Page 1 of 1

USD/JPY Forex Currency : டாலர்/ஜப்பான் யென் கரன்சி அலசல்

Posted: Fri May 17, 2013 2:03 pm
by ஆதித்தன்
Image
Forex Currency Trading என எடுத்துக் கொண்டால் 7 முக்கிய கரன்சிகள் மேஜர் கரன்சிகள் என அழைக்கப்படுகின்றன. அவற்றில் முதன்மையான EUR/USD என்ற கரன்சி பேர் தான், இதுவரையில் நாம் பிரதான ட்ரேடிங்க் கரன்சியாகக் கொண்டு செயல்பட்டு வந்தோம். இனி, பிற மேஜர் கரன்சியின் மீதும் ட்ரேடிங்க் செய்வதன் மூலம், ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று கை கொடுக்கும் என பலர் சொல்லும் வார்த்தைக்கு இணங்க நமது பார்வையினை கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக, ஒன்றன் மீது முழுப் பார்வையினையும் ஆழப் பதியவிட்டு விட்டு, தற்பொழுது இரண்டாவது கரன்சியில் இறங்குகிறோம்.

அகலக் கால் வைப்பது உடம்புக்கு ஆகாது என்று சொல்வார்கள், அதைப்போல் EUR/USD இன்றைய மார்கெட் ட்ரெண்ட் என்ன, எந்த நிலையில் இருக்கிறது என ஒர் கரன்சியில் அற்றுப்படி ஆனப் பின்னரே அடுத்தக் கட்ட கரன்சியின் மீது பார்வையினைச் செலுத்த வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு கரன்சியினை நம் எண்ணத்திற்குள் கொண்டு வர 30 நிமிடம் போதும் என்றால், ஆரம்பம் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரே ஒர் கரன்சியினை மட்டும் ட்ரேடிங்க் ஆப்சனாக வைத்திருந்தோம்.... அந்த ஒர் கரன்சி நியூட்ரல் ட்ரெண்ட் லெவலில் இருக்கும் பொழுது நம்மால் ட்ரேடிங்க் செய்ய முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்படியான நேரங்களில், மற்றொரு கரன்சிக்கு நாம் தாவிக் கொள்ளலாம் இல்லையா? ஆகையால் தான், இனி வரும் மாதங்களிலிருந்து மேஜர் கரன்சியான EUR/USD, GBP/USD, USD/JPY, USD/CHF, AUD/USD, USD/CAD & GBP/EUR, ஆகிய 7 கரன்சியினைப் பற்றிய அலசலையும் தொடர இருக்கிறேன். நீங்களும் இவ் 7 கரன்சியினைப் பற்றிய Trend level க்கு ஏற்ப எளிதாக ஏதேனும் ஒர் கரன்சியில் ட்ரேடிங்க் செய்து இலாபத்தினைச் சம்பாதிக்கலாம்.

USD/JPY Forex Currency OutLook:

US Dollar / Japan Yen forex currency, கரன்சி வர்த்தகத்தில் முக்கிய கரன்சிகளுல் ஒன்று. இக்கரன்சி, கடந்த ஒன்றிரை வருடமாக அப் ட்ரெண்டில் தான் சென்று கொண்டிருக்கிறது. அதைப்போல், ஒர் சில வருடங்கள் டவுன் ட்ரெண்டிலேயே பயணம் செய்து வந்தப் பின்னர் தான் அப் ட்ரெண்ட் பயணத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதனை Month Trend Chart பார்க்கும் பொழுது தெரிகிறது. அதில் தற்பொழுது இருக்கும் நிலையான 102.50 என்ற உச்ச விலையினை கடந்த நான்கரை வருடத்திற்கு முன்னரே பெற்றிருந்தது என்பது இன்றைய மார்கெட் நிலவரம் சொல்கிறது.

78 என்ற குறைந்தப் பற்ற விலையிலிருந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் பயணத்தினைத் தொடர்ந்த டாலர்/ஜப்பான் கரன்சி தற்பொழுது தொட்டுவிட்ட உச்ச நிலையோடு திரும்பச் சென்றுவிடுமா? அல்லது அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் லைனான 108 என்ற உச்சக்கட்ட விலையினை நோக்கித் தொடர்ந்து தனது மேல் நோக்கியப் பயணத்தினைத் தொடருமா? என்ற நம் கேள்வி நமக்குள் எழுந்தாலும், டாலர் கொண்டுள்ள எழுச்சி என்னும் கொஞ்ச நாள் நீடிக்கும் போல் தெரிவதால், 108 என்றப் புள்ளி வரைச் செல்லலாம் என்றே எல்லோரும் அமைதியாக இருக்கின்றனர்.

டாலர்/ஜப்பான் கரன்சியில் ட்ரேடிங்க் செய்ய அப்ட்ரெண்டின் படி பை ஆர்டர் தேர்வு செய்யலாம் என்றாலும், திருப்பம் கொள்ள வேண்டிய சூழலில் இருப்பதால், நிதானமாக உச்சத்திற்கு ஏற்ப இறக்கத்தினை நோக்கினால் .. அதுவும் நமது 500 பைப்ஸ் ஈக்குவிட்டி கால்குலேஷன் படி செயல்பட்டால் தோல்வி இல்லாமல் வெற்றியடையலாம்.

இதன் தொடர்ச்சியாக அவ்வப் பொழுது மார்கெட் நிலவரத்திற்கு ஏற்ப தொடரும் புதிய கரன்சி ட்ரேடிங்க் டிப்ஸ்.