படிக்கச் வச்சு...ஆளாகி விட்ட எனக்கு நல்ல பரிசு கொடுதுட்டமா...போதும் இனி உன் இஷ்டபடி நடந்துக்கோ....என்று தன் கண்களில் கசிந்த கண்ணீரை தன் முந்தனையால் துடைத்து கொண்டாள் லக்ஷ்மி. .......
ட்ரிங்... ட்ரிங்...ட்ரிங்...கை தொலை பேசி ஒலித்தது.. ஹலோ...என்றவாறு பேச தொடங்கினாள் உமா..... அமெரிக்காவில் இருந்து ஜான்சன்..
ஹாய் ஜான்சன்....நலம் விசாரித்தாள்...
அவள் அவனிடம் பேசும் போது...அவளுக்குள் ஏற்பட்ட சந்தோஷமும் மகிழ்ச்சியும் எல்லையை தாண்டுவதை கண்ட லக்ஷ்மி...
இவளை திருத்துவது கஷ்டம் என்பதை உணர்ந்தாள்.. லக்ஷ்மி...
ஏதோதே பேசி கொண்டிருந்த இருவரும்..சரி ஜான்சன் நீங்க எத்தன வருஷம் காத்திருக்க சொன்னாலும் நான் உங்களுக்காக காத்திருக்க தயார்...டேக் கேர் பை...என்று தொலை பேசியை ஆப் செய்து வைத்துவிட்டாள் உமா...
லக்ஷ்மி ஆகாசை அழைத்து...டேய் இத்தனை நாளா உமாவத்தான் கட்டுவேன்னு உம் மனசுல ஆசய வளர்த்துட்டு இருந்தே... இனிமே அத மறந்துடு..மனசையும் உடம்மையும் ஒருத்தன்ட்ட கொடுத்துட்டு கழுத்த ஒருத்தன்ட்ட கொடுத்துட்டு வாழறது இது ஒரு வாழ்க்கையா???அவ ஜான்சனை மறக்குறதா இல்லன்னு பிடிவாதமாய் சொல்லிட்டா...
அக்கா அவ சின்ன பெண்ணு எது நல்லது எது கெட்டதுன்னு தீர்மானிக்க கூடிய வயசு இல்ல...சின்னப்பத்துல இருந்தே எனக்கும் அவளுக்கும்ன்னு ஆணி அடித்தாற்போல் முடியாகி விட்டது....இப்போ போய் இப்படி சொன்ன எப்படிக்கா... என்னால ஜிரணிக்கவே முடியல...
மணவறை வர போய் நீன்ன கல்யாணம் எல்லாம் இருக்கு ஆகாஷ்... அவளே வேண்டாம்முன்னு சொல்லும் போது என்னை என்ன செய்ய சொல்லுரே...இதுக்கு மேல அவளோட மல்லுகொடுக்க என்னால முடியாது ஆகாஷ்....
அக்கா எம் முடிவையும் கடைசி சொல்லிரேன்..எனக்கு கல்யானம்முன்னு ஒன்னு இருந்தா அது உமாவோட மட்டும் தான் இல்லாட்டி நான் அப்படியே இருந்திடுரேன்...என்று அவனும் ஆணித்தரமாக சொல்லி விட்டான்..
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் லக்ஷிமின் நிலை இந்த இடி பாடுகளில் சிக்கி தவிக்கிறாள்...
இன் நிலையில் ஜான்சன் போனில் இருந்து ஒரு குறுந் தகவல் வர.. ஜான்சனுக்கு ஒரு விபத்தில் ஒரு கால் செயல் இழக்க கூடிய நிலை ஏற்படுகிறது... ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டு உள்ளதாக....
இதை படித்த உமா துடித்து விடுகிறாள்...என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறாள்...எப்படியாவது ஜான்சனை பார்க்க துடிக்கிறது அவளின் உடலும், உள்ளமும்...
ஜான்சனின் தொலை பேசிக்கு தொர்பு கொண்டாள் கூட போன் சுச்டு ஆப் என்று தான் இருக்கிறது...
அவனை தொடர்பு கொள்ள முடியவில்லையே என்று அவளின் மனம் கவலைக்குள்ளாகிறது...
வீட்டில் சரியாக சாப்பிடுவதும் இல்லை...தூக்கமும் இல்லாமல் தவிக்கிறாள் உமா...
இதை பார்த்து கொண்டு இருந்த அம்மா லக்ஷ்மி ஒரு வாரமா உன்ன பாக்குறேன் ஒரு மாரியாவே இருக்கே.ஏன் என்று அவளிடம் விசாரிக்கிறாள்...
கண்ணிர் சிந்தியவாறு விவரத்தை சொல்கிறாள் உமா...
கேட்டு கொண்டிருந்த லக்ஷ்மி...சனியன் தொலைந்தது விடுமா...நல்ல வேலை உன் கழுத்துல தாலி கட்டிருந்தா.. என்னவாகி இருக்கும்...அந்த நொண்டி கூடதானே வாழனும்...நம்ம குல தெய்வம்தான் காப்பாத்திடுச்சு....என்று கூற...
இதை கேட்ட உமாவுக்கு அம்மாவை ஓங்கி அறை வேண்டுமாய் இருந்தது...தன்னை தானே அடக்கி கொண்டு...
போதும் நிறுத்துமா...ஒரு பெரிய மனுஷி பேசற பேச்சா இது...நான் போய் உன்கிட்ட சொன்னனே...என்று புலம்பி கொண்டாள் உமா....
அது நேரம் அவளின் தொலை பேசி மணி அடிக்க...
எடுத்து பார்த்தாள் ஜான்சன். என்ன ஜானு என்ன அச்சு....எனக்கு பயமா இருக்க ஜானு....
ஒன்னும் இல்ல உமா....
ஒரு சின்ன ஆக்சிடியன்ட்...ஒரு கால் மட்டும் வரல...என்னால நடக்க முடியல உமா...நான் கூடிய சீக்கிரம் இந்தியா வந்திடுவேன்.. ட்ரீட்மென்ட் இந்தியாவுல பார்கலாம்முன்னு இருக்கேன்..எல்லாம் சரியாகும்...ஒன்னும் பயப்படாதே உமா. இந்த ஆஸ்பத்திரியில பேஷன்ட் போன் செய்ய அனுமதி இல்ல...எங் கூட என் பிரண்ட்ஸ் ரெண்டு பேரு இருக்காங்...
சரி நான் அப்புறம் பேசுறேன்..என்று போனை ஆப் செய்து விட்டான் ஜான்சன்...
மீண்டும் மீண்டும் அவனிடம் பேச முயற்ச்சிக்கிறாள் உமா. மீண்டும் சுச்டு ஆப்...
அவளின் தவிப்பும் ஏக்கமும்..அவளின் அம்மாவுக்கு புரிந்தும் புரியாமல் நடிக்கிறாள்...
மீண்டும் ஒரு குறுத் தகவல் அவளின் போனுக்கு வர...படித்து பார்க்கிறாள் உமா.......
ஜான்சன் போனில்லிருந்து சென்னை வருவதாக ஒரு குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெருவதாவும்...
இதை படித்து பார்த்த உமா...அந்த ஆஸ்பத்திரி தேடி போய் அவனை சந்திக்கிறாள்...
.... என்ன ஜான் என்ன ஆச்சு...உங்கள இப்படி ஒரு நிலையில பார்க்கவே....என்று கண்களில் நீர் வடிய அவனின் கைகள் பற்றி பிடித்தவாறு...அவன் அருகில் அவள்...
அழதே உமா...எது நடக்குமோ அது நடந்தே தீரும்...எல்லாம் சரியாகும்.கவலபடதே...
தன் அம்மா எஸ்தரை சுட்டி காட்டி இதுதான் எங்க அம்மா...
ஏறிட்டு பார்த்து லேசாக புன்னகைத்தாள் உமா...
பதிலுக்கு லேசாக புன்னகித்த எஸ்தர்...
. ஜான்சன் உன்ன பத்தி எல்லா விவரமும் சொன்னாமா...எனக்கு இதுல எந்த தடையும் இல்ல எல்லாம் அந்த கர்த்தரின் கட்டளை படி நடக்கட்டும்..என்றாள் எஸ்தர்...
சரி ஜான்.. வந்து ரொம்ம நேரம் ஆகுது.... அப்பபோ வந்து பாத்துகிரேன்..என்று போக மனம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் உமா...
மீண்டும் ஒரு நாள் அவள் அவனை சந்திக்க வரும் போது தான் அவள் தலையில் இடி விழுந்தது...
இனி ஒரு கால் மட்டும் செயல் படாது என்று டாக்டர் அழுத்தமகா சொல்லிவிட்டார்....
இதை கேட்ட உமா...திகைத்து போய் நின்றாள்...இவளை பார்த்ததும்...ஜான்சன் கண்ணீரில் அவனின் முகத்தையே கழுவி கொண்டான்....
வீட்டில் லக்ஷ்மி போயிம்...போயிம்...ஒரு நொண்டிய புருஷனா ஏத்துக்க துடிக்கிரேயே உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு...அவன மறந்து தொலைச்சுட்டு ஒழுங்கா மாமாவை கட்டிக்கிட்டு வாழ பார்..என்று சொல்லி நிறுத்தினாள் லக்ஷிமி......
இதோ பாரும்மா...இன்னொருமுற ஜான்சன்னை மறந்திரு... அவன விட்டு விலக்குன்னு சொன்னே..நான் இந்த வீட்ட விட்டே போயிருவேன்...அவனுக்கு காலே இல்லான்னு பரவாஇல்லை..எனக்கும் ஜான்சன் தான் எம் புருஷன் இத யாராலையும் தடுத்து நிறுத்த முடியாது...எனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தே தீரும்..இது சத்தியம் என்று ஆணி அடித்தார் போல் சொல்லி விட்டாள் உமா....
ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய ஜான்சன்..உமாவை தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கிறான்......
அதன் படி உமாவும்...அவன் வீடு தேடி செல்கிறாள்......
அவளை வரவேற்ற ஜான்சனின் அம்மா எஸ்தர்...அவன் இருக்கும் அறைக்குள் அழைத்து செல்கிறாள்.......
அங்கே அவன் கிடக்கையில் கிடக்க அவன் அருகில்..அவள் அமருகிறாள்....
உமா.. என்னை தப்பா நினைக்காதே...நான் சொல்றதே கொஞ்சம் பொறுமையா கேளு... வேலைக்கு எட்டு மாத்திர சாப்பிட்டு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்.. நான் இருக்கும் இந்த நிலமையில உன்ன கல்யாணம் பண்ணிட்டு வாழ்றது எனக்கு சரின்னு படல ஆனா நான் சாகும் வர நீ எம் மனசுல நீ மட்டும்தான் இருப்பே...உன் வாழ்க்கைய நான் சீர் அழிக்க விருப்பல....நீ உங்க அம்மா சொல்றத போல் உன் மாமாவை கல்யாணம் பண்ணிட்டு உன் வாழ்க்கைய நல்ல விதமா அமச்சுகோ....என்று சொல்லி நிறுத்தினான் ஜான்சன்..
கண்களின் கசித்து வந்த கண்ணீரை ஒரு முறை துடைத்து கொண்டு...இதோ பாருங்க..ஜான் என் வாழ்க்கைய உங்களுக்கு அர்பனுச்சுடேன்...இத்தன வருஷமா என் இதயத்துல இருந்த உங்கள ஒரு நிமிஷத்துல என்னால தூக்கி போடா முடியாது...உங்க கால் தான் செயல் இழந்து போயிருக்கு. உங்க மனசு இல்ல...நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களோடு வாழறதா முடிவு பண்ணிடேன். என் முடிவ என்னால மாத்திக்க முடியாது...உங்க வீட்டு வேலைகாரிய இருந்து என் காலத்த கழிச்சுட்டு போய்ரேன் ப்ளீஸ்... எனக்கு வாழ்க்க கொடுங்க என்று இரு கரம் கூப்பி அவனின் கால்களை பிடித்து கெஞ்சி அழுகிறாள்...உமா...
இதை பார்த்து கொண்டிருந்த எஸ்தர் அவளை தன் கரங்களால் தடவி கொடுத்தவாறு கர்த்தரின் ஆசீர்வாதம் உனக்கு என்றென்றும் உண்டாகட்டும்..என்று அவளின் நெத்தியில் ஒரு சிலுவையை போட்டு ஆசீர்வதித்தாள்...
வீடு திரும்பிய உமா......
லக்ஷமியின் ராமாயணம் மீண்டும் தொடர்ந்தது... நாளுக்கு நாள் லக்ஷ்மியின் தொந்தரவு அதிகமாகி கொண்டே போகிறது.....
சகித்து கொள்ள முடியாமல்... உமா ஒரு நாள் அவளின் துணிமணிகளை ஒரு பெட்டியில் அடிக்கி கொண்டு...அம்மா விடம் சொல்லிவிட்டு ஜான்சன் வீடு நோக்கி நடக்கிறாள் உமா..
முறை படி ஜான்சனுக்கும் உமாவுக்கும் கிருஸ்த்துவ முறை படி திருமணமும் நடைபெற்றது...
தன் வாழ்கையை எல்லோர் முன்பிலும் ஜான்சனுடன் வாழ்ந்தே காட்டனும் என்ற வீரமும் வைராகியமும் அவளின் மனதில் உதிக்கிறது....
இப்படியாக போய் கொண்டிருந்த கொஞ்ச காலத்தில் எத்தனையோ கஷட்டங்களை சந்தித்து அவளின் மனதை தளரவிடாமல்...ஜான்சனுக்கும் உடல் ஊனமுட்றவன் என்ற அடி படையில் அவனுக்கும் ஒரு அரசாங்க வேலையில் அமர செய்கிறாள் உமா......
உமாவுக்கும் ஒரு கிருஸ்த்துவ பள்ளியில் ஆசிரியையாக வேலை தேடி அவளுக்கும் வேலை கிடைகிறது...
கர்த்தருக்கு நன்றி சொல்லியவாரே இவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் போய் கொண்டு இருக்கிறது...
லக்ஷிமியும் கொஞ்ச காலத்திற்கு பிறகு தன் மகளுடன் தஞ்சம் புகுகிறாள்...
உமா தான் என் உத்தமி.. என்று கார்தருக்கு நன்றி சொல்கிறான் ஜான்சன்...
imageshandi.jpg
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உமா என் உத்தமி!!!

Post by ஆதித்தன் » Wed Nov 27, 2013 12:37 pm

கதை நன்றாக இருக்கிறது..
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: உமா என் உத்தமி!!!

Post by cm nair » Wed Nov 27, 2013 2:02 pm

அருமை....நல்லா இருக்கு....தொடருங்கள் ...
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”