Page 1 of 1

EUR/USD Forex Currency Weekly Analysis Report - 29/3 May

Posted: Sat May 04, 2013 3:09 pm
by ஆதித்தன்
Image
Weekly Market Analysis Report - EUR/USD 29/3 May
எந்தவொரு காரியமும் வெற்றி பெற வேண்டும் என்றால், திட்டமிடுதல் வேண்டும்... திட்டத்திற்கு முன் அவற்றினை அலசி ஆராய வேண்டும். அலசி ஆராய்ந்து, நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டோம் என்றால் வெற்றி எளிதாகிறது. ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் வெற்றிகளை குவிக்க உள்ள நாமும், அவ்வப்பொழுது அதன் நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டே இருப்பதோடு, கொஞ்சம் அலசலுக்கும் நேரம் ஒதுக்கினோம் என்றால், வெற்றி உறுதி. அந்த வகையில் வார விடுமுறை தோறும், அந்தந்த வாரங்களைப் பற்றிய ஒர் அலசலை நாம் பார்ப்போம்.

நடந்து முடிந்த EUR/USD கரன்சிக்கு எதிரான கடந்த வார Chart Analysis Report மேல் உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது... அதன்படி, மேலும் நாம் ஆழமாக அலசலைத் தொடர்வோம்.

மார்கெட் தொடங்கியது = 1.3045 (கடந்த வாரம் முடிவுற்றது - 1.3030)
மார்கெட் முடிவுற்றது = 1.3113

அதாவது 83 பைப்ஸ் காளை கெயின் பண்ணியிருக்கிறது..

வாரத்தின் உச்சம் = 1.3242
வாரத்தின் மட்டம் = 1.3030

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 212 pips
வாரத்தின் மாற்றம் = +83 பைப்ஸ்

மூன்று வாரத்தின் மாற்றம் = + 8 பைப்ஸ்

கடந்த 15/19 வாரம் & 22/26 வாரம் ஆகியவற்றின் அலசல் பதிவுகளை நீங்களும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவற்றில், -50 பைப்ஸ் & -25 பைப்ஸ் என மொத்தமாக இதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் மொத்தம் -75 பைப்ஸ் என கரடி கெயின் பண்ணி வைத்திருந்ததை, இந்த வாரம் காளை திரும்பப் பெற்றுள்ளது. அதாவது மூன்று வாரங்களை கணக்கில் கொண்டால், மார்கெட்டின் மொத்த மாற்றம் வெறும் +8 பைப்ஸ் மட்டுமே.

மூன்று வாரங்களிம் மொத்த மாற்றம் வெறும் 8 பைப்ஸ் என்றாலும், மூன்று வாரங்களின் மொத்த ஏற்ற இறக்கத்தினைப் பார்த்தால் 300 பைப்ஸ் செல்கிறது. அப்படியான 300 பைப்ஸ் சரியான ஈக்குவிட்டி வைத்து விளையாடுபவர்கள், எந்தவொரு நட்டத்தினையும் பார்க்காமல் இலாபத்துடன் திரும்ப வைப்பதே ஷேர் மார்கெட்/ஃபோரக்ஸ் மார்கெட். இதனையே நாம் 500 பைப்ஸ் என கூடுதல் சேப்டியாக ஆடினோம் என்றால் எந்தவொரு இழப்பும் வர வாய்ப்பு கொடுக்காமல், இலாபத்தினை மட்டும் சரியாக விளையாடி பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இதுவரை நஷ்டம் என்பதற்கான வாய்ப்பினை அறிந்து, அதற்குத் தகுந்த ஈக்குவிட்டி பேலன்ஸ் மெயிண்ட் பண்ணுவது மிக மிக அவசியம் என்பதனை ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறேன், என்பது எல்லோர்க்கும் தெரியும். இனி நாம் எப்படி சரியான ஆர்டர் இட்டு இலாபத்தினைச் சம்பாதிக்கலாம் என்பதனை கொஞ்சம் அலசுவோம்.

இத்தோடு சேர்த்து மூன்றாவது வாரமாக நாம் டெக்னிகல் அனலைசிஸ் செய்கிறோம்... இப்பொழுது நீங்கள் இதற்கு முன்னர் அலசி வாரத்தின் டெக்னிகல் சார்ட்டிகளை ஒர்முறைப் பாருங்கள் ... பார்க்க > 15/19 வாரம் & 22/26 வாரம் .

இப்பொழுது மூன்று டெக்னிகல் சார்ட் உங்களது கண் முன்னே இருக்கிறது. அவற்றினை நன்றாக கவனித்துப் பாருங்கள். திடீரென கீழே விழுந்திருக்கும்... அதைப்போல் திடீரென பெரிய உச்சத்தினைத் தொட்டிருக்கும். அப்படியான உச்சத்திற்குச் சென்றப் பின்னர் அடுத்து என்ன நடந்திருக்கிறது? ... திடீரென கீழே விழுந்தப் பின் என்ன நடந்திருக்கிறது?

உச்சம் சென்றது, கொஞ்சம் கொஞ்சமாக Rebound ஆகி, 50% ரிட்டன் வந்துவிட்டது. அதைப்போல் கீழே சென்றது, கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்பி 50% ரிட்டன் வந்துவிட்டது... பின் அது தொடரும் பற்றத்தில் 100% ரிட்டன் வந்து இருக்கும்.. இல்லை எனில், சரியான உச்சத்தினைத் தொடாத காரணத்தினால், மீண்டும் உச்சத்தினை நோக்கியோ, இறக்கத்தினை நோக்கியோ சென்றாலும், பின் திரும்பி வருவதே நடந்திருக்கும்.

இங்கு நான் உங்களுக்கு 50% என்று சொன்னது, நம் பார்வையாலேயே எளிதாக கெஸ் செய்ய வேண்டும் என்பதற்காக... இதனையே Nature Mathematics Calculation theory படி Fibonacci Retracement என்ற கால்குலேஷன் போட்டோம் என்றால், 23.6% > 38.2% > 50% > 61.8% > 100 % > 127. 2% > 161.8% .... இதனைக் கொண்டும் + பிரமிட் முறைப்படியுமே பெரும்பான்மையானவர்கள் மார்கெட் மூவ்மெண்ட்டின் டார்கெட் பாயிண்ட் நிர்ணயம் செய்கிறார்கள். வருகிற டேட்டா, நெகட்டிவா? பாசிட்ட்வா? என்பதனைக் கொண்டே எந்தத் திசை நோக்கிச் செல்கிறதோ, அந்தத் திசையில் உள்ள டார்கெட் புள்ளி அருகே சரியாகச் சென்றுவிடுகிறது...

இப்படிச் சரியாக டார்கெட் புள்ளிகளை அடைவதனை, பிரபு சார் சொன்னது போல நமது முன்னோர்களின் உபயோகப்படுத்திய மெய்ஞான அறிவின்படியானதே தவிர, அறிவியல் விஞ்ஞானம் கண்டு சொல்லும் பாடம் அல்ல. 23.6% > 38.2% > 50% > 61.8% > 100 % > 127. 2% > 161.8% .... என்ற புள்ளிகளுக்கான இயற்கை உதாரணம் எனச் சொல்லப் போனால்... அன்னாச்சிப் பழம்.. பலாப்பழம்.. சீத்தாப்பழம்..ரோஜா இதழ்கள், சீனிப்பூ இதழ்கள்.. &... இவற்றின் வெளித்தோற்றங்களின் அடுக்குகளை கொஞ்சம் எண்ணிப் பார்த்தால், ஒர் சரியான முறைப்படிதான் அமைந்திருக்கும். இந்த Fibonacci calculation மூலமும் இந்த இயற்கைப் பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்களின் கூட்டுத்தொகை சதவீதம் தான். இப்படியான இயற்கை அமைத்துக் கொடுத்த கால்குலேசனைப் பயன்படுத்தியே நமது முன்னோர்கள், மெய்ஞானத்தினை சரியாக பெற்றிருந்தினர்... அதன்படியே பல துல்லியமான கணக்கீடுகளை வகுத்தும் பல அறியச் சாதனைகளைச் செய்திருக்கின்றனர். இவற்றினைப் பற்றி எல்லாம் பிரபு சார் மேலும் பல தகவல்களுடன் அலசி நமக்குச் சொல்வார் என எதிர்பார்க்கலாம்.. இப்போதைக்கு நாம், பொதுவாக .. மேலோட்டமாக ஃபோரக்ஸ் மார்கெட் மூலம் நமக்கு நட்டம் வராது என்பதனை மட்டும் நன்றாக தெரிந்து கொள்வோம். அப்படி நட்டம் வருகிறது என்றால், சரியான இடத்தில், சரியான ஈக்குவிட்டி கொண்டு ஆர்டர் போடவில்லை என்ற நமது தவறு தான் காரணம்.


சரியான இடத்தில் ஆர்டர் போடுவது என்றுச் சொன்னால், மார்கெட் ஒர் திசையில் உச்சம் அடைந்தது என்றால்.... அது கீழ் நோக்கிய திசை என்றாலும் சரி, மேல் நோக்கிய திசை என்றாலும் சரி.. அந்த இடத்திலிருந்து திரும்பும் பொழுது அதன் முதல் டார்கெட் 23.6%. நாம் ஒர் 10 பைப்ஸ் பிராபிட் என்ற கால்குலேசன் செய்தே 99% இலாப இலக்கினை வெற்றி இலக்காகக் கொண்டுள்ளோம். அப்படியானல், உச்சத்திலிருந்து, 23.6% ரிட்டன் வருகிறது என்றால், அந்த 23.6% 25 - 30 பைப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு 25 பைப்ஸ் இருந்தால் மட்டுமே, நம்மால் ரிட்டன் வருகிறது என்பதனை Japanese Candle Stick pattern மூலம் அறிந்து கொண்டு, 10 பைப்ஸ் கெஸ்சிங்க் போனால், மீதம் இருக்கும் 15 பைப்ஸில் 5 டூ 10 பைப்ஸ் இலாபத்துடன் திரும்ப முடியும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, நாம் பார்ப்பது என்னவோ 5 டூ 10 பைப்ஸ் தான் இலாபம் என்றாலும், நெகட்டிவ் சென்றால்... 40 பைப்ஸ் போகவும் வாய்ப்பிருக்கிறது... அது யாதெனில், நாம் நினைத்தப்படி அது 100% உச்சம் அடைந்துவிட்டு திரும்பவில்லை என்றால், அடுத்த டார்கெட்டான 127.2% என்பதனை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும்.. இந்த இடத்திலிருந்து கண்டிப்பாக திரும்பி வந்துவிடும்.... அதற்கு அடுத்த டார்கெட்டிற்குச் செல்கிறது என்றால், ஏற்றத்திற்கான இறக்கத்தினை/இறக்கத்திற்கான ஏற்றம் கொடுத்துவிட்டே திரும்பவும் ஏற/இறங்க ஆரம்பிக்கும். ஆகையால், இந்த நேரத்தில் உங்களுக்கு மார்கெட் திசையில் சந்தேகம் வரும் பற்றத்தில்... அதாவது திரும்பவில்லை... மேலும் புதிய உச்சத்தினை அடைய இருக்கிறது என்று தெரிந்தால்... பெரும்பாலும் நாம் சரியான இடத்தில் ஆர்டர் போட்டிருப்பதால், நஷ்டமின்றி.. 38.2% என்ற கால்குலேஷன் படி நாம் ஆர்டர் போட்ட இடத்திற்கே வரும்.. அப்படி வரும் பொழுது, நஷ்டம் இல்லாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் மேலும் 5 பைப்ஸ் வேண்டும் என்றோ, 10 பைப்ஸ் வேண்டுமென்றோ காத்திருக்கக் கூடாது... ஏனெனில் இது ஒர் டார்கெட் பிவோட் புள்ளி, வந்தால் இலாபம், சென்றால் பெரிய நட்டம் என்ற அளவிற்கு போய்... திரும்பி வர சில நாட்கள் அல்லது வாரம் காத்திருக்க வேண்டும்.


என்னும் சொல்லப்போனால்... ஆரம்பக்காலத்தில், சரியான ஈக்குவிட்டி இல்லாமல் ஆர்டர் போட்டு, தொடர்ந்து ஆர்டரை ரன் செய்ய முடியாமல் க்ளோஸ் செய்தவற்றை, மார்கெட் மீண்டும் அதே என் இலாப இலக்கான புள்ளிக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால், என்னிடம் அதன் இறக்கமான 300 பைப்ஸ் ஈக்குவிட்டி இல்லாத காரணத்தினாலும்... அதற்கு மேலும் கீழ் சென்றுவிடுமோ? என்ற பயத்தினாலும்.. முன்னரே 100 பைப்ஸ் நஷ்டத்தோடு க்ளோஸ் செய்துவிட்டேன்... ஆனால், அதற்குப் பதில் டார்கெட் புள்ளிகளைக் கணக்கில் கொண்டு, புதிய ஆர்டர் மூலம் விளையாடி ஈக்குவிட்டியினை மெயிண்டேயின் செய்து இலாபத்தோடு இரண்டு ஆர்டர்களையும் க்ளோஸ் செய்து திரும்பியிருக்கலாம் என்பதனை எல்லாம் பின்னாள் அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம்.

http://3.bp.blogspot.com/-a5EiY8qT7mY/U ... ebsite.png[/fi]
அதாவது சுருங்கச் சொன்னால், ஆர்டர்களை ஸ்டாப் லாஸ் கொடுத்து முடிப்பதனை விட, நாமே இலாபத்தோடு முடிப்பதே நல்லது என்பது எனது கருத்து... இல்லை, பிரபு சார் சொல்வது போல ஒன்றில் போனால் மற்றொன்றில் எடுத்துக் கொள்ளலாம் என 50% > 61.8% இலாப டார்கெட்டாக கொண்டு விளையாடுபவர்கள், 15% நஷ்டத் தடுப்பாக/ஸ்டாப் லாஸ் கொண்டு விளையாடினால்... அடுத்த ஆர்டரில் சரியாக சம்பாதித்துக் கொள்ளலாம்.

ஆனால், எதுவானாலும் சரி, ஆர்டரினை சரியான இடத்தில், சரியான சைசில், சரியான ஈக்குவிட்டியுடன் போட வேண்டும்.. அவ்வாறு சரியாக டெக்னிகல் அனலைசிஸ் செய்து ட்ரேடிங்க் செய்தோம் என்றால், இந்திய பங்குச் சந்தை ஆனாலும் சரி, வெளிநாட்டுப் பணப் பேரமாக இருந்தாலும் சரி, இலாபம் நம்மை தேடி வரும்.

மீண்டும் சொல்கிறேன்... ஏற்றம் இறக்கத்துடன் கூடுயதே மார்கெட். அந்த மார்கெட் எத்தனை வேகத்துடன் சென்றாலும், அத்தனை வேகத்திற்கும் நாம் தயாராக இருந்தால், தோல்வி என்பது கிடையாது. அதிலும் குறிப்பாக நேற்று மார்கெட் திடீரென 100 பைப்ஸ் ஆட்டம் ஒன்று ஆடியது எல்லோர்க்கும் நினைவிருக்கும். அதுவும் 3 நிமிடத்தில் கீழே சென்று, அடுத்த 1.30 மணி நேரத்தில், Rebound ஆகி பெரிய உச்சத்தினை தொட்டது... அதைப்போல் டேட்டா வருகிறது, மாலை உஷாராக இருக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டுதான் இருந்தேன்... ஆனால், ஜஸ்ட் ஒர் நிமிடத்தில் மிஸ் ஆகிவிட்டேன்.. ரிப்போர்ட் என்ன என பார்த்து தெரிந்து கொண்டு வருவதற்குள் மார்கெட் டவுன் ஆகிவிட்டது... டவுன் ஆனது திரும்பாது... இனி இன்று முழுவதும் இப்படி இதன் அருகேயே ஆடிக் கொண்டிருக்கும் என நினைத்தால்... எனக்கு மட்டும் அல்ல! எல்லோருக்குமே ஒர் அதிர்ச்சி கொடுத்து, வந்த இடத்திற்கே திரும்பிச் சென்றது ஆச்சர்யம். இப்படி நான் ஒன்று ஹெஸ் செய்தால், மார்கெட் ஒர் முடிவினை எடுத்து செயல்படுவது... நாம் சொல்லும் விதியின் விளையாட்டுத்தான், இந்த ஷேர் மார்க்கெட்டும். ஆகையால், ஒர் சில செண்டிமெண்டினை பார்ப்பதில் தவறில்லை...


செண்டிமெண்ட் என்று சொன்னால், பல தொழில்களில் அடிவாங்கி, ஷேர் மார்கெட் மூலம் பெரிய ஆளாக மாறிவிடலாம் என இறங்கும் உங்களை... நினைத்தது போலவே காலம் உங்களைப் பெரிய பணக்காரர் ஆக்கலாம்... அல்லது உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா! என்ற நிலைக்கும் தள்ளிவிடலாம். ஆகையால் ஷேர் மார்க்கெட்/ஃபோரக்ஸ் மார்கெட்டினை ஒர் அதிவேக பணம் கொடுக்கும் மெசினாகப் பார்க்காமல், தினம் உணவளிக்கும் அட்சயப் பாத்திரமாக பார்த்தீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களுக்கு அது சோறு போடும். என்னும் தெளிவாகச் சொன்னால், வயிற்றுக்குத்தான் சாப்பிட முடியும்! அதைப்போல் நாம் செய்யும் இன்வஸ்மெண்டினை 500 பைப்ஸ் ஈக்குவிட்டிக்கு கால்குலேட் செய்தால் அதன் மூலம் 10 பைப்ஸ் இலாபம் என்ன வருகிறதோ அதனையே பெற முடியும் என்ற ஒர் அளவோடு இருந்தால், எந்தவொரு நஷ்டமும் இல்லை.... இதே 10 பைப்ஸ் மூலம் தினம் 10 டாலர், 100 டாலர், 500 டாலர் என நம் இன்வஸ்மெண்ட்க்கு தகுந்தவாறு சம்பாதிக்கலாம் என்பதனை மறந்துவிடாதீர்கள்.


உங்களுக்கு ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் சம்பாதிக்கணும்னு ஆசையாக இருக்கிறதா? முதலில் ஒர் பயிற்சி ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் கணக்கு ஒன்றினை இலவசமாகத் தொடங்கிக் கொள்ளுங்கள்... அந்த இலவச அக்கவுண்ட் மூலம் $1000 விருச்சுவல் மணி மூலம் Forex Trading Practice முழுமையாகப் பெற்றுக் கொண்டு, பின்னர் உங்களது பணத்தினை இன்வஸ்ட்மெண்ட் செய்து இலாபத்தினைப் பெறுங்கள்...

பயிற்சிக்கான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய விசிட் > http://forex.padugai.com செல்லுங்கள்.

ஃபோரக்ஸ் ட்ரேடிங் பயிற்சியில் தோல்வியுற்றால், அதற்கு உங்களது தவறுகளே காரணமாக இருக்குமே தவிர, நஷ்டம் என்று எழுதி வைத்தால், 15 வருடங்களுக்கும் மேலாக இதனை வருவாய் தொழிலாக யாரும் கொண்டிருக்க மாட்டார்கள்... உலக அரசியலும் இதனை தடை செய்திருக்கும். இதனைக் கற்றுக் கொண்டவர்கள் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருப்பதாலேயே தொடர்கிறது, தொடரும். ஆகையால், பயிற்சியில் தோல்வியுற்றால், என்ன காரணம், எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதனை தெளிவாக கேட்டு அறிந்து செயல்பட்டு வெற்றியடையுங்கள்.... ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் பற்றிய பயிற்சிக்கான உதவி தேவைப்படின் என்னை அழைக்கலாம்/அல்லது நேரிலும் வரலாம்.