தீரா பிரச்சனை - ECB Interest Rate cut

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தீரா பிரச்சனை - ECB Interest Rate cut

Post by ஆதித்தன் » Wed May 01, 2013 11:22 am

நாளை நடக்க இருக்கும் European Central bank policy meeting-இன் பொழுது Interest Rate cut இருக்கும் என சூசகமாக கடந்த வாரத்திற்கு முன்னரே, அவ்வங்கியின் முக்கியச் செய்தியாளர் ஒருவர் சொல்லிவிட்டார். கடந்த வார வியாழன்/வெள்ளியில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மீட்டிங்க், இந்த வாரத்திற்கு தள்ளப்பட்டத்து.

இடையில் EUR/USD கரன்சி, இந்த இன்ட்ரஸ்ட் ரேட் கட் பிரச்சனை இருந்தாலும், அமெரிக்க டேட்டாக்களின் நெகட்டிவினால் தனது டார்கெட்டினை நோக்கி எளிதாகச் சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், மீண்டும் மீண்டும் அழுத்தமாக இச்செய்தியினைச் சொல்லிக் கொண்டிருப்பதால், எப்பொழுது வேண்டும் என்றாலும்... interest rate குறைக்கப்படுவதே உறுதி என நம்பி, பலர் வித் ட்ரா செய்கிறார்களோ? என்னவோ... இன்றைய ஆசிய வர்த்தகத்தின் பொழுது ஏற்பட வேண்டிய உச்சம் இல்லவே இல்லை. சற்று இறங்கவே செய்து, தற்பொழுது அதனை திரும்பவும் உள்வாங்கி ஏறிக் கொண்டது.


இப்பிரச்சனைக்கு நாளை தீர்வு ஏற்படும், என்று நம்பினாலும்... இன்றைய வர்த்தகத்தின் பொழுது ஏற்படும் உச்சத்தினையே இந்த வார உச்சமாகக் கொண்டு, மார்கெட் கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு, உருவாக ஆரம்பித்துவிட்டது.

:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”