Forex Currency Share Market Week Report in Tamil 6/10 May

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Currency Share Market Week Report in Tamil 6/10 May

Post by ஆதித்தன் » Sat May 11, 2013 6:18 pm

Image
Weekly Forex Currency Trading Market Analysis Report 6-10 May:
தொடர்ந்து நான்காவது வாரமாக நமது ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் இணையதள பணம் வருவாய் முதலீட்டுத் தொழிலை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கும் நாம், அடுத்து வரும் வாரங்களையும் எப்பொழுதும் முன்னரே ஒர் திட்டமிடுதலுடன் நகர்த்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், அந்த வாரத்தின் நிகழ்வுகளை நாம் அலசிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இந்த வாரத்திற்கான அலசலைப் பார்ப்போம்.

மார்கெட் தொடங்கியது = 1.3119 (கடந்த வாரம் முடிவுற்றது - 1.3113)
மார்கெட் முடிவுற்றது = 1.2988

அதாவது 131 பைப்ஸ் கரடி கெயின் பண்ணியிருக்கிறது..

வாரத்தின் உச்சம் = 1.3194
வாரத்தின் மட்டம் = 1.2935

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 259 pips
வாரத்தின் மாற்றம் = -131 பைப்ஸ்

நான்கு வாரத்தின் மாற்றம் = -123 பைப்ஸ்


கடந்த கடந்த 15/19 வாரம் , 22/26 வாரம் & 29/3 வாரம் ஆகியவற்றின் அலசல் பதிவுகளை படித்திருப்பீர்கள், படிக்காவிட்டால் ஒர்முறைப் படித்துவிடுங்கள். ஏனெனில், ஒர் மாதம் நாம் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்து பெறக்கூடிய மார்கெட் அனுபவங்களை, நான்கு மணி நேரத்தில் நான்கு பதிவுகளையும் படிப்பதன் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். ஆகையால், ஒவ்வொரு வார அலசல்களையும் தவறாமல் படியுங்கள்... தங்களது அலசல்களையும் இங்கே பதிவாகச் செய்யுங்கள்... ஒகே, நாம் இப்போது அலசலுக்குச் செல்வோம்.

நாம் மார்கெட் அலசலுக்குள் இறங்கிய முதல் வாரம் கரடி ஆதிக்கம் செய்திருந்தது நினைவிருக்கலாம்.. பின்னர் அதற்கு அடுத்த வாரங்கள் இரண்டும் காளையின் ஆதிக்கத்திற்குள் சென்று, கரடியிடம் இழந்த புள்ளிகளை காளை திரும்பப் பெற்று +8 பைப்ஸ் என்ற லெவலில் கடந்த வாரம் மார்கெட் விலை நிலவரம் இருந்தது. ஆனால், இந்த வாரம் ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக இருந்தது... நான்காவது ஐந்தாவது நாளில் மார்கெட் ஒரே அடியாக கீழ் நோக்கிச் சரிய ஆரம்பித்தது... முற்றிலுமாக இன்றைய வாரத்தினை கரடியின் கைக்குள் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டது. ஆம், இந்த வார மாற்றம் -131 பைப்ஸ். கரடியின் கைக்குள் செல்வதற்கு முன் மார்கெட் உச்ச விலையாக 1.3194 என்ற ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொட்டது, பின்னர் சரிய ஆரம்பித்தது குறைந்தப் பற்ற விலையாக 1.2935 என்றப் புள்ளியினைத் தொட்டு, ஒர் பாட்டம் லைனை உருவாக்கியிருக்கிறது.

259 பைப்ஸ் ஏற்றம் இறக்கமாக கொண்டு செயல்பட்ட இந்த வாரம், அடுத்த வாரத்தில் எத்தனை பைப்ஸ்களைக்கு இடையில் ஆட்டமிடும்.... அந்த ஆட்டம் கரடிக்குச் சாதகமாக அமையுமா? அல்லது காளைக்குச் சாதகமாக அமையுமா? என்று நாம் பார்த்தோமானால், இதுவரையில் நாம் பார்த்தது... ஏறுவதும் இறங்குவதும் தான். அப்படியெனில் இறக்கத்திற்கான ஏற்றத்தினை மார்கெட் கொடுத்தாக வேண்டும். அல்லது முழுமையான இறக்கத்தினைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்றாலும் ஏற்றம் இறக்கம் எனச் செல்வதுதான் மார்கெட் என்பதனை, ட்ரெடிங்க் செய்யும் நிங்கள் அறியாதது அல்ல.... இல்லை நான் ட்ரேடிங்கிற்கு புதியவர் என்று சொன்னால், இப்பொழுதே இலவசமாக ஒர் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றினை $5000 விருச்சுவல் மணியுடன் தொடங்கி, ரியல் மார்கெட்டில் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பியுங்கள். இலவச ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய > http://forex.padugai.com

ஒகே... மார்கெட் 1.2935 என்றப் புள்ளியினை பாட்டமாகக் கொண்டது, பின் திரும்பி ஏற ஆரம்பித்துவிட்டது. ஏறுவது எங்கெல்லாம் ஒர் சின்ன ப்ரேக் போடும் என்ற ரெசிஸ்டன்ஸ் லைன் பார்க்கப் போனால், 1.3004 > 1.3025 > 1.3047 > 1.3119 > 1.3194 இவ்வாறகத் தொடரும் ரெசிஸ்டன்ஸ் லைன் ஒவ்வொன்றிற்கும் சப்போர்ட் லைன் என்ற ஒன்று உருவாக்கம் ஆகும்... அப்படியான சப்போர்ட் லைன் உருவாக்கத்தினை வைத்தே.... நாம் மார்கெட் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லைனை நோக்கிச் செல்கிறதா? அல்லது சப்போர்ட் லைனை நோக்கிச் செல்கிறதா? என்பதனை கவனமாகக் கொண்டு ஆர்டர் ப்ளேஸ் செய்தோம் என்றால் எளிதாக வெற்றியடையலாம்.


மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன்.... ஆரம்பத்தில் அதிக இலாபத்தினை எதிர்பார்க்காமல்... சரியான பாட்டம்/ரெசிஸ்டன்ஸ் ஆகியப் புள்ளிகளைப் பார்த்து 500 பைப்ஸ் இக்குவிட்டியுடன் ஆர்டர் போட்டு ஒர் 10 பைப்ஸ் அல்லது 5 பைப்ஸ் இலாபம் உண்டால் போதும் என அவ்வப் பொழுது ஒவ்வொரு சரியான மார்கெட் பாயிண்டிலும் வெளியேறிவிட்டால்... மிக எளிதாக நட்டமின்றி இலாபம் மட்டுமே போரக்ஸ் ட்ரேடிங்கில் பார்க்கலாம். பங்குச் சந்தை ஆனாலும் சரி, வெளிநாட்டு பணம் பரிமாற்றச் சந்தை என்றாலும் சரி, நஷ்டம் ஆனவர்கள் சரியான ஈக்குவிட்டி இல்லாமல், தவறான இடத்தில் ஆர்டர் ப்ளேஸ் செய்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகையால், நீங்கள் அந்த தவறினைச் செய்யாமல், மிகவும் கவனத்துடன் ஆர்டர் ப்ளேஸ் செய்யுங்கள்.

ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் மிக எளிதாக பணத்தினைச் சம்பாதிக்க முடியும்.... ஆனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.... உடனடியாக பணக்காரன் ஆக வேண்டும் என்றால், ஃபோரக்ஸ் போன்ற ஹை லிவரேஜ் சந்தைதான் நமக்கு கை கொடுக்கும், மற்றப்படி எந்தவொரு பிசினசும், உடனடி கோடீஸ்வரன் கனவினை நிறைவேற்றாது.. அதைப்போல், தவறு செய்பவர்களை மிகவும் சரியாக தண்டனைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதும், இந்த மார்கெட் தான். ஆகையால் சரியாக விளையாடுங்கள்.... நிறைய சம்பாதியுங்கள்... சரியாக விளையாடக் கற்றுக் கொள்ள இலவச ட்ரேடிங்க் அக்கவுண்ட் $5000 விருச்சுவல் பணத்துடன் தொடங்கிக் கொள்ளுங்கள்.. விசிட் http://forex.padugai.com

:thanks:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Share Market Week Report in Tamil 6/10 Ma

Post by கிருஷ்ணன் » Sat May 11, 2013 7:36 pm

Image
கடந்த வாரம் நாம் கொடுத்திருந்தபடியே காளையின் கைகள் அதே சேனலில் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தாலும் கரடியின் கை ஓங்கி ஈரோவினை கீழ் நோக்கி இழுத்து வந்துவிட்டது.நாம் வாங்கிய பிறகு 30 பைப்ஸ் மேல் நோக்கிச் சென்றாலும் நம் முதல் இலக்கினைத் தொடராமல் கீழ் நோக்கி வந்து நமது நஸ்ட தடுப்பான 1308 ஐ உடைத்து நமக்கு 80 பைப்ஸ் நஸ்டத்தினை ஏற்படுத்தியது.நாம்தான் சந்தையின் போக்கில் செல்ல வேண்டுமே தவிர சந்தை நம் போக்கில் வராது என்பதினை உணர்ந்திருப்பீர்கள்.ஆதலால் காளை கை கொடுக்கும் எனக் காத்திராமல் 1308 நஸ்டத் தடுப்பில் வெளியேறிவிட்டு நாம் கரடியின் பக்கம் தாவி நமது SELL BELOW லெவலில் 1303 விற்று வைத்து நமது கீழ் நோக்கிய முதல் இலக்கான 1297 ஐக் கடந்து அதிகபட்சமாக 1293 வரை சென்று நமக்கு 100 பைப்ஸ் இலாபத்தைக் கொடுத்து நஸ்டத்தினைச் சரி செய்து விட்டது.கடந்த வாரங்களில் நாம் வெற்றிகரமாகச் செயல்பட்டு கொள்ளை இலாபத்தில்...
http://adf.ly/N0xra
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”