Forex Trading Chart Analysis with Trend Pattern &Order place

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Chart Analysis with Trend Pattern &Order place

Post by ஆதித்தன் » Tue Jun 04, 2013 3:17 am

Forex Trading செய்வதற்கு ரூபாய்.5600/- இருந்தால் போதும், யார் வேண்டும் என்றாலும் அட்ரஸ் ப்ரூப் & ஐ.டி.ப்ரூப் சப்மிட் செய்து கணக்கினைத் தொடங்கி பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்துவிடலாம். அதுவும் ஜஸ்ட் இரண்டே கிளிக்கில் வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம். ஆனால் நஷ்டம் இல்லாமல் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால், Forex Strategies, Forex Trading Formula, Forex Predict Tricks, Forex Indicators, Share Market Order Signal Tricks, Share Trading Strategy என பல வார்த்தைகளால் அழங்கரிக்கப்படும், பாரக்ஸ் ட்ரேடிங்க் சூத்திரங்களை அல்லது விதிகளை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். இதனைக் கற்றுக் கொண்டுவிட்டால் எளிதாக பாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் ரூ.500 முதல் 10000 க்கும் மேல் சம்பாதிக்க முடியும். பாரக்ஸ் ட்ரேடிங்க் பற்றி முழுமையாக கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் படுகை.காம்-ன் கோல்டு மெம்பராக சேர்ந்து ஆன்லைனில் தமிழில் கற்றுக் கொள்ளலாம்.

Forex Trading செய்வது என ஆன்லைனில் உட்கார்ந்ததும், முதலில் Chart பார்த்து Market Trend Analysis செய்ய வேண்டும். Currency Market அல்லது ஷேர் மார்க்கெட் எதுவானலும் சார்ட்டில் பதியப்பட்டுள்ள முந்தைய மார்க்கெட் விலை நிலவரங்களைக் கொண்ட Chart Technical Analysis தான் அடுத்தக்கட்ட மார்கெட் நிலவரம் எவ்வாறு இருக்கும் என வியூகம் வகுத்து வாங்கி/விற்று இலாபம் பெற உதவுகிறது.

Forex Market Trend:
Forex Market Trend மூன்று வகையாக பிரிக்கலாம். அவை, 1. Uptrend, 2. Downtrend & 3.Sideways Wave Trend.
1.Up Trend:
சார்ட்டினைப் பார்க்கும் பொழுது இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது என்றால், சிறு சிறு கோபுரமாக/Pyramid மேல்/கீழ் அமைப்பாக காணப்படுவதின் கீழ் நோக்கியதின் விலை குறைந்தப் புள்ளிகளை இணைத்து கோடிட்டால் கிடைப்பது Up Trend Line. விலை குறைந்தப் புள்ளிகள் இருக்குமிடத்தில் வரையப்படும் கிடைமட்ட கோடுகளை Support Line என்று சொல்வார்கள். சப்போர்ட் பாயிண்ட் புள்ளிகளை இணைத்து வரையப்படும் அப் ட்ரெண்ட் லைனை சேனல் சப்போர்ட் லைன் என்று சொல்லலாம்.
2.Down Trend :
மார்க்கெட் சரிந்து காணப்பட்டால், சிறு சிறு உச்சங்களினை இணைத்து வரையப்படும் கோடு Down Trend Line. இதனை டவுன் ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ் லைன் என்றும் சொல்லலாம். Resistance Line என்பது கோபுர உச்சிப்புள்ளியில் வரையப்படும் கிடைமட்டக் கோடு.

2. Sideways Trend:
சப்போர்ட் பாயிண்ட்களைக் கொண்டு வரையப்படும் அப் ட்ரெண்ட் & ரெசிஸ்டன்ஸ் பாயிண்டுகளைக் கொண்டு வரையப்படும் டவுன் ட்ரெண்ட் ஆகிய இரண்டும் கிடைமட்டமாக காட்சியளித்தால் சைடுவேஸ் ட்ரெண்ட் / வேவ் ட்ரெண்ட் என்று அழைக்கப்படுகிறது.
Market Trend Channel:
குறைந்த விலைப்புள்ளிகளான Support Point-களை இணைத்து ஒர் கோடும், அதிக விலைகளைக் கொண்ட புள்ளிகளான Resistance Point-களை இணைத்து ஒர் கோடும் வரைந்தால் கிடைக்கும் அகலப் பாதை, Market Trend Channel Movement path கிடைக்கிறது. இதனை Up Trend, Down Trend & Sideway Trend என மூன்றிற்கும் இதைப்போலவே Support & Resistance புள்ளிகளைக் கொண்டு வரைந்து கொள்ளலாம்.

மார்க்கெட் எப்பொழுதுமே முந்தைய நிலவரப்படிதான் மூவ் ஆகும் என்றும், அது ஒர் கோபுர அமைப்புடனே இருக்கும் என்றும் சார்ட்டினை பார்க்கும் பொழுது தெளிவாகத் தெரியும். அவ்வாறு ஏற்றத்துடன் காணப்படுவது பின் இறங்குவதும், இறங்கியது பின் ஏறுவதும்... இடையில் சைட் வேவ்வாக மேலும் கீழுமாக இருப்பதும் என மார்கெட் மாறி மாறிச் சென்றாலும், ஒர் அப் ட்ரெண்ட் என்பது பெரும்பாலும் மூன்று கட்டங்களாக முடிக்கப்படுகிறது என்றும், டவுன் ட்ரெண்ட் 2 கட்டமாக முடிக்கப்படுகிறது என்றும், சைட் வேவ் மூன்றாவது கட்டத்தில் மாற்றமடைகிறது என்றும் பல வருடங்களாக நடந்து வரும் மார்க்கெட்டினை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒர் வியூகம். அதைப்போல், சேனல் பாதையின் அகலத்தினைக் கொண்டு, எந்த திசைக்குச் சென்றால், எவ்வளவு தூரத்தில் அதன் ரிவர்சல் இருக்கும் என்பதனையும் வியூகத்தின்(Prediction) அடிப்படையில் கணிக்கப்பட்டு, அதற்குத் தகுந்தவாறு ஆர்டர்களை இட்டு வெற்றி பெறுவதுதான் Forex Strategy. இதனை மேலும் தெளிவாக பலவகைப்பட்ட பேட்டர்ன் முறையில் கற்றுக் கொள்ள படுகை.காம் கோல்டு மெம்பராக இணைந்து கொள்ளுங்கள். கோல்டு மெம்பர்கள், அடுத்தப் பாகத்தினைப் படிக்கவும்.
Forex Order Placement:
Forex Trading -இல் எளிதாக வெற்றி பெற, UpTrend மூவ்மெண்ட் சேனலில் ஏற்படும் சப்போர்ட் லைனில் BUY Order போட்டு இலாபத்துடன் வெளியேறிக் கொள்ள வேண்டும். அதைப்போல் Down Trend என்றால், ட்ரெண்ட் சேனல் லைனில் ஏற்படும் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டில் SELL Order போட்டு இலாபத்துடன் வெளியேறிக் கொள்ள வேண்டும்.


இந்தப் பாடத்தில் ட்ரெண்ட் சேனல் & ட்ரெண்ட் சேனல் எப்படி வரைவது எனப் பார்த்துக் கொண்டீர்கள். அடுத்தக்கட்ட பாடத்தில் என்னும் எளிதான ட்ரிக்ஸ் கொண்ட சார்ட் பேட்டர்ன் பற்றிப் பார்க்கலாம்.


:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”