போரக்ஸ் ட்ரேடிங்கில் வெற்றி பெற எளிமையான 5 டிப்ஸ்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

போரக்ஸ் ட்ரேடிங்கில் வெற்றி பெற எளிமையான 5 டிப்ஸ்

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 11:17 pm

http://1.bp.blogspot.com/-xSoMviVB_q8/U ... G+SITE.jpg[/fi]இணைய உலகில் மிகவும் அதிகமான வருவாய் கொடுக்கக் கூடிய ஒர் இன்ஸ்டண்ட் வழி எதுவெனக் கேட்டால், எல்லோரும் எளிதாகக் கைக்காட்டும் அளவிற்கு, எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது... அது Forex Trading Investment தான் என்று. இதனை எப்படிச் சொல்கிறேன் என்றால், கடந்த ஒர் வாரத்தில் என்னிடம் பேசிய பல நபர்களுக்கு ஃபோரக்ஸ் எனக் கேள்விப்பட்டு, அதனை அறிந்து கொள்ளும் ஆர்வமும், செய்ய ஆசையும் இருக்கிறது. அதைப்போல் சிலர் நல்ல வருவாய் கொடுக்கக் கூடியதுதான்... ஆனால், போட்டப் பணம் எல்லாம் லாசும் ஆகிடுதே!!! ... என நான்கு நபர்கள் லாஸ் ஆகிவிட்டு, அமைதியாக இருக்கிறார்கள். அதற்காக, அதனை விட்டுவிடவில்லை. மீண்டும் தொடர்ந்து செய்கிறார்கள், ஏனென்றால் போட்டப் பணத்தினை எடுக்க வேண்டும் என்றும், நான் சம்பாதித்துத்தான் தவறு செய்து இழந்துவிட்டேன் எனவும் ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆக, ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் ஒர் நல்ல வருமான வாய்ப்பு. ஆனால், கொடுக்கும் வருவாயினைப் பார்த்து ஆசைப்பட்டு, பேராசையினால் இழப்பவர்களே அதிகம். ஆகையால், ஒர் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் எளிதாக வெற்றியடையலாம்.



1. மார்கெட்டின் சரியான மூவ்மெண்ட் தெரியாமல் ஆர்டர் போடக்கூடாது என முடிவெடுத்து, ஒர் நாளைக்கு 1 அல்லது 2 என சரியான பாயிண்டில் ஆர்டர் போட்டால் போதும் என காத்திருத்தல். சரியான பாயிண்ட் கிடைக்காவிட்டால், ஆர்டர் போடாமல் விட்டுவிடுதல்.

2. ஆர்டர் புக் செய்வதற்கு முன், நமது கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது, எந்த சைஸ் ஆர்டர் போட்டால் 200 பைப்ஸ் தாங்கும் என கணக்கீடு செய்து, 200 பைப்ஸ் ஈக்குவிட்டியுடன் ஆர்டர் சைஸ் தேர்வு செய்து ஆர்டர் போடுதல்..

3.ஒரே பைப்பில் 50 டாலர் எடுக்கலாம் என தவறாக இலாப கணக்கீடு செய்வது தவறு என்பதனை தெளிவாக புரிந்து கொண்டு, அந்த தவறினைச் செய்யாமல் இருத்தல்.

4. மார்கெட் ஏறும் இறங்கும்.... நட்டம் இலாபம் ஆகும்... இலாபம் நட்டம் ஆகும் என்பதனை தெளிவாக தெரிந்து கொண்டு, கிடைக்கும் இலாபத்தில் வெளியேறுதல்.

5. நிதானமாகவும், சரியாகவும் இலவசமாகக் கொடுக்கப்படும் டொமோ அக்கவுண்டில் நல்ல பயிற்சியினை எடுத்துக் கொள்ளுதல். இலவச ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய விசிட் ; http://forex.padugai.com

அவ்ளதாங்க ஃபாரக்ஸ் மார்கெட்... அப்புறம் டெக்னிகல் அனலைசிங்க், சார்ட் சிக்னல் டூல்ஸ் அதெல்லாம், தானாக பயிற்சியின் பொழுது தினம் மார்கெட் வாட்ச் செய்யும் பொழுதே கற்றாகிவிடும்.

என்னைப் பொறுத்து வரைக்கும், அவ்வளவு நிதானம் கிடையாதுங்க... ஆர்டர் போட்டால் உடனே இலாபம் கிடைச்சிட வேண்டும்... நஷ்டம் வந்தால், பார்க்க பிடிக்காது. ஆகையால், நான் ஆர்டர் போட்டால் பெரும்பாலும், போட்ட உடனே லாக் அவுட் கொடுத்திடுவேன்... பின் பொதுத்தளத்தில் பாசிட்டிவாக போகிறது எனத் தெரிந்தால் மீண்டும் போய்... இது போதும்டா இன்றைய பொழுதுக்கு என 5 பைப்ஸ் கிடைத்தாலும் ஆர்டரினை க்ளோஸ் செய்துவிடுவேன்... அதைப்போல், இது அப் ஆகும்.. என்பதனை விட, இந்த பாயிண்டில் ஆர்டர் போட்டால், நெகட்டிவ் போனாலும் திரும்பி வருமா? என உறுதி செய்துவிட்டு, அப்படியான புள்ளியில் ஆர்டர் கிடைத்தால் மட்டுமே போடுவேன்... இல்லாட்டி இல்லை.

அதைவிட இப்பொழுது நான் கடைபிடிக்கும் ஒர் செண்டிமெண்ட். கணிணியை ஆன் செய்தவுடனே, நெட் கனெக்ட் ஆவதற்குள், செஸ் கேம் ஒபன் செய்து, ஒர் கேம் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று பொறுமையாக ஆடுகிறேன். அதில் சரியாக வெற்றி பெற்றுவிட்டால், அன்றைய தினம் ஆர்டர் போடுகிறேன்... இல்லாவிட்டால் பெறும்பாலும் ஆர்டர் வேண்டாம் என்றே ஒதுங்கிவிடுகிறேன்... சரியான புள்ளி கண்ணை உறுத்தினால் மட்டும் ஆர்டர் போடுகிறேன்.

மொத்தத்தில், இலாபம் என்று ஆடுவதனைக் காட்டிலும்.... நஷ்டம் வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே கடந்த இரண்டு மாதமாக போரக்ஸ் ட்ரேடிங்க் செய்து வருகிறேன். அதுமட்டும் அல்லாமல், மார்கெட் அனலைசிங்க் நன்றாக செய்யக் கற்றுவிட்டாலும்...இந்த செண்டிமெண்ட் என்னை பழிவாங்கிவிடுகிறது.. குறிப்பாக, செஸ் விளையாடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதில் 40% கணிணியுடன் நான் வெற்றி வாகை சூடுகிறேன்... தற்பொழுது ஒர் கேம் தோற்றுவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அடுத்து 10 முறை ஆடினால், அதில் 8 முறை தோற்றுவிடுகிறேன்.. அதிலும் சில நேரம் ரொம்ப அசால்ட்டாக நானே தவறு செய்துதான் தோற்றிருப்பேன்..... ஆகையால் தான், என்னுடைய தவறுகளை நிறுத்தும் வகையில் எனது மனம் ரிலாக்ஸாக, சரியாக சிந்திக்கும் திறனுடன் இருக்கிறதா? என்பதனை பரிசோதனைச் செய்யவே செஸ் கேம். அதில் வென்றுவிட்டால்... 1 மணி நேரம் ஆராய்ந்து போடும், மார்கெட் அனலைசிஸ் சார்ட்டும் வெற்றியடைகிறது... தோற்றுவிட்டு வந்தால், மார்கெட்டினை அனலைஸ் செய்யும் மூடும்.. அப்படித்தான் இருக்கிறது.

ஆகையால், முதலில் ரிலாக்ஸ் & சரியான பாசிட்டிவ் சிந்தனை கொண்ட மைண்ட். எப்படி வெல்லலாம் என்று சரியான யூகம். ஆகியவை எல்லாம் ஒருங்கே சேர்ந்துவிட்டால், வெற்றி நம்மைத் தேடி வரும். தோல்விகள் நம்மைக் கண்டு ஒதுங்கி ஓடும்.



சரி, என்னுடைய விதிமுறைகளைச் சொன்னேன்.... நீங்கள் கடைபிடிக்கும் பார்முலா ஏதேனும் இருந்தாலும் சொல்லுங்க... நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”