முந்தைய நாள்களில் ஆண்டின் முதல் நாளில் எப்படியும் ஒர் பேமண்ட் வாங்கிவிட வேண்டும் என்று இரண்டும் மூன்று தளங்களில் பேஅவுட் ரெக்யூஸ்ட் செய்து, ஒன்று அல்லது இரண்டு பேமண்டினை சரியாக ஆண்டின் முதல் நாளில் வாங்கிவிடுவது வழக்கம். இவ்வாறு ஆண்டின் முதல் நாளில் பேமண்ட் வாங்குவது என்பது எனக்கு மட்டுமில்லாமல், ஆன்லைன் செய்து சம்பாதிக்க வேண்டும் என ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் பெரிய உத்வேகத்தினைக் கொடுக்கும் என்பது உண்மை.
பணம்தான் எல்லாம் என்ற இவ்வுலகில், பணத்தினைச் சம்பாதிக்க உத்வேகப்படுத்துவது என்பது ஒர் அற்புத சேவையாகக் கருதி, என்னால் முடிந்தவரை பலன் கொடுக்குமான தகவல்களை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.
2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் பேமண்ட் வாங்க வேண்டும் என்ற பழைய எண்ணத்துடன் கூடிய செயல்பாடு இல்லாவிட்டாலும், கடந்த இரண்டு மூன்று வருடத்தினைப்போல் இல்லாமல், இந்தாண்டு அக்டிவாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தோடு, பழைய ஆன்லைன் ஜாப் தளங்களின் பாஸ்வேர்டுகளை ரீசெட் செய்து லாக்கின் பண்ணிப்பார்க்கும் பொழுது , மூன்று தளங்களில் பேஅவுட்டுக்குத் தயாராக பணம் ரெடியாக இருந்தது. அதெப்படி பாஸ்வேர்டே மறந்து போன தளங்களில் பேஅவுட்டுக்கு பணம் ரெடியாக இருந்தது?? அதுதான் ஆன்லைன் ஜாப்பின் இருக்கக்கூடிய சிறப்பு.
பலவிதமான ஆன்லைன் ஜாப் இருக்கிறது. அதில் நான் செயல்படும் இத்தகைய ஆன்லைன் ஜாப்களில் சரியாக கொஞ்சக் காலம் நன்றாக வேலை செய்தால், வருங்காலத்தில் அது ஜாக்பாட் மாதிரி பெரியத் தொகையோ, கஞ்சிக்கு ஏதுவான காசோ கொடுக்கும், பல மாதங்கள் கூட வேலையே செய்யாமல் பணம் பேஅவுட் வாங்கலாம் என்பதுதான், நான் விரும்பும் ஆன்லைன் ஜாப்பின் சிறப்பு.
கூகுள் விடியோ ஜாப்பும் அப்படியான ஒர் சிறப்பு ஆன்லைன் ஜாப்தான் என்றாலும், விடியோ பிடிச்சி, அதனை எடிட் செய்து... எடிட் பண்ணிக்கலாம், ஆனால் விடியோ எடுக்கமே.. எங்கமே எடுக்கிறது... இருக்கும் இடத்திலிருந்தே என்ன விடியோ எடுக்கலாம்.. சரி, அதப்பற்றி பேசலாம்.. இதுபற்றி பேசலாம் என திட்டமிட்டாலும் அதற்கான திட்டமிடல் ஏனோ தயக்கமாய் நிற்கிறது. எப்படியும் ஒர் நாள் கூகுள் விடியோ ஜாப்பிலும் பேமண்ட் வாங்கிவிடலாம்.. இப்போ ஆண்டின் முதல் நாளில் வாங்கிய பேமண்ட் தகவல் பார்க்கலாம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் எப் பி எஸ் தளத்திலிருந்து 153 டாலர் , கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 13000 /= பேமண்ட் 1-1-2023 ஆம் தேதி வாங்கியிருக்கிறேன். இதனைப்போல் இன்னும் பல பேமண்ட் ஒவ்வொருநாளும் வாங்க வேண்டும் என்ற மனமகிழ்வோடு, இந்த ஆண்டு ஆன்லைன் ஜாப்பினை புது உற்சாகத்தோடு தொடங்குகிறேன்.
நன்றி
- Forex Board index Forex Online Home Business Website ONLINE JOB PAYMENT PROOFS
-
- It is currently Wed May 01, 2024 3:53 am
- All times are UTC+05:30
ஆண்டின் முதல் நாளில் வாங்கிய அற்புத பேமண்ட்
Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Return to “ONLINE JOB PAYMENT PROOFS”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை