Page 1 of 1

கோபுர உச்சத்தினைத் தொட்ட EUR/USD

Posted: Wed May 01, 2013 3:12 pm
by ஆதித்தன்
கடந்த மாதம் ஏப்ரல் 16/17 வாக்கில் உருவாக்கப்பட்ட ஒர் கோபுர உச்சத்தினை(1.3200) இன்று நிதானமாகச் சென்று தொட்டுவிட்டது, EUR/USD கரன்சி.


ஏப்ரல் 24 ஆம் தேதி ஏற்பட்ட இறக்கமான 1.2959 என்ற புள்ளியிலிருந்து, சராசரியாக உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கும், EUR/USD எந்தப் புள்ளியினை சரியான ரெசிஸ்டன்சாக கொள்ளும் என்றக் கேள்வியினை இப்பொழுது புதியதாக உருவகம் செய்துவிட்டது.

இதன் வேகம் அப்படியே செல்லும் பற்றத்தில், 1.3331 என்ற புள்ளி வரை, 1.3130 என்ற புள்ளியினை சப்போர்ட் லைனாகக் கொண்டு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.