GOLD Trading Report - அடுத்த வாரம் தங்கத்தின் விலை என்ன?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GOLD Trading Report - அடுத்த வாரம் தங்கத்தின் விலை என்ன?

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 10:46 pm

Image
Gold Trading என்றாலே பொதுமக்களுக்கு ஒர் மிக்க ஆர்வம். அதுவும், விலை ஏறினால் தான் இலாபம் என எண்ணம் கொண்ட மக்களுக்கு, கோல்டில் ட்ரேடிங்க் செய்யவே மிகவும் பிரியமாக இருக்கின்றனர். அவர்களது பிரியத்திற்கு ஏற்ப, கொஞ்ச நாள் கோல்டு மார்கெட்ட் மூவ்மெண்டினை பார்த்துவிட்டு, கோல்டுக்கும் சிக்னல் கொடுக்கலாம் என இருக்கிறேன். அதன்படி எனது முதல்கட்ட அனலைசிங்க் ரிப்போர்ட் எப்படி வொர்க் ஆகிறது என்பது, இந்த வாரம் முதல் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்..பின் சிக்னல் உருவாக்கி ஆர்டரினை தொடர்வோம்.

தங்கத்தின் விலை, நமது லோக்கல் மார்கெட்டின் விலைப்படி இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆகையால் குழப்பம் அடைய வேண்டா,.. இந்த விலைப்படியே ஃபோரக்ஸ் மார்கெட்டில் கோல்டு ட்ரேடிங்க் செய்யப்படுவதால்... ஏற்றம் இறக்கம்...ஆகியவற்றினை மட்டும் கணக்கில் கொண்டு, ஃபோரக்ஸ் ட்ரேடிங்கில் என்ன விலைப்புள்ளி பயன்படுத்தப்படுகிறதோ, அதனையே பின்பற்றுவோம்.


GOLD Technical Analysis Report - April/May

கடந்த பல வருடங்களாக, ஏறுமுகமாகவே வந்த தங்கத்தின் விலை இப்பொழுதுதான் கொஞ்சம் சரிவினைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. அதிலும் கடந்த மாதம் தான், சரிவினையே ஆரம்பித்தது.. அதற்கு முன்னர் ஏற்றமாகவே வந்தது என்பது எல்லோர்க்கும் தெரியும். Forex Trading பொறுத்தவரை மார்க்கெட் கடந்த ஏபரல் மாதம் முதல் எவ்வாறு இருந்தது என்பதனை மேல் உள்ள சார்ட் உங்களுக்கு சொல்கிறது.. அதனையே நாம் கொஞ்சம் அலசப் போகிறோம்.

ஏப்ரல் 2 ஆம் தேதி, 1602.90 என்றிருந்த தங்கத்தின் விலை, கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்து, பின் மீண்டும் ரிபவுண்ட் ஆகி... சட்டென வேகமாக கீழ் நோக்கி விழுந்த விலை, ஏப்ரல் 16 ஆம் தேதி 1322.86 என்றப் விலைப் புள்ளியினை பாட்டமாகக் கொண்டு உட்கார்ந்து, பின் மீண்டும் மேலெழும்ப ஆரம்பித்திருக்கிறது.

14 நாட்களில், 1603 லிருந்து, 1323 ஆக குறைந்த விலை... பின் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி 61.8% இறக்கத்திற்கான ஏற்றத்தினைப் பெற்று 1486.67 என்ற புதிய விலையை 26 ஆம் தேதி அடைந்துள்ளது.

இறக்கத்திற்கு மீண்டெழுந்து பின் வேகமாக சரிய ஆரம்பித்த நாளான 9 ஆம் தேதியிலிருந்து கணக்கீடு செய்தால், அதே வேகத்தில் 8 நாட்களுக்குள் திரும்ப வேண்டிய இடத்திற்குச் செல்லாமல், அந்த நாட்களில் புதியதாக ஒர் ரெசிஸ்டன்ஸ் லைனை 1486.67 என்ற விலைப்புள்ளியிலேயே உருவாக்கிவிட்டது. அந்த புதிய ரெசிஸ்டன்ஸ் லைனிலேயே ஒர் வாரமாக இருந்தது, கொஞ்சம் சரிவினைப் பார்த்து, மீண்டும் அதே ரெசிஸ்டன்ஸ் லைனைத் பார்த்துவிட்டு, கீழ் செல்வதா? மேல் செல்வதா? என ஒர் இரண்டாம் கெட்டான் நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

புதிய ரெசிஸ்டன்ஸ் லைனை உடைக்காத காரணத்தினால், ஏற்றத்திற்கான இறக்கமாக விலைச் சரிவினை தங்கம் பார்க்க இருக்கிறது என்பதே என் கணிப்பு, அவ்வாறு இறக்கம் இருக்கும் பற்றத்தில் அதன் பாதை, 1425.71 , 1402.95 , 1384.76 என்ற விலைகளை அடுத்தடுத்த பாட்டமாக கொண்டு இருக்கும்.. இவற்றினை எல்லாம் உடைத்துவிட்டால், அடுத்து நேரடியாக 1322.86 என்றப் புள்ளியினை நோக்கியே வேகமான இறக்கமாக இருக்கும்.

இல்லை, எதிராக நடந்துவிடுமா??? மக்களின் தேவைப்பாடு ஆசியாவிலேயே அதிகம்... அப்படியான ஆசிய நாடுகளில் பெரியதில் ஒன்றான இந்தியாவில், அட்ஷய திரிதி என்றொரு நாள் வருகிறது... அந்நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நாளில் தங்கத்தின் தேவைப்பாடு அதிகமாக இருப்பதால், விலை கொஞ்சம் ஏற்றத்தினைக் காண இருக்கிறது... அப்படியான ஏற்றம், நாம் கண்டு வைத்திருக்கும் புதிய ரெசிஸ்டன்ஸ் பாயிண்டான 1486.67 - ஐ உடைத்து மேலே சென்றால், அடுத்தக்கட்ட புள்ளி 1600 தான். ஆகையால், வரும் வாரத்தில் தங்கம் 1384 என்றப் புள்ளியினை தொட்டுவிடும் என்பதே எனது கணிப்பு.


தங்கத்தின் விலை 1384 என்றப் புள்ளியினை தொடுகிறதா? இல்லையா? என்பதனை வரும் வாரத்தில் பார்ப்போம்.


:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”