EUR/USD 6-10/மே : இந்த வாரம் வெளியாக இருக்கிற முக்கிய டேட்டா

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD 6-10/மே : இந்த வாரம் வெளியாக இருக்கிற முக்கிய டேட்டா

Post by ஆதித்தன் » Mon May 06, 2013 12:25 am

கடந்த வாரம் எல்லோர்க்கும் நல்லதொரு இலாபகரமான வாரமாக ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் இருந்திருக்கும் என நம்புகிறேன். அதைப்போல் வரும் ஒவ்வொரு வாரமும் இலாபகரமாகவே அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன், இன்றைய வாரத்திற்கான பார்வைகளைத் தொடர்வோம்.

கடந்த வாரத்தின் கடைசிநாளான வெள்ளிக்கிழமை, EUR/USD, அதிகபற்ற விலையாக 1.3159 என்ற விலைப்புள்ளியையும்.... குறைந்தப்பற்ற விலையாக 1.3032 என்ற விலைப்புள்ளியினைக் கொண்டு ஏற்ற இறக்கமாக இருந்தது, கடைசியாக 1.3119 என்ற விலையோடு, வாரத்தின் வர்த்தகம் முடிந்தது.

இந்த வாரத்தின் முதல் நாள், முக்கியமான அமெரிக்க டேட்டாஸ் ஏதும் அவ்வளவாக இல்லை. ஐரோப்ப நாடுகளிலிருந்தே டேட்டாஸ் வெளியாகின்றன. அதைப்போல், வாரத்தின் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அமெரிக்க டேட்டாஸ் ஏதும் வெளியாவதாக இப்போதைக்கு தெரியவில்லை... அதைப்போல், முதல் இரண்டு நாள் ஐரோப்ப நாடுகளிலிருந்து வெளியாகும் டேட்டாஸ் இவை என அறிவிப்பு வெளியாகியிருந்தாலும், அடுத்த இரண்டு நாட்கள்... பெரும்பான்மையான வர்த்தக மையங்கள், விடுமுறையில் இருக்கின்றன... என்பதும் தெரிகிறது. விடுமுறை என்றாலும், டேட்டாஸ் ரிப்போர்ட் வெளியிடப்படும் என்றும் அறிவிப்புகள் உள்ளன...

வருகிற டேட்டாஸ், எப்பொழுதுமே பாசிட்டிவாகத்தான் வரவேண்டும் என்று திட்டமிடப்படுவதால்... அவை பாசிட்டிவாக வரும் என்றே எதிர்பார்த்திருந்தாலும், முடிவுகள், நெகட்டிவாகவும் வந்து சேர்வது மார்கெட்டில் சகஜமே.

EUR/USD காளையின் ஆதிக்கத்திலேயே, கடந்த வாரம் முதல் பாதி இருந்தாலும், பின்பாதியில் கொஞ்சம் கரடியின் பிடிக்குள்ளும் சென்றுவிட்டு, பின் கடைசியாக காளையின் ஆதிக்கத்திற்குள் வந்து சேர்ந்துவிட்டது.

ஏற்கனவே, FED போர்டு மீட்டிங்கில் வெளியான செய்திகள் மூலம், அமெரிக்க டாலர் சற்று தாழ்ந்திருப்பதும், ECB தன் இறுக்கமான முடிவினை வர்த்தகர்களிடம் முன்னரே சூசமாகச் சொல்லி, தன் பெயரினைக் காப்பாற்றிக் கொண்டதனாலும்... வீழும் என நினைத்த, EUR வீழ்ச்சியினைப் பார்க்காமல், தப்பித்துக் கொண்டது... ஆகையால், இந்த வாரமும், காளையின் ஆதிக்கம் முதல் பாதியில் நீடிக்கும் என நம்பினாலும்.... கடைசியாக பிரிவியஸ் பாட்டம் அருகேயே வந்துவிட்டு திரும்பியுள்ளதால்... புதிய பாட்டம் லைனை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்கினால், இலாபத்துடன் விற்கலாம்.

இந்த வாரத்தில் முதல் நாள் வர்த்தகம், நேற்றைய குறைந்த விலைப்புள்ளியான 1.3032 என்ற புள்ளியினையும்... வியாழக்கிழமையின் அதிக விலையான 1.3217 என்றப் புள்ளியினையும் கருத்தில் கொண்டு, ஏற்றம் இறக்கம் இருக்கும் என நம்பப்படுகிறது.



இந்த வாரம் வெளியாக இருக்கும் டேட்டாஸ்:
Monday, May 6

The euro zone is to produce official data on retail sales. Spain is to release government data on the change in the number of people unemployed, while Spain and Italy are to release data on service sector activity.

ECB President Mario Draghi is to speak at an even in Rome; his comments will be closely watched.

Tuesday, May 7

Germany is to release official data on factory orders, while France is to produce data on industrial production.

Wednesday, May 8

Germany is to produce official data on industrial production, while markets in France are to remain closed for a national holiday.

Thursday, May 9

Markets in France and Germany are to remain closed for national holidays.

Meanwhile, the ECB is to publish its monthly bulletin, while Spain is to hold an auction of 10-year government bonds.

The U.S. is to publish the weekly government report on initial jobless claims.

Friday, May 10

Fed Chairman Ben Bernanke is to speak; his comments will be closely watched. The U.S. is to release official data on the federal budget balance.

Also Friday, finance ministers and central bank heads from the Group of Seven nations are to hold the first day of a two day summit meeting.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”